இணைய தளம் என்றாலே பொண்ணுங்க கூட கடலை போடுறது மட்டும் தான்னு நெனச்சிகிட்டு இருந்த என்னை மடார்னு மண்டைல அடிச்சி இந்த பிளாக்கர் பக்கம் இழுத்துட்டு வந்தவன் வினோத்கெளதம். இவனால தான் நான் இன்னும் பல வெப்சைட்(!?) எல்லாம் தெரிசிகிட்டேன்.. அதை எல்லாம் சொன்னா கலாச்சார காவல்காரங்க "பிட்டு" படத்த பாக்குறத கொஞ்சம் நிறுத்திட்டு சண்டைக்கு வருவாங்க..
பொதுவாகவே யார் கூடவும் உடனே நட்பு பாராட்டுதல் என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. என்னோட நட்பு வட்டம் ரொம்ப சின்னது..
எவ்ளோ தான் பேசி பழகுனாலும் அவங்க கிட்ட என்னோட சொந்த விஷயங்கள பகிர்கிற அளவுக்கு நான் தயாராவதற்கு ரொம்ப நாள் ஆகும்..
முகம் தெரியாதவர்களிடம் நட்பு பாராட்டுவதை விட முதலில் நமது பக்கத்தில் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவது தான் மனிததன்மை என்பது என் எண்ணம்..(கொஞ்சம் உண்மையும் கூட )
அப்படி இருந்த எனக்கு இன்னைக்கு முகம் தெரியாத பலரின் நட்புகள் கூட கிடைச்சி இருக்குன்னா அதற்கு முழு காரணமும் இந்த பிளாக்கர் தான்.
இந்த பிளாக்கர் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாளைக்கு இது ஒரு போதை மருந்து போல தேரிஞ்சாலும் ( இதை வினோத் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் ) இதை சரியான விதத்தில் பயன்படுத்தும் போது மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக இருக்கிறது என்பதே நிஜம்...
சில சமயம் வீட்டிலோ வெளியிலோ பிரச்சனை காரணமாக சோர்ந்து போகும் போது முகம் தெரியாத நட்புகள்.. ஹாய் கிஷோர் எப்படி இருக்க? என்று கேக்கும் போது உண்மையில் மனசு லேசாவதை உணர்ந்து இருக்கிறேன்..
அப்படி எனக்கு கிடைத்த சிலரின் நட்புக்கள் பற்றி இங்கே..
1. ஹாலிவுட் பாலா
சார்.. அண்ணா ... என்று ஆரம்பித்த நட்பு .. இன்று பாலா என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இருக்கிறது.. இவர் என்னிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது நான் அவருக்கு சரியாக பதில் அளிக்க முடியாத இடத்தில் இருந்தேன்.. இத்தனைக்கும் அவர் அவருக்கு வேலை கிடைத்தது பற்றி சொல்வதற்காக வந்த கால் அது..
அதன் பின் அவர் என்னிடம் பேசிய போது நான் நடந்ததை கூறி வருத்தம் தெரிவிக்க. இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல கிஷோர்.. உங்களுக்கு எப்போ பேசனும் என்றாலும் மிஸ்டு கால் குடுங்க நானே பேசுறேன் என்று கூறிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது (இத்தனைக்கும் ISD கால்). அதைவிட என்னை வியக்க செய்த விஷயம் அவர் என்னிடம் பேசும் போது ரொம்ப நாள் பேசி பழகிய நபரிடம் பேசுவது போல ஒரு சகோதர உணர்வு.. வேலை, சினிமா , குடும்பம் என்று எல்லாத்தையும் பத்தி பேசுவார்.. தேங்க்ஸ் பாலா..
2. கலையரசன்
வினோத் கூட வேலை பாக்குறாரு.. வினோத் அறிமுக படுத்தி வச்சதாலோ என்னவோ "என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" பார்முலா வொர்க்அவுட் ஆகிடுச்சி.. முதல் தடவ பேசும்போதே "டா" போட்டு பேசும் அளவிற்கு பழகுவதற்கு இனிமையானவன்.. இந்த மாசம் ஊருக்கு வரான்.
மீட் பண்ணனும் மச்சி..
3. பப்பு @ பிரபு
மதுரைகாரர் .. மதுரை குசும்பு அத்தனயும் அவரின் எழுத்தில் இருக்கும்..
சாட்டில் வந்தால் இரவு 11 மணி வரை கூட பேசுவார்.. எல்லா விஷயத்தையும்..
குறிப்பாக காலேஜ்ல் நடக்கும் அவரின் "சொந்த விஷயத்தையும் " பற்றி சொல்லி கருத்து(!!!???) கேட்பார்.
மனதில் பட்டதை பளிச் என்று சொல்ல கூடியவர்..
மதுரை வந்தா "ஜில் ஜில் ஜிகர்தண்டா " வாங்கி குடுக்கணும் புரிஞ்சிதா..
4 . வினோத் கெளதம்
இவனை பதிவுலக நண்பன் என்று சொல்ல முடியாது.. எனது நீண்ட கால நண்பன்.. எல்லா விஷயத்துலயும் எனக்கு சரியான ஆலோசனை கூறுபவன் ஆறுதலாக இருப்பவன் .
இவனின் நட்பு எனக்கு கிடைத்தது என்னுடைய விதி.. அவனுக்கு கடவுளின் சதி..
