Saturday, March 21, 2009

காமிணி.. என் தேவதை..

எங்க கிளாஸ்ல மொத்தம் 22 பேரு 12 பயலுங்க(என்னையும் சேர்த்து தான்) 10 தேவதைங்க.. அந்த தேவதைகளுக்கு எல்லாம் ஒரு தேவதை... அவள் தான் இந்த கதையின் நாயகி...

பயலுங்க எல்லாம் டெய்லி எப்படா எம் .ஐ கிளாஸ் வரும்னு காத்துக்கிட்டு இருப்போம்...
காரணம் ஜோதி மிஸ்.. (தப்ப நினைக்காதிங்க நான் அந்த அளவுக்கு மோசம் இல்ல )

ஜோதி மிஸ் தான் எல்லோரையும் அட்டென்ட்டென்ஸ் நம்பர் படி உக்கார வைப்பாங்க... அப்போ நம்ப பேரு காமிணி பக்கதுல வந்துடும் ( பேரு வச்ச எங்க அம்மா அப்பா வாழ்க...)

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த சம்பவம் நடக்கும் போது
எனக்கு ஒரு 8 வயசு.. நான் 3rd std படிச்சிக்கிட்டு இருந்தேன் (நீ இப்போ வரைக்கும் அதான்டா படிச்சிருகன்னு விவேக் மாதிரி சொல்ல கூடாது ..)

காமிணி... என் காமிணி... தேவதை.. சாரி... குட்டி தேவதை..

எம் .ஐ கிளாஸ் அறை மணி நேரம் தான் ஆனாலும் அந்த அறை மணி நேரம் இருக்கே.. வாழ்கைல மறக்க முடியாத எத்தனையோ அறை மணி நேரங்கள்...

முதல் ரெண்டு வாரம் நம்பள அவ கண்டுகவே இல்லங்க.. பொதுவா பொண்ணுங்களுக்கு கதை கேக்குறதுல ஆர்வம் அதிகம்.. அவ மட்டும் விதி விளக்கா... ?
நானும் என்னனோவோ (பென்சில் வச்சி நோட்ல கிறுக்குகிறது வாட்டேர் பாட்டில் வச்சி பென்ச்ல தட்டுறது , லஞ்ச் பாக்ஸ் வச்சி சத்தம் எழுபுரதுனு ) ட்ரை பண்ணி பார்ப்பேன்.. அவ கவனத்த என் பக்கம் திருப்ப.. ம்ம்ம்... ஒரு ரிஆக் ஷணும் இருக்காது..( என் முயற்சி எல்லாம் பாழா போச்சே...) ஒரு தடவ இதுக்காக ஜோதி மிஸ் கிட்ட முதுகுல செம சாத்து வாங்கி இருக்கேன்... முதுகு ரெண்டா போன மாதிரி வலிச்சாலும் வந்து உக்காரும் போது வலிக்காத மாதிரி சிரிச்சிக்கிட்டு பில்டப் குடுத்து உக்காருவேன்.. அப்போ கூட அவ திரும்ப கதை கேக்குறதுல தான் இருப்பா...(நானும் வலிக்காத மாதிரியே எவ்ளோ நேரம் தான் நடிக்குறது ? )

எப்படி அவள நம்ம பக்கம் திரும்ப வைக்குதுன்னு நான் யோசிச்சி யோசிச்சி பல அறை மணி நேரங்கள் வீனா போயிருக்கு.. அப்போ தான் அந்த கடவுளா பார்த்து எனக்கு அந்த வாய்ப்ப தந்தாரு பட்டர் சாக்லேட் ரூபத்துல.. என்ஜாய்டா கிஷோர்னு..

