என் உயிர் நண்பனே..
நலம். நலம் அறிய அவா..
வழக்கமாக இப்படி தான் இந்த கடிதத்தை ஆரம்பிக்க நினைத்தேன்
உனக்கு தெரியும் நான் பொய் சொல்கிறேன் என்று... ஆகையால் ...
நலம் என்ற வார்த்தை மறந்து விட்ட நண்பன் எழுதுவது...
எப்படி உன்னால் தூங்க முடிகிறது நண்பா?என்னால் முடியவில்லை.. இன்றுடன் 2 வருடம் ஆகிறது நாம் பிரிந்து... தவறு... நீ என்னை விட்டு விலகி சென்று...
நினைத்து பார்கிறேன் நமக்குள் இந்த பிரிவு ஏன் என்று...?
பொதுவாக இரு நண்பர்களுக்குள் பிரிவு வந்தால் அதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பாள்.. மற்றபடி நான் பெரியவன், நீ பெரியவன் , போட்டி , பொறாமை, வஞ்சம்,பழிதீர்த்தல் இவைகளால் பிரிவார்கள் (இவைகளால் பிரிபவர்கள் நண்பர்களாக நடித்து கொண்டிருந்தார்கள் என்பது தான் உண்மை ) இவை எதுவும் நம்மை பிரிக்கவில்லை நண்பா.. பின் எது நம்மை பிரித்து..?
விட்டு கொடுப்பது தான் உண்மையான நட்பு... ஆனால் அந்த விட்டு கொடுத்தலே நமது நட்பின் பிரிவிற்கு காரணமாக அமைந்ததற்கு யாரை குற்றம் சொல்வது...?
பள்ளியில் தொடங்கிய நம் நட்பு.. கல்லூரி முடிந்து நாம் வேலைக்கு செல்லும் வரை இருந்த நட்பு.. இப்பொது காற்றில் கரைந்துவிட்டதா ..?
என்னால் எதையும் மறக்க முடியாது நண்பா... எதை மறக்க சொல்கிறாய்..?
பள்ளி நாட்களில் என் தோல் மீது உன் கை போட்டு நாம் நடந்து சென்றதையா ?
உனக்கு வேறு கல்லூரில் இடம் கிடைத்தும் சேராமல் நான் சேர்ந்த கல்லூரியில் இடம் கேட்டு என்னுடன் சேர்ந்து படிததையா?
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் போது எனக்கு உடல் நிலை பாதிக்கபட நீயும் தேர்வுக்கு செல்லாமல் என்னுடன் மருத்தவமனையில் இருந்ததையா?
படித்து முடித்தவுடன் நம் இருவருக்குமே ஒரே நிறுவனத்தில் நல்ல கிடைததையா?
வேலை கிடைத்தும் என்னை விட அதிகம் சந்தோஷபட்டது நீ தானே நண்பா?
அந்த சந்தோசம் 2 வருடம் தான் நீடிக்கும் என்று எனக்கு தெரிந்து இருந்தால் நான் அன்றே வேலயை விட்டு இருப்பேன் ..
இதே நாள்... அன்று திங்கள் கிழமை...
காலை அலுவலகத்திற்கு சென்ற போது அனைவரும் என்னிடம் வந்து என் கை குலுக்கி.. வாழ்த்து தெரிவித்து நான் பதவிஉயர்வு பெற்று விட்டேன் என்றும் அதற்காக நான் வெளி நாட்டிற்கு செல்லவேண்டும் அங்கே 2 வருடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள் ... அதை கேட்டவுடன் என் கண்கள் தேடியது உன்னை தானே நண்பா ?
உன் இருக்கைக்கு வந்து பார்த்தால் அது காலியாக இருந்தது.. சரி இன்னும் வரவில்லை என்று நினைத்து கொண்டு என் இருக்கைக்கு சென்றேன்... அப்போது தான் அந்த கடிதத்தை கண்டேன்...
என் உயிர் நண்பா...
வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
xxxxxxxx
அலுவலகத்தில் விசாரித்த போது நீ வரமாட்டாய் என்றும்,
"என்ன சார் உங்க நண்பர் வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றது உங்களுக்கு தெரியாதா? " என்று கேக்க உடைந்து போனேன் நான்... அப்போது என் மனம் நினைத்தது.. ஏன் நண்பா எனக்கு ஒரு நல்லது நடந்தால் அது உனக்கு சந்தோசம் தரவில்லையா...?
