கொஞ்ச நாளாவே வலை பூவுல ஒரே பஞ்சயத்து தான் போங்க... இவரு அவரை திட்டுறது... அவரு இவரை திட்டுறது... இவரு அருவா எடுக்குறது.. அவரு ஆசிட் ஊத்துறதுனு... ஒரே தாறுமாறா போகுது...
என்ன பிரச்சனை?
ஒரே காரணம் தான்..
தனி நபர் விமர்சனம்....
நான் ஏற்கனவே என்னோட பதிவுல சொல்லி இருக்குற மாதிரி... இந்த தளம் உருவாக்கபட்டதின் அடிப்படை நோக்கமே ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை தயக்கம் இன்றி பகிர்ந்து கொள்ள மட்டுமே...
அதை விடுத்து கத்தி சண்டை போடுறாங்க...
பினூடதுல இவங்க போடுற சண்டைய பார்த்தா... தெரியாத்தனமா இவங்க ப்ளாக் பாலொவ் பண்ணிடோம்னு தான் சத்தியமா தோனுது..
நீ என்னத்த எழுதி கிழிச்சிட்ட எங்களுக்கு புத்தி சொல்ல வந்துடனு கேப்பிங்கனு தெரியும்..
நாங்க தான் எழுதல... அட நீங்க எழுதுறத படிச்சி பொழுத ஓட்டலாம்னு ஒரு வேண்டுதல் தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...
ஒருவர் தனது கருத்தை பதிவாக வெளியட முழு உரிமை உண்டு அதை போல அதை படித்தவர்களுக்கும் தன்னுடைய கருத்தை சொல்ல முழு உரிமை உண்டு...
இங்க பிரச்சனை ஆரம்பிகிறதே பினூடதுல தான்...
ஒருவர் பதிவு பற்றிய உங்கள் கருத்து முரணாக இருந்தால் அதை நாசுக்காக வெளிஇடுங்கள்... அதுவும் பதிவை பற்றி மட்டும்...
அதை தவிர்த்து எழுதியவரை பற்றிய தனி நபர் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை...
இன்று பிரபலமாக இருக்கும் பதிவுலக பிதாமகன்கள் (அட இந்த வார்த்தைய யாருப்பா கண்டு பிடிச்சது.. மொதல்ல மகாபாரதம் சீரியல நிறுத்தனும்..) அனைவருமே ஆரம்பத்தில் புதியவர்களாக இருந்தவர்கள் தான் என்பதையும்... நமது பதிவுக்கு பின்னுட்டங்கள் எதாவது வந்து இருக்கிறதா என்று காத்து கிடந்தவர்கள் தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது....
புதியவர்களும் எல்லாம் தெரியும் என்கின்ற போக்கை விட்டுவிட்டு எழுதுவது நல்லது...
அதனால இந்த நாட்டமையோட தீர்ப்பு என்னன்னா?
பயபுள்ளைங்க இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பதிவுல அடிச்சிகிட்டு வாரி விட்டுக்கிட்டு அலையுறத நிறுத்தனும்... அப்படி செய்யலைனா .. இவங்கள இந்த பதிவு உலகத்த விட்டே 18 வருஷம் தள்ளி வைக்கிறேன்... இவங்க கூட யாரும் அன்னம் தண்ணி புழங்க கூடாது...(வோட்டு போடுறது) நல்லது கேட்டது போக கூடது...(பினூட்டம் போடுறது)... அப்படி செஞ்சா அவங்களையும் தள்ளி வைக்கிறேன்...
அப்புறம் இந்த தீர்ப்ப மாத்தி சொல்ல சொல்லி யாரவது சவுண்டு விட்டு பினூட்டம் போட்டிங்கனா .. அவங்களையும் 18 வருஷம் தள்ளி வச்சிடுவேன்...
இதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு...
ஏலே... சண்முகம்.... விடுறா வண்டிய ...
26 comments:
நாட்டமை தீர்ப்பை மாத்தி சொல்லு..
//புதியவர்களும் எல்லாம் தெரியும் என்கின்ற போக்கை விட்டுவிட்டு எழுதுவது நல்லது...//
இருந்தாலும் நீ அவன அப்படி சொல்லப்புடது..
//நிறுத்துங்க உங்க சண்டைய...//
முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு அப்புறம் நாங்க நிறுத்துறோம்..
//ஏலே... சண்முகம்.... விடுறா வண்டிய ...//
நல்ல வேலை இந்த பேர்ல யாரும் பதிவர் இல்லை..அப்புறம் உன்கிட்ட சண்டைக்கு வந்துடுவாங்க..
கலக்கல்.... பதிவு...
தொடர்ந்து கலக்குங்கள்
மனுநீதி சோழனே.. ப்ளாகுல வந்தாப்புல இருக்கு ராசா...!!!
ப்ளாகரின் நாட்டாமை வாழ்க.. வாழ்க..!!
டா டண்டண் டான் டண்டன் டாடண்டண் டேன்...... நாட்டாம மீஜிக் இல்லாம வரலாமா....
//நாட்டமை தீர்ப்பை மாத்தி சொல்லு..//
இவனையும் 18 வருஷம் தள்ளி இந்த பதிவு உலகத விட்டு தள்ளி வைக்கிறேன்
//இருந்தாலும் நீ அவன அப்படி சொல்லப்புடது....//
எவன? ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி?
//முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு அப்புறம் நாங்க நிறுத்துறோம்..//
தூ... எப்டியோ நாசமா போங்க....
//ஏலே... சண்முகம்.... விடுறா வண்டிய ...//
//நல்ல வேலை இந்த பேர்ல யாரும் பதிவர் இல்லை..அப்புறம் உன்கிட்ட சண்டைக்கு வந்துடுவாங்க..//
அடங்கோயல.. பஞ்சாயத்து பன்றவனுகே ப்ராது குடுக்குற? நல்ல உலகம் டா ...
//கலக்கல்.... பதிவு...
தொடர்ந்து கலக்குங்கள்//
நன்றி கண்ணா வாழ்த்துக்கும் வருகைக்கும்...
//மனுநீதி சோழனே.. ப்ளாகுல வந்தாப்புல இருக்கு ராசா...!!!
ப்ளாகரின் நாட்டாமை வாழ்க.. வாழ்க..!!//
"யாரங்கே... பாலா அண்ணாவுக்கு 100 பொற்காசுகள் கொடுங்கள்..."
"கஜானாவில் 10 பொற்காசுகள் தான் உள்ளது மன்னா"
"சரி... ஒன்று மட்டும் குடுத்து விடுங்கள்.. எதாவது கேட்டால் ரஜினி டயலாக் ரிபிட்டு.... "
//டா டண்டண் டான் டண்டன் டாடண்டண் டேன்...... நாட்டாம மீஜிக் இல்லாம வரலாமா....//
மீஜிக் போடுற பப்பு மூனாறு டூர் போய்ட்டு இப்போ தான் வந்துருகாரு இனிமே போட்டுடுவோம்.. sorry for the technical delay...
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு..
நாட்டாமை காசு வாங்கிட்டாரு
//நமது பதிவுக்கு பின்னுட்டங்கள் எதாவது வந்து இருக்கிறதா என்று காத்து கிடந்தவர்கள் தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது...//
மச்சான் நீயா சொன்னது ... படிக்க ஆளு இல்லாடி புதியவர்களும் சரி பிரபலங்களும் சரி ஆளு இல்லா கடையில டீ ஆத்த வேண்டியது தான்
புதியவர்கள் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை,
புதியவர்கள் பிரபலங்கள் ஆனாலும் தலைக்கு ஏதும் ஏத்திகாம அன்பாய் இருந்தால் பிரச்சனையே இல்லை
"//நிறுத்துங்க உங்க சண்டைய...//
முதல்ல அவங்கள நிறுத்த சொல்லு அப்புறம் நாங்க நிறுத்துறோம்.. "
அஹா ஹா அரம்பித்து விட்டதே அவங்க தானே சும்மா போன பூனையை மடியில கட்டிக்கிட்டு அச்சோ ஏன் தான் இந்த பூனையை கட்டினோம் என்று தண்ணீ அடித்து புலம்பியதாக கேள்விபட்டேன்
//பயபுள்ளைங்க இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பதிவுல அடிச்சிகிட்டு வாரி விட்டுக்கிட்டு அலையுறத நிறுத்தனு//
இதுக்கு பதிலாய் நேருக்கு நேர் நின்னு நம்ம ஊரு குழாய் அடி சண்டை மாதிரியும், குத்து சண்டை போட சொல்லுவியோனு பயந்துப்போய்ட்டேன்
# //ஏலே... சண்முகம்.... விடுறா வண்டிய ...//
நல்ல வேலை இந்த பேர்ல யாரும் பதிவர் இல்லை..அப்புறம் உன்கிட்ட சண்டைக்கு வந்துடுவாங்க..#
ஹ அஹா
ஆமா
இருடி நாட்டமை உனக்கு ஆசாரி வந்து கெட்ட வார்த்தைல பூஜை பண்ணுவாரு
அப்போ தான் உனக்கு இருக்குடி
நாட்டமை தீர்ப்பு மாத்தி ஒரு பதிவு போடுவிங்க
/மனுநீதி சோழனே.. ப்ளாகுல வந்தாப்புல இருக்கு ராசா...!!!
ப்ளாகரின் நாட்டாமை வாழ்க.. வாழ்க..!!//
"யாரங்கே... பாலா அண்ணாவுக்கு 100 பொற்காசுகள் கொடுங்கள்..."
"கஜானாவில் 10 பொற்காசுகள் தான் உள்ளது மன்னா"
"சரி... ஒன்று மட்டும் குடுத்து விடுங்கள்.. எதாவது கேட்டால் ரஜினி டயலாக் ரிபிட்டு.... "
ஹா ஹா
சரத்பாபுவுக்கு வோட்டு போடாதீங்க!
சூப்பர் பதிவு
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_27.html?showComment=1240795500000#c8241224192145774357
thanks suresh...
இப்படியெல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா...
அவ்வ்வ்வ்....
என்ன பண்றது நண்பா...? பய புள்ளைங்களுக்கு பஞ்சாயது பன்றதுகே நேரம் சரியா இருக்கு...
அட நாலுப் பேரு சண்டை போட்டாத்தானே உண்மை எல்லாம் வெளி வரும் ....
எதோ என்னால முடிஞ்சது
(நாராயணா ....நாராயணா ....)
Post a Comment