அவளுக்கு ரொம்ப பிடிச்சது பட்டர் சாக்லேட் அவ லஞ்ச் பேக்ல எப்போவும் பட்டர் சாக்லேட் இருக்கும்... அதை அவ மோரல் கிளாஸ்ல மிஸ்க்கு தெரியாம தின்றது அவளுக்கு மட்டுமே தெரிந்த கலை.. இது போதாதா நமக்கு...? மறு நாள் எங்க வீட்ல சொல்லி ரெண்டு சாக்லேட் வாங்கி என் பாக்கெட்ல வச்சிகிட்டேன்... ( அத வாங்குறதுகுள்ள எவ்ளோ அடி? எவ்ளோ உதை ? எவ்ளோ திட்டு? ஏன்னா.. பட்டர் சாக்லேட் அப்போ அவ்ளோவா கிடைக்காது.. அத அப்பறமா இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன் )

அன்னைக்கு மோரல் கிளாஸ்ல காமிணி அசந்த நேரம் அவ லஞ்ச் பேக்ல இருந்த சாக்லேட் ஒரு சிலரால் திருடபட்டு விட்டது
(ஆட்டைய போட சொன்னதே நான் தான்னு இது வரைக்கும் அவளுக்கு தெரியாது..) கொஞ்ச நேரத்தில் அவ பாக் திறந்து பார்க்க.. ஏமாற்றத்துடன் மற்றவர்களை பார்த்தாள்... நான் ஒன்னும் தெரியாதவனை போல கிளாஸ் கவனிக்க தொடங்கினேன்... மெதுவாக கேட்டாள் என் லஞ்ச் பேக்ல வச்சிருந்த சாக்லேட் காணல நீ பார்த்தியான்னு...
"தெரியுல காமினி.. ஆனா வினோத்தும் பார்த்திபனும் தான் சாக்லேட் சாப்பிடுரானுங்க ... அது உன் சாக்லேட் தானான்னு தெரியுல... "
காமினி திரும்பி அவர்களை முறைத்தாள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா என்பது போல இருந்தது அவள் பார்வை... ம்ம்ம்ம்.... அந்த ஜென்மங்களுக்கு அதெல்லாம் உரைத்தால் தான...?
நான் மெதுவாக என் பாக்கெட்ல இருந்த சாக்லேட் எடுத்து நீ வேணும்னா என்னோட சாக்லேட் சாப்டு என்றேன்...
"அப்போ உணக்கு?"என்றாள்
"என்னகு வேண்டாம் நீ சாப்டு உனக்கு தான ரொம்ப பிடிக்கும்"
"இல்ல வேணம் நீ வச்சிக்கோ"
"வேண்டம் நீ சாப்டு மிஸ் பாத்துட போறாங்க" என்றேன்
"சரி.. அவங்க பாக்குறதுகுள்ள ஒன்னு எடுத்து பாதி பாதி சாப்பிடலாம் அப்பறமா இனொனு சாப்டலாம் " என்றாள்
"ம்ம்ம்... சரி "
அவள் கட்டி இருந்த டைல சாக்லேட் வச்சி கடிச்சி எனக்கு பாதி தந்தாள்...
" எச்சி விட்டேன்.. பால் விட்டேன்" சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம்.. அதுல இருந்து காமினி எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டா...
அன்னைக்கு நான் சாக்லேட் மட்டும் தான் குடுத்தேன்... ஆனா அதுக்கு அப்பறம் அவ டெய்லி எனக்கு எதாவது எடுத்து வந்து தருவா(சாக்லேட், டாய் , பென்சில், ரப்பர்.. இப்படி நெறையா ...) இப்படியே அவ வேற ஸ்கூல்க்கு போற வரைக்கும் ஜாலியா போச்சு...
ம்ம்ம்ம்ம்ம்ம்.....அது ஒரு கனாக்காலம்.........

இந்த தலைப்ப பாத்துட்டு ஜொள்ளு விட்டுகிட்டு உள்ள வந்து படிச்சிட்டு உங்க காதுல புகை வந்தா நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி கொள்ள கடமை பட்டிருக்கிறேன் ..

"டேய் கிஷோர்.. "
"ம்ம்ம்"
"இப்படி திரும்பு.."
"ஏன்"
"திரும்பு சொல்றோம் "
(திரும்பி ) "சொல்லுங்க..."


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.... .

அப்படி காரி துப்பிட்டு ஓட்ட போட்டுட்டு போங்க

31 comments:

வினோத் கெளதம் said...

முதல்ல Submit பண்ணு அப்புறம் நாங்க வோட்டு போடுறோம்.,

வினோத் கெளதம் said...

