Wednesday, April 29, 2009
விண்ணை தாண்டி வருவாயா?
நிலா... என் மிக சிறந்த நண்பர்களுள் ஒருவள் ... சின்ன வயசுல.. நிலவா பாத்துக்கிட்டு சாப்பாடு சாப்டது... நிலாவ பாத்துகிட்டே ஓடி கீழ விழுந்தது... நிலா கரையும் போது அழுதது.. வளரும் போது சிரித்தது...
நிலவுல பாட்டி வட சுடுறாங்கனு நம்புனது... இப்படி நிலா.. என் சிறுவயதில் கள்ளம் இல்லா சிரிப்புடன் என் தோழியாய் தன் பயணத்தை என்னுடன் தொடங்கியவள் ...
நான் வளர்ந்து கல்லூரி படிக்கும் போது... காதலை சுவாசிக்கும் போது... காதலாய் என்னை பார்த்த போது... அவள் எனக்கு அவளாய் தெரிந்தாள்...
நான் காதலை இழந்தபோது.. தனிமை நான் நேசிக்க தொடங்கிய போது.. எனது தோழி எனக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையாக மாறி தனது பயணத்தை தொடர்ந்தாள்...
மீண்டும் நான் வாழ்வை தொடர்ந்த போதும் ... சகோதரியாக , சகோதரனாக, தந்தையாக, அன்னையாக, நண்பனாக...என்னுடன் இன்னும் இருக்கிறாள் ...
இப்படி என்னுடன் பல நாள் பழகியவள் என் வாழ்வின் துயரங்களில் மௌனமாய் தன் பார்வையாலும், புன்னகையாலும் மட்டுமே விடை சொன்னவள் ..
என்னுடன் இதுவரை பேசாதது ஏனோ?
நீ என்னுடன் பேசும் தருணதிற்காக இந்த தரணியில் தினம் தினம் என் ஆயுள் வரை காத்திருப்பேன் தோழி..
விண்ணை தாண்டி வருவாயா?
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இந்த மாதம் 24ஆம் தேதி காணாமேன்னு தேடினேன்!
உங்க வீட்டுக்கு தான் வந்திருந்தாங்களா?
மச்சான் கவிதை கலக்கல்..
//இந்த மாதம் 24ஆம் தேதி காணாமேன்னு தேடினேன்!
உங்க வீட்டுக்கு தான் வந்திருந்தாங்களா//
Ha haa haa..
//இப்படி என்னுடன் பல நாள் பழகியவள் என் வாழ்வின் துயரங்களில் மௌனமாய் தன் பார்வையாலும், புன்னகையாலும் மட்டுமே விடை சொன்னவள் ..
என்னுடன் இதுவரை பேசாதது ஏனோ?//
mmm..
24th annaiku duty off.. vaals...
//மச்சான் கவிதை கலக்கல்..//
ஓ! இதுக்கு பேரு தான் கவிதையா...? சொல்லவே இல்ல... தேங்க்ஸ் மச்சான்...
எளிமையான அருமையான சுருக்கப்பதிவு. இன்னும் கொஞ்சம் எழுத்துப்பிழைகளில் கவனம் வைக்கலாமே சகா... பிறகு ஒருவள்-ங்கிறது சரியா? ஒருத்தின்னு இல்லை வரணும்? சும்மா குத்தம் சொல்றேன்னு தவறா எடுத்துக்கவேணாம்.. அக்கறையில தான் கேட்டேன்.
நன்றி நண்பா ... இனி திருத்தி கொள்கிறேன்...
இன்னொரு லவ் ஸ்டோரியான்னு பயந்துகிட்டே ஓப்பன் பண்ணினா... ஸ்வீட்.. சர்ப்ரைஸ்..!! :))
அருமை.!! :)
//இன்னொரு லவ் ஸ்டோரியான்னு பயந்துகிட்டே ஓப்பன் பண்ணினா... //
வாங்க அண்ணா... இது உங்களுகே கொஞ்சம் ஓவரா தெரியுல... ஒருத்தனுக்கு எத்தன காதல் கதை எழுதுறது?
// ஸ்வீட்.. சர்ப்ரைஸ்..!! :))
அருமை.!! :)//
தேங்க்ஸ் அண்ணா...
// நான் காதலை இழந்தபோது.. தனிமை நான் நேசிக்க தொடங்கிய போது.. எனது தோழி எனக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையாக மாறி தனது பயணத்தை தொடர்ந்தாள்... //
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..
// வால்பையன் said...
இந்த மாதம் 24ஆம் தேதி காணாமேன்னு தேடினேன்!
உங்க வீட்டுக்கு தான் வந்திருந்தாங்களா? //
வாலின் கமெண்டும் அட்டகாசம்
நன்றி கண்ணா...
வால்ஸ் கமெண்ட் பத்தி சொல்லனுமா என்ன?
நல்லாயிருக்கு...
//வால்பையன் said...
இந்த மாதம் 24ஆம் தேதி காணாமேன்னு தேடினேன்!
உங்க வீட்டுக்கு தான் வந்திருந்தாங்களா? //
ரிப்பீட்டேய்ய்.....
நன்றி நண்பா...
Post a Comment