Tuesday, June 9, 2009
சிதம்பரத்தில் பதிவர் சந்திப்பு...
இன்னைக்கு ஒரு பதிவு போடலாம்னு நினைச்ச உடனே ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பர் ஒருத்தர் சொன்னது நினைவுக்கு வந்தது...
"ஏன்டா @#%#$&$*#^@ நாயே எப்போ பாத்தாலும் பொண்ணுங்க , காதல்னு எழுதி எழுதி வீணா( இது பொண்ணு பேரு இல்ல ஆங்கிலத்துல வேஸ்ட்னு சொல்லுவாங்க ) போறியே உருப்படியா எதாவது எழுதினியா? உன்னை எல்லாம் பாலொவ் பண்ணி படிச்சி கமெண்ட் பண்றாங்க பாரு அவனுங்கள சொல்லணும்..."
என்ன பத்தி என்ன சொன்னாலும் என் மனசு தாங்கிக்கும் அது என்னவோ தெரியுல என்ன மாயமோ தெரியுல எனக்கு சூடு, சொரண வர்றது இல்ல . ஆனா என்ன நம்பி படிச்சி கமெண்ட் பண்றவங்கள சொன்னா என் மனசு தாங்காது...
அதான் இந்த தடவ நோ காதல், நோ பெண்கள்,நோ ஜொள்ஸ் ... (அய்யோடா இதை தவிர எனக்கு ஒன்னும் எழுத தெரியாதே... அவசர பட்டு வாய விட்டுட்டேனா ? சரி சமாளிப்போம்..)
என்னத்த எழுதலாம்.. ?
நக்கலு ,நையாண்டி, பிக்கலு , பிடுங்கலு ,சுய புராணம், என்ன தவிர யாருங்க பதுவுலகதுல நல்லா எழுதுறா.. ?,நான் தான் பதிவருக்கு எல்லாம் பதிவரு... , எவண்டா என்னை எதுத்து பதிவு போட்டது? அனானி பேருல அட்டகாசம் , எவண்டா எங்க அண்ணன சொறிஞ்சது ?, தல உன்ன அவன் திட்டிடான் தல... இப்படி பல தலைப்புல யோசிச்சி பார்த்தேன்.. எல்லாத்துக்கும் ஆள் இருகாங்க...
புதுசா எழுதலனாலும் இப்போ இருக்குற டிரண்டுக்கு ஏற்ற மாதிரியாவது இருக்கனும்.. எவன் பதிவ காப்பி அடிச்சி போட்டாலும் பினிஷிங் நம்மளுதா தான் இருக்கனும்... என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப தான் கண்ணுல மாட்டுனது பதிவர் சந்திப்பு...
சரி சிதம்பரத்துல யாரா போய் நான் தேடுறது... அப்படி தெரிஞ்சி நான் அவங்க முன்னாடி போய் நின்னா....(விடுங்க நமக்கு ஊர்ல அவ்ளோ நல்லா பேரு...)
பதிவர்ங்க எல்லாம் ஒன்னு கூடி கும்மி அடிச்சாதான் அது பதிவர் சந்திப்பா ?
கிஷோர் பதிவு எழுதுறதுல இன்னும் மாணவன் தான் ஆனால் வித்யாசமானவன்...( டேய் போதும்டா..)
அதனால இன்னைக்கு இந்த பதிவர் யார எல்லாம் சந்திச்சாரோ அது தான் இவரோட பதிவர் சந்திப்பு...
சிதம்பரத்தில் பதிவர் சந்திப்பு...
காலை 6 மணி
காலிங் பெல் சத்தம் கத்தில் நாராசமாய் காதில் நுழைய கதவை திறந்தால் இன்று இந்த பதிவரை சந்தித்த முதல் அதிர்ஷ்டசாலி என் வீட்டு பால்காரர்... தம்பி சீக்ரம் வாப்பா புதுசா பாக்குற மாதிரி பாக்குற... 1/2 லிட் குடுங்கனே.. பால் வாங்கிட்டு வீட்டுக்குள் நுழைய... தம்பி லுங்கிய எடுத்து கட்டிக்கிட்டு போ.. கருமம் இத சொல்றதே தினம் எனக்கு வேலையா போச்சு என்றார்...
காலை 6.30 மணி
என்ன அண்ணா இன்னும் தூக்கம் கலையலையா ? என்று கேட்டவாறு என்னை சந்தித்த அதிர்ஷ்டசாலி பேப்பர் காரன்...
