ஹலோ எக்ஸ் கியுஸ் மீ.. கொஞ்சம் செக்சியா இருக்கும் பரவா இல்லையா ?
பெயர்: கிஷோர்
வயது:கனவுகள் காணும் வயசு 17 (11 வருஷத்துக்கு முன்னாடி)
படிப்பு: கல்லூரி முதலாம் ஆண்டு.
பிரச்சனை: வயசு கோளாறு...
பிரச்சனை விரிவாக்கம்...
இப்போ எல்லாம் எனக்குள்ள எதோ ஒரு மாற்றம்... என் பார்வையில் ஒரு குறுகுறுப்பு தெரிவது எனக்கே தெரியுது...
யாரை பார்த்தாலும் ஒரு விஷம புன்னகை என்னுள் எழுகிறது...
யார பத்தி வேனாலும் என்னால சுலபமா தப்பா கமெண்ட் பண்ண முடியுது... அவங்க என்னைவிட வயசுல பெரியவங்கள இருந்தாலும்...(ஆனாலும் அது தப்புன்னு தெரியுது)
நேத்து கூட எதிர் வீட்டு பொண்ணு எப்போவும் போல தான் என்கிட்ட பேசுச்சி ...
ஆனா என்னால தான் சரியா முகம் குடுத்து பேச முடியல... (ஏன் அவ முகத்த பாத்துகூட பேசமுடியல... தூ... மனுஷனா நீ?)
காலேஜ்ல எந்த பொண்ணு கிராஸ் பண்ணுனாலும் ... அந்த பொண்ண பத்தி ஒரு கமண்ட் பண்றேன்.. ஏன்னு தெரியுல... என்ன வேணும் எனக்கு?
யாராவது ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா போன எனக்குள்ள அவங்கள பத்தி நல்ல விதமா நினைக்க தோணல...
தெருவுல..
பஸ்ல...
மார்க்கெட்ல...
தீயடேர்ல...
அதெல்லாம் விடுங்க... நேத்து காலேஜ்ல மேம் கிளாஸ் எடுக்கும் போது...(ச்சே சொல்லவே வெக்கமா இருக்கு... என்ன பத்தி என்ன நினைகிரிங்கனு என்னால உணர முடியுது... ஆனா அதான் நடந்தது...)
இப்படி எந்த பொண்ணுங்கள பாத்தாலும் எனக்குள் எழுகிற ஒரு குறுகுறுப்பு ..
அவர்களை என் பக்கம் திசை திருப்ப நான் எடுக்கும் நடவடிக்கைகள்... எல்லாமே என்னகே புதுசா தெரியுது...
பசங்க சொல்றாங்க இதுக்கு பேரு வயசு கோளாரம் ...
எனக்கு ஒன்னும் மட்டும் நல்லா புரியுது...
இது கனவுகள் காணும் வயசு தான்...
ஆனால் நான் காணும் கனவுகள்........................? கடவுளே....
சரி... அது நடந்து பதினோரு வருஷம் ஆச்சு... இப்போ அதுக்கு என்னனு தானா கேக்குறிங்க...?
அப்போ வந்த பல குழப்பங்களுக்கு இன்னும் எனக்கு விடை தெரியுல...
என்ன கேட்டா எந்த அம்பள பசங்களுக்கும் தெரியாதுன்னு தான் சொல்வேன்...
பொண்ணுங்களுக்கு வீட்ல அம்மா பசங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் சொல்லி குடுப்பாங்க .. ஆனா நாம பயலுங்க... தானா தெரிஞ்சிகிட்டா தான் உண்டு...
அப்படி தானா தெரிஞ்சிகுற பசங்க உண்மைய தெரிஞ்சிகுறது இல்லன்னு சொல்லணும்...
இதுல கசப்பான உண்மை என்னன்னா பசங்க தனக்குள்ள வர மாற்றங்கள பத்தி பொண்ணுங்க புரிஞ்சி வச்சிருக்குற அளவுகளுக்கு கூட புரிஞ்சிக்கிறது இல்ல...
இனிமேலாவது... பசங்க கிட்ட (ஆணோ, பெண்ணோ) அந்த அந்த வயசுல ஏற்படுற மாற்றங்கள பத்தி.. மனம்விட்டு பேசி அவங்கள தெளிவுபடுத்துவோம்...
