ரொம்ப நாள் ஆச்சி.. பதிவு எழுதி..
ஏனோ இப்போ எல்லாம் அடுத்தவங்க எழுதினத படிகிறதுல இருக்குற ஆர்வம்.. எழுதுறதுல இருக்க மாட்டுது..
என்ன பண்றது.. ஒரு நாளைக்கு 10 பதிவு எழுதுறவங்கலே ரெண்டு நாள் எழுதாம விட்டா அவங்க ஹிட் லிஸ்ட் பாதிக்கு மேல காணாம போகுது ..
என்னை மாதிரி ஆள எல்லாம் நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு கஷ்டம் தான்..
இருந்தாலும் அதுக்காக உங்கள இம்சை பண்ணாம இருந்துட முடியுமா.. அப்படி அடுத்தவங்கள நிம்மதியா இருக்க விட்டா நான் தமிழன்னு சொல்லிகிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
அதனால இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் ...
விஜய், அஜீத் மாதிரி சக்செஸ் ஆகும்னு நெனச்சி நிறைய படம் குடுத்து பிளாப் ஆகுறத விட..
சிம்பு.. s.j சூர்யா மாதிரி.. ஒரு படம் நடிச்சாலும் கண்டிப்பா பிளாப்னு .. தெரிஞ்சி நடிக்கணும்...
அது மாதிரி ஒரு பதிவு போட்டாலும் இம்சை அதிகமா இருக்கனும்..
என்னோட முதல் இம்சை.. என்னை நானே பெரிய போட்டோகிராப்பர் னு நெனச்சிக்கிட்டு .. சமிபத்தில் விசாகபட்டினம் போனபோது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
ஆஹ்.. ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்.. கீழ உள்ள புகை படங்கள் எல்லாம் என் நண்பன் வினோத்கெளதம் பிரசன்ட் பண்ணுன டிஜிட்டல் கேம் ல எடுத்தது..... சைஸ் பெருசா இருக்குனு ரீசைஸ் பண்ணி போஸ்ட் பண்ணிஇருகேன் ..
(1) போரா குகைக்கு போற வழில ஒரு 8 கிலோ மீட்டர் உள்ள போனா வரும் நீர் விழ்ச்சி.. அங்க போக மெயின் ரோட்ல இருந்து ஜீப் வசதி உண்டு.. ஒரு ஆளுக்கு 70 ருபாய்.. 5 கிலோமீட்டர் வரைக்கும் ஜீப் பயணம்.. அப்பறம் 2 கிலோ மீட் நடராஜா சர்வீஸ் தான் மலை பாதைல.. வயசானவங்களுக்கு சிரமம்..
(2) அரக்கு வேளி ..
போகும் வழி எல்லாம் அழகு.. ஆனா அங்க புதுசா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியுல... ஒரு பார்க் ஒரு மியுஸிஎம் அவ்ளோ தான் .. அதான் பூக்களை மட்டும் எடுத்தேன்..
(3) ஹார்பர்.. லான்ச் பயணம் அருமையா இருக்கும்.. 40 முதல் 60 வரை கட்டணம்..கடலுக்கு உள்ள ஒரு 2 கிலோ மீட்டர் வரைக்கும் அழச்சிக்கிட்டு போவாங்க... கடலுக்குள்ள உள்ள இருந்து கரைய பாக்குறது ஒரு அழகுதான்..
(4) யரடா ஹில்ல்ஸ் அடிவரதுல இருக்குற பீச்.. யரடா பீச் மற்றும் கிரீன் வெளி பீச்னும் சொல்வாங்க பசங்களுக்கு ஏற்ற இடம்.. வீக் எண்டு அன்னிக்கு கூட்டம் வரும் வீக் எண்டு இல்லாம மற்ற நாள் போனா என்னை மாதிரி தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. மலை வழி முழுதும் அவ்ளோ அருமையான அழகு நிறைந்த இடம்..இங்க தான் டால்பின் நோஸ் பாயிண்ட் இருக்கு..
(5) டாபின் நோஸ் பாயிண்ட்
(6 ) யரடா மலை மீது இருந்து கடற்கரை அழகிய தோற்றம் ..(அழகா தான இருக்கு?)
அட இவ்ளோ தூரம் வந்து பார்த்திங்க .. எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க... விசாக ஸ்டீல் பிளானட் உள்ளே திருட்டு தனமாக எடுத்த படங்கள் மற்றும் போரா குகை படங்கள் அடுத்த பதிவில்..
19 comments:
தோ.. பாருயா..! இன்னொரு கே.வி. ஆனந்த்!! :) :)
தனிமை விரும்பியா? அந்த இடத்துக்கு ‘தனியா’ போய் என்ன பண்ணுவீங்க? ஊகும்...வீட்டுக்கு போன் பண்ணி.. போட்டு கொடுக்கணும். :)
--
இதான் மேட்டர்ன்னா.. உடனே கால் பண்ணியிருப்பேனே..! இங்க தூங்கறவங்களை எழுப்ப வேண்டாம், காலைல பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்! சாரி...!!!
