Tuesday, November 3, 2009

மீண்டும் ஒரு...

காலைல எழுந்திரிகிறேன், சாப்பிடுறேன் , வேலைக்கு போறேன்.. ராத்திரி வீட்டுக்கு வரேன், தூங்குறேன்.. தினமும் செய்வது தான் ஆனாலும் அதிலும் இப்பொழுது எல்லாம் சுவாரசியம் இல்லை..

சதா சர்வ காலமும் எதையோ இழந்தது போல ஒரு உணர்வு..

வீட்ல அன்பான அப்பா, அம்மா.. தினமும் போன் செஞ்சி பேசும் பாசமான அக்கா மாமா.. இப்படி என்னை பற்றி அக்கறை பட சுற்றிலும் சொந்தங்கள் இருந்தும் எதோ ஒரு குறை நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக நெருடுகிறது..
இது காதலா? ( ஆஹா.. ஆரம்பிசிட்டான்டானு கட்டைய தூக்காதிங்க )
ச்சே.. நிச்சயம் அந்த கருமம் இல்லங்க.

எனக்கு எப்பொழுது மனச்சோர்வு ஏற்பட்டாலும் இறை வழியிலும் தீர்வு காண்பது வழக்கம்.. சில சமயம் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் தீர்வை தீர்மானிக்க கூடிய அமைதியான மனநிலையை கண்டிப்பாக பெற்று வருவேன்.



ஆனால் இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் இந்த சோர்விற்கு இறை வழியிலும் தீர்வு காண முடியவில்லை. கோவிலுக்கு சென்றாலும் நினைவுகள் வந்து தொலைகிறது..

யோசித்து பார்த்தால் சில நிகழ்வுகள் நேற்று நடந்தது போல இருக்கு.. ஆனால் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.



கடற்கரையில் சிறு பிள்ளைகளை போல நண்பர்களுடன் மண்ணை எடுத்து அடித்து தலையில் பூசி முதுகில் ஏறி விளையாடியது.


மாலையானால்.. "டேய் மச்சான் எங்க இருக்க நான் வந்துகிட்டே இருக்கேன் ரெடியா இரு வெளில போகணும்" என்று போன் செய்யும் நண்பன்.

"டேய் கிஷோர். வீட்ல இருக்கேன்டா வந்து கூட்டிகிட்டு போ.. "பர்கர்" வாங்கி கொடு " என்று உரிமையுடன் அழைக்கும் நண்பன்.

சிதம்பரம், புதுச்சேரி, வந்தவாசி,திண்டிவனம், தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஏற்காடு இப்படி பல இடங்களில் பைக்ல போகும் போது.. பின்னால உக்கார்ந்து என் முதுகில் சாய்ந்து பாட்டு பாடிக்கொண்டு வரும் நண்பன்.

"நான் சிதம்பரம் வரனும்னா மூர்த்தி ஹோட்டல்ல சிக்கன் வாங்கி தரனும்" என்று கண்டிஷன் போடும் நண்பன்.

"இன்னைக்கு அந்த படம் டிரைலர் பார்த்தேன். செம சீன் மச்சி.. இன்னைக்கு சாயந்திரம் நிச்சயம் போகணும்.. வேற வேலை எதுவும் வச்சிக்காதடா." என்று ஆர்டர் போடும் நண்பன்.

"என்னடா எதாவது பிரச்சனையா ? நான் இருக்கேன்டா கவலை படாதே "என்று தோல் மீது கை போட்டு கட்டியணைத்து ஆறுதல் கொடுக்கும் நண்பன்.

முகம் பார்த்தே என் மனகஷ்டங்களை கண்டுகொண்டு விசாரிக்கும் நண்பன்.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? உன்னால முடியும்டா.."என்று தன்னம்பிக்கை கொடுத்த நண்பன்..

இப்படி
என்னோட வாழ்க்கைல பலவாறாக ஒன்றிவிட்ட நண்பர்கள்.. அவர்களின் நினைவுகள் .. இப்பொழுது அவர்களின் பிரிவு வந்த போது. ஏன் வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு போகிறோம் என்ற கவலையும் வந்தது.


இந்த இரண்டு வருடங்களில் அனைவரும் பொறுப்பான பதவிகளில் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும்.. முடிந்த வரையில் தொலைபேசியில் உறவுகள் நீடித்தாலும்..

எனது நட்பு வட்டம் சிறிதாயினும்..சந்தோஷ தருணங்களை அள்ளி கொடுத்த என் நண்பர்கள் இப்பொழுது வேலை நிமித்தமாக பல்வேறு இடங்களில் சிதறுண்டு கிடப்பது வேதனை அளிக்கிறது..
மீண்டும் அதே கவலை இல்லாத..வெகுளித்தனமான.. விளையாட்டுதனமான நிகழ்வுகள் நிகழ மனம் ஏங்குகிறது .. இந்த ஏக்கம் என் நண்பர்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் ..
மீண்டும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்..
காத்திருப்பது காதலில் மட்டும் இல்லை .. நல்ல நட்புகளுக்காக காத்திருப்பதும் சுகம் தான்.