காமினி- Double Meaning பேராக்கிதே..????

வினோத் கெளதம் said...

//நான் 3rd std படிச்சிக்கிட்டு இருந்தேன்//..

போய்க்கிட்டு இருந்தான்னு சொல்லு தயவு செஞ்சு படிச்சிட்டு இருந்தான்னு சொல்லாதே..

வினோத் கெளதம் said...

//ஜோதி மிஸ் கிட்ட முதுகுல செம சாத்து வாங்கி இருக்கேன்... முதுகு ரெண்டா போன மாதிரி வலிச்சாலும் வந்து உக்காரும் போது வலிக்காத மாதிரி சிரிச்சிக்கிட்டு பில்டப் குடுத்து உக்காருவேன்.. //

அங்க மட்டுமா.
அப்ப மட்டுமா..இப்பயும் அப்படி தானே..

வினோத் கெளதம் said...

//காமிணி அசந்த நேரம் அவ லஞ்ச் பேக்ல இருந்த சாக்லேட் ஒரு சிலரால் திருடபட்டு விட்டது//

அது என்ன எல்லா பதிவுலையும் தொடர்ந்து பொண்ணுங்க லஞ்ச்BAG மட்டும் குறி வைக்கிறிங்க..

kishore said...

//காமினி- Double Meaning பேராக்கிதே..????//
double meaning ellam onum illanga... kaa mi ni nu pirichi padikaathinga vinoth..
//போய்க்கிட்டு இருந்தான்னு சொல்லு தயவு செஞ்சு படிச்சிட்டு இருந்தான்னு சொல்லாதே..//sathiyama naan 3rd std padicehnga... kamal-silk smitha padina "ponmeni uruguthey" rhymes kuda anga thaan solli kuduthaanga..
kari thuppiyaachulla? vote panunga

வினோத் கெளதம் said...

//"தெரியுல காமினி.. ஆனா வினோத்தும் பார்த்திபனும் தான் சாக்லேட் சாப்பிடுரானுங்க ... அது உன் சாக்லேட் தானான்னு தெரியுல... "//

//அந்த ஜென்மங்களுக்கு அதெல்லாம் உரைத்தால் தான...?//

கவ்வுதிட்டியே கைப்புள்ள..
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி வைக்க படும்..

வினோத் கெளதம் said...

நீங்களும் Headsம் 3rd standard

படித்தது 1965ம்ஆண்டு என்று நினைக்கிறேன்.
நான் படித்தது 80களில்..
உண்மை அப்படி இருக்க கதையில் நான் எப்படி..

kishore said...

//அது என்ன எல்லா பதிவுலையும் தொடர்ந்து பொண்ணுங்க லஞ்ச்BAG மட்டும் குறி வைக்கிறிங்க..//
i expected this question... aana unga kelviya ponungaloda lunch baganu varum pothu saapadu thaanga namma kannuku theriyuthu... sorry. i will try to correct myself.. thanks vinoth
//கவ்வுதிட்டியே கைப்புள்ள..
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி வைக்க படும்..// nan rendu naalaiku oorla iruka maten... vanthum ungaluku letter poduren apprama vanthu paaratuna pothum..

kishore said...

//கதையில் நான் எப்படி.// intha kathaiyl vinothgowtham endru naan engaiyum kuripida villai nanba...
neengaley ippadi vanthu maatikuringa... ithuku per thaan vaya kuduthu ethaiyo punakikirathu enbatha?

வினோத் கெளதம் said...

//naan engaiyum kuripida villai nanba...
neengaley ippadi vanthu maatikuringa... ithuku per thaan vaya kuduthu ethaiyo punakikirathu enbatha?//

Oh No..wAt A sHAmE..

பாலா said...

தேவுடா..., நான் கூட... நிஜமாவே நம்ம வினோத்-தான் திருடிட்டாரோன்னு நினைச்சேன். :(

மன்னிச்சிக்கங்க வினோத். கிஷோர் குழந்தையாட்டம் கதை சொல்லி ஏமாத்திட்டார். :(

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!! :)

பாலா said...

