Wednesday, June 3, 2009

சதிஷ் vs ரிஷிபாலா

சதிஷ்.. இன்றைய தலைமுறை வயசு பையன்...
இவனுக்கு ஒரு பிரச்சனை... தீர்க்க முடிஞ்சவங்க தீர்த்து வைங்க...

















ரிஷிபாலா
...

பிரச்சனையே சதிஷ்க்கு இப்போ இவ தான்...
இவ அப்படி என்ன தான் பண்ணிட்டா ?
இவன லவ் பண்ணிட்டு ஏமாத்திட்டாளா ?
இவன தான் கலயணம் பண்ணிப்பேன்னு அடம்பிடிகிறாளா ?
எதுவும் இல்ல...
சரி இவ யாரு?
இவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்.?
இப்படி கேட்டா ரெண்டு பெரும் சொல்ற ஒரே பதில்...
அப்படி என்னத்த சொல்ல போறாங்க? எல்லோரும் சொல்லுற அதே பொய் தான்... நாங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ்...

சதிஷ்.. ரிஷிபாலா.. சந்திப்பே ஒரு இனிமையான நினைவுகள் தான்...
சதிஷ் தனது மனக்காயங்களை ஆற்ற இணையத்தை நாடி இருந்த சமயம்... வழக்கம் போல நெட்டில் ஒரு பெண்ணிடம் கடலை போட... அவளும் வெகுளியாக பேச...
அவளின் பேச்சு... அவன் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைய...அவர்களின் பேச்சு போன் நம்பர், போட்டோ பரிமாற்றம் என்று உருமாறி ... நேரில் சந்திப்பு நடத்துவது வரை போனது...

அவனின் மனக்காயங்களை முழுதாய் அறிந்தவள் என்பதாலோ என்னவோ நட்பு வட்டத்தில் மட்டுமே இருந்தது அவர்களின் உறவு...


சதிஷ் சில சமயங்களில் வரம்பு மீறி பேசினாலும் உடன் அது தவறு என்று தெரிந்து திருத்திகொள்வான் ... அவற்றை எல்லாம் சகித்து அவனுடன் பழகி வருகிறாள் ரிஷிபாலா...

இந்த நட்பு மீண்டும் ஒரு அழியா ரணத்திற்கான காரணமாக அமைந்துவிடுமோ என்று பயந்து சில சமயங்களில் அவளுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து இருக்கிறான்... சில நாட்களுக்கு பின் அவள் அவனிடம் இது பற்றி கேட்க அவன் தனது பயத்தை அவளிடம் சொல்ல... சிரித்தபடி.. அவள் சொல்லியது ...
"என்னை பற்றி நீ புரிந்துகொண்டது இவ்ளோ தானா சதிஷ்...?"

இதுக்கு அப்புறம் எப்படி அவளின் நட்பை துண்டித்து கொள்ள முடியும்?
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன...

அவனும் அவளிடம் பேசுறான்,சிரிக்கிறான் ,சண்டை போடுறான், சமாதானம் ஆகுறான்...
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது அவனுக்கு...
ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது என்ற கீழ்தரமான எண்ணம் கொண்டவன் அல்ல அவன்...
ஆனால் அவனுக்கு அவளிடம் மட்டும் இது சாத்தியபடவில்லை
இது நிச்சயம் எதையும் எதிர்பார்க்காத பரிசுத்தமான நட்பு இல்லை...
அப்போ
காதலா? நிச்சயம் அதுவும் இல்லை...
நட்பு ,காதல் போன்ற வார்த்தைகளை கண்டுபிடித்தவர்கள்.. இரண்டிற்கும் இடையில் உள்ள உணர்வை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது யார் குற்றம்?
(தயவு செய்து காமம் என்று சொல்லி கேவலபடுதாதிங்க )

என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தனுக்கு மனைவியா ஆகபோறவ... அவகிட்ட இப்படி முறை தவறி பேசுறது தப்புன்னு அடிக்கடி தோனுது இவனுக்கு... அதே சமயம் நான் அவளுக்கு நண்பன் என்ற சொல்லிக்கொண்டு கொண்டு அவனே சமாதானம் ஆகிப்பான்...