காலை 7.15 மணி
அடுத்த என்னை பாக்கணும்னு அடம்பிடிச்சி பாத்தவரு கடவுள்...சரி அவரு மூணாவது அதிர்ஷ்டசாலினு வசிக்கலாம்.
காலை 7. 45
எரும மாடு எத்தன தடவ சொல்றது சாப்பிடும் போது பேப்பர் படிக்காத, டீவி பாக்காதனு என்று அர்ச்சனை மலருடன் என்னை சந்தித்தவர் அம்மா.
காலை 7 .55
டேய் வண்டிய எடுத்தா கிளம்ப வேண்டியது தான ? தேவை இல்லாம எதுக்கு ரைஸ் பண்ற ... உன் நடவடிக்கை ஒன்னும் சரி இல்லாத மாதிரி தோனுது... ஒழுங்க இருந்துக்கோ எனக்கு வேலை வச்சிடாத.. - அப்பா
காலை 8.15
என்னை மச்சான் நேத்து அடிச்சது இன்னும் தெளியலயா என்று கரிசனத்துடன் விசாரித்து என் அலுவலக நண்பன்... அதுகிட்ட இருந்து குடல புடுங்குற மாதிரி சரக்கு வாட வருது... அது என்னை கேக்குது தலை எழுத்து...
காலை 9.05
உங்கள ஏ.ஆர் அழைக்கிறார்... -அட்டெண்டர்
(ஐயோ காலைலேவா இவன் கிட்ட போன 10 .30 மணிக்கு தான் வெளில விடுவான்... நான் பேசுறதும் அவனுக்கு புரியாது அவன் பேசுறதும் எனக்கு புரியாது )
காலை 9.07
குட் மார்னிங் சார்...
வாங்க கிஷோர்... நேத்து நான் உங்க கிட்ட சொன்னது என்ன ஆச்சு... நீங்க போய் பாத்.. ...................................................................................................................................................................................
(ஐயோ எப்போ முடிப்பானு தெரியுல...)
நம்ம கணக்கு என்னைக்கு தப்பா போய் இருக்கு.. அவன் ரூம்ல இருந்து வெளில வரும் போது மணி 10 .30..
(தீபாவளி வரட்டும் இவன் வாயில ஒரு 1000 வாலா கொளுத்தி போடணும்....)
காலை 10.45
டேய் மச்சான் வாடா டீ சம்சா சாப்பிடலாம்.. அழைத்து ஒரு நாதாரி (எப்படியும் நீ காசு குடுக்க போறது இல்ல வந்து தொல )
காலை 11.30
டேய் நேத்து ஒரு மேட்டர் படம் செல்லுல ஏத்துனேன் டா உனக்கு வேணுமா? ஒரு ஜந்து கூச்சம் இல்லாம கேக்க..(ஐயோ இவனுக கூட இப்படி வருஷம் முழுசும் கும்மி அடிக்க வச்சிடியே கடவுளே )
அவனை முறைத்து விட்டு திரும்ப
இந்த பக்கம் ஒருத்தன் அவன் செல்போன குறுகுறுன்னு பார்க்க என்னனு எட்டி பார்த்தா .... கடவுளே... பயபுள்ளைங்க எல்லாம் இதே பொழபாவே அலையுதுங்க...
மாலை 6 மணி...
போன் அடிக்க ...எடுத்து ஹலோ என்றேன்... வாடா சினிமாக்கு போலாம் என்றான் நண்பன்... வேற வழி...? போய்ட்டு வந்து சாப்டு படுத்து தூங்கி விட்டார் இந்த பதிவர்...
குறிப்பு :காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை என்னை பண்ணுனன்னு சின்னபுள்ள தனமா கேக்காதிங்க ... அதான் ஆரம்பத்திலயே சொன்னோம்ல பொண்ணுங்கள பத்தி பேச மாட்டேனு...
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இந்த பதிவு நீங்கள் படித்து உங்கள் கருத்துக்களை சொல்ல மட்டுமே (அப்படியே ஓட்டு போடுங்க )..
அது தவிர இதில் எந்தவிதமான உள், வெளி, சைடு குத்துக்கள் எதுவும் இல்லை என்பதை இந்த அற்புதமான தருணத்திலே தெள்ளத் தெளிவாக சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.
