என் பெற்றோர் வைத்த பெயர் கிறிஸ்டோபர் ஜெயராஜ். நீளம் கருதி.. பள்ளியில் சேர்த்த பெயர் ஜெயராஜ்... வீட்டில் அழைக்கும் பெயர் கிஷோர்... எனக்கு பிடித்த பெயர் தான். இது என் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கும் பெயர்...
2006 மே 3 ...
அம்மா செய்தது எல்லாமே பிடிக்கும்... குறிப்பா அம்மா செய்யுற அப்பள குழம்பு...
அதிகமா காலி பண்ணறது நான் தான்..
நான்-வெஜ் அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க... அதுவும் மீன் குழம்புணா வெளில எங்கயும் அன்னைக்கு சாப்ட மாட்டேன்.. இதுல ஒரு ஸ்பெஷல் என்னன்னா எங்க அம்மா சுத்த சைவம்... டேஸ்ட் பண்ணி பாக்காமலே சமைச்சது அவ்ளோ பெர்பெக்ட் ஆ இருக்கும்...
அப்பறம் ஆல் டைம் பேவரிட் .. சிக்கன் சப்பாத்தி
அது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்... என்னோட நட்பு வட்டாரம் ரொம்ப சின்னது... ஆனா எனக்கு நண்பன்னு முடிவு பண்ணிட்டா யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு குடுக்கமாட்டேன் ...
அருவி குளியல்... தாய் பாசம் மாதிரி... எந்த எதிர் பார்ப்பும் இல்லாம கொட்டிகிட்டே இருக்கும்
கடல்... காதலி மாதிரி... சில சமயம் சுகமான தழுவல் இருக்கும்... சில சமயம்...பொய் கோபமான அடி இருக்கும்...
ரெண்டையும் விரும்புகிறவன் ...
அருவி குளியல் அதிக வாய்ப்பு இல்லை...கடைசியா மங்கி பால்ஸ்...
கடல் குளியல் அடிக்கடி... மாதம் இருமுறையாவது...
கண்கள்...பின்பு அவர் பழகும் விதம்... நிச்சயம் வெளி தோற்றம் அல்ல...
அவர்கள் பழகும் விதம் எனது முதல் சந்திப்பில் பிடித்தால் மட்டுமே ... மறுபடி அவரை தொடர்வேன் ...
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: யாரையும் சிரித்தபடி எதிர்கொள்ளும் வழக்கம் ..
பிடிக்காத விஷயம் : பிடிவாதம்... . ( இதனாலே நிறைய பேர இழந்துருகேன் )
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இந்த கேள்விக்கு என்னால் தற்போது பதில் அளிக்க முடியவில்லை.
சீக்ரம் சொல்றேன்.. (செல்லம் எங்கமா இருக்க?)
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
என்னோட அன்பான அக்கா... அப்புறம் நண்பன்...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ப்ளூ ஜீன்ஸ்... மெருன் ஷர்ட் .. வைட் கலர் வைகிங் பனியன்,, கிரே கலர் ஜாக்கி.... வேண்டாம் விடுங்க..
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
எவனோ ஒருவன் வாசிக்கிறான் ... அலைபாயுதே
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிகப்பு
14.பிடித்த மணம்?
என் மனதை வருடும் எந்த மனமும் ...
குறிப்பாக
குழந்தையின் மேல் வரும் பவுடர் வாசம்
சந்தனம்..
அம்மாவின் சமையல் வாசம்
இப்படி நெறைய..
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கலையரசன் -வடலூர்காரர்.. வந்த சிறிது நாட்களில் பலரை கொள்ளை அடித்தவர்... அட அவர் எழுத்தின் மூலமாக அடுத்தவங்க மனசங்க...
பப்பு - இளைமையான எழுத்துக்கு சொந்தகாரர்... அவரின் சில எழுத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடு வந்தாலும் அவரின் வயசுக்கு ஏற்ற சிந்தனை மற்றும் அவரின் வயதுக்கு உரிய சமூக பார்வை... கலக்கல் தான் ... அவரது பதிவுகள் இப்போது ஆங்கிலத்தில்...
ஹாலிவுட் பாலா அண்ணா... இவர் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்...
ஆங்கில படங்களின் விமர்சனத்தால் பின்னி பெடல் எடுப்பவர்.... விரைவில் அவர் மீண்டும் வர எதிர் பார்கிறேன்...
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வினோத்கெளதம் எனது நீண்ட கால நண்பன்... பதிவுலகை எனக்கு அறிமுக படுத்தியவன்...
அவன் பேசுவதை மட்டும் ரசித்த என்னை அவன் எழுத்தின் மூலம் வியக்க செய்தவன்..
அவன் எழுதிய பதிவுகள் தற்போது இல்லை என்றாலும் புது முகவரியில் தொடர்கிறான்...
அவன் எழுதியது அனைத்தும் எனக்கு பிடித்தது...
குறிப்பாக தற்போதைய முகவரில் எழுதிய
வாழ்கையின் பக்கங்களில் விதியின் செயல்கள் நான் மிகவும் ரசித்த ஒன்று...
17. பிடித்த விளையாட்டு?
ஷட்டில் , செஸ்... அப்பறம் நம்ம கபடி...
18.கண்ணாடி அணிபவரா?
அணிபவன்... படம் பார்க்க போகும் போது மட்டும் .. (பின்ன.. போய் கதை வசனம் மட்டும் கேட்டுகிட்டா வர முடியும் ?)
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
என்னை சிறிது நேரம் இந்த உலகத்தில் இருந்து மறக்க செய்யும் படங்கள் .... எந்த மொழியாக இருந்தாலும்... குறிப்பாக... வன்முறை இல்லாத மெல்லிய காதல் இழை ஓடும் கதைஅம்சம் உள்ள திரை படங்கள் ...
மொழி.. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று
20.கடைசியாகப் பார்த்த படம்?
ராஜாதி ராஜா... (அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க ? காலத்தின் கட்டாயம் )
21.பிடித்த பருவ காலம் எது?
பனி காலம்..
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
MANUFACTURING TECHNOLOGY BY A.B GUPTA
(ஓவரா இருக்குனு நினைக்காதிங்க.. நண்பர் ஒருவர் வகுப்பு எடுக்க நோட்ஸ் கேட்டு இருக்கிறார்... வேற வழி இல்லாம படிக்கிறேன் ஒன்னும் புரியமாட்டுது )
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
தோணும் போது ... எப்போ தோணும்னு எனக்கே தெரியாது...
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : என்னை ஒரு நொடி நிறுத்தி மனதை வருடும் ஓசை எதுவும்...
பிடிக்காத சப்தம்: அரசியல் மேடை பேச்சு...
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மேற்கு வங்கம் . என் அக்கா வீடு அங்கு இருக்கும் போது போவேன்...
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குனு சொன்ன யாரும் நம்ப மாட்றாங்க ...
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நம்பிக்கை துரோகம்...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நான் தப்பு பண்ணாