Monday, June 15, 2009

மரணத்தில் ஒரு மஞ்சள் குளியல்

நேற்று முன்தினம் மாலை எனக்கு தெரிந்த ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழந்து விட்டார் ..
சாலையை கடக்கும் போது டூவீலர் மோதி தலையில் அடிபட்டு விழுந்தவரை ... அங்கு சவாரி ஏற்றி வந்த ஆட்டோகாரர் தன் சவாரியை இறக்கி அவர்களை வேறு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிட்டு.. இவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று கண்பித்து இருக்கிறார்.. அவர்கள் இங்கு பார்க்க முடியாது வேறு இடம்செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அனுப்பி விட்டார்கள்.. பிறகு வேறு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் காவல் நிலையத்தில் தகவல் சொல்லி ஒரு போலீஸ்காரரை அழைத்து கொண்டு இன்னொரு மருத்துவமணைக்கு சென்று காட்ட அவர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட பின்பு சட்டரீதியாக அவரது உடலை அரசு மருத்துவமனை பிணவறைஇல் வைத்து விட்டார்கள்.. அவரின் பாக்கெட் இல் இருந்த செல்லில் அவரின் உறவுகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டார்கள்...

கீழே விழுந்தவரை நமக்கு எதுக்குடா வம்பு என்று செல்லாமல் தனது வருமானத்தை இழப்பதை கூட பொருட்படுத்தாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இவரை காப்பாற்ற நினைத்த அந்த ஆட்டோகாரர் உண்மையில் எனக்கு கடவுளாக தெரிந்தார்.

இனி நடந்தது தான் வேதனையில் உச்ச கட்டம்...

விஷயம் கேள்வி பட்டு உறவுகள் அடித்து பிடித்து வர... பணம் என்ற பிசாசு லஞ்சம் என்ற பெயரில் தனது கோரபற்களை காட்டியபடி உதிரத்தை உறிய தொடங்கியது .

பிணவறை உதவியாளர் பிணவறை திறந்து காட்ட ரூபாய் 100 இல் ஆரம்பித்த லஞ்சம்... மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை மருத்துவர் வர மாட்டார் ..(மதியம் வரை வேலை நேரம் உண்டு ) பிரேத பரிசோதனை நடக்காது ஆகவே இறந்தவரின் உடல் கிடைப்பது சற்று சிரமம்.. பணம் குடுத்தால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லி தொடர .. வேறு வழி இல்லாமல் சம்மதம் தெரிவித்து உறவுகள்.

பணம் கைமாறியது தான் தாமதம்...

மருத்துவர் வந்தார்.. உடனே பரிசோதனை ஒரு மணிநேரத்தில் பரிசோதனை முடிவு... எந்தவித சிரமமும் இன்றி காவல் துறை சம்பந்தபட்ட அனைத்து வேலைகள் முடிந்தன , உடலை ஊருக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தி எல்லாம் தயாரானது...

ஒரு வழியாக ஊருக்கு கொண்டு வந்து நல்லபடியாக காரியங்கள் நடந்தன...
ஆனால் இதற்கு லஞ்சமாக மட்டுமே செலவானது ரூபாய் 5000...
இதை தங்களின் குடும்பத்திற்க்காக செலவு செய்யும் போது அவர்களுகே அருவெறுப்பாக இருக்காதா ?

இதில் மிக கேவலமான விஷயம் என்னவென்றால் இவர்களின் கீழ்த்தரமான செயலுக்கு அந்த தொகை பிக்செட் ரேட்டாம்.. அந்த அறையில் மேலும் இரண்டு உடல்கள் இருந்தன.. அதில் ஒன்று மிக மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது ... இவர்களிடமும் அந்த லஞ்ச பிசாசுகள் இதே மாதிரி தான் கேப்பானுங்க என்று நினைக்கும் போது நெஞ்சம் கனத்தது.. கடவுளே இவர்களிடம் இருந்து அவர்களை காப்பாற்று, நல்லபடியாக இவர்களுக்கு அவரின் உடலை பெற்றுதா என்று மானசீகமாக வேண்டிக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது...

அங்கு இறந்தவர்களின் முகத்தில் கூட ஒரு அமைதியை கண்ட எனக்கு மனசாட்சியை கொன்ற இவர்களின் முகம் கொடூரதின் உச்சகட்டமாக மனித உருவில் நடமாடும் பிணத்தை தின்னும் பேய்களாக மட்டுமே தெரிந்தது.

17 comments:

வினோத் கெளதம் said...

என்ன பண்ணுறது மச்சி பல அரசு துறை பொறுக்கி பேமானிங்க அப்படி தான் இருக்குதுங்க..

வினோத் கெளதம் said...

ஆட்டோ நண்பர் அந்த நேரத்தில் செய்த காரியம் உண்மையில் நல்ல காரியம்..

kishore said...

ஆமா மச்சி.. அப்படி தான் இருக்கானுங்க ... அந்த ஆட்டோ காரர் மாதிரி நல்லவங்க இருக்குற உலகத்துல தான் இப்படி பட்ட நாய்ங்களும் இருக்குதுங்க

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா நாக்க பிடுங்குற மாதிரி கேட்டீங்க?

kishore said...

//பிரியமுடன்.........வசந்த் said...

நல்லா நாக்க பிடுங்குற மாதிரி கேட்டீங்க?//

கேட்ட மட்டும் திருந்தவா போறானுங்க? கேக்குறவன் கேட்டுகிட்ட இருப்பான்.. வாங்குறவன் வாங்கிகிட்டே இருப்பான்...

வால்பையன் said...

இங்கே மட்டும் தான் பிறப்புக்கும் லஞ்சம், இறப்புக்கும் லஞ்சம்!

Prabhu said...

இவனுகள பத்திலாம் பேசிப் பேசி வெறுத்துப் போச்சுண்ணே!

kishore said...

//வால்பையன் said...

இங்கே மட்டும் தான் பிறப்புக்கும் லஞ்சம், இறப்புக்கும் லஞ்சம்!//

உண்மையான வார்த்தை வால்ஸ்..

kishore said...

//pappu said...

இவனுகள பத்திலாம் பேசிப் பேசி வெறுத்துப் போச்சுண்ணே!//
உண்மை தான் பப்பு.. ஆனால் நேரடியாக அந்த பாதிப்பை பார்க்கும் போது ஏற்பட்ட ஆதங்கம் இது...

பாலா said...

சில சமயங்களில்.. ‘நான் இந்தியன் அல்ல’-ன்னு சொல்லுறது.. நல்லாதான் இருக்கு.

அட்லீஸ்ட்.. நான் இந்தியாவில் இல்ல-ன்னாவது சொல்லலாம். அது பெட்டர்.

kishore said...

@ ஹாலிவுட் பாலா
ஆமா பாலா.. என்ன சொல்றது? மிருகங்களில் பல வகை.. அதில் இவர்கள் ஒரு வகை...

கலையரசன் said...

டேய் நைட் ரமணா படம் பாத்த பாதிப்பா...?

சும்மா.. சும்மா..
நல்லவேளை ஆட்டோகாராவது
நல்லவரா இருந்தாரே..
இப்டி நினைச்சி மனச தேத்திக்க வேண்டியதுதான்!!

கலையரசன் said...

புள்ள எம்மாம் கஷ்டப்படுது, உலகத்தை நினைச்சு?

பாஸ்.. அப்ப நீங்க என்ன பன்னிங்கன்னு சொன்னா...
கொஞ்சம் வசதியா இருக்கும்!

கலையரசன் said...

ஓட்டு போட்டாசு!

அடுத்த பதிவு எப்ப? எதுக்கா.. வந்து கும்மதான்!!

kishore said...

//கலையரசன் said...

ஓட்டு போட்டாசு!

அடுத்த பதிவு எப்ப? எதுக்கா.. வந்து கும்மதான்!!//
தேங்க்ஸ் மச்சி.. சீக்ரமே அடுத்த பதிவு... அநேகமா உன்ன பத்திதான்னு நெனைக்குறேன்

kishore said...

அதெல்லாம் ஒன்னும் பார்மாலிடிஸ் வேணம் மச்சான்... அரசு துறைல ஏற்பட்ட அனுபவத்த பகிர்ந்துகிட்டேன் அவ்ளோதான்..

kishore said...

welcome வம்பு விஜய் ... thanks for your visit and comment...