இதற்கான விடை எனக்கு சில நிமிடங்களில் தெரிந்தது..
நான் என் நண்பனை சந்தேகபட்டது என் வாழ்வில் நான் செய்த மன்னிக்க முடியாத தவறு என்று...
இந்த பதவி உயர்வு மொத்தம் இரண்டு பேருக்கு... ஆனால் பந்தயத்தில் இருந்ததோ மூவர்... ஒருவருக்கு நிச்சயம் கிடைத்துவிட...நாம் இருவர் மட்டுமே... இருவரில் ஒருவர் என்ற நிலை..இது உனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்து அதை எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீ விட்டு கொடுத்து இருக்கிறாய்... என்னிடம் சொல்லி இருந்தால் நீ எடுத்த முடிவிற்கு நான் ஒத்து கொண்டிருக்க மாட்டேன் என்று தெரிந்து தான் நீ என்னிடம் கூட சொல்லாமல் துரமாக சென்றுவிட்டாயா நண்பா...?
நானும் அன்றே என் வேலை விட்டு இருப்பேன் ஆனால் இன்னும்
நீ விட்டுகுடுத்த வேலையல்தான் நான் இன்னும் இருக்கிறேன் காரணம் இது எனக்கு என் நண்பன் தந்தது...
ஆனாலும் ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு செல்லும் போது நம் நட்பின் நினைவுகள் என் நெஞ்சில் தென்றலாக வீசுவதற்கு பதிலாக சூறாவளியாக சுழன்று அடிக்கிறது...
நான் என் நண்பனை ஒரு கணம் சந்தேகபட்டத்திற்கு அவனிடம் நேரில் மன்னிப்பு கேட்காமல் இந்த வேதனை என்னை விட்டு நீங்குமா?
இந்த வேதனை தாங்கி கொண்டு எப்படி தினம் நான் நித்திரை எதிர்நோக்க முடியும்...?
இந்த கடிதம் கண்டு நீ என்னிடம் வருவாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...
நீ வரவில்லை என்றாலும் நான் நித்திரை கொள்வேன்....
நிரந்தரமாக...
நட்புடன்
-கிஷோர்
போட்டுட்டு போங்க... அட ஓட்ட சொன்னேங்க...
13 comments:
கலக்கல்.
ரொம்ப நல்ல இருக்கு.
சில இடங்கள் படிக்கும் பொழுது கண்கள் கலங்கின.
வழக்கம் போல் இதுவும் என்னோட பிளாக்கர்ல Update ஆகுல.
கடைசி லைன் தேவையா ( vote )..
நன்றி வினோத்..
அந்த கடைசி வரி... தேவை இல்ல தான்..
ஆனா சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......
(என்னடா விளம்பரம் கிஷோர்? நீ வாங்குற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கு இது தேவையா ? அந்த சி.... வேணாம் இதுக்கு மேல சொன்னா வம்பாகிடும்..)
நீங்க அந்த kishorejayaraj.blogspot.com delete panitu paarunga
athaan pannanum
கிஷோர்.. என்னோட.. கூகிள் ரீடர்ல.. பார்க்க ட்ரை பண்ணினப்ப...
”The feed being requested cannot be found.” -ன்னு மெசெஜ் வந்துச்சி. நெட்ல தேடினப்ப. கீழே உள்ள.. லிங்க் கிடைச்சது. இது ஹெல்ப் பண்ணுதான்னு செக் பண்ணுங்க. உங்க ஃபீட்-ல எதோ ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன்.
http://groups.google.com/group/blogger-help-troubleshoot/browse_thread/thread/1b7d1ba0429a5f0f?pli=1
hi very good
kadha sonna naya serupala adika
thankyou anonymous...
serupala adikirathunu mudivu panitinga unga pera sollitu adinga
thankyou anonymous...
serupala adikirathunu mudivu panitinga unga pera sollitu adinga
நல்ல தோழமை கிடைப்பது நல்வாழ்வின் அத்திவாரம். ஆனாலும் பிரிவுகள் சிலசமயம் நிரந்தரமாகி அதுவே எதிர்ப்பாகிவிடுகிறது.
உங்கள் நட்பு இரண்டுக்கும் இடைவெளி விட்டு மெளனியாகியுள்ளது. காலம் எப்போதும் ஒரேமாதிரியிருக்காது. ஆக பிரிவு மீளவும் சந்திப்பாகும்.
சாந்தி
nandri shanthi
nalla story pa konjam kastama iruku
thanks gayathri
Post a Comment