தலைப்ப பாத்து இது ஒரு காதல் கதைனோ இல்லை ஒரு கிரைம் கதைனோ நெனச்சி உள்ள வந்து படிச்சி கமெண்ட் போட்டு வைதேரிச்சல் கிளபாதிங்க...
இது ரெண்டு P P பற்றிய கதைங்க... P P னா அட ... பொறுக்கி பொறம்போக்குங்க ... இன்னும் உங்க மனசுல என்ன என்ன தோணுதோ அதெல்லாம் திட்டுங்க..( உன்ன நெனச்சா தான் அதிகமா திட்ட முடியும்னு சொல்ல கூடாது ..)
சரி விஷயத்துக்கு வருவோம் ...
இந்த கதை ஈரோடு பஸ் ஸ்டாண்டுல ஆரம்பிகிறது ...
ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி... ஒரு நாள் என் மாமா வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு திரும்புரதுகாக ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... என்னோட பஸ் டைம் 9.30 மணிக்கு தான்... நான் 9 மணிகே வந்துட்டேன்... சரி மேல போய் கண்ணன்ல எதாவது சாப்பிடலாம்னு யோசிச்சி அப்பறம் வேணாம்னு விட்டுவிட்டேன்...
பஸ் வேற ரெடியா இருந்துச்சு... எப்போவும் நைட் டிராவல் பண்ற நான் அன்னைக்கு டே டைம்ல டிராவல் பண்ண வேண்டிய கட்டாயம்...
இன்னும் 7 மணிநேரம் போகணும் (என்ன கொடுமை சார்...)
ஒரு வழியாக பஸ் கிளம்பிச்சு...
கிளம்பி..ஒரு அரை மணிநேரம் இருக்கும்... சங்ககிரி வந்ததும் டமார்னு ஒரு சத்தம்...
என்னனு பாத்தா முன்னாடி டயர் வெடிச்சி கிழிஞ்சி போச்சு...(ஆரம்பமே இப்படியா?)
ஒரு வழியா டயர் மாத்தி கிளம்ப ஒரு மணிநேரம் ஆச்சு...
சேலம் வரைக்கும் அப்படி ஒரு வேகம் ரோடு நல்ல இருந்தால இருக்கும்... சேலம் வந்ததும் ஒரு அரை மணி நேரம் நிறுத்திடாங்க..(வழக்கமா 10 நிமிஷம் தான்) கேட்டதுக்கு வேற ஸ்டெப்னி ரெடி பண்ணிட்டு போலாம்னு சொல்லிடாங்க..( அட ரொம்ப பொறுப்பா இருகாங்க )
ஒரு வழிய சேலத்துல இருந்து கிளம்புனாங்க... நம்மள வீட்டுக்கு தான் கூடிக்கிட்டு போறாங்களோனு நம்பி ஏறி உக்காந்தேன்... அது நேரா ஆத்தூர் பக்கத்துல இருக்க ஒரு டிபன் சென்டர் முன்னாடி போய் நினுச்சி... கண்டக்டர் காலைல இருந்து விரதமாம்.. அதன் விரதம் முடிக்க விசில் ஊதிடாறு .. (தேவுடா)
விரதம் முடிக்க கண்டக்டர் இறங்க அவரு பின்னாடி டிரைவர் வழியில் தனக்கு ஒரு சிறு தீனி முடிச்சிகிட்டார்...
பஸ் ஆத்தூர் விட்டு கிளம்ப... திரும்பவும் வேகம்... அவசர படாதிங்க ஒரு 45 நிமிஷம்தான் திரும்பவும் v குற்றோடு வந்ததும் லஞ்ச் பிரேக்...( முன்னாடி நிறுத்துனது கண்டக்டர் விரதம் முடிக்க.. இப்போ வழக்கமா சாபிடவாம் )
லஞ்ச் முடிஞ்சி பஸ் எடுத்தாரு... இனிமே விருத்தாசலம் வரைக்கும் அவரு வேகமா போக நெனச்சாலும் அது முடியாது... நம்ம ரோடு அப்படி...
சரியா 1.30 மணிநேரம் தாலாட்டு... ஒப்பாரி... குத்து பாட்டு
(ரோடு தூக்கி தூக்கி போடுது) முடிஞ்சி பஸ் விருத்தாசலம் வந்துச்சி...
விருத்தசலம் பஸ் ஸ்டாண்டுல ஒரு 10 நிமிஷம்... டீ குடிகவாம்...
