Wednesday, March 31, 2010

கட்டிங் வித் கிஷோர் - 5

சந்தோசம்

கொஞ்ச நாளா மனசு உண்மையா சந்தோஷபடுற மாதிரி சில சம்பவங்கள் நடந்துகிட்டு வருது.. ஆமாங்க.. என்னோட நண்பர் ஒருத்தருக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருது.. ஏற்கனவே வீட்டுல முடிவு பண்ணிட்டாலும் பொன்னும் பையனும் பேசி புரிஞ்சிக்கிட்டு அவங்க சம்மதம் சொல்லட்டும்ன்னு வெயிட் பண்றாங்க.. எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. எதையும் திடமா முடிவுபண்ணி சொல்ல மாட்டான் (தெரியாது ).. அதனால பையன் என்ன சொன்னாலும் கல்யாணம் நிச்சயம் நடக்கும்.
எப்படியும் நிச்சயமா சரக்கும்,புது டிரஸ்சும் கிடைக்கும்.. சோ மீ வெய்டிங் பார் தட் டே :) .. கண்டிப்பா கல்யாணம் முடிவு ஆனதும் பையன் யாருன்னு சொல்றேன்.. அதுவரைக்கும் வீணா என்னோட நண்பர்கள் பேர இழுத்துடாதிங்க.. :)

கொஞ்சம் கஷ்டம்

என்னோட போன பதிவுல வாங்கிய ஓட்டு எண்ணிக்கை 16.. ஆனா வந்த கமெண்ட் மொத்தம் 5.. அதுவும் அனுப்புனது 3 பேரு. காரணம் நீங்க நினைக்கிறது தான்.. நான் யாரோட பதிவுக்கும் போய் கமெண்ட் பண்றது இல்ல.

ஆனா உண்மை நிலவரம் என்னன்னா.. நான் follow பண்ற எல்லோரோட பதிவையும் படிக்கிறேன்.. ஆனா எனக்கு பிடிச்ச பதிவுகள்ள என்னால கமெண்ட் பண்ண முடியாததற்கு காரணம் அவங்களோட template -ல comment form placement -ல popup window அல்லது embeded ஆக இருப்பது தான். அப்படி இருந்தால் என்னால் comment செய்ய இயலவில்லை.. full page இருந்தால் மட்டுமே comment பண்ண முடிகிறது.. அதே போல தமிலிஷும் வோட்டு போடுவதற்கு குறைந்த பட்சம் 15 முறையாவது கிளிக் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி செய்தும் சில சமயம் வோட்டு விழுவது இல்லை..

இதனாலே நல்ல பதிவுகளுக்கு மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு கூட comment பண்ண முடிவது இல்லை.. குறிப்பாக பப்பு, கீதப்ரியன் போன்றவர்களின் பதிவுகள்..

இந்த பிரச்சனைக்கு ஹாலிபாலி எனக்கு மட்டும் தனியாக comment போட வசதி செய்து உள்ளார்..

அதே முறையை எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கும்.. எனவே இந்த இரு பிரச்சனைகளையும் தீர்க்க வழி இருந்தா சொல்லுங்க..


இது என்ன பீலிங்க்னு புரியலங்க..

எவ்ளோ சொல்லியும் கேக்காம எங்க வீட்லயும் எனக்கு தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சிடாங்க.. பயோடேட்டா மற்றும் போட்டோ கேக்கும் போது எதோ ஒரு ஆர்வத்துல எழுதி குடுத்துடாலும்.. என்னோவோ மனசுல.. சந்தோசம், வெறுமை , பயம் , குருகுறுப்புன்னு எல்லாம் கலந்துகட்டி ஒரு உணர்வு .. இது என்ன பீலிங்க்னே புரியல.. கல்யாணம் ஆனா பெரியவங்க யாரவது இருந்தா இது என்ன பீலிங்க்னு சொல்லுங்க..

மீண்டும் சந்திப்போம் ...

13 comments:

geethappriyan said...

கிஷோர்
நலமா?
பதிவு அருமை.

kishore said...

நான் நலம் கார்த்திகேயன் நீங்கள் நலமா? நன்றி:)

சீமான்கனி said...

//இது என்ன பீலிங்க்னே புரியல..//
முதல் பத்தில பதில் இருக்கு தேடி பாருங்க கிஷோர்...
வாழ்த்துகள்...

kishore said...

@ seemangani

ம்ம்..அதுவும் தான்.. நன்றி :)

பாலா said...