டேய் :=) ஹீ ஹீ கொலை வெறி அந்த பேப்பர் காரணாய் நான் வந்து உன்னை போட்டு இருக்கனும் மகனே
அட கொக்க மக்க பெரிய மன்மத ***
இவருக்கிட்ட பேசுற :-) பொண்ணுங்க எல்லாம் அண்ணா அண்ணானு சொல்லுறது தெரியும் மச்சான் எதுக்கு இந்த விளம்பரம் ஹீ ஹீ
மச்சான் சூப்பர் இதே மாதிரியே எழுது பிச்சிக்கிட்டு போகும்..
//தம்பி லுங்கிய எடுத்து கட்டிக்கிட்டு போ.. கருமம் இத சொல்றதே தினம் எனக்கு வேலையா போச்சு என்றார்...//
மச்சான் செம காமெடி..
பவம் பால்காரன் நீ வேற உள்ள .........இருக்க மாட்ட..(Fill in the blanks)
//டேய் வண்டிய எடுத்தா கிளம்ப வேண்டியது தான ? தேவை இல்லாம எதுக்கு ரைஸ் பண்ற ... உன் நடவடிக்கை ஒன்னும் சரி இல்லாத மாதிரி தோனுது... ஒழுங்க இருந்துக்கோ எனக்கு வேலை வச்சிடாத.. - அப்பா//
அப்ப தானே எதிர் வீடு பிகரு வெளியே வரும்...
@ சுரேஷ்
வாடா மச்சான்... உனக்கு ஏன் என் மேல இப்படி ஒரு கோல வெறி?
//அட கொக்க மக்க பெரிய மன்மத *** //
டேய் இதுல எதுவும் டபுள்,டிரிபில் அர்த்தம் இல்லல ..
//வினோத்கெளதம் said...
மச்சான் சூப்பர் இதே மாதிரியே எழுது பிச்சிக்கிட்டு போகும்..//
நன்றி மச்சான்... எனக்கு விளம்பரம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல?
//வினோத்கெளதம் said...
மச்சான் செம காமெடி..
பவம் பால்காரன் நீ வேற உள்ள .........இருக்க மாட்ட..(Fill in the blanks)//
டேய் கம்பெனி சிக்ரெட் வெளிய சொல்லாதனு எத்தன தடவ சொல்றது
//வினோத்கெளதம் said...
அப்ப தானே எதிர் வீடு பிகரு வெளியே வரும்...//
ஏன்டா இப்படி நேர்ல பாத்த மாதிரயே சொல்லி என்னை டேமஜ் பண்ற... ?
//இன்று இந்த பதிவரை சந்தித்த முதல் அதிர்ஷ்டசாலி என் வீட்டு பால்காரர்... //
அய்யோ பாவம்...உன்னைய பாத்துட்டாருல்ல... நாளைக்கு அவருக்கு பால் ஊத்திற கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்...
// என்னை சந்தித்த அதிர்ஷ்டசாலி பேப்பர் காரன்...//
அய்யய்யோ...நாளைக்கு காலமானார்னு அவன் போட்டோ பேப்பர்ல வராம இருக்கணுமே...:(
Kanna said... //
அய்யோ பாவம்...உன்னைய பாத்துட்டாருல்ல... நாளைக்கு அவருக்கு பால் ஊத்திற கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்...//
வேண்டிக்கோ... நல்லவங்க பிராத்தனை தான் பலிக்கும்.. உன்னோடது சந்தேகம் தான்...
//அய்யய்யோ...நாளைக்கு காலமானார்னு அவன் போட்டோ பேப்பர்ல வராம இருக்கணுமே...:(//
ஏன்டா இப்படி எல்லோரையும் போட்டு தள்ளுற
நாங்கூட சீரியசான சந்திப்புன்னு நினைச்சேன்!
வாங்க வால்ஸ்.. நானும் சீரியசான சந்திப்பு தான் நடத்துனேன்...
"சிதம்பரத்தில் சிக்கிய சின்னதம்பி"
அப்டின்னு உன் பதிவுக்கு பேர் வச்சிருக்கனும்! பின்ன என்ன பச்சபுள்ள..?
உன்னை கைபுள்ள ரேஞ்சுக்கு
காலையில எழுந்ததிலுருந்து,
நைட் படுக்கறவரைக்கும்,
பாய போட்டு பாயாசம் ஊத்தியிருக்கானுங்க..
பயபுள்ளைங்க!
நீயும் சிரிச்சிக்கிட்டே வந்து
"சிதம்பரத்தில் ஒரு சித்தப்பான்னு" கதசொல்லுற..
போடா டேய்.. போயி, என் போட்டாவ வச்சி பூஜபன்னிட்டு காலேஜூக்கு கிளம்பு!