காமிணி-யை... காமினி-ன்னு எல்லா இடத்திலும் மாத்திடுறீங்களா கிஷோர்?

பாலா said...

இன்னொன்னு கூட சொல்லனும்னு நினைச்சேன். உங்க பேரை.. ப்ரொஃபைல்ல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாத்திடுங்க. லெட்டர் போல்ட் ஆய்டும்.

சந்தேகமிருந்தா என்னோட ‘மீலோ மா’வை செக் பண்ணுங்க. உங்க பேர் மட்டும்தான்.. சோமாலியா மாதிரி இருக்கு. :)

வினோத் கெளதம் said...

Dei

tr is one more kishore in blogger.
suppose if u want to change ur name in tamil means.In future,mayb, it will create sum probs.
u have to change ur name first.
better now itself.
Like kishorejay.

வினோத் கெளதம் said...

//நான் கூட... நிஜமாவே நம்ம வினோத்-தான் திருடிட்டாரோன்னு நினைச்சேன். :( //

பாரு பாலா சாரும் அதான் நினைக்கிறாரு..

//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!! :)//

Repeat..

kishore said...

@ hollywood bala-
ok bala i will try to change it

Prabhu said...

@கிஷொர்
இது மாதிரி சின்ன வயசு அனுபவங்களை எழுதுங்க. நல்லா இருக்கு. ஆனா அப்பவே குறி வச்சு கடலை போட்டேன்னு சொல்றது ஓவரா இல்ல....

Prabhu said...

நாங்களும் சிறுகதை ட்ரை பண்ணிருக்கோம். வந்து பாக்குறது. பாத்து எப்படியிருக்குனு சொல்லுங்க, நண்பா.

ஆமா, நீங்க என்ன பண்ணுறீங்க்!(இப்போ ப்ளாக் பாக்குறேன்னு சொன்னா, உங்க கனவுல ஜெயலலிதா நமீதா பாட்டுக்கு ஆடுற மாதிரியெல்லாம் வரும்)

kishore said...

இல்ல pappu கடலை மட்டுமே நமது குறிக்கோள் இல்லை

kishore said...

நான் ஒரு தனியார் பல்கலைகழகத்தில் பணிபுரிகிறேன் நண்பா... (அப்புறம்... எனக்கு ஜெயலலிதாவுக்கும் நமிதாவுக்கும் ஒன்றும் அதிக வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை..)

kishore said...

//Oh No..wAt A sHAmE..//
puppy shame

kishore said...

//if u want to change ur name in tamil means.In future,mayb, it will create sum probs.//
thanks dude..

kishore said...

//நான் கூட... நிஜமாவே நம்ம வினோத்-தான் திருடிட்டாரோன்னு நினைச்சேன். :(

பாரு பாலா சாரும் அதான் நினைக்கிறாரு..//
பாலா அண்ணா என் நண்பன இன்னொரு தடவ தப்பா நினைக்காதிங்க . அவன் 5 கொலை 6 ரேப் பண்ணிருகான்... ஆனா இதுவரைக்கும் திருடி சாப்டது இல்ல..
சொல்லிட்டேன் போதுமா வினோத்...? ஹெய்.... என்ன இது சின்ன குழந்தையாட்டம் அழுதுகிட்டு... அதான் பாலா இனிமே உன்ன சந்தேக படமாட்டாருன்னு சொல்றேன்ல...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Suresh said...

kishore nan ungalukkum papukum nama machan vinothkum pattam puchi viruthu kodukalm yendru irunthaen.. aana valu payyan mundhikittu ungalukkum pappukum koduthutaru..

Anonymous said...

சின்ன வயசு காதல்லாம் மறக்க முடியுமா!

சூப்பர்பா!

kishore said...

//kishore nan ungalukkum papukum nama machan vinothkum pattam puchi viruthu kodukalm yendru irunthaen..//nandri suresh... ungal mailku padil alika mudiya villai mannikavum..

kishore said...

nandri shi-nisi sir...

மந்திரன் said...

நல்லா இருக்கு .ரொம்ப நல்லா இருக்கு ...

kishore said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மந்திரன்