ஆளாளுக்கு பிடிச்ச பத்து பிடிக்காத பத்துன்னு பதிவு போட்டு கெத்தா அலையுறாங்க..
நான் மட்டும் வாயில விரல் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?
என்னடா எழுதலாம்னு மண்டைய சொறிஞ்சிகிட்டு உக்கார்ந்துகிட்டு இருந்தப்ப ரோட்ல பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா மட்டும் இல்ல பதிவு எழுத மேட்டர்ம் தான்...
இனி...
என் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட (போண்டா - டீ இல்ல ) எனக்கு பிடிச்ச / பிடிக்காத பத்து...
(கருப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிச்சது.. சிகப்பு எழுத்து எல்லாம் எனக்கு பிடிக்காதது ஆனாலும் அவங்க வீட்டுகாரருக்கு பிடிச்சது )
1.காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் நைட்டிய மாட்டிகிட்டு நிக்கிறது..
2. அவங்களுக்கு பெரிய கண்ணு.. அதுல அழகா மெல்லிசா மை வச்சி.. இமைகளுக்கு மஸ்காரா போட்டா சும்மா சூப்பரா இருக்கும்.. ஆனாலும் எப்போ பார்த்தாலும் தூங்கி வழிஞ்ச மாதிரி இருக்குறது..
3. அவங்க உதட்டு இதழ்கள் ரொம்ப சின்னது... லிப்ஸ்டிக் போடுறபோ அழகா உதட்ட சுத்தி லைட் கலர் லைனிங் குடுத்து அப்பறம் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டா சும்மா ரோஜா உதடு மாதிரி அழகா இருக்கும்.. ஆனாலும் பபூன் மாதிரி லிப்ஸ்டிக் அப்பிகிட்டு நிக்கிறது..
4. அவங்களுக்கு அழகான வட்டமான முகம்... அதுல லைட் மேக் அப் போட்டு.. சின்னதா ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சா நல்ல இருக்கும்.. ஆனாலும் மாரியம்மன் கோவில்க்கு கூழ் ஊத்த போறது மாதிரி எப்போ பார்த்தாலும் மஞ்சள அப்பிகிட்டு ஒரு ரூபா சைசுல குங்குமம் வச்சிக்கிறது...
5. அவங்களுக் அழகான கருமையான அடர்த்தியான கூந்தல் .. அதை அழகா லூஸ் ஹேர் விட்டு நுனில ஒரு முடிச்சி போட்டு விட்டா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆனாலும் பஜாரி மாதிரி எப்போ பார்த்தாலும் தூக்கி கொண்டை போட்டுக்கிறது ..
6. அவங்களுக்கு காது மடல் கொஞ்சம் பெருசு.. அதை அழகா பாதி முடிய விட்டு மறைச்சு சின்னதா ஒரு கல்லு வச்ச தோடு போட்டா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பெரிய தோடு மாட்டிகிட்டு கிழவி மாதிரி இருக்குறது..
7 . அவங்க கழுத்து சங்கு மாதிரி அழகா இருக்கும்.. அதுல மெல்லிசா ஒரு செயின்.. அது போதும் அப்சரஸ் மாதிரி இருப்பாங்க... ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு எரும மாட்டுக்கு கைறு கட்டுன மாதிரி ஒரு செயின் மாட்டிட்டு அலையுறது.
8 . அவங்க மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்கும்.. அதுல ரெண்டு பக்கமும் லைட் மேக்கப் போட்டு.. நடுவுல டார்க் மேக்கப் லைன் குடுத்த மூக்க கொஞ்சம் நீளமா காமிக்கும்.. அதுல சின்னதா ஒரு மூக்குத்தி போட்டா.. அடடா..ஆனாலும் அவங்க வீட்டுகாரரு வாங்கி குடுத்தாருன்னு பாட்டில் மூடி மாதிரி ஒரு மூக்குத்தி... ச்சே...
9 . அவங்க கை ரெண்டும் பார்க்க அவ்ளோ மிருதுவா மினுமினுபா இருக்கும்.. அதுல ஒரு கைல ஒரு தங்க வளையல்.. இன்னொரு கைல ஒரு கோல்டு கலர் வாட்ச் காட்டுனா ..சூப்பரா இருக்கும்.. ஆனாலும் வளைகாப்புக்கு போற மாதிரி கை நிறைய வளையல மாட்டிகிட்டு நிக்கிறது..
10 . அவங்க கால் பாதம் சின்னதா ஆனா நீளமா இருக்கும்.. அதுல ரெண்டாவது விரல்ல சின்னதா ஒரு மெட்டி போட்டு .. மெல்லிசான கொலுசு போட்டா...என்னத்த சொல்ல... ஆனாலும் மோகினி பிசாசு மாதிரி ஜல் ஜல்னு ஒரு கொலுசா மாட்டிகிட்டு அலையுறது..
பத்து முடிஞ்சி போச்சா.. இவ்ளோ படிசிடிங்க . என்னோட வைத்தெரிச்சளையும் சேர்த்து படிச்சிடுங்க... என்னது பத்துக்கு மேல போக கூடாதா ? அப்போ 10(அ)ன்னு போட்டுறேன்.. சரியா..?
10(அ). குழந்தைய கொஞ்சுற சாக்குல அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு இருந்தா .. குழந்தைய பார்த்து மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..சொல்லுவாங்க பாருங்க... என்னைய மாமான்னு சொல்றது கூட பொறுத்துக்கலாம் .. அந்த சாக்குல அவங்க தம்பியா என்னைய அவங்க குழந்தைக்கு சொல்லுவாங்க பாருங்க... என்ன கொடும சார் அது...
டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க...
31 comments:
இதில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல..
10 போடுவோர் சங்கத்தில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்!!!
ஏப்பா 10 ஓட்டு போட்டிருக்கீங்க ஒரு பின்னூட்டம் போடக்கூடாதா?
@ தேவன் மாயம்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவன் சார்...
//ஏப்பா 10 ஓட்டு போட்டிருக்கீங்க ஒரு பின்னூட்டம் போடக்கூடாதா?//
நானும் அதை தான் ரொம்ப நேரமா கேட்டுகிட்டு இருக்கேன்...
டிஸ்கி:அந்த அக்கா ரொம்ப நல்லவங்க... நானும் ரொம்ப நல்ல தம்பிங்க... நல்ல தம்பிங்க.. நல்ல தம்பிங்க... ///////
யோவ், உன்னயப் பத்தி எனக்கு தெரியாதா?
சிவப்பெல்லாம் படிச்சுப் பாத்தா, மொத்தத்தில அத பாக்கவே முடியாது போல இருக்கு?
Anganga Comedy yellam nallathan irukku,But thalaipu utpada pala visayangal "VAKKIRAMana" sindhanaiyai kaatu girathu...Krish
இன்னாதிது?
எதுத்த வீட்டு ஆண்டீயின் ஆறு,
பின்னாடி வீட்டு பரிமளத்தின் பதினொன்னு.. கிளம்பிடாதடா!
உன்னைய பாத்தாலே பயமா இருக்கு.. கடிச்சு கிடிச்சு வச்சிடாத சாமீமீமீ!!
@ பப்பு
//சிவப்பெல்லாம் படிச்சுப் பாத்தா, மொத்தத்தில அத பாக்கவே முடியாது போல இருக்கு?//
சரியாக கண்டுபிடித்த பப்புவுக்கு ஒரு பிஸ்கட் பரிசு..
//Anonymous said...
Anganga Comedy yellam nallathan irukku,But thalaipu utpada pala visayangal "VAKKIRAMana" sindhanaiyai kaatu girathu...கிருஷ்//
வருகைக்கு நன்றி கிருஷ்.. இந்த பதிவு வெறும் நகைசுவைக்காக மட்டும் எழ்டுத்த பட்டது.. நீங்கள் சொல்லியது போல தலைப்பு வேண்டுமானால் சற்று வேறு பட்டு இருக்கலாம்.. மற்றபடி.. எந்த இடத்திலும் வக்ரத்தை தூண்டும் விதமாக எந்த சொல்லும் இல்லை என்பது என் எண்ணம்..
நான் அவரின் முக அழகு, கை கால் மட்டுமே வர்ணித்து இருக்கிறேன்.. அது தவிர எந்த இடத்திலும் மற்ற அவயங்களை வர்ணிக்கவில்லை.. உங்களுக்கு அது வக்ரமாக தோன்றினால் வருந்துகிறேன்...
//கலையரசன் said... இன்னாதிது?
எதுத்த வீட்டு ஆண்டீயின் ஆறு,
பின்னாடி வீட்டு பரிமளத்தின் பதினொன்னு.. கிளம்பிடாதடா!
