Thursday, April 9, 2009
என்னுள் அவள்...
ஆதிரா...
எனக்காக பேசி... எனக்காக சிரித்து... எனக்காக மகிழ்ந்து ... எனக்காக பசித்து ... எனக்காக புசித்து...எனக்காக வாழ்வதாக சொல்லி என்னை தவிக்க விட்டு சென்றவள்...
அன்று ஒரு நாள் நாம் இணைவது காலத்தின் கட்டாயம் என்றாய் ... பின் ஒரு நாள் நாம் பிரிவது விதியின் விளையாட்டு என்றாய் ..
இந்த விதியின் சதி எனக்கு முன்பே தெரிந்திருந்தால்... நிறுத்தி இருப்பேன்.. கால துடிப்பை அல்ல உன் கால் கொலுசொலி கேட்டு துடிக்கும் என் இதய துடிப்பை..
நம் திருமணம் பற்றி வீட்டில் சொல் என்றேன்...
மறுத்தாய்...
ஏன் ? என்றேன்..
வீட்டில் வேறு இடம் பார்கிறார்கள் என்றாய்...
இன்னும் ஒரு வருடம் பொறுமையாக இரு நான் அதற்குள் நான் ஓரளவு சம்பாதித்து விடுவேன் என்றேன்...
மாப்பிள்ளை என்னை விட அதிகம் சம்பாரிகிறவர் என்றாய்..
அப்போ நான்? என்றேன்...
நீ தகுதியானவனா ? என்று உன்னை நீயே கேட்டுகொள் என்றாய்...
அது என்னை விரும்பும் போது தெரியவில்லையா? என்றேன்...
அது தான் நான் செய்த தப்பு என்றாய்...
இன்றும் என் இதயம் இயங்குகிறது... ஒரு இயந்திரத்தை போல.. ஆனால் துடிப்பது இல்லை... ஆம் அது தன் துடிப்பை நிறுத்திவிட்டது... அன்று நீ சொன்ன ஒரு வார்த்தையால்...
ஓடிவிட்டன வருடங்கள்..என்னவள் இன்னொருவனுடயவள் ஆக மாறி..
எவ்வளவோ முயன்று அவளின் நினைவுகளை என்னுள் இருந்து முற்றிலுமாக அழித்துவிட்டேன் என நினைத்தேன் ...
ஆனாலும் நேற்று பேருந்தில்.. ஒரு குழந்தை என்னை பார்த்து சிரிக்க.. அதை அழைத்து மடியில் அமர்த்தி... உன் பெயர் என்ன என்றேன்...
மழலை மொழி மாறாமல் சொன்னது... ஆதிரா..
பெயரை கேட்டதும் அதன் பெற்றோரிடம் குடுக்க நினைத்தும் செய்யவில்லை...
ஆம்... அவளை என் நெஞ்சோடு அனைத்து கொண்டேன்...
நீ என்னிடம் பேசியதும் பழகியதும் பின்பு விலகியதும் நீ சொன்னது போல விதியின் விளையாட்டாக இருக்கலாம்... ஆனால் எனது காதல் நிஜமானது.. உணர்வானது... உன்னதமானது...
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
Hey Kishore, why so senti???
Cherish the memories & move on:-).
Cheers!
Machan Super..
காதல் கனமானது.
//ஆதிரா...//
??..
thanks for coming viji...
life is not full of candy na...?
தேங்க்ஸ் மச்சான்... உங்கிட்ட இருந்து வேறமாதிரி விமர்சனம் எதிர்பார்த்தேன்
//tamil24.blogspot.com said...
காதல் கனமானது.//
உண்மை தான் ..
//ஆதிரா...//
??..
அடங்குடா...
நான் வேற மாதிரி விமர்சனம் பண்ணி இருப்பேன்.
But i knw abt u man..
so sum little cool..
இருந்தாலும் உணர்வுபூர்வமா நல்ல எழுதி இருக்க.
என்ன பண்றது? தானா வருது..
hi machan appovae padichitan comment podarathukkulla miss ayuduchu, vino post la night comment podurthu kulla vutula ella realtives um kupitanga, hmmm athan morning first velaiya comment unaku .... super pathivu machan alwana ithu alwa
//ஆதிரா...