அவங்க ரெண்டு பேரு காதலிகிறாங்களா ?
அவங்க ரெண்டு பெரும் நண்பர்கள் தானா?
இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல தேவை இல்ல... ரெண்டு வருஷமா அவங்களுகே தெரியாதது ரெண்டு நிமிஷம் படிச்சிட்டு உங்களால சொல்லமுடியாதுன்னு அவனுக்கு நல்லவே தெரியும்...

அவன் கேக்குற கேள்வி...
அவளுடன் இப்படி தொடர்வது தவறு என்று அவனுக்கு அடிக்கடி தோனுது... இதை காலம் முழுதும் வெறும் நட்பு என்று சொல்லி அவனை அவனே ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை.. அதே போல் அவளின் முகம் பார்த்து இனி நாம் தொடர வேண்டாம் என்று சொல்லவும் தைரியம் இல்லை ...

அவளுடன் இந்த மாதிரியான நட்பும் அல்லாத காதலும் அல்லாத உறவை தொடரலாமா வேண்டாமா?
தொடரலாம் என்றால் காரணத்தை விளக்கவும்...
வேண்டாம் என்றால் அவளிடம் எப்படி இதை அவள் மனம் நோகாமல் தெரிவிப்பது என்று சொல்லுங்கள்.
(குறிப்பு: யாரு என்ன சொன்னாலும் அவன் என்ன நினைகிறானோ அதை தான் செய்வான்... இது அவனிடம் நன்கு பழகிய நண்பர்களுக்கு தெரியும் )

51 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நட்பு ,காதல் போன்ற வார்த்தைகளை கண்டுபிடித்தவர்கள்.. இரண்டிற்கும் இடையில் உள்ள உணர்வை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது யார் குற்றம்?//

-:)

kishore said...

@ பித்தன்

என்ன சிரிப்பு... ? அந்த சிரிப்புல ஒரு வில்லதனம் தெரியுது...?

வெற்றி-[க்]-கதிரவன் said...

நட்பு + காதல் =நட்+பு+கா+தல் = நட்தல் (பு + கா வை நீக்கிவிடுக)

இந்த உணர்வுக்கு பேரு நட்தல்

பி.கு :: பெயர் மற்றும் விளக்கம் கொடுத்து பினூட்டத்தில் போட்டால் ஒரு பாக்கெட் கள்ளமுட்டை வாங்கி தருவதாக கிசோரே சொன்னதால் நான் இந்த பினூட்டத்தை அவரின் சார்பாக இடுகிறேன்...

பி.கு க்கு பி.கு :: இந்த பெயரை அவர் இடுகையில் இடாததற்கு ஏதோ தொழில் இரகசியம் இருப்பதாக கூறினார்... யாராவது கேட்டு சொல்லவும்

kishore said...

@ பித்தன்..

அட பாவி இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது போல?
உன்னோட ரேட் ஒரு பக்கெட் கல்லமுட்டாய் தான ?
தொழில் ரகசியமா ? நல்ல கேக்குராங்கய டிடைலு ...

வினோத் கெளதம் said...

இதை நீ அன்புடன் அந்தரங்கம் அனுராதா ரமணனுக்கு அனுப்ப வேண்டிய பதிவு..

வினோத் கெளதம் said...

இதற்கு நான் பதில் சொன்னால் என்னை பைத்தியக்காரன்(பதிவர் அல்ல ..நிஜ பைத்தியம் ) என்பார்கள்..

kishore said...

@ வினோத் கெளதம்

யாரும் உன்ன இனிமே பைதியகாரனு சொல்ல போறது இல்ல அதனால சதிஷ்க்கு ஒரு பதில் சொல்லு நண்பா...

kishore said...

