Thursday, November 12, 2009

பதிவர்களுக்கு கொண்டாட்டம்

இங்கே அலைகடலென திரண்டு இருக்கும்.. எனது அருமை பிளாக் வாசக வாசகியர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.. எல்லோருக்கும் ஒரு சந்தோசமான செய்தி.. நான் பிளாக் எழுதுறத நிறுத்திடலாம்னு இருக்கேன்.
(
யாருங்க அது அங்க விசில் அடிச்சி கைதட்றது?)

கொஞ்சம் அமைதியா இருங்க நான் பேசி முடிச்சிடுறேன்..
அதாவது நான் இந்த ப்லோக் எழுத ஆரம்பிச்சி.(என்னது அதுக்குள்ள சந்தன மாலை, பொன்னாடைன்னு..)


நான் எழுத ஆரம்பிச்சி 11 மாசம் தான் ஆகுது..( டேய் யாருப்பா அது கூட்டத்துல எழுந்து டான்ஸ் ஆடுறது?)


ஆனா அதுக்குள்ள நகைசுவை, சீரியஸ்,கதை, கவிதை,அரசியல், சினிமா, நையாண்டி.. மொக்கைனு.. எல்லாத்துலயும் பூந்து விளையாடுனதுல ஒரு ஆத்மதிருப்தி ..( ங்கொய்யால.. எவண்டா செருப்ப வீசுனது?)


கடுமையான வேலை பளுவிற்கு நடுவுல பல புதிய பதிவர்கள் பக்கம் போய் அவங்கள உற்சாகபடுத்தி அவங்கள முன்னுக்கு கொண்டு வந்ததுல முக்கியமான பங்கு என்னு...(அடிங்.. எவண்டா அழுகுன தக்காளிய மூஞ்சில வீசுனது?)


நான் எழுதிய ஆங்கில பட விமர்சனத்த படித்த பின் தான் ஹாலிவுட் பாலா போன்ற சிலர் விமர்சனம் எப்படி எழுதனும்ங்க்ற அடிப்படை விஷயத்தயே தெரிஞ்சிட்டங்க.. அந்த வகையில் திரை விமர்சனத்திற்கு ஒரு புதிய வரைமுறைய வித்திட்டவன் என்ற பெருமை பெற்ற நான்.. ( ஹேய் .. ஆத்தி.. ஆசிட் முட்ட..ஜஸ்ட் எஸ்கேப்..)


இப்படி பல வழிகளில் சிறந்த எழுத்தாளர்களை.. கவிஞர்களை.. விமர்சகர்களை செம்மைபடுத்தி உருவாக்கி கொண்டு இருக்கும் நான். இப்படி திடீர் என்று எழுதுவதை நிறுத்துவதாக முடிவு எடுத்தது ஏன்?.. என்று உங்களுக்குள் ஆயிரம் கேள்விகள் எழலாம்.. அதை நீங்க என்னிடம் தைரியமாக கேட்கவும் உரிமை உண்டு.. அப்படி நீங்கள் கேட்காவிட்டாலும் காரணத்தை தெள்ள தெளிவாக இந்த கூட்டத்திலே சொல்லி கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.( டேய்.. "சேர " தூக்கி எரியாத மேல பட்டுடபோது.. )


பதிவுலகம் என்னிடம் இருந்து தீரா பசியுடன் எழுத்து உணவை எதிர்பார்த்தாலும்.. பதிவுலகத்திற்கு பின்னால் "ஐட்டம் ".. ச்சே.. சில சொந்த வேலைகள் கோர பசியுடன் தாண்டவம் ஆடுவதால். எனது எழுத்து பணியை நிறுத்தி விட கூடிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன்.( டேய் எவண்டா பேசிகிட்டு இருக்கும் போது அருவா வீசுகிறது? )


எனது உரையை முடிப்பதற்கு முன்னாள் என்னை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியதன் மூலம் தனது வாழ்கையில் ஒரு அழியாத வரலாற்று சம்பவத்தை அரங்கேற்றி கொண்ட என் நண்பன் வினோத்..(அட இருங்கப்பா.. அதுக்குள்ள "மைக்" கழட்டுறிங்க ..)


எனவே.. இந்த.. ( டேய் எவண்டா மேடைக்கு கீழ நெருப்பு வச்சிட்டு ஓடுறது... ஐயோ.. காப்பாத்துங்க.. )


நான் எழுதுனத நிறுத்துனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா? அதை தெரிஞ்சி கிட்ட பின்னாடி உங்கள சந்தோசமா இருக்க விட்டுடுவனா? வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..


கட்டிங்:- பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து பதிவுகளை படிப்பேன்.. அதனால.. 18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும்.

24 comments:

சங்கர் said...

இந்த மாபெரும் பொதுக்கூட்டம் எங்கு, எப்போது நடந்தது, தெரிந்திருந்தால் நானும் பங்கெடுதிருப்பேனே (உங்கள காப்பாதரதுலன்னு சொல்ல வந்தேன்)

சீமான்கனி said...

நான் எழுதிய ஆங்கில பட விமர்சனத்த படித்த பின் தான் ஹாலிவுட் பாலா போன்ற சிலர் விமர்சனம் //எப்படி எழுதனும்ங்க்ற அடிப்படை விஷயத்தயே தெரிஞ்சிட்டங்க.. அந்த வகையில் திரை விமர்சனத்திற்கு ஒரு புதிய வரைமுறைய வித்திட்டவன் என்ற பெருமை பெற்ற நான்.. ( ஹேய் .. ஆத்தி.. ஆசிட் முட்ட..ஜஸ்ட் எஸ்கேப்..)// :(((((((((((....
chumma....olu..olu..lai....

பாலா said...

////வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..
/////

அதானே.. பார்த்தேன்! அப்படி.. நிம்மதியாவா.. எங்களை விட்டுடுவீங்க!!! :) :)

கடைசில வீசுன ஆஸிட் முட்டையை.. முதல்லயே வீசியிருக்கனும்.

geethappriyan said...

ஹாலிவுட் பாலா said...

////வரேன்.. ரெண்டு வாரத்துல திரும்பவும் வரேன்..
/////

அதானே.. பார்த்தேன்! அப்படி.. நிம்மதியாவா.. எங்களை விட்டுடுவீங்க!!! :) :)

கடைசில வீசுன ஆஸிட் முட்டையை.. முதல்லயே வீசியிருக்கனும்.//

எடாகூடமா ரிபீட்டு, என்னமா? ஸ்ட்ண்டு காட்றீரு?
கவுண்டமணி செந்தில் ஸ்டைல்ல படிக்கவும்.

அண்ணே. அய்யோ போவாதீங்க..
அய்யோ போவாதீங்க..
அய்யோ போவாதீங்க..
கவுண்டமணி
என்னை விட்றா..
டேய் என்ன விட்றா..
நான் போகனும் என்ன விட்றா..
அண்ணே யாருமே புடிக்கலன்னே...
:))))))))))))))

நல்ல நடை.ஓட்டுக்கள் போட்டாச்சு,சீக்கிரம் வந்து கலக்குங்க

பிரபாகர் said...

இந்தமாதிரி நிறையா எழுதனும், சீக்கிரம் வாங்க சாமி...

பிரபாகர்.

என் நடை பாதையில்(ராம்) said...

செருப்பு முட்டைன்னு எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.... இவன் ரொம்ப நல்லவன்டா..... (வடிவேல் மாதிரி பேசிபார்க்கவும்....)

ப்ரியமுடன் வசந்த் said...

//பதிவுலகம் என்னிடம் இருந்து தீரா பசியுடன் எழுத்து உணவை எதிர்பார்த்தாலும்.. பதிவுலகத்திற்கு பின்னால் "ஐட்டம் ".. ச்சே.. சில சொந்த வேலைகள் கோர பசியுடன் தாண்டவம் ஆடுவதால். எனது எழுத்து பணியை நிறுத்தி விட கூடிய சூழ்நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறேன்.( டேய் எவண்டா பேசிகிட்டு இருக்கும் போது அருவா வீசுகிறது? )//

நாந்தாண்டா...

ஒழுக்கமா வரலை நிஜமாவே சேர் எடுத்து வீசுவேன்...

நீ,கலையெல்லாம் ஒரே ரசனையுள்ள ஆள்கள்ன்னு உங்க பதிவுல இருந்து தெரிஞ்சுட்டேன்.,,,

//18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும். //

ஏன் உனக்கிந்த இந்த கொலவெறி, பிடிக்கலையாடா...

ப்ரியமுடன் வசந்த் said...

//18+ எழுதுறவங்க..//

பாலா ஹாலிவுட் பாத்துக்கங்க நீங்க எழுதுற 18+ படிக்குறதுக்குன்னே(மட்டும்) இவன் இன்னும் பதிவுலகத்தில இருக்கான்....

வால்பையன் said...

நீங்க எழுதலைனா பதிவுகலம் முடங்கி போயிருமே!

