ஏன் இப்படி ஆனாள்..?
இப்பொழுது எல்லாம் யாரையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு...
உறவுகள், நண்பர்கள் அனைவரும் அவளிடம் இருந்து சற்று விலகி நிற்க ஆசைபடுகிறாள்...
காதல் வந்தால் பசி உறக்கம் வராது என்பார்கள் இதுவும் ஒரு வகை காதல் தானே..?
முடியவில்லை.. இருந்தும் அனைத்தையும் விரும்பி சாப்பிடுகிறாள்.. அவனுக்காக...
இப்பொழுதே அவனுக்காக வாழ தொடங்கிவிட்டாள்..
அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அவளாகவே கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறாள் ..
சதா சர்வ காலமும் அவனின் நினைப்பு..
இரண்டு மூன்று மாதத்தில் அவளின் மனதில் அவன் மட்டுமே ஆக்கிரமிக்கும் சக்தி அவனிடம் எப்படி வந்தது?
அவளின் மனத்திரையில் நிழல் உருவமாய் அவன் முகம் ..... பார்த்து மகிழ்கிறாள் தினமும்..
இன்னும் சில மாதங்களை அவனை சந்திக்கும் வாய்ப்பு வரும்.. அதற்காகவே வாழ்வது போல் வாழ்கிறாள்..
இதுவரை அவன் முகத்தை கூட அவள் பார்த்தது இல்லை.. ஏன் அவன் அவனா? இல்லை அவளா? என்று கூட தெரியாது.. இருந்தும் அவளின் விழிகளில் ஏக்கம் அந்த ஜீவனை காண..
அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தை உணரவும்.. அந்த பட்டு முகத்தில் முத்தமிடவும் காத்திருக்கிறாள்..
தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?
20 comments:
அருமையா இருக்கு மாப்பி...
வெல்கம் பேக்! ஏன் அதிகமா எழுதுறதில்லை?
எதுவாய் இருந்தலும் மாதத்திற்க்கு மூன்று பதிவு போடு!
இன்னாமா.. ஃபீல் பண்ணி எழுதறீங்க... கிஷோர்.. நீங்க? :) :)
ரீடரில் படிக்கிறப்ப, ஃபோட்டோ.. முதல் பக்கத்திலயே தெரிஞ்சிடுச்சி. அதனால. என்ன சொல்ல வர்றீங்கன்னு க்ளூ கிடைச்சிடுச்சி.
இருந்தாலும்...கலக்கல்! :) :) :)
@ கலையரசன் ..
தேங்க்ஸ் மச்சி.. கொஞ்சம் பிசின்னு பொய் சொல்ல விரும்பல... வினோத் எழுத விடமாட்றான்(இதுவும் பொய் தான் ) ... வீட்ல அம்மா இல்ல.. ஸோ.. வீட்டுக்கு வர போர் அடிக்கிது.. சரியா தூங்குற டைம் மட்டும் தான் வரேன்.. அதான் அதிகமா நெட் யூஸ் பண்றது இல்ல.. அதான் எழுதுறதும் இல்ல.. இனிமே எழுத முயற்சி பண்றேன்..
@ ஹாலிவுட் பாலா
//இன்னாமா.. ஃபீல் பண்ணி எழுதறீங்க... கிஷோர்.. நீங்க? :) :)//
இதுல எதுவும் வஞ்ச புகழ்ச்சி அணி எதுவும் இல்லன்னு நம்புறேன்..
//ரீடரில் படிக்கிறப்ப, ஃபோட்டோ.. முதல் பக்கத்திலயே தெரிஞ்சிடுச்சி. அதனால. என்ன சொல்ல வர்றீங்கன்னு க்ளூ கிடைச்சிடுச்சி.//
என்னோட பீலிங்க்ஸ் எல்லாம் இப்படி பொசுக்குனு போச்சே
//இருந்தாலும்...கலக்கல்! :) :) :)//
தேங்க்ஸ் பாலா...
@ கலையரசன்...
இதோ நைட் போன் பன்றேனு சொன்னவன் தான நீ? இதானடா உன் டக்கு?
அருமையான வரிகள்
தாய்மை சொல்லும் அழகான கவிதை
மிக ரசித்து படித்தேன்...கிஷோர்
வாழ்த்துகள்....
நன்றி சீமான்.. வருகைக்கும்.. கருத்துக்களுக்கும..
ரசித்து படிச்சேன் கிஷோர்
இதுமாதிரி தொடர்ச்சியா எழுதணுன்னு கேட்டுக்கிறேன்...
@ vasanth..
நன்றி வசந்த்... நிச்சயம் முயற்சிக்கிறேன்..
என்னமா ஃபீல் பண்ணி இருக்கான்யா..
@ vinothgowtham
வாடா .. ஊருக்கு போய் சேர்ந்துட்டியா ?
//தாய்மை என்ற உணர்வு பல உறவுகளை கூட மறக்க செய்துவிடுமா?//
அப்படிதான்! ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு!
நன்றி வால்ஸ்..
macchi kalakkal... -:) pathivulagatthulathaan irukkiyaa ?
அழகான தாய்மையை உணர்ந்த வரியாகள். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி
@ pithan
thanks machi.. inga thaan iruken..
@ நிலாமதி
நன்றி தோழி.. முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...
இது எப்போதிருந்து ?
பயபுள்ள ரொம்ப நல்ல எழுதுறீங்க ...
கிஷோர்..,
நான் நிறைய முறை கால் பண்ண ட்ரை பண்ணினேன். ஆனா 'this call could not be completed'-ன்னு சொல்லி ஆட்டொமெட்டிக்கா கட் ஆய்டுது.
உங்களுக்கு லேண்ட்லைன் நம்பர் இருந்தா... மெயில் பண்ணுறீங்களா?
எனக்கு இந்தியாவுக்கு, லேண்ட் லைன் ஃப்ரீதான்
@ manthiran
நன்றி மந்திரன்...
Post a Comment