19 comments:

ஜெட்லி... said...

//நல்ல நட்புகளுக்காக காத்திருப்பதும் சுகம் தான்//
சரியா சொன்னிங்க கிஷோர்...

kishore said...

நன்றி ஜெட்லி.. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

நிஜம் கிஷோர்

உண்மையா சந்தோசமா துள்ளிதிரிஞ்சுட்டு இருந்த அந்த நாட்கள் மாதிரியே இனிவரும் நாட்கள் இருந்துவிடாதா என்று மனசு ஏங்குவது நிஜம்..

குட் போஸ்ட்

Prabhu said...

ஒரே ஃபீல்ங் ஆக்காதீங்கப்பா!

வினோத் கெளதம் said...

இதே மாதிரியே எழுதுனா உன்னை "வேற" மாதிரி கூட நினைக்க வாய்ப்புண்டு மச்சி..
இருந்தாலும் பதிவு நச்னு இருக்கு..

//"இன்னைக்கு அந்த படம் டிரைலர் பார்த்தேன். செம சீன் மச்சி.. இன்னைக்கு சாயந்திரம் நிச்சயம் போகணும்.. வேற வேலை எதுவும் வச்சிக்காதடா." என்று ஆர்டர் போடும் நண்பன்.//

நம்ம குரூப்ல அப்பேர்ப்பட்ட கேவலமான ஆளு யாரு..

பிரபாகர் said...

நிச்சயம் கிஷோர்... காதலை விடவும் நட்பு மிக புனிதமானது...

பிரபாகர்.

kishore said...

@ பிரபாகர்
உண்மை தான்.. சிலர் உணர்ந்தும் வெளிக்காட்ட தயங்குகிறார்கள்..

kishore said...

@ வசந்த்..

நன்றி வசந்த்.

@ பப்பு

என்னா.. ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீலிங்கு ..?

@ வினோத் கெளதம்

வேற மாதிரினா?
த்தூ.. உனக்கு இப்போ எல்லாம் அதே மாதிரி எண்ணம் அடிக்கடி வருது.
மாறிடாத மச்சி..

//இருந்தாலும் பதிவு நச்னு இருக்கு.. //

தேங்க்ஸ் மச்சி..

//நம்ம குரூப்ல அப்பேர்ப்பட்ட கேவலமான ஆளு யாரு..//
இந்த கேள்விய யாரு கேக்குறது?

கலையரசன் said...

லாலாலா... லாலா... லாலாலாஆஆ..

லாலாலா... லாலா... லாலாலாஆஆ..

விக்ரமன்தான் உன் குருன்னு சொல்லவேயில்ல?
டேய்.. டேய்.. டேய்..
நீயாருன்னு எனக்கு தெரியும்,
நாயாருன்னு உனக்கு தெரியும்,
நம்ம இரண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்!!

கலையரசன் said...

//நான் சிதம்பரம் வரனும்னா மூர்த்தி ஹோட்டல்ல சிக்கன் வாங்கி தரனும்" என்று கண்டிஷன் போடும் நண்பன்.//

இதுக்கு என் பேரை ஸ்டிரைட்டாவே போட்டிருக்கலாம்!!

kishore said...

@ kalaiyarasan
//நீயாருன்னு எனக்கு தெரியும்,
நாயாருன்னு உனக்கு தெரியும்,
நம்ம இரண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்..//

டேய் தெரிஞ்ச மனசுக்குள்ளே வசிகட எதுக்கு இப்படி சத்தம் போட்டு சொல்ற..? பப்ளிக்ல நல்லவன்னு பார்ம் ஆகிட்டேன்டா .. அதுல கும்மி அடிச்சிட்டு போய்டாத.

வால்பையன் said...

எவ்வளவு அழகா நட்ப சொல்லியிருக்கிங்க!

கிரேட் நட்பு!

கண்டிப்பா வினோத் வரும் போது ஃபாரின் சரக்கு வாங்கிட்டு வருவாரு!

:)

kishore said...

நன்றி வால்ஸ்..

வினோத்.. பாரின்.. சரக்கு... நம்பிட்டேன்..

geethappriyan said...

நல்ல நட்பு என்பதே நம் நண்பர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவது தான்ங்க.
நல்ல பதிவு.

மணிஅரசன் said...

நல்லா இருக்கு பா , நட்பின் பிரிவு கொடுமை தான்

kishore said...

@ கார்த்திகேயன்
நன்றி கார்த்திகேயன்
@ மணியரசன்
நன்றி..

பிரேமி said...

நட்பின் தூய்மையை தென்றலாய் வருடியிருக்கிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

பிரேமி said...

நட்பின் தூய்மையை தென்றலாய் வருடியிருக்கிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

kishore said...

முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி சந்தோஷி .. தங்கள் கருத்திற்கும் நன்றி தோழி ..