Abdul Rahman said...

என்ன கொடுமை சார் இது!!!!

அனுபவம் said...

யாருமே சாணத்த வீசல்லியாங்க?

வினோத் கெளதம் said...

ரெண்டு வாரம் தானா ..எல்லாம் BHEL பண்ற வேலையா..

kishore said...

@ சங்கர்
லேட் பிக் அப் சார் நீங்க.. ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிகிங்க.. இதுக்கு மேல எங்க காபாதுறது..?

@சீமங்கன்
நன்றி..

@ஹாலிவுட் பாலா
எப்போ எப்போன்னு தான் இருக்கீங்க போல இருக்கு..

@கார்த்திக்கேயன்
ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்கையா ..
நன்றி கார்த்திகேயன்..

@ பிரபாகர்
நிச்சயம் பிரபாகர்.. அவ்ளோ சீக்கிரம் உங்கள நிம்மதியா விட்டுடுவனா?

@என் நடை பாதையில்(ராம்)
நீங்க மட்டும் தான் கொஞ்சம் ஆறுதலா பேசுறிங்க..

@பிரியமுடன்...
//நாந்தாண்டா...//
அந்த வேலைய நீ தான் செய்வன்னு தெரியும் :)..
//பாலா ஹாலிவுட் பாத்துக்கங்க நீங்க எழுதுற 18+ படிக்குறதுக்குன்னே(மட்டும்) இவன் இன்னும் பதிவுலகத்தில இருக்கான்...//
ஆமா இவரு "டாம் அண்ட் ஜெர்ரி" மட்டும் தான் பாக்குறது ..


@வால்பையன்

//நீங்க எழுதலைனா பதிவுகலம் முடங்கி போயிருமே!//

அமைச்சரே.. க க க போ.. ( கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொண்டீர் போங்கள்..)

@Abdul Rahman

//என்ன கொடுமை சார் இது!!!!//
உங்க வருதாம் புரியுது அப்துல்.. என்ன பண்றது சுழ்நிலை அப்படி.. இதுக்கெல்லாம் அழக்கூடாது..

@அனுபவம்
//யாருமே சாணத்த வீசல்லியாங்க?/
வீசுனா சாணிக்கு அசிங்கம் ஆகிடும்னு நெனசிட்டாங்களோ என்னவோ..

@வினோத்கெளதம்
அது இல்ல மச்சி.. இது வேற.. நாளைக்கு போன்ல பேசும் போது சொல்றேன்..

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

கலையரசன் said...

//நான் பிளாக் எழுதுறத நிறுத்திடலாம்னு இருக்கேன்.//
ஆமா மச்சி.. நிறுத்திட்டு வொயிட்ல எழுது.. நல்லாயிருக்கும்!!

//அதாவது நான் இந்த ப்லோக் எழுத ஆரம்பிச்சி//
என்னடா.. பிளேக் நோய் வந்தவன் மாதிரி எழுதியிருக்க..?

//11 மாசம் தான் ஆகுது//
10 மாசத்துலையே வந்திருக்கனுமேடா... 1 மாசம் தள்ளிபோயிடுச்சு? ஏன்?

//18+ எழுதுறவங்க.. எல்லாம் மறக்காம அவங்க அவங்க வேலைய செய்யணும்.//
அவங்க எழுதுவாங்க.. எழுதுவாங்க.. நீ 18+ செய்றவங்களை... மறஞ்சிருந்து பாக்காம இருந்தா சரி..!!

kishore said...

@ கலையரசன்..
ச்சே.. ஐயோ.. அடல்ட்ஸ் ஒன்லி..

Prathap Kumar S. said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாம்பா... கிஷோரு இதுக்காகவே நானும் எழுதறேன்... 18 பிளஸ்

kishore said...

வாங்க வாங்க.. 18+ ன்னு சொல்லிடிங்க.. அதுக்கு அப்புறம் அடிச்சா என்ன? உதைச்சா என்ன.?

கடைக்குட்டி said...

இவ்ளோ ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பா ???

kishore said...

என்ன பண்றது .. பழகி போச்சி..

angel said...

m i hope rendu varam mudinjachu nu

kishore said...

yeah angel.. ungal varugaiku nandri

divyahari said...

ஏன் ஏன் இந்த கொலை வெறி (எழுதுன உங்கள சொல்லலங்க உங்கள முட்டை தக்காளிலாம் வச்சி அடிச்சாங்களே அவங்கள சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க..?)

kishore said...

நம்பிட்டேன் ..வருகைக்கு நன்றி தோழி..