அடி விழும். போன பதிவுக்கு நான் கமெண்ட் எழுதி.. போஸ்ட் பண்ணி அது பேஜ்ல அப்டேட் ஆனதைப் பார்த்தேன். இப்ப பார்த்தா காணாம்.

ஆமா.. இதுக்கெல்லாம்.. எதுக்குங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவெல்லாம்.

நானும் ஒரு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன். ஆனா எந்த ஃபீலிங்கும் இல்லையே..? ஜாலியாதான் இருக்கு!! :)

குடும்பஸ்தன் ஆக.. வாழ்த்துகள் கிஷோர்!! :) :)

வினோத் கெளதம் said...

குடும்பஸ்தன் ஆக.. வாழ்த்துகள் கிஷோர்!!

ஏண்டா வீட்டுல நீ பண்ணுற அலப்பாரை அதிகமாகுதுனு பொண்ணு பார்த்தா..அதுசரி நீ நாற்பது வயசுக்கு மேல தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்ட..அப்ப இன்னும் ஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ணு..

வேற எதுவும் சொல்லுறதுக்கு பதிவுல ஒன்னும் இல்ல..

/எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. /

உன்னோட நண்பர்கள் எல்லோருமே கிறுக்கு தான்..

@ ஹாலி

//நானும் ஒரு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன். ஆனா எந்த ஃபீலிங்கும் இல்லையே..? ஜாலியாதான் இருக்கு!! :)//

காமெடியா சொல்லுற மாதிரி இவரு நிஜமா பண்ணாலும் பண்ணுவாரு..
வீட்டுல ஒரு வார்தை போட்டு வைக்கனும்.

கண்ணா.. said...

எலேய்...என் ப்ளாக்ல நீ கமெண்ட் போடுறதுக்கு என்னடா பிரச்சினை...??!!

//குருகுறுப்புன்னு//

அது குறுகுறுப்புடா..

புரியுது நீ ஓரு இனம் புரியாத ஃபீலிங்ல இருக்கேன்னு...

யாசவி said...

அணையற விளக்கு பிரகாசமாக எரியும். அதனால இப்பவே இந்த பீலிங் எல்லாம் எஞ்ஞாய் பண்ணிக்கோங்க.

:) for fun only

Good luck for your marriage life

வரதராஜலு .பூ said...

//ஆமாங்க.. என்னோட நண்பர் ஒருத்தருக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருது..//

வி.கௌ.-தானே? வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கு.

// வினோத்கெளதம் said...

/எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. /

உன்னோட நண்பர்கள் எல்லோருமே கிறுக்கு தான்..//

நல்லதொரு செல்ஃப அப்ரைசல்
:)

Prabhu said...

என்னத்த? நீங்களாவது படிக்கிறீங்க... நான் கொஞ்சம் தான் படிக்கிறேன். அதிலும் கமெண்டு போட முடியறதில்ல... :( ஒரே பிஸி :)

பொண்ணு பாக்குறாங்களா? குறுகுறுப்பு நோட்டட். இது மாதிரி எல்லாம் கண்டு பிடிவ்வு வைங்க. இன்னு 7,8 வருஷத்தில் உபயோகப்படும். பாலா மாதிரி பெருசுங்க என்ன செய்யுறீங்க? சொல்லிக் குடுங்க!

kishore said...

@ஹாலி பாலி
எப்படி உங்களுக்கு பீலிங் இருக்கும்.. அதான் அண்ணிகிட்ட வாங்குல உதையுல மருத்து போய் பல நாள் ஆச்சே.. :)

@ வினோத்கெளதம்

அலப்பற.. நாங்க.. சொல்லுடா சொல்லு.. காலத்தின் கொடுமை.. ஆமா உனக்கு எப்போ கல்யாணம்?

@கண்ணா..
புரிஞ்ச சரி... :)

@யாசவி
thankyou.. :)

@வரதராஜலு .பூ

என்னது வி.கௌ க்கு கல்யாணமா.. சொல்லவே இல்ல..

@பப்பு..
நோட் பண்ணி வக்கிறேன்... அதான... பாலா மாதிரி பெருசு எல்லாம் என்ன பண்ணுது?

பித்தனின் வாக்கு said...

அப்ப நண்பர் டிரிட் ஒன்னும்,உங்க டிரீட் ஒன்னும் இருக்கு. வந்துருரம். இதை வீட என்ன வேலை இருக்கு, நல்ல பதிவு.

Ahamed irshad said...

குடும்பஸ்தன் ஆகி...?