கலையரசன் said...
//"சிதம்பரத்தில் சிக்கிய சின்னதம்பி"
அப்டின்னு உன் பதிவுக்கு பேர் வச்சிருக்கனும்! பின்ன என்ன பச்சபுள்ள..?//
சூப்பர் டைட்டில் கலை...
//உன்னை கைபுள்ள ரேஞ்சுக்கு
காலையில எழுந்ததிலுருந்து,
நைட் படுக்கறவரைக்கும்,
பாய போட்டு பாயாசம் ஊத்தியிருக்கானுங்க..
பயபுள்ளைங்க! //
பாயசம் ஊத்துனா கூட பரவாஇல்ல நக்கி நக்கி குடிச்சிடுவேன்... பாவி பயலுங்க பெட்ரோல ஊதிடனுங்க
//நீயும் சிரிச்சிக்கிட்டே வந்து
"சிதம்பரத்தில் ஒரு சித்தப்பான்னு" கதசொல்லுற..//
சரி வா நெக்ஸ்ட் டைம் உன்ன வச்சி "சிதம்பரத்தில் ஒரு சின்ன மாமான்னு" கத சொல்றேன் ... ஓகே வா
//போடா டேய்.. போயி, என் போட்டாவ வச்சி பூஜபன்னிட்டு காலேஜூக்கு கிளம்பு!//
டேய் எனக்கும் அசை தான்... இருந்தாலும் கண்ணா சொன்ன பேப்பர்காரன் , பால்காரன் போட்டோ பக்கதுல உன்னை எப்படி வச்சி பாக்குறது? ஒரு நண்பனா இத செய்ய மனசு வரல... இருந்தாலும் நீ சொன்னதுக்காக சீக்ரம் பண்றேன்...
ஹா.. ஹா..ஹா.., வர வர.. உங்க நையாண்டி தாங்கலை...!!!!
அண்ணாமலையாரிடம் சொல்லி ஆப்பு வைக்கனும்!!!
இதே மாதிரி எழுதுறதா விட்டுட்டு வசந்தி ஏன் அப்படி நடந்துக்கிட்ட, சுமதி ஏன் ரமேஷ் கூட பேசுல, கல்பனவா நினைச்ச கஷ்டமா இருக்குன்னு தொடர்ந்து எழுதுனா படிக்கிறவனுக்கு கடுப்பு வருமா வராத..
//காலிங் பெல் சத்தம் கத்தில் நாராசமாய் காதில் நுழைய கதவை திறந்தால் இன்று இந்த பதிவரை சந்தித்த முதல் அதிர்ஷ்டசாலி என் வீட்டு பால்காரர்... //
பால்காரருக்கு கண்ணு போச்சோ?......
//ஹாலிவுட் பாலா said...
ஹா.. ஹா..ஹா.., வர வர.. உங்க நையாண்டி தாங்கலை...!!!!
அண்ணாமலையாரிடம் சொல்லி ஆப்பு வைக்கனும்!!!//
வாங்க பாலா நன்றி...
அன்னாச்சி வச்சிடாதிங்க ஆப்பு... அப்பரும் என்னோட நக்கல் நையாண்டி அதிகம் ஆகிடபோது... அப்பறம் எங்க அண்ணாமலை (யார்) பத்தி பதிவு போட்டாலும் போட்டுடுவேன்..
//வினோத்கெளதம் said...
இதே மாதிரி எழுதுறதா விட்டுட்டு வசந்தி ஏன் அப்படி நடந்துக்கிட்ட, சுமதி ஏன் ரமேஷ் கூட பேசுல, கல்பனவா நினைச்ச கஷ்டமா இருக்குன்னு தொடர்ந்து எழுதுனா படிக்கிறவனுக்கு கடுப்பு வருமா வராத..//
என்ன பண்றது வினோத்...அப்படி எழுதுன ஜொள்ளு விட்டுக்கிட்டு வந்தாவது ஒரு 10 ஓட்டு போடாங்க... இப்படி எழுதுன கமெண்ட் பன்னறங்கள தவிர.. ஓட்டு நானும் நீயும் தன் போட்டு இருகோம்... தமிழேரஸ்ல கொஞ்சம் பரவாஇல்ல
//பிரியமுடன்.........வசந்த்
பால்காரருக்கு கண்ணு போச்சோ?......//
வாங்க வசந்த்... பால்காரருக்கு பழகி போச்சி...
கிஷோர்
ஓட்டு போட்டாச்சு......
நன்றி கண்ணா
Post a Comment