Tuesday, July 21, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்து..

நான் ஜனிக்க போகும் நேரம்..
கடவுள் உனக்கு உலகில் என்ன வேண்டும்? என்றான்...
எனக்கென்று ஒரு உறவை தா என்றேன் கடவுளிடம்..

முதலில் தாயை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்தை பகிர முடியும் என்றான்..

பின்பு தந்தையை தந்தான்..
ஏன் என்றேன்?
பாசத்துடன் பண்பை உணர முடியும் என்றான்..

அதன்பின் நல்ல ஆசிரியரை தந்தான்..
ஏன் என்றேன்?
பண்புடன் பகுத்தறிவு பெற முடியும் என்றான்..

காதலியாய் ஒரு பெண்ணை தந்தான்..
இவளும் ஏன் என்றேன்?
உலகை புரிந்துகொள்ள முடியும் என்றான்..

நான் என்னை நானாக உணர ஒரு உறவை தா என்றேன்..

என்னை பார்த்து ஒரு புன்னகை செய்த கடவுள்..
காத்திரு ஜூலை 22 வரை என்றான்..
காத்திருந்தேன் ..
காலை கதிரவனாய் உன் ஜனனம்..

ஆம்.. என்னை நான் நானாக உணர கடவுள்
உன் நட்பை தந்தான்..


இன்று ( 22 . 07 . 2009 )
என்
நண்பன் வினோத்கெளதம் க்கு பிறந்தநாள்...

அவன் விரும்பிய அனைத்தும் பெற்று
நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்



எனது உயிர் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

wish you a very happy birthday da machan..










17 comments:

Prabhu said...

வினோத்துக்கு ஏன் சார்பா யாருகிட்டயாவது சொல்லி ஒரு பிறந்தநாள் பொதுமாத்து போடுங்கப்பா!

வினோத் கெளதம் said...

நன்றி மச்சான்..நெகிழ்ந்து போனேன்..

வினோத் கெளதம் said...

எதாச்சும் ஒரு போட்டோ மதின்னு நினைக்குறேன்..
வரவங்க எல்லாம் பயந்துட போறாங்க..:)

ப்ரியமுடன் வசந்த் said...

வினோத் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்....

வால்பையன் said...

நம்ம வினோத்துக்கு இன்னைக்கு பிறந்தநாளா!

அட வாங்க வினோத் திரும்பவும் ஈரோடுக்கு அதே ஹோட்டல்ல ரூம் போட்டு கொண்டாடுவோம்!

வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்!

கலையரசன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்...

பார்ட்டி எங்க வச்சிகலாம்?
என்னது அல் அயின்லயா?

எந்திருச்சிட்டேன்...
தோ.. வரேன்!!

kishore said...

நன்றி பப்பு..
நன்றி வசந்த்..
நன்றி வால்ஸ்...

kishore said...

//வினோத்கெளதம் said...

எதாச்சும் ஒரு போட்டோ மதின்னு நினைக்குறேன்..
வரவங்க எல்லாம் பயந்துட போறாங்க..:)//

நேர்ல பார்த்தவங்களே இன்னும் இருக்கோம் .. போடோல பாக்குறவங்க ஒன்னும் ஆகமாட்டாங்க..

kishore said...

//கலையரசன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்...

பார்ட்டி எங்க வச்சிகலாம்?
என்னது அல் அயின்லயா?

எந்திருச்சிட்டேன்...
தோ.. வரேன்!!//

ஏன்டா இப்படி...? என்னை பார்த்த உனக்கு பாவமா தெரியுலையா ? என்னையும் ஆட்டத்துல சேர்த்துகுங்கடா..

வினோத் கெளதம் said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல..
என்ன சொல்லுவது முகமே காணாத நட்பில் கூட இதனை பிணைப்பு உண்டு என்று நான் உணர்ந்த இன்னொரு நாள்..
மிக்க மகிழ்ச்சி..:))

பாலா said...

Wish you a fun B'day of ur lifetime Vinoth! :)

Have a Blast! :)

(Can't install tamil fonts in office. Sorry!)

kishore said...

thanks bala

வினோத் கெளதம் said...

Thanks Uncle.

Cable சங்கர் said...

belated wishes vinod.. and a nice blog kishore

kishore said...

@ cable sankar..

thanks sir.. thanks for your visit

priya said...

nice... very nice..... very very nice friendship.....

kishore said...

thankyou priya