//தோ.. பாருயா..! இன்னொரு கே.வி. ஆனந்த்!! :) :)//
கே. வி . ஆனந்த்? உங்களுகே ரொம்ப ஓவரா தெரியுல...:(
//தனிமை விரும்பியா? அந்த இடத்துக்கு ‘தனியா’ போய் என்ன பண்ணுவீங்க? ஊகும்...வீட்டுக்கு போன் பண்ணி.. போட்டு கொடுக்கணும். :)//
பாலா அண்ணா பாலா அண்ணா நீங்க ஊருக்கு வந்தா எல்லா செலவும் என்னுது டீல் ஓகே வா? (எவ்ளோ நேக்கா போட்டு வாங்குறாங்கபா.. )
உண்மைய சொன்னா .எனக்கு தனிமையா கடற்கரை.. மலை ஸ்தலம் .. எல்லாம் போன நேரம் போறது தெரியாது.. எதாவது பாட்டு கேட்டுகிட்டு வேடிக்கை பாக்குறது அவ்ளோ பிடிக்கும்..
//இதான் மேட்டர்ன்னா.. உடனே கால் பண்ணியிருப்பேனே..! இங்க தூங்கறவங்களை எழுப்ப வேண்டாம், காலைல பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்! சாரி...!!!//
எதுக்கு சாரி.. ஒன்னும் அவசரம் இல்ல..
அழகான படங்கள் கிஷோர்...
நன்றி வசந்த்..
எப்போதும் படமெடுத்த பின் ஏதேனும் ஒரு மென்பொருளில் போஸ்ட்-ப்ரொடக்ஷன் செய்வது அவசியம். ஆரம்பிப்பதை பிகாசாவோடு ஆரம்பியுங்கள். படங்களை மெருகேற்ற உதவும் மக எளிமையான இலவச மென்பொருள். படங்கள் நன்றாக வந்திருக்கின்றன... கோணங்கள் இன்ட்ரெஸ்டிங்!
நன்றி வெங்கிராஜா.. உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் ..
எனக்கு பிடிச்ச போட்டோ.. உன் ஃப்ரோபைல்ல உள்ள போட்டோதான் மச்சி!!
என்னா.. ஆங்கிளு, என்னா.. லைட்டிங்கு!!
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் மச்சி...
@ kalaiarasan
வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சாலும் உனக்கு இந்த வில்லதனம் மட்டும் போகல...
@ kalaiarasan
//எனக்கு பிடிச்ச போட்டோ.. உன் ஃப்ரோபைல்ல உள்ள போட்டோதான் மச்சி!!
என்னா.. ஆங்கிளு, என்னா.. லைட்டிங்கு!! //
என்ன பண்றது மச்சி.. ?இப்படி இருந்தா தான் ரசிகர்கள் விரும்புறாங்க...
@kalaiarasan
சரி சரி.. நீ அங்க காரி துப்புறது என்னால இங்க உணர முடியுது... மேட்டர் லூஸ்ல விடு..
ம்ம்ம்ம்... நடத்துங்க! இங்க ஒருத்தன் போட்டோகிராபர் மாடல் எல்லாம் நாந்தான்னு நெனக்கறது பத்தாதுன்னு எல்லாரும் கெளம்பிட்டீங்க!
அந்த் புரொபைல் போட்டோல ஒரு சினிமா மேக்கப் போட்ட மாதிரி இருக்கீங்க! ஹீரோ அம்சம் தான் போங்க :)
மச்சான் உனக்கு Photography கூட நல்லா வருது...
நல்லா இருக்கு..
எல்லோரும் சொல்ற மாதிரி அந்த Profile pic டாப்பு..
@பப்பு..
//அந்த் புரொபைல் போட்டோல ஒரு சினிமா மேக்கப் போட்ட மாதிரி இருக்கீங்க! ஹீரோ அம்சம் தான் போங்க :)//
பச்ச புள்ளைய பார்த்து கண்ணு வைக்காதிங்க டா ..
@ வினோத் கெளதம்
தேங்க்ஸ் மச்சி.. முதல்ல போட்டோவ மாத்துறேன்
இயற்கை scene எப்படி எடுத்தாலும் அழகு தான்.. superb kishore.. keep it up..
படமெல்லாம் சூப்பர்!
@sasi
thankyou sasi.. for ur wishses and vist
@vals
thankyou..
முதல்ல ஒரு ஹீரோ ஃபோட்டோவ வச்சிருந்தீங்களே அந்த ஃபோட்டோவே நல்லாருந்துச்சு! இப்ப யாரோ ஒருத்தன் ஃபோட்டோவ போட்டிருக்கீங்க! மாத்துங்க!
அன்பு தம்பி பப்புவின் அடங்காத ஆசைக்கு இணங்க.. மீண்டும் எனது புகை படம்...
Post a Comment