@வினோத் கெளதம்

ஏற்கனவே அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு ஒரு காப்பி அனுபிட்டான் ..

ப்ரியமுடன் வசந்த் said...

சும்மா ஒரு காதல் போல காதல் பண்ணியவளுக்கு

சும்மா ஒரு காதலிய கூட்டி போய் இவதான் எனக்கு மனைவியாய் வர போறவள்ன்னு சொல்ல சொல்லுங்க

Anonymous said...

Tis Type of persons always cheating others..
saying like "v dont knw wt is exactly going on between us"..
bcoz of tis cheating themselves also..
Big cheaters..
say Satish to bhav within limit..

வினோத் கெளதம் said...

யாரு மச்சான் இது உன் மேல இவ்வளோ காண்டு..எதுக்கும் கொஞ்சம் பார்த்து சுதனமா இருந்துக்கோ..

Anonymous said...

Last bt not Least..
Is it work..??

kishore said...

//பிரியமுடன்.........வசந்த் said...

சும்மா ஒரு காதல் போல காதல் பண்ணியவளுக்கு

சும்மா ஒரு காதலிய கூட்டி போய் இவதான் எனக்கு மனைவியாய் வர போறவள்ன்னு சொல்ல சொல்லுங்க//
சொல்லலாம்.. அனால் எந்த நேரத்திலிம் அவள் சதீஷ் கிட்ட காதலி போல நடந்துகுல... அப்புறம் எப்படி?

kishore said...

//Anonymous said...

Tis Type of persons always cheating others..
saying like "v dont knw wt is exactly going on between us"..
bcoz of tis cheating themselves also..
Big cheaters..
say Satish to bhav within limit..//

thankyou anony... for your visit and advise

kishore said...

//vinoth gowtham said...

யாரு மச்சான் இது உன் மேல இவ்வளோ காண்டு..எதுக்கும் கொஞ்சம் பார்த்து சுதனமா இருந்துக்கோ..//

காண்டு எல்லாம் இல்ல ... எதோ அறிவுரை சொல்றாரு கேட்டுப்போம் ..

kishore said...

//Anonymous said...

Last bt not Least..
Is it work..??//
வினோத்கு வந்த அதே வார்த்தை... ரெண்டு பேருக்கும் தெரிஞ்சவந்தானு தெரிஞ்சி போச்சி... மவனே நேர்ல மாட்ன செத்துடுவ ...

கண்ணா.. said...

//அவளுடன் இந்த மாதிரியான நட்பும் அல்லாத காதலும் அல்லாத உறவை தொடரலாமா வேண்டாமா?//

வேண்டவே வேண்டாம்....ஐடியை எனக்கு கொடுக்கவும்..நான் தொடர்ந்து கொள்கிறேன்...

கண்ணா.. said...

இன்னைக்கு கிஷோர் கடையை திறந்து வைச்சிட்டான்...வாங்க கும்மி அடிக்கலாம்..

Anonymous said...

y u r posting like dis shi.. (FIB)?
u have no jobs? r u trying to count the posts?
poda poi velaiya paru..

கலையரசன் said...

ஏன்?.. வினோத் மட்டுதான் அனானி கமெண்ட் போடுவானா?
நாங்களும் போடுவோம், (கமெண்ட்தாம்பா)!

டேய் நான் சத்தியமா கேக்குறேன்...
அன்னைக்கு என்னடான்னா, பிகரு பிகிளடிச்சவனுக்கு
சரக்கு வாங்கிதந்துட்டு வந்து பொலம்பற..
இன்னகி என்னடான்னா, அவங்களுக்குள்ள என்னன்னு
விடுகதைக்கு விடை என்ன? போல பதிவு போடுற..

டேய்! உண்மைய சொல்லு நீ என்ன வேல பாக்குற?
இல்ல நீதான் அந்த சதீஷா?

kishore said...

