Sunday, May 10, 2009

சிதம்பர சொர்க்கம்...

சிதம்பரம்னு சொன்னா எல்லோருக்கும் நினைவுக்கு வருவது... நடராஜர் கோவிலும், பக்கதுல இருக்குற பிச்சாவரம்.. அது ரெண்டு தான்....
ஆனா.. இயற்கை எழில் கொஞ்சும் ஆனால் இன்னும் சுற்றுல தலமாக அறிவிக்காத பல இடங்கள் நிறைய உண்டு...
( நல்லவேளை சுற்றுலா தலமாக மாற்றி அதையும் கெடுக்காம இருகாங்க ) பிச்சாவரம் போகனும்னு நெனகிரவங்க.. பக்கதுல இந்த இடங்களுக்கும் போலாம்...
அட எந்த இடம்னு இன்னும் சொல்லல இல்ல...?
நெறைய இருக்குங்க...
முடசல் ஓடை, எம் .ஜி.ஆர் திட்டு , திட்டு, கிள்ளை பீச்... இப்படி நெறையா...


இந்த பதிவுல எம் ஜி ஆர் திட்டு பத்தி பார்க்கலாம் ...
உங்களுக்கு பிடிச்சிருந்தா மற்ற இடங்களை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்...


















பேருக்கு
ஏற்ற மாதிரி.. எம் .ஜி. ஆர், திட்டு ஒரு தீவு...
எம். ஜி. ஆர் அங்க வந்ததா சொல்றாங்க... பிச்சவரதுல எம். ஜி. ஆர்.. நடிச்ச படம் ஷூட்டிங் நடக்கும் பொது. அவர் வந்தாருன்னு சொல்றாங்க...
ஆனா அங்க ஒரு எம்.ஜி. ஆர் சிலை இருக்கு... அது அந்த தீவ நோக்கி கை காட்டுற மாதிரி வச்சி இருப்பாங்க...

மீனவர்கள்.. தங்களோட சந்தோஷமான வாழ்கைய யார் தொந்தரவும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருந்த தீவு அது .. ஆனால் சுனாமிக்கு பிறகு அந்த அழகான தீவு தன்னோட அன்பான மக்களை இழந்துட்டு ... தன்னோட அழகை மட்டும் இன்னும் மிச்சம் வச்சிருக்கு...


ஆனாலும் அவங்க வாழ்ந்த வீடு, தோப்பு, உடைந்த படகுகள் எல்லாமே இன்னும் அந்த கொடுரத்துக்கு சாட்சியா அங்கே அமைதியா இருக்கு... அந்த அமைதி கூட அந்த தீவுக்கு ஒரு திகிலான அழகை தருது... அதை பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கும் ...

எனக்கு தோணும் போதெல்லாம் அங்கே நண்பர்களுடன் போவேன்... குளிச்சிக்கிட்டு விளையாடினா நேரம் போவதே தெரியாது... இந்த கடற்கரைல சுண்டல் இல்ல, மாங்கா இல்ல,கடலை இல்ல, கடலை போடுறவங்களும் இல்லை.. தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. சனி, ஞாயிறு கொஞ்சம் கூட்டம் வரும் மற்ற நாள் எல்லாமே அமைதி தான்...

அங்கிருந்து
.. பிச்சாவரம் கடலையும், பரங்கிபேட்டை கடலையும் பார்க்கலாம்...


















எப்படி போறது?
சிதம்பரதுல இருந்து ஒரு 12 கீ மீ தூரத்துல இருக்கு... பிச்சாவரம் பஸ் நெறைய இருக்கு ... ஆனா வண்டி வச்சிருந்தா இன்னும் வசதி...
சிதம்பரம் பிச்சாவரம் ரூட்ல கிள்ளை தாண்டினதும்..வலது புறம் பிச்சாவரம் போகும் வழி... இடது புறம் ஒரு 20 அடி தள்ளி போய் கிள்ளை காவல் நிலையம் தாண்டி வலது புறம் திரும்பி ஒரு 2 கீமீ போன எம். ஜி. ஆர் திட்டு வரும்...



















நேரா திட்டுக்கு வண்டில போக முடியாது... வண்டிய ஆத்துக்கு இந்த பக்கம் நிறுத்திட்டு .. படகுல போகணும்... ஒரு 10 நிமிட படகு பயணம்... போக வர ரெண்டுக்கும் சேத்து ஒரு ஆளுக்கு 20 ருபாய் கேப்பாங்க... கூட்டம் அதிகம்உள்ள நாள்னா 30 ருபாய் கேப்பாங்க ..அக்கரைல தீவு... அங்க போய் இறங்குனா நேரம் போவதே தெரியாது...






















































நானும்
எனது நண்பர் பதிவர் வினோத்கெளதம் அவர்களும் அடிக்கடி போகும் இடம் இது... அமைதியான இடம்.. நாங்க போகும் போது அவன் பண்ற அழும்ப எல்லாம் ஒரு தனி பதிவாக தான் எழுதணும்.விரைவில் எழுதபோறேன்.
வார இறுதில் குடும்பத்துடன் பயம் இல்லாமல் செல்லலாம்... எது தேவை என்றாலும் கிள்ளைல இல்லை சிதம்பரம்துல வாங்கிக்கிட்டு போய்டனும்... எதுவும் அங்க இல்ல.. அழகு மட்டும் உள்ள அற்புதமான இடம்...
அட ஒரு தடவ போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க...

