சினிமா..
நான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..
கமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..
கமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .
மோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..
லக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..
அதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..
இது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..
எனக்கு வேறு பிடித்த விஷயம்
சீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..
ஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..
-----------------------------------------------------------------------------------------
சிந்தனை...
எந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..
அதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
இதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..
திரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "
பண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..
----------------------------------------------------------------------------------------------
சிகரட்டு..
சிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..
சிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..
சிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு "சுச்சு" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. "சுச்சு" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..
(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..? )
------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா? அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா?
அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்
19 comments:
////////
நடிகை பெட்டி.. நடிகர் பெட்டி..
//////////
அவங்களோட.. ‘பெட்டி’-ல அரை மணிநேரம் காட்ட என்ன இருக்கு? :) :) :D
///////புதிய திரை படம்... "நல்லவனுக்கு நல்லவன் "////////
ஹா.. ஹா.. ஹா.. I miss பொதிகை! :( :(
பேட்டி.. அவசரத்தில் பெட்டி யாக மாறி போச்சி .. கவனக்குறைவுக்கு மன்னிக்கவும்
சில நடிகை பேட்டிய விட.. பெட்டிய தான் நாம வருஷ கணக்கா பாக்குறோம்
Dei atha maathu..(peyti-Potti)
maathiyaachi maathiyaachi..
///பேட்டி.. அவசரத்தில் பெட்டி யாக மாறி போச்சி .. ///
ஹய்யோ... ஃபீல் பண்ணாதீங்க! :( :)
சொல்ல மறந்துட்டனே...!!!
எங்க ஊர்லயும்... இந்த படம் போடுறோமில்ல...?!!
இன்னும் 3 மணி நேரத்தில்... தலைவரின் தரிசனம்... உஹா.. ஹுஹா.. வுஹாஅ.. ஹஹாஹா!
ஏன் பாலா.. அங்க சைடு பிசினஸ் கேபிள் கனெக்க்ஷன் குடுக்க ஆரம்பிச்சிடிங்களா (நம்ம ஆளுங்கள நம்ப முடியாது.. ஒபாமாவுக்கே கேபிள் டிவி காமிச்சி காசு வாங்கிருவாங்க.. ) :):):)_
நீங்களாவது உண்மையா திரைபடத்தை திரைப்படமா ரசிச்சு எழுதுனீங்களே நன்றி கிஷோர்...
நன்றி வசந்த்..
//இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. ?
//
-:))))))
*******
ஆஸ்பத்திரி = மருத்துவமனை
கலக்கல் கலவை மச்சி..
//அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்//
யாரு அது பூஜா..
நன்றி பித்தன்
@ வினோத் கெளதம்
தேங்க்ஸ் மச்சி..
பூஜா?
உங்க ஆயா...
வினோத் ரொம்ப காஸ்லியான குழந்தை போல! பூஜாவையே ஆயாவா வச்சிருக்காங்க! பதிவப் பத்தி சொல்ல என்ன இருக்கு! நாங்கல்லாம் ரெம்ப நல்லவங்க, அதனால அட்வைஸ்லாம் வேணாம். என்னங்க உ.போ.ஒ. வச்சு கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிருக்கலாம்!
@ பப்பு.
வினோத் பூஜாவ ஆயாவா இல்ல .. பூஜா ஆயாவ வச்சிருக்கான்.. உ போ ஒ படத்த பத்தி நிறைய பேசலாம்.. பதிவு பெருசாகிடும் ..
பூஜா ஆயாவ வேணா வினோத் வச்சிக்கட்டும்...
ஆனா, பூஜாவை நான்தான் வச்சிப்பேன்!!
கபோதி... கழிச்சாடை... கருமம்....
அப்படின்னனு சொன்னா கோச்சிப்ப.... அதனால,
அருமை.. அட்டகாசம்... அழகு..!!!
(எப்படியோ.. கடுப்புகளை கிளப்பியாச்சு)
@ கலையரசன்
ஊரே காரி துப்புனாலும் தொடச்சிட்டு சிரிகிறவங்க நாங்க.. நீ திட்டுன கடுப்பா ஆகிடுவோமா.. போடா போய் புள்ள குட்டிகள படிக்க வை...
என்னாங்க இது சின்னபுள்ள மாதிரி விமர்சனம் எழுதிகிட்டு, வந்து பாருங்க பதிவுலகில் கிழிச்சு தோரணம் தொங்கவிட்ருக்காங்க!
Post a Comment