@கண்ணா //வேண்டவே வேண்டாம்....ஐடியை எனக்கு கொடுக்கவும்..நான் தொடர்ந்து கொள்கிறேன்...//

இதோடா.. இன்டிசென்ட் ப்ரோபோசல்... அவ்ளோ சீக்ரம் சொல்லிடுவோமா

kishore said...

//ஏன்?.. வினோத் மட்டுதான் அனானி கமெண்ட் போடுவானா?
நாங்களும் போடுவோம், (கமெண்ட்தாம்பா)!//

போடு போடு.. (கமென்ட்தாம்பா )

kishore said...

//டேய் நான் சத்தியமா கேக்குறேன்...
அன்னைக்கு என்னடான்னா, பிகரு பிகிளடிச்சவனுக்கு
சரக்கு வாங்கிதந்துட்டு வந்து பொலம்பற..
இன்னகி என்னடான்னா, அவங்களுக்குள்ள என்னன்னு
விடுகதைக்கு விடை என்ன? போல பதிவு போடுற..//

நான் ஒரு போதை ... ச்சே போதி மரம் மாதிரி... பிரச்சனைனு வரவங்க என்கிட்ட வந்து அறிவுரை கேட்டு உருபடுவாங்க...

kishore said...

//டேய்! உண்மைய சொல்லு நீ என்ன வேல பாக்குற?//

சமூக சேவை..

//இல்ல நீதான் அந்த சதீஷா?//

கிளிண்டன் மோனிகாவ வச்சி இருந்தாருன்னு சொன்னா நீ தான் கிளிண்டனானு கேப்ப போல இருக்கு...

kishore said...

//Kanna said...

இன்னைக்கு கிஷோர் கடையை திறந்து வைச்சிட்டான்...வாங்க கும்மி அடிக்கலாம்..//

இன்னைக்கு உங்க ஓட்டல்ல நான் தான் லெக் பீஸ் ஆ

கண்ணா.. said...

-----------------------------------------------
KISHORE said...

//இல்ல நீதான் அந்த சதீஷா?//

கிளிண்டன் மோனிகாவ வச்சி இருந்தாருன்னு சொன்னா நீ தான் கிளிண்டனானு கேப்ப போல இருக்கு...
-----------------------------------------------

நீ இப்பிடில்லாம் சொல்லிட்டா நாங்க நீதான் அந்த சதீஷ் இல்லன்னு நம்பிருவோமா..?

எங்களுக்கு சின்ன வயசுலயே கூப்பிட்டு வச்சு காது குத்திட்டாங்க...

கண்ணா.. said...

//கலையரசன் said...
ஏன்?.. வினோத் மட்டுதான் அனானி கமெண்ட் போடுவானா?
நாங்களும் போடுவோம், (கமெண்ட்தாம்பா)!//

அடப்பாவிங்களா...

நீங்கதானாடா அந்த அனானிகள்...

இது தெரியாம நான் வினோத்திற்கு சீரியஸா அட்வைஸ் பண்ணி கமெண்ட்லாம் போட்டனே.....

kishore said...

@kanna
சரி வா தொப்புள்ள வளையம் மாட்டி விடுறேன்

வால்பையன் said...

காதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாததால் அப்பிட்டுகிறேன்!

kishore said...

இதுக்குதான் இலவசம் தானான்னு அட்வைஸ் பண்ண கூடது

kishore said...

வாங்க வால்ஸ்... இந்த கேள்விக்கு காதல பத்தி தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்ல

கலையரசன் said...

//கிளிண்டன் மோனிகாவ வச்சி இருந்தாருன்னு சொன்னா
நீ தான் கிளிண்டனானு கேப்ப போல இருக்கு-//

நீ தான் கிளிண்டனானு கேக்க நாங்க என்ன கேனப்பயலா?
நீ தான் மோனிகாவான்னு கேப்போம்..

kishore said...

