Friday, March 13, 2009

என்னை மன்னிப்பாயா சுமதி...?


குமாருக்கு ராத்திரி முழுதும் தூக்கம் வரல.. நாளைக்கு காலைல சுமதி கிட்ட எப்படி சொல்றது? சொல்லாம இருந்தா இந்த பசங்க வேற சும்மா விட மாட்டனுங்க..
ரமேஷ், முரளி கூட சமாளிச்சுடலாம் ஆனா இந்த செந்தில் பய இருக்கானே அவன மட்டும் சமாளிக்க முடியாது.. மானத்த வாங்கிடுவான்..
இதுக்கு ஒரே வழி எப்டியாவது நாளைக்கு சுமதி கிட்ட சொலிடனும்...
சொன்னா சுமதி என்ன செய்வா? சரின்னு சொல்லுவாளா .. இல்ல பிரச்சனை பண்ணி அசிங்க படுதிடுவாள? சரின்னு சொன்னா அத விட சந்தோஷமான விஷயம் எனக்கு ஏதும் இல்ல ஆனா யாருகிட்டயாவது சொல்லி பிரச்சனை பண்ணிட்டா ...?
அவ அப்பாவ வேற ஒரு தடவ கடை தெருல பாத்துருகான்.. போலீஸ்காரன் மாதிரி இருபாரு... அவருகிட்ட அடி வாங்க முடியுமா? படுத்து கொண்டே தன்னோட உடம்பை ஒரு தடவை தடவி பார்த்து கொண்டான்... என்ன ஆனாலும் சரி நாளைக்கு காலைல சுமதிய பார்த்து சொல்லிடனும்...
காலைஇல் எழுந்து அவசர அவசரமாக சாப்ட கூட தோணாமல் கிளம்பினான்.. மனசு முழுசும்...
சுமதி... சுமதி.. சுமதி...
வழயில் ரமேஷும் முரளியும் சேர்ந்து கொண்டார்கள்
"என்னடா இன்னைக்காவது சொல்லுவியா?" -ரமேஷ்
"எங்கடா சொல்ல போறான் இணைக்கும் நாம போய்ட்டு திரும்ப வரவேண்டியது தான் "-முரளி
"டேய் கிண்டல் பண்ணாதிங்கடா இன்னைக்கு எப்டியாச்சும் சொலிடுறேன்"
செந்தில் எங்க காணோம்?
அவன் வேற வந்த சும்மா இருக்க மாட்டான் எதாவது சொல்லி ரவுசு பண்ணுவான்.. இன்னைக்கு செத்தேன்... மனசுக்குள் நெனச்சிட்டு இருக்கும் போதே செந்தில் வந்து சொன்னான்...
"டேய் சுமதி வராடா போய் சொல்லுடா ... "
"இருடா இப்போதான் உள்ள வரா கிளாஸ் முடியட்டும் சொல்லிடுறேன்"
"கிழிச்ச..."
குமாருக்கு அவமானமாக இருந்தது...
"சரிடா செகண்ட் அவர் முடிஞ்சதும் பிரேக்ல சொல்லிடுறேன்.."
"நீ மட்டும் சொல்லம வா அப்புறம் வசிக்கிறோம் கச்சேரி..."
ச்சே... இன்னைக்குனு பார்த்து நேரம் இவ்ளோ சீகரமா போது...ஐயோ இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு.. குமார் யோசித்து கொண்டு இருக்கும்போதே கிளாஸ் முடிந்துவிட்டது..
ரமேஷ், செந்தில், முரளி மூவரும் குமார் பக்கம் திரும்பி பார்க்க, குமார் சுமதிபக்கம் அவள் வகுப்பிலிருந்து வெளியில் சென்று கொண்டிருந்தாள்..
அனேகமாக லைப்ரரி பக்கம் தான் போவாள்..
"டேய் போடா அவ தனியாதான் போறா ..."- செந்தில்
"சரிடா நீங்க இங்க இருங்க" சொல்லிவிட்டு மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சுமதி பின்னால் தொடர்ந்தான் ...
லைப்ரரி அருகில் சுமதி சென்ற பொது..
சுமதி..... குமார் சற்று வேகமாக அழைக்க திரும்பிய சுமதி குமாரை பார்த்து...
"என்ன குமார்?"
"இல்ல உங்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"என்ன விஷயம்...?"
"தப்பா நெனச்சிக்க......"
"சொல்லு பரவால்ல"
"இல்ல நீ யாருகிட்டயும் சொல்லமாடன்னு சொல்லு"
"ச்சே.. சீக்ரம் சொல்லு குமார் டைம் ஆகுது"
"போன வாரத்துல இருந்து சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன் ..
நீ தப்பா நெனசிடுவியோனு தான் சொல்லல.. இது எங்க பசங்களுக்கு கூட தெரியும்... அவங்க தான் சொல்லிடுடானு தைரியம் குடுத்தாங்க.."
" குமார்... என்ன சொல்லணும் ?"
"அது ..அது.."
"சொல்லுடா நான் போகணும்"
"இல்ல அது வந்து..."
"இப்போ சொல்ல போறியா இல்ல நான் போகட்டுமா?"
"அது..."
"போடா நான் போறேன் "
சுமதி.. சுமதி.. நில்லு சொலிடுறேன்...
"என்ன?"
குமார் தயங்கியவாறு சொல்ல ஆரம்பித்தான்...
"போனவாரம் ஒரு நாள் மத்தியானம் நீ சாப்டாம பட்டினி இருந்தல்ல "
"ஆமா"
"அதுக்கு காரணம் நான் தான் காரணம்"
" நீயா?"
"ம்ம்ம்.. அன்னிக்கு நான் தான் உன் லஞ்ச் பாக்ஸ்ல இருந்து சாப்பாட எடுத்தேன். அன்னிக்கு உங்க வீட்ல இருந்து எடுத்து வந்த சப்பாத்தியும் குர்மாவும் வாசனையா இருந்துச்சி... அதான் நானும் என் ப்ரண்ட்சும் எடுத்து சாப்டோம்... அன்னைக்கு ஒன்னும் தெரியுல ஆனா உங்க அப்பாவ அன்னிக்கு சாயந்தரம் பார்த்ததுல இருந்து பயமா இருக்கு... நீ எங்க உங்க வீட்ல போய் சொல்லிடுவியோனு ... அதான் பசங்க உன்கிட்ட உண்மைய சொன்ன நீ தப்பா நெனக்க மாட்டேனு சொன்னாங்க.. அதன் சொல்லிட்டேன் சாரி சுமதி என்னை மன்னிச்சிடு.. வீட்ல போய் சொல்லிடாத..."
"ச்சே இவ்ளோ தானா...? "
"ம்ம்ம்..."
"நீ கூட வேற எதோ தான் சொல்ல போறேன்னு இருந்தேன்... சரியான சாப்பாடு ராமனா இருக்க "
"என்னனு நெனச்ச"
"ம்ம்ம்... நீ சின்ன பையன்...அதெல்லாம் உனக்கு புரியாது... போடா கிளாஸ்கு டைம் ஆச்சு... பெல் அடிசிடாங்க..."
"ம்ம்ம் ... சரி சுமதி " என்றவாறு குமார் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தான்..