எனக்காக பேசி... எனக்காக சிரித்து... எனக்காக மகிழ்ந்து ... எனக்காக பசித்து ... எனக்காக புசித்து...எனக்காக வாழ்வதாக சொல்லி என்னை தவிக்க விட்டு சென்றவள்...//
டேய் மச்சான் :-) எல்லாரும் இப்படி தானா ஹா ஹா பேசுறாது சிரிக்கிறது பாக்கிறது .. னு ஒரே அல்வா தான்
//அன்று ஒரு நாள் நாம் இணைவது காலத்தின் கட்டாயம் என்றாய் ... பின் ஒரு நாள் நாம் பிரிவது விதியின் விளையாட்டு என்றாய் ..//
மச்சான் இப்படி பேசி பேசி பல்பு வாங்கறது கூட சந்தோசம் தான் ஏனா வாங்கியது உன்னிடம்னு ஒரு கவிதை எழுதிட்டு ... ஹ ஹ போறது நம்ம பசங்க
//இந்த விதியின் சதி எனக்கு முன்பே தெரிந்திருந்தால்... நிறுத்தி இருப்பேன்.. கால துடிப்பை அல்ல உன் கால் கொலுசொலி கேட்டு துடிக்கும் என் இதய துடிப்பை..//
மச்சான் ரொம்ப நல்லா இருந்தது இந்த வரிகள்
இதய துடிப்பு கேட்டும் என்று நீ சொன்னது அறிவியல் மரபு மிறினாலும் கவிதை மரபு மாறாமல் அழகாய் இருக்கு
//நம் திருமணம் பற்றி வீட்டில் சொல் என்றேன்...
மறுத்தாய்...
ஏன் ? என்றேன்..
வீட்டில் வேறு இடம் பார்கிறார்கள் என்றாய்...
இன்னும் ஒரு வருடம் பொறுமையாக இரு நான் அதற்குள் நான் ஓரளவு சம்பாதித்து விடுவேன் என்றேன்...//
மச்சான் அது தான் பெஸ்ட் பார்த்தோம் பழகினோம் என்று எஸ்கேப்
//மாப்பிள்ளை என்னை விட அதிகம் சம்பாரிகிறவர் என்றாய்..
அப்போ நான்? என்றேன்...
நீ தகுதியானவனா ? என்று உன்னை நீயே கேட்டுகொள் என்றாய்...
அது என்னை விரும்பும் போது தெரியவில்லையா? என்றேன்...
அது தான் நான் செய்த தப்பு என்றாய்.../
தப்பு செய்றது :-) சகசம் தான் ஹ அஹ அப்புறம் தான் தெரிஞ்கிறாங்க
நல்ல வலி ... தெரிகிறது
கல்யானதுக்கு பல்ப் வாங்க ஒரு அமெரிக்க மாப்பி இருக்கான் லவ்க்கு மச்சான்ஸ் தான்
//இன்றும் என் இதயம் இயங்குகிறது... ஒரு இயந்திரத்தை போல.. ஆனால் துடிப்பது இல்லை... ஆம் அது தன் துடிப்பை நிறுத்திவிட்டது... அன்று நீ சொன்ன ஒரு வார்த்தையால்...//
மச்சான் இப்படி பீல் பண்ணி தான் நம்ம பசங்க லைப் காலி ஆவது .. பதிலாக அடுத்த பிகர் பாக்கனும்.. சினிமா பார்த்து .. நம்ம இப்படி சிங்கள் லவ்னு ...அழுதது தான் மிச்சம்
//ஓடிவிட்டன வருடங்கள்..என்னவள் இன்னொருவனுடயவள் ஆக மாறி..
எவ்வளவோ முயன்று அவளின் நினைவுகளை என்னுள் இருந்து முற்றிலுமாக அழித்துவிட்டேன் என நினைத்தேன் ...
ஆனாலும் நேற்று பேருந்தில்.. ஒரு குழந்தை என்னை பார்த்து சிரிக்க.. அதை அழைத்து மடியில் அமர்த்தி... உன் பெயர் என்ன என்றேன்...
மழலை மொழி மாறாமல் சொன்னது... ஆதிரா..//
பிண்ணிட்டையா அருமை நினைவுகள் ஒரு அழகிய கவிதை.. அதிலும் இதுவும் இருக்கும்
//பெயரை கேட்டதும் அதன் பெற்றோரிடம் குடுக்க நினைத்தும் செய்யவில்லை...
ஆம்... அவளை என் நெஞ்சோடு அனைத்து கொண்டேன்...//
நல்ல வரி ... சூப்பர்
இப்போ சின்ன பெண்ணா இருக்கும் போது அனைச்சா உண்டு இல்லைனா விவரம் தெரிந்தா எஸ்கேப் மச்சான்
//நீ என்னிடம் பேசியதும் பழகியதும் பின்பு விலகியதும் நீ சொன்னது போல விதியின் விளையாட்டாக இருக்கலாம்... ஆனால் எனது காதல் நிஜமானது.. உணர்வானது... உன்னதமானது..//
எவ்வளவு பட்டாலும் திருந்தாத பசங்க தான் இவர்களுக்கு பலம்
//டேய் மச்சான் :-) எல்லாரும் இப்படி தானா ஹா ஹா பேசுறாது சிரிக்கிறது பாக்கிறது .. னு ஒரே அல்வா தான்//
அல்வா மட்டுமா?