//நீ தான் கிளிண்டனானு கேக்க நாங்க என்ன கேனப்பயலா?
நீ தான் மோனிகாவான்னு கேப்போம்..//

அய்... அஸ்கு புஸ்கு.. என்ன மொனிகானு சொன்னா உடனே என் ஜட்டிய எடுத்து காமிப்பேனு தானா அப்படி சொல்ற... எந்த ஜென்மத்திலும் உன் ஆசை நிறைவேறாது...

kishore said...

சதிஷ் கேட்ட கேள்விய தவிர எல்லாத்துக்கும் பதில் சொல்றீங்க எல்லோரும் .

வினோத் கெளதம் said...

//கலையரசன் said...

ஏன்?.. வினோத் மட்டுதான் அனானி கமெண்ட் போடுவானா?
நாங்களும் போடுவோம், (கமெண்ட்தாம்பா)!//

யோவ் அனானியா வந்து கம்மென்ட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது..
தனி மனித தக்குதல் எனக்கு பிடிக்காத ஓன்று..

வினோத் கெளதம் said...

//KISHORE said...

//நீ தான் கிளிண்டனானு கேக்க நாங்க என்ன கேனப்பயலா?
நீ தான் மோனிகாவான்னு கேப்போம்..//

அய்... அஸ்கு புஸ்கு.. என்ன மொனிகானு சொன்னா உடனே என் ஜட்டிய எடுத்து காமிப்பேனு தானா அப்படி சொல்ற... எந்த ஜென்மத்திலும் உன் ஆசை நிறைவேறாது...//

உனக்கு சென்சார் தேவைனு நினைக்கிறேன்..

வினோத் கெளதம் said...

//அடப்பாவிங்களா...

நீங்கதானாடா அந்த அனானிகள்...

இது தெரியாம நான் வினோத்திற்கு சீரியஸா அட்வைஸ் பண்ணி கமெண்ட்லாம் போட்டனே.....//

அது நான் இல்லைப்பா ..ரெண்டு அனானி கம்மென்ட் நடுவுல என் கம்மென்ட் இருந்துச்சுனா அது நானா..
என்ன உலகமடா சாமி இது..

kishore said...

@vinothgowtham
//யோவ் அனானியா வந்து கம்மென்ட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது..
தனி மனித தக்குதல் எனக்கு பிடிக்காத ஓன்று..//

ha ha he he hey hey

kishore said...

@வினோத் கெளதம்
//உனக்கு சென்சார் தேவைனு நினைக்கிறேன்..//
நானும் அதான் மச்சி நெனக்குறேன்... கொஞ்ச நாளாவே ஓவரா பேசுறேன்...

kishore said...

@vinothgowtham

//அது நான் இல்லைப்பா ..ரெண்டு அனானி கம்மென்ட் நடுவுல என் கம்மென்ட் இருந்துச்சுனா அது நானா..
என்ன உலகமடா சாமி இது..//
நீ ஏன் ரெண்டு கமென்ட்க்கு நடுவுல போற... கொஞ்சம் லெப்ட்ல போ

priya said...

anandha ponnu sathish kita friendly mattum dhanea.. iruka?

priya said...

unga frienda gowtham kita keluga..... naala idea kuduparu...................?

priya said...

ipati oru relationship a countinue panalama venamnu confusionla sathish irukan nu bala vuku therinja.... avalavea(bala) avana distrub panna poividuva... u dont worry.... now are u happy....?

priya said...

adha epati ava kita sollurathu nu enkita keta? ungala maari oru i mean indha maari common discussionla indha topic pesi theriya paduthalam......

வினோத் கெளதம் said...

priya said...

// unga frienda gowtham kita keluga..... naala idea kuduparu...................?//

நான் என்ன நாட்டாமையா ஊருக்கு எல்லாம் உபதேசம் சொல்ல..

வினோத் கெளதம் said...

Really Is it work.??

Suresh said...

//நட்பு ,காதல் போன்ற வார்த்தைகளை கண்டுபிடித்தவர்கள்.. இரண்டிற்கும் இடையில் உள்ள உணர்வை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது யார் குற்றம்?//


ஹம் எதாவது சொல்லிட போறேன் :-)

Suresh said...