அப்பறம் கிளம்பி நெய்வேலி, வடலூர் வர... அதுக்கு அப்புறம் குறிஞ்சி பாடி வழியா திருப்பி விட்டாங்க.. வடலூர் தாண்டி பாலம் உடஞ்சி போச்சாம்...
ஒரு வழியா நான் சிதம்பரம் வந்து சேர மணி 6...
4.30 கு வர வேண்டிய பஸ் அது...
கதை அவ்ளோதான்...
அதுக்கு அப்பறம் ஏன் லேட்னு வீட்ல வேற கதை நடந்துச்சு அத விடுங்க...
எனக்கு இன்னைக்கு வரைக்கும் பல சந்தேகம் .. ரொம்ப துரம் போற பஸ்னா எதாவது ஒரு இடம் தான சாப்ட நிறுத்துவாங்க..? இவங்க மட்டும் எப்படி பல இடத்துல எதோ சொந்தமா டுரிஸ்ட் வண்டி எடுத்துட்டு போன மாதிரி நிறுத்துனாங்க?
இத்தன எடத்துல நிறுத்தி சாப்டும் , டீ குடிச்சும் ஒரு எடத்துல கூட மூச்சா போக நிறுத்தல ஏன்...?(சாப்பிடுற எடத்துல போய் மூச்சா போறதுக்கு பதிலா ஆசிட்ல கால விடலாம் )
பஸ்ல உள்ளவங்க (நான் உள்பட ) திட்டியும், பொலம்பியும் கொஞ்சம் கூட சூடு சொரண இல்லாம எப்படி அவங்கள அதே மாத்ரி இருக்க முடியுது.. ?
இப்படிபட்ட டிரைவர் கண்டக்டர் எல்லாம் எவன் செலக்ட் பண்றது.. அவன் யாரோ?
தெரிஞ்ச சொல்லுங்க அவன் வீட்டுக்கு ஆட்டோ இல்ல.. சுமோ இல்ல.. லாரி அனுபலாம்...
யாரோ அவன்...?
22 comments:
இது ஒரு வகையான ஆக்சிடெண்ட் மாதிரி தான்!
டிரைவரை சொல்லி குற்றமில்லை!
ஒருவேளை வண்டி சரியில்லாமல் இருக்கலாம்
லூசுல விடுங்க!
//இது ரெண்டு P P பற்றிய கதைங்க... P P னா அட ... பொறுக்கி பொறம்போக்குங்க ... இன்னும் உங்க மனசுல என்ன என்ன தோணுதோ அதெல்லாம் திட்டுங்க..( உன்ன நெனச்சா தான் அதிகமா திட்ட முடியும்னு சொல்ல கூடாது ..)//
நான் கூட ரெண்டு நிமிஷம் பயந்துட்டேன்...
கண்டக்டர் அப்புறம் டிரைவர் இவங்க ரெண்டு பேர தான் அப்படி சொன்னியா..
அய்யோ..அய்யோ..
//ஒரு வழியாக பஸ் கிளம்பிச்சு...//
பஸ் ஸ்டோரியா..டேய் 'அந்த' கதையா எழுதறா அந்த அளவுக்கு துனிந்து விட்டயா..
//வேற ஸ்டெப்னி ரெடி பண்ணிட்டு போலாம்னு சொல்லிடாங்க..//
வண்டிக்கா..??
//சரியா 1.30 மணிநேரம் தாலாட்டு... ஒப்பாரி... குத்து பாட்டு
(ரோடு தூக்கி தூக்கி போடுது) முடிஞ்சி பஸ் விருத்தாசலம் வந்துச்சி...//
ஹா ஹா ஹா சரி காமெடி..
//ஒரு வழியா நான் சிதம்பரம் வந்து சேர மணி 6...
4.30 கு வர வேண்டிய பஸ் அது...//
1.30 மணி நேரத்துல என்ன கிழிக்க போற..
//கொஞ்சம் கூட சூடு சொரண இல்லாம எப்படி அவங்கள அதே மாத்ரி இருக்க முடியுது.. ?//
ஹா ஹா ஹா ஹா சரியான காமெடி இந்த கேள்வி நம்மக்கு செட் ஆகுமா..
//இப்படிபட்ட டிரைவர் கண்டக்டர் எல்லாம் எவன் செலக்ட் பண்றது.. அவன் யாரோ?
தெரிஞ்ச சொல்லுங்க அவன் வீட்டுக்கு ஆட்டோ இல்ல.. சுமோ இல்ல.. லாரி அனுபலாம்...//
எல்லாம் 'கவர்'மென்ட் தான் அப்பு..