உன்னைய பாத்தாலே பயமா இருக்கு.. கடிச்சு கிடிச்சு வச்சிடாத சாமீமீமீ!//
ம்ம். அந்த பயம் இருக்கனும்...
பாபா, பிஸ்கோத்து!
நண்பா,
மிக நன்றாக அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்...
நிறைய எழுதுங்கள்...
பிரபாகர்.
சும்மா சொலலக்கூடாது,பக்கத்து வீட்டு ஆன்டிய பார்த்ததெ இல்ல!
I think, same way society will look your wife also.. be happy with that....! What the hell man.. ur writing..
Dev
நன்றி பிரபாகர்..
நன்றி திருமதி ஜெயசீலன்
dear dev..
anyhow the society will look in the same way.. its not only for me but for everyone.. so you dont have to worry about my personal life..
சிகப்புல வர்றதையெல்லாம் வச்சி படம் வரைந்து பாத்தா... அட நம்ம நடிகை காந்திமதில்ல வருது...என்ன டேஸ்ட்டுங்க உங்களுக்கு!!
வாங்க பிரேம்.. நீங்க எவ்ளோ பரவா இல்ல.. உங்களுக்கு காந்திமதி.. பல பேருக்கு.. பறவை முனியம்மா, தேனீ குஞ்சரம்மனு வருது... என்ன பண்றது.. அவங்களும் ஒரு காலத்துல... சரி விடுங்க.. சொன்னா வக்கிரமா பேசுறேன்னு அனானி பேருல சொல்வாங்க..
ஒரு விரலால் ஒருவரை குற்றம் சுமத்தும் போது மற்ற மூன்று விரல்களும் நம்மை காட்டும்!
dei evanda ivan pakkaththu veettula irukkurathu....
//வால்பையன் said...
ஒரு விரலால் ஒருவரை குற்றம் சுமத்தும் போது மற்ற மூன்று விரல்களும் நம்மை காட்டும்!//
அப்படியா?
Vivek said...
dei evanda ivan pakkaththu veettula irukkurathu....
வாங்க விவேக்
அட பாவி உன்னை எல்லாம் வீட்டுக்குள்ளே விடக்கூடாது போல ஹீ ஹீ நல்ல வேளை எங்க எரியாவிலே நீ இல்லை .. ஏரியாவே கெட்டு போயிடும்
:-) எப்பா சாமி உனக்கு பெண் குடுகிற மாமாவை இந்த பதிவை படிச்சிட்டு தாண்டா கொடுக்க சொல்லுனும்
வா...மாப்புளே.....இவ்வளவு வர்ணிசுட்டு.....
இதில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல..னு
ஒரு...போடுபோடியே...நீ(ங்க)...ரெம்ப ....நல்லவருகோ......
வாழ்த்துகள் .....
@ சுரேஷ்..
நன்றி மச்சான்...
@ seemangani
வாங்க..மச்சி... உங்கள் வாழ்த்துக்கு நன்றி..
//காட்டன் புடைவை தான் அவங்களுக்கு எடுப்பா இருக்கும்.//
புரியுற மாதிரி எதாவது சொல்ல கூடாதா
//மாமாகிட்ட மூக்கு காட்டு.. நாக்கு காட்னு..//
தப்பா புரிஞ்சுகிடீங்க ....
மாமான்னு சொன்னது குழந்தைக்கும் உங்களுக்கும் உள்ள உறவு முறை இல்லை ..
அப்படின்னா ? என்ன நடக்குது அங்க ?
yappu, vela vetti illama summa ukkandhu pakkathu veettu ayntiya davadichukkittu irukkiyakkum? jakkiradhai, udhai kidaichalum kidaikkum. yen, pakkathu veettu akkavukku magal illiya? appidi irundha akka paasam pothukittu vandirukkumae?
//பொண்டாட்டி போனாங்க... கண்ணுல சிக்குனது மைனா //
மைனா அப்படின்னு சொல்றீங்க ...
அப்புறம் அக்கான்னு சொல்றீங்க ...
ஒண்ணுமே புரியல இந்த உலகத்தில
Funny!
//
இதில் வரும் கதாபாத்திரம் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல..
//
Who would believe this? ;-)
Kishore, are you the president of all india aunties-admirers club?
@ joe
thanks sir..
juz for fun only nothing more
Post a Comment