16 comments:
மச்சான் அசாதரணமான ஒரு விஷயத்தை எல்லோரும் புரிஞ்சிக்கிற மாதிரி ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்க..
//வயது:கனவுகள் காணும் வயசு 17 (11 வருஷத்துக்கு முன்னாடி)
படிப்பு: கல்லூரி முதலாம் ஆண்டு.
பிரச்சனை: வயசு கோளாறு...//
எனக்கு தெரிஞ்சு நீ நாலாவது படிக்கிறப்பவே இந்த மாதிரி பிரச்சனைகள் உனக்கு இருந்துச்சுன்னு நினைக்கிறன்..
//சரி... அது நடந்து பதினோரு வருஷம் ஆச்சு...//
இப்ப நீ அது மாதிரி இல்ல தான் அத மட்டும் நான் எங்க வேனாலும் சத்தியம் பண்ணி சொல்லுவேன்..
//மச்சான் அசாதரணமான ஒரு விஷயத்தை எல்லோரும் புரிஞ்சிக்கிற மாதிரி ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்க..//
தேங்க்ஸ் மச்சான்
//எனக்கு தெரிஞ்சு நீ நாலாவது படிக்கிறப்பவே இந்த மாதிரி பிரச்சனைகள் உனக்கு இருந்துச்சுன்னு நினைக்கிறன்..//
டேய் கம்பெனி ஸீக்ரட் வெளில சொல்லாத
//இப்ப நீ அது மாதிரி இல்ல தான் அத மட்டும் நான் எங்க வேனாலும் சத்தியம் பண்ணி சொல்லுவேன்..//
இதுல எதோ உள்குத்து விவகாரம் போல இருக்கு
////பொண்ணுங்களுக்கு வீட்ல அம்மா பசங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் சொல்லி குடுப்பாங்க .. ஆனா நாம பயலுங்க... தானா தெரிஞ்சிகிட்டா தான் உண்டு...//////
இந்த விஷயத்த நான் கடமையாக ஆதரிக்கறேன். நமக்கு அப்பா சொல்ல வேணாமா? அட்லீஸ்ட் நாம சைட் அடிகவாவது சொல்லிதரணும்ல
நன்றி பப்பு. வீட்ல வந்து பேசுறேன்...
இயற்கையான விசயம் தான்!
யாருக்கும் வெளிப்படையா பேச தைரியம் இல்லை
அம்புட்டு தான்!
நான் பாராட்டுகிறேன் உங்களை!
உங்கள் பாராட்டிற்கு நன்றி வால்
நல்ல பதிவு கிஷோர்.,
டாக்டர் ஷாலினி ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார் “பெண்களுக்கு வயதுக்கு வந்தது தெரிந்ததும் பெரியவர்கள் சில விஷயங்கள் சொல்லி குடுப்பார்கள், ஆனால் ஆண்கள்தான் பாவம் அவர்களுக்கு வயதுக்கு வருவதும் தெரியவில்லை, சொல்லி கொடுக்கவும் ஆள் இல்லை” என்று...
அருமையான விஷயத்தை தொட்டிருக்கிறீர்கள்.
நன்றி கண்ணா... வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்வதற்கும்
கடைசி வரிக்கும் ஒன்னும் (அதைப் பற்றி ) சொல்லவே இல்லையே ....
ம்ம் அதை பத்தி...............? தெரிஞ்ச தான் பதிவே போட்டு இருக்கமாட்டேன்ல...?
" இதுல கசப்பான உண்மை என்னன்னா பசங்க தனக்குள்ள வர மாற்றங்கள பத்தி பொண்ணுங்க புரிஞ்சி வச்சிருக்குற அளவுகளுக்கு கூட புரிஞ்சிக்கிறது இல்ல... "
உனக்குமட்டும் எப்படி தெரியும் , அப்பா நி ..................( காமடி ) , நல்லா கருத்து கொண்ட பதிவு
தோடா... இந்த டகால்டி வேலை எல்லாம் நம்ம கிட்ட நடக்காது..
நன்றி நண்பா
Post a Comment