ஆமா என்ன மச்சான் கும்மி அடிச்சிருக்காங்க ..

உனக்கு அனானி வேற கமெண்டா முடியவில்லையே ஸ்ப்பா கண்ண கட்டுதே

//அவங்க ரெண்டு பேரு காதலிகிறாங்களா ?
அவங்க ரெண்டு பெரும் நண்பர்கள் தானா?
இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல தேவை இல்ல... ரெண்டு வருஷமா அவங்களுகே தெரியாதது ரெண்டு நிமிஷம் படிச்சிட்டு உங்களால சொல்லமுடியாதுன்னு அவனுக்கு நல்லவே தெரியும்...//

டேய் அவனை தலைகீழா தொங்க விட்டு சும்மா உரிச்சு விட்டா அவனுக்கு பிடிச்ச பித்தம் தெளியும்.

இன்னும் ஏதாவது சொல்லிடுவேன் வேணாம் உன்னை போனில் போட்டு தாழிச்சு எடுக்கிறேன்

Suresh said...

// unga frienda gowtham kita keluga..... naala idea kuduparu...................?
//

எப்பா சாமி பிரண்டு தான் கவுந்து கிடக்குறது தெரியாம சொல்லிட்டாங்க,

அவன் கிஷோர் கிட்ட கேட்டு , கிஷோர் பதில் தெரியாம நம்ம கிட்ட பதிவு போட்டு கேட்டு..

ஸ்ப்பா

Suresh said...

/நட்பு + காதல் =நட்+பு+கா+தல் = நட்தல் (பு + கா வை நீக்கிவிடுக)

இந்த உணர்வுக்கு பேரு நட்தல்/

இந்த தமிழ் புலவருக்கு ஒரு பாராட்டு விழா நட் கழுண்டு போச்சுனா அது நட்தல் ;)

பூகாதல் ... :-) கெட்ட வார்த்தையா படிச்சா நான் பொருப்பு இல்லை

Suresh said...

படிச்சிட்டேன் மச்சான் கருத்தா பதில் சொல்லுறேன் கேட்டுக்கோ..

!@#@!^&%^&%^&

திட்டிவிட்டு தான் அரம்பம்..

முதல் சில நாட்களுக்கு அந்த பிரிவு பெரிசா இருக்கும்..

காதல் சொல்லிட்டு நட்பாய் கூட இருந்துடலாம் என்பது எல்லாம் சுத்த பொய் ஒன்னு காதல் இல்லைனா சே குட் பை... இல்லைனா நட்புயாய் இருக்கனும் என்றால் அந்த பெண் கல்யாணம் ஆனாலும் அவள் கணவிடம் சொல்லி நட்பாய் இருப்பாளா சொல்லு டா

அப்படி இருந்தால் ஓக்கே

இல்லைனா இதுக்கு பெயர் @!#!#! :-) கோபம் வேணா இது சூழ்நிலை தான் காரணம்

பேசாம இருங்க 4 மாசம், அதுவும் பிரிவும் பழகி போய்டும்..

அதுக்கு நடுவில் வாழ்க்கையில் அந்த பையனே அந்த பெண்ணே வேற ஒருத்தரோட நட்பாய் பழகலாம்..

என்ன சரியா

இதுக்கு அப்புறமும் இது வேணாம் ஆனா இப்படி இருப்போம் சொன்ன அதுக்கு பெயர் சும்மா கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதல் பீலிங்ஸ்ல டிரையல் பாக்குறா டைப்

எங்க காதல்னு சொன்ன கமிட் ஆகி கல்யாண பண்ண வேண்டியது வந்து விடுமோ என்று பயம் அந்த பெண்ணுக்கு

காரணம் சமூகம் , குடும்பம் தரும் காதல் எதிர்ப்பு

சரியா

பிசி