18 comments:

கண்ணா.. said...

ஆகா...கிஷோர்... அருமையான பதிவு..

இப்பதான் வினோத் ப்ளாக்கும் போய்ட்டு வாறேன். அவரும் பயங்கரமா பிச்சி உதறிருக்காரு.. இங்க வந்தா நீயும் கல்க்கிருக்கே...

படங்கள் மிக அருமை...

தொடர்ந்து கலக்குங்கள்....

வாழ்த்துக்கள்..

வினோத் கெளதம் said...

மச்சான் சூப்பர்..பின்னி எடுத்து இருக்க..படங்கள் மிகவும் அருமை..

என்ன இடம் இல்ல..சான்சே இல்ல..
தசவதாரம் படத்த விட்டுடியே..
அந்த சிதிலம் அடைந்த வீடுகள்..அதையும் சேர்த்து இருக்கலாம் நண்பா..

kishore said...

நன்றி கண்ணா... உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி...

kishore said...

தேங்க்ஸ் மச்சான்... அந்த வீடுகள் பற்றிய படங்கள் இருக்கு... இன்னொரு பதிவுல போடுறேன்... அநேகமா அது உன்னோட லீலைகள் பற்றிய பதிவுல வரும்...
படங்கள் அனைத்தும் எனது நண்பர் அலைபேசியில் எடுத்து...

Varadaraj_dubai said...

மிகவும் அருமையான படங்கள்! காணும்போதே போகனும்னு ஆசையா இருக்கு! ஒருதடவ காணும் பொங்கலுக்கு போனதா ஞாபகம் இருக்கு! இந்த வகைஷனுக்கு கண்டிப்பா போகணும்! தகவலுக்கு மிக்க நன்றி நண்பா !

kishore said...

நன்றி வரதராஜ் ... கண்டிபாக ஒரு தடவை போய் பாருங்க ... நிச்சயம் பிடிக்கும் நண்பா

வால்பையன் said...

ஊருக்கு வந்தா கூட்டிட்டு போவிங்களா?

S. Anwar said...

அடடா நான் பிச்சாவரம் போய்வந்தேன் MGR திட்டு உள்ளே போகலாம் என்ற நோக்கத்தோடுதான் அங்கேயும் சென்றேன் ஆனால் மாலை ஆகிவிட்டதால் திரும்பிவிட்டோம். இந்த பதிவை பார்த்தபின்பு மிஸ் பண்ணி விட்டோமே என்று தோன்றுகிறது. அடுத்த முறை விடுமுறை செல்லும்போது நிச்சயம் செல்லவேண்டும். கீரபாளையத்தில் என் நண்பன் வீடு இருக்கிறது.

உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே. இதுபோல இன்னும் தொடருங்கள்.

அன்புடன்

ச. அன்வர்.

kishore said...

@ வால்ஸ்...
நிச்சயம் அழைச்சிகிட்டு போறேன்
வாங்க வால்

kishore said...

வாங்க அன்வர் ... உங்கள் ஆதரவிற்கு நன்றி... நிச்சயம் அடுத்த முறை வரும் போது அங்கும் சென்று வாருங்கள்...

வினோத் கெளதம் said...

//கீரபாளையத்தில் என் நண்பன் வீடு இருக்கிறது.//

enakku romba vendappatavar veedu koooda anga thaan irukku..

kishore said...

amam amam... antha appaviyoda veedu matum anga thaan iruku...

Prabhu said...

இது தான் நீங்க சொன்ன பீச்சுகளா?
ECR பக்கமா வருமோ?

kishore said...

இது சென்னை வழி இல்லை பப்பு இது சிதம்பரத்துல இருந்து பீச் நோக்கி போகணும்... சிறு சிறு கிராமங்கள் அடங்கிய பகுதி

கலையரசன் said...

ஹாய் கிஷ்!
நீங்க வினோத் கெளதம் நண்பரா?
நம் பக்கம் வந்ததற்க்கு நன்றி..
இன்றுதான் வினோத் கெளதம் போன்
செய்தார். வலைபதிவு மூலம் நண்பர்களாகிவிட்டோம்..
பதிவு நன்று... சிதம்பரம்தான் நம்ம சொந்த ஊர்.
இப்ப வடலூர். வேலை செய்யறது துபாய்.

kishore said...

வாங்க கலையரசன் ... நானும் சிதம்பரம் தான்.. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

மணிஅரசன் said...

நல்லா ஒரு பதிவு நண்பா , தொடரட்டும் உங்கள் கலகல்கள்

kishore said...

உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பா