//நீ என்னிடம் பேசியதும் பழகியதும் பின்பு விலகியதும் நீ சொன்னது போல விதியின் விளையாட்டாக இருக்கலாம்... ஆனால் எனது காதல் நிஜமானது.. உணர்வானது... உன்னதமானது..//
காதல்னாலே எனக்கு அலர்ஜி!
ஒருதடவை ஈரோட்டு பார்க்குல ஒருத்தன் கையை ஊசியால குத்தி குத்தி ரத்ததுல லெட்டர் எழுதிகிட்டு இருந்தான். என்னை விட பெரிய ஆள் தான். எனக்கு சரியான கோபம். போய் கன்னம் கன்னமா அப்பிபுட்டேன்.
//இப்படி பேசி பேசி பல்பு வாங்கறது கூட சந்தோசம் தான் ஏனா வாங்கியது உன்னிடம்னு ஒரு கவிதை எழுதிட்டு ... ஹ ஹ போறது நம்ம பசங்க//
பாசகார பசங்க...
//மச்சான் ரொம்ப நல்லா இருந்தது இந்த வரிகள்
இதய துடிப்பு கேட்டும் என்று நீ சொன்னது அறிவியல் மரபு மிறினாலும் கவிதை மரபு மாறாமல் அழகாய் இருக்கு//
nandri machan..
//மச்சான் இப்படி பீல் பண்ணி தான் நம்ம பசங்க லைப் காலி ஆவது .. பதிலாக அடுத்த பிகர் பாக்கனும்.. சினிமா பார்த்து .. நம்ம இப்படி சிங்கள் லவ்னு ...அழுதது தான் மிச்சம்//
மச்சான் இப்படி பீல் பண்ணி தான் நம்ம பசங்க லைப் காலி ஆவது .. பதிலாக அடுத்த பிகர் பாக்கனும்.. சினிமா பார்த்து .. நம்ம இப்படி சிங்கள் லவ்னு ...அழுதது தான் மிச்சம்
ipo than pasangaluku puthi varuthu
//பிண்ணிட்டையா அருமை நினைவுகள் ஒரு அழகிய கவிதை.. அதிலும் இதுவும் இருக்கும்//
நன்றி மச்சி..
//நல்ல வரி ... சூப்பர்
இப்போ சின்ன பெண்ணா இருக்கும் போது அனைச்சா உண்டு இல்லைனா விவரம் தெரிந்தா எஸ்கேப் மச்சான்//
டேய் குழந்தைடா ..
//எவ்வளவு பட்டாலும் திருந்தாத பசங்க தான் இவர்களுக்கு பலம்//
அத சொல்லு...
//காதல்னாலே எனக்கு அலர்ஜி!
ஒருதடவை ஈரோட்டு பார்க்குல ஒருத்தன் கையை ஊசியால குத்தி குத்தி ரத்ததுல லெட்டர் எழுதிகிட்டு இருந்தான். என்னை விட பெரிய ஆள் தான். எனக்கு சரியான கோபம். போய் கன்னம் கன்னமா அப்பிபுட்டேன்.//
என்ன பண்றது வால் எவ்ளோ வாங்குனாலும் நம்ம பயலுங்களுக்கு அறிவு வரமாட்டுது
தல...,
இதென்ன... சொந்த சோகமா...?! இதெல்லாம் ஒரு மேட்டரா...! பீல் பண்ணுறது எல்லாம் சினிமாலதாங்க நல்லா இருக்கும்.
ஒரே பொண்ணை/பையனை நினைச்சிட்டு இருக்கறது எல்லாம் கல்யாணம் ஆன பின்னாடி எவ்ளோ பெரிய ஸ்டுபிடிட்டின்னு ஆண்/பெண் ரெண்டு பேருக்குமே புரியும்.
நீங்க எப்படா.. ஒரு பொண்ணு ‘அண்ணா’-ன்னு (அய்யர் பாஷையில் இல்லை) உங்களை கூப்பிடப்போகுதுன்னு வெய்ட் பண்ணுங்க. அப்பதான் அடுத்ததை பார்க்கலாம்.
அனுபவஸ்தன் சொல்லுறேன். கேட்டுக்கங்க..! :) :)
//இதென்ன... சொந்த சோகமா...?!//
இத சொந்த சோகம்னு சொல்லவும் முடியாது சொல்லாமலும் இருக்க முடியாது... சொன்னாலும் அது உண்மை இல்ல சொல்லலனாலும் அது பொய் இல்ல...
Post a Comment