மாணவர்கள் பிரேக் முடிந்து கிளாஸ் ரூம்க்கு திரும்பி கொண்டிருந்தார்கள்...

"என்னடா சொல்லிடியா..? என்ன சொன்னா?" நண்பர்கள் கேக்க
"நீ சின்ன பையன் உனக்கு அதெலாம் புரியாதுன்னு சொன்னாட " என்றான் குமார்...
"எப்டியோ நாம சாப்டத அவ யாருகிட்டயும் போட்டு குடுக்காம இருந்தா சரிதான்.." நண்பர்கள் அனைவரும் சந்தோஷத்தில் சிரிக்க...

அவர்களை கேவலமான ஒரு பார்வை பார்த்தவாறு கிளாஸ் ரூம்குள் நுழைந்தாள் சுமதி..
பிளாக் போர்டில் பெரிதாக எழுதி இருந்தது...
"VIII STANDARD 'A' SECTION "

7 comments:

பாலா said...

ஹா..ஹா.. ஹா... வேற எதுவோன்னு.. கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிடுச்சி. ஆனா.. அந்த கடைசி லைனை எதிர்பார்க்கலை.

Subankan said...

எதிர்பார்த்த‍ கதைதான். ஆரம்பத்திலயே தெரிகிறது. Except அந்தக் கடைசி வரி. அபாரம்.

kishore said...

thankyou bala thanks for your visiting...
thankyou subankan... thanks for your comments

வினோத் கெளதம் said...

கடைசி வரி தான் அபாரம்.

கதையையை தூக்கி பிடிக்கிறது.,

kishore said...

நன்றி வினோத்..

Prabhu said...

கிஷோர், கடைசி வரிய படிச்சப்போ நம்மல லூசாக்கிட்டாங்களோ ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். நல்லா இருக்கு>>.

kishore said...

ச்சே ச்சே நான் அப்படி எல்லாம் உங்கள லுசாக்குவனா? ( ஹைய்யோ ஹைய்யோ )