(ஹா.. ஹா.. சும்மா தமாசு.. )
ஏற்கனவே சொல்லியது தான் .. "really blessed to have a friend like him"
இன்னும் இருக்காங்க.. சக்கரை சுரேஷ்,பித்தன்,கண்ணா, விஜய், வசந்த், மந்திரன், வால் பையன், இப்படி நிறைய.. பேசி பழகவில்லை என்றாலும் நட்புடன் விசாரிப்புகள் இருக்கும்..
அவர்களை பற்றி விரைவில்..
21 comments:
ஹய்யோ... சாமி...! :) புல்லரிக்குதே..! ஆமா.. இன்னாபா ஆச்சி.. ரெண்டு நாளா.. ஒரே.. மெர்சலா பதிவு போட்டுகிட்டு இருக்கீங்க?
வெள்ளிக்கிழமை வாங்கினது இன்னும் தீரலையா?? :) :)
/////
மிஸ்டு கால் குடுங்க நானே பேசுறேன் என்று கூறிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது (இத்தனைக்கும் ISD கால்)
//////
எதோ... மரியாதைக்குன்னு சொன்னா... அதை சீரியஸா... எடுத்துக்கறதா?? :) :)
/////
அவரின் "சொந்த விஷயத்தையும் " பற்றி சொல்லி கருத்து(!!!???) கேட்பார்.
//////
அவரு அடுத்த முறை கருத்து கேட்கும்போது.. அவர் ஏன் இப்பல்லாம்.. எழுதுறது இல்லைன்னு.. கேட்டு சொல்லுங்க...! நான் ரெண்டு முறை கேட்டும்.. பதிலை காணாம். :(
பக்க்த்தூளா எங்கயோ நாயகன் மியூஸிக் கேக்குது..!
டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ன்ட்ட டொய்ன்ன்ன்ன்ன்ன்ன்ங்
:-)
@hollywood bala
ஆப் அடிக்கிற வரைக்கும் அமைதியாத்தான் இருக்கேன் பாலா.. அதுக்கு அப்புறம் தான் .. அப்படியே தன்னால வருது வாந்தி மாதிரி..
மரியாதைக்கு சாப்ட்டு போங்கன்னு சொன்னாலே.. ஒரு வாரத்துக்கு உக்கார்ந்து சாப்பிடுற ஆளு நானு.. என்கிட்ட போய் அப்படி எல்லாம் சொல்லலாமா. மிஸ்டு கால் குடுத்து கிட்டே இருப்போம்ல..
@ ராஜு..
தப்பான சாங் செலெக்ஷன் போல தெரியுது..
வருகைக்கு நன்றி.. (நீங்க தானா டக்லஸ்..?)
Machan Tamil typewriter is not working..
Google indic creating lot of probs nwadays..
Anyway Gud post..
Nice1..
Excellent..
Especially, The fourth person, u explained about him naa..
I think hez is gr8.
தங்கள் கருத்துடன் நானும் ஒருமிக்கிறேன். இன்று நான் என் வலைப்பூவை தமிழ் 10 ரேங்கில் 27 ஆவதுக்கு கொண்டுவர காரணம் பதிவுலக நண்பர்கள் தான் முதலில் தமிழில் தட்டச்சவே தெரியாதிருந்த நான் இந்த நிலைக்கு வர முகம் தெரியாத பதிவுல அன்பர்களே காரணம். அவர்களுக்கு என் நன்றி
மதுரைகாரர்///
காரன்னு சொல்லுங்கோ!
பாலா நான் எழுதுறேன் அய்யா தான் எட்டிப் பார்க்க மாட்டேங்குறீங்க!
நன்றி கிஷோர் மெயில் பண்ணுங்க
vasanth1717@gmail.com
@vinothgowtham..
thanks machi.. yeah hez double great.. thoo...
சித்தூர்.எஸ். முருகேசன்
வருகைக்கு நன்றி..
@ பப்பு
தனிப்பட்ட முறையில் நான் உங்கள எவ்ளோ கேவலமா திட்டுனாலும் சபை மரியாதைன்னு ஒண்ணு இருக்குல்ல
@ ப்ரியமுடன் வசந்த்..
நன்றி வசந்த்...
“Truly great friends are hard to find, difficult to leave, and impossible to forget.”
எனக்கும் கூகுள் இன்டிகா, டாட்டா இன்டிகா, விஸ்டா இன்டிகா எதுவுமே ஒர்க் ஆகல மச்சி!
16ஆம் தேதி நான் அங்க இருப்பேன். கண்டிப்பா மீட் பண்ணதுக்கு அப்புறம் ஏன்டா இவன அறிமுகப்படுத்துனன்னு வினோத்தை திட்ட கூடாது!!
@ கலையரசன்..
வெல்கம் மச்சி..
ஊருக்கு கேடு காலம் இன்னும் 10 நாளுல வர போதுன்னு சொல்லு..
வினோத் எவ்ளோ திட்டுனாலும் தாங்குவான்டா அப்படி ஒரு ஜென்மம்.. ..
ப்ளாக் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே எனக்கு வினோத் பழக்கம்!
அந்த கதைய வினோத் சொல்லி இருக்கான் வால்ஸ்..
அடடே நீண்ட நாள் கழிச்சி உங்களோட பதிவு பக்கம் வந்திருக்கேன். பப்பு மற்றும் வினோத் கூட எப்பவாவது பேசுவதுண்டு. நல்ல நண்பர்கள்...
Keep going on...
welcome back.. krishna prabhu..
thanks for your visit.
Post a Comment