ஆத்தூர்ல எப்ப பார்த்தாலும் அந்த எழவெடுத்த கடையில எல்லா கவர்மெண்ட் பஸ்ஸும் நின்னு, எல்லாத்தையும் ஃப்ரீயா கொட்டிகிட்டு, கைக்கு கொஞ்சம் பணமும் வாங்கிட்டுதான் கிளம்புவானுங்க.
இதுல கொடுமை, அடுத்து ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல இன்னொரு 10-15 நிமிஷம்.
நம்ம ஊரு பஸ் ட்ரைவர்/கண்டக்டர் எல்லாம் இந்த வெள்ளைக்கார ட்ரைவர்களோட மூச்சாவை வாங்கி குடிச்சா கூட புத்தி வராது.
///சரியா 1.30 மணிநேரம் தாலாட்டு... ஒப்பாரி... குத்து பாட்டு
(ரோடு தூக்கி தூக்கி போடுது) முடிஞ்சி பஸ் விருத்தாசலம் வந்துச்சி.../////
ஸ்ரீகாந்த் தேவா ஓட்டுனாரோ?
///இது ஒரு வகையான ஆக்சிடெண்ட் மாதிரி தான்!
டிரைவரை சொல்லி குற்றமில்லை!
ஒருவேளை வண்டி சரியில்லாமல் இருக்கலாம்
லூசுல விடுங்க!///
எந்த வண்டி தான் சரியா இருக்கு?
//நான் கூட ரெண்டு நிமிஷம் பயந்துட்டேன்...
கண்டக்டர் அப்புறம் டிரைவர் இவங்க ரெண்டு பேர தான் அப்படி சொன்னியா..
அய்யோ..அய்யோ.//
ஆமா வினோத்... நம்ள பத்தி சொன்னா இவ்ளோ டிசெண்ட்ஆ சொல்வேனா?
//பஸ் ஸ்டோரியா..டேய் 'அந்த' கதையா எழுதறா அந்த அளவுக்கு துனிந்து விட்டயா..//
'அந்த' கதைய சொல்லி எல்லோரும் நம்மள காரி துப்பனும் அதான ?
//வேற ஸ்டெப்னி ரெடி பண்ணிட்டு போலாம்னு சொல்லிடாங்க..
வண்டிக்கா..??//
பின்ன டிரைவர், கண்டக்டர்கா? அவனுங்களே யாருக்கோ ஸ்டெப்னி மாதிரி தான் இருந்தானுங்க...
//சரியா 1.30 மணிநேரம் தாலாட்டு... ஒப்பாரி... குத்து பாட்டு
(ரோடு தூக்கி தூக்கி போடுது) முடிஞ்சி பஸ் விருத்தாசலம் வந்துச்சி...
ஹா ஹா ஹா சரி காமெடி..//
டேய் உனக்கு காமடியா தெரியுது..
நான் என்னத்த கிழிபென்னு உனக்கு தெரியாதா?
//ஹா ஹா ஹா ஹா சரியான காமெடி இந்த கேள்வி நம்மக்கு செட் ஆகுமா..//
நமக்கு எது செட் ஆகிருக்கு?
//எல்லாம் 'கவர்'மென்ட் தான் அப்பு..//
நாம வைப்போம் ஆப்பு
//ஆத்தூர்ல எப்ப பார்த்தாலும் அந்த எழவெடுத்த கடையில எல்லா கவர்மெண்ட் பஸ்ஸும் நின்னு, எல்லாத்தையும் ஃப்ரீயா கொட்டிகிட்டு, கைக்கு கொஞ்சம் பணமும் வாங்கிட்டுதான் கிளம்புவானுங்க.//
சரியாய் சொனிங்க அண்ணா..
//இதுல கொடுமை, அடுத்து ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல இன்னொரு 10-15 நிமிஷம்.//
நரக வேதனை அது
//ஸ்ரீகாந்த் தேவா ஓட்டுனாரோ?/
டேய் நான் என்ன கஷ்டத்த சொல்றேன் உனக்கு நக்கலா இருக்கு... என்ன சின்ன புள்ளதனமா இருக்கு ராஸ்கல்
Machan
yercaud, nadanthatu nadantha madhiri..
un perayum en perayum potey eluthiritha..
மாமா பொண்ண பாக்க போன கதையா காணும் ?, அத மறைக்க தான் இந்த கதையா , அரசியல்ல இதுஎல்லாம் சகஜம் but nice
Dai
irukiyaa enna aachu..
Post a Comment