இன்று எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..
வலியும் வேதனையும் மட்டுமே வாழ்க்கையாக தேர்ந்தெடுத்த அவளுக்கு
கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..
வயிற்று பசி தீர்ப்பவரை விழுந்து யாசிக்கும் இந்த உலகம்
அடுத்தவரின் உடல் பசி போக்கும் அவளுக்கு வைத்த பெயர் வேசி...
நான்கு சுவருக்குள் இவர்களின் சுயரூபத்தை கண்டதாலோ என்னவோ
இந்த உலகத்தின் பேச்சுகளை அவள் என்றுமே லட்சியம் செய்தது இல்லை..
இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி போக்க.....
24 comments:
மச்சான் அந்த சவுத்துகுள் இருந்து வந்துட்டு வியாக்கியாணம் பேசுபவன் பலர்... இல்லைனா பார்த்து ச இந்த பிகர் கிடைக்கலை என்று ஏங்கிவிட்டு அவரு ஒரு தே மச்சான் என்று சொல்லுபவர்கள் ஏராளம்..
நானும் அவர்களில் சிலரை பார்த்து தெரித்து ஓடியகாலம் இருக்கு .. காரணம் இராமன் இல்லை ஒரு நிமிடம் யோசித்தால் கூட மனசு தப்பை சரி என்று சொல்ல ஆரம்பிக்கும் அதான் அடுத்த வினாடி அந்த இடத்தில் இருந்து ஒட்டம் எடுத்து இருக்கிறேன்..
நல்லா இருக்கு உணர்வுகளின் வெளிப்பாடு..
அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாறுதல் வந்து முகம் மலர வாழட்டும்
//இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி //
வறுமையின் விளிம்பு, ஆண் ஆதிக்கம்.. இன்னும் சிலர் பகட்டுக்கும் பணத்துக்கும்.. என்ன செய்ய வாழ்க்கையின் பல உண்மை முகங்களை கண்டவர்கள் இவர்கள்...
@ சுரேஷ்
தேங்க்ஸ் மச்சி..
//நானும் அவர்களில் சிலரை பார்த்து தெரித்து ஓடியகாலம் இருக்கு .. காரணம் இராமன் இல்லை ஒரு நிமிடம் யோசித்தால் கூட மனசு தப்பை சரி என்று சொல்ல ஆரம்பிக்கும் அதான் அடுத்த வினாடி அந்த இடத்தில் இருந்து ஒட்டம் எடுத்து இருக்கிறேன்..//
கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாத ஒரு சராசரி மனிதனின் மனநிலை..
//வறுமையின் விளிம்பு, ஆண் ஆதிக்கம்.. இன்னும் சிலர் பகட்டுக்கும் பணத்துக்கும்.. என்ன செய்ய வாழ்க்கையின் பல உண்மை முகங்களை கண்டவர்கள் இவர்கள்...//
உண்மை தான்..
//
இன்று எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..//
உண்மை வலியின் வார்த்தையை சொல்லி இருக்கே டா மச்சான்
//கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..//
வேசிகள் மட்டும் அல்ல சில பெண்களின் வாழ்க்கையிலும் ஆண்கள் கனிவான வார்த்தைகள் பேசுவது இல்லை, ஆண்களுக்கு காமம் எவ்வளவு ஆணந்தமோ அது போல் பெண்களுக்கு இந்த அன்பான 4 வார்த்தைகளும் பரிசமான மெல்லிய தொடுதலும் தான்..
//வேசிகள் மட்டும் அல்ல சில பெண்களின் வாழ்க்கையிலும் ஆண்கள் கனிவான வார்த்தைகள் பேசுவது இல்லை, ஆண்களுக்கு காமம் எவ்வளவு ஆணந்தமோ அது போல் பெண்களுக்கு இந்த அன்பான 4 வார்த்தைகளும் பரிசமான மெல்லிய தொடுதலும் தான்..//
உண்மையான வரிகள்..
தொடர்ந்து இது போல் நல்ல பதிவுகள் வரட்டும் மச்சான்..
நல்லாயிருக்கு.... கீப் கோயிங்!
கொஞ்சம் சீரியஸ்சான டாபிக் தான்..
அனால் வேசி என்பவள் தவறு புரிபவள் அல்ல..
தன்னை நம்பும் ஆண்களை ஏமாற்றும் பெண்களும் சரி..
பெண்களை ஏமாற்றும் ஆண்களும் சரி..
கொஞ்சம் கேவலமானவர்கள்..வாழ அருகதையற்றவர்கள்..
மற்றப்படி ஒரு வேசியின் வாழ்வில் அமையும் சந்தோஷமும் சரி துக்கமும் சரி..ஒரு சமுக நாகரிகத்தின் வெளிபாடு தான்..
//Suresh said...
தொடர்ந்து இது போல் நல்ல பதிவுகள் வரட்டும் மச்சான்..//
முயற்சிக்கிறேன் மச்சான் ..
//கலையரசன் said...
நல்லாயிருக்கு.... கீப் கோயிங்!//
தேங்க்ஸ் டா..
வினோத்கெளதம் said...
//கொஞ்சம் சீரியஸ்சான டாபிக் தான்..
அனால் வேசி என்பவள் தவறு புரிபவள் அல்ல..//
எல்லோரையும் இந்த கணக்கில் சேர்க்க முடியாது நண்பா.. சூழ்நிலை காரணமாக இதில் தள்ள பட்டவர்களும் உண்டு.. பணத்துக்காக விரும்பி வந்தவர்களும் உண்டு...
//தன்னை நம்பும் ஆண்களை ஏமாற்றும் பெண்களும் சரி..
பெண்களை ஏமாற்றும் ஆண்களும் சரி..
கொஞ்சம் கேவலமானவர்கள்..வாழ அருகதையற்றவர்கள்..//
கொஞ்சம் இல்லை ரொம்பவே கேவலமானது நம்பிக்கை துரோகம் ...
//மற்றப்படி ஒரு வேசியின் வாழ்வில் அமையும் சந்தோஷமும் சரி துக்கமும் சரி..ஒரு சமுக நாகரிகத்தின் வெளிபாடு தான்..//
சமூக அவலத்தின் வெளிப்பாடு நண்பா...
புரியல!
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!
அய்யோ பிச்சுட்டீங்க, கடைசி வரியத்தான் சொல்லுறேன். நல்லா சொல்லிருக்கிங்க,ராவா! எந்த காம்ப்ரமைசும் இல்லாம.
//புரியல!
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!//
இம்புட்டு... நல்லவரா நீங்க..???!! :) :) :)
?///இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி ..../////
ரசித்த வரிகள்.....
//வால்பையன் said...
புரியல!
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!//
எந்த விளக்கம் வேணும்னாலும் தயங்காம கேளுங்க வால்ஸ்... எப்படியும் பதில் தெரியாம தான் இருக்கும்...
ஹாலிவுட் பாலா said...
//புரியல!
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!//
இம்புட்டு... நல்லவரா நீங்க..???!! :) :) :)
வாங்க பாலா..
//pappu said...
அய்யோ பிச்சுட்டீங்க, கடைசி வரியத்தான் சொல்லுறேன். நல்லா சொல்லிருக்கிங்க,ராவா! எந்த காம்ப்ரமைசும் இல்லாம.//
தேங்க்ஸ் பப்பு...
//சப்ராஸ் அபூ பக்கர் said..
?///இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி ..../////
ரசித்த வரிகள்.....//
நன்றி அபூ பக்கர்... வருகைக்கும் ரசனைக்கும்...
என்னோமோ போங்க .நீங்க எங்கயோ போய்டீங்க ..
ஆனால் என்ன சொன்னாலும் , அவங்க செய்யறது தப்பு தான் ...
எல்லா தப்புகளுக்கும் , குற்றங்களுக்கும் பின்னால் எதாவது ஒரு நியாமான காரணம் இருக்கலாம் .. குற்றங்கள் என்றுமே நீதி ஆகாது ...
nandri manthiran
நைஸ்..
@ cable sankar
thanks sir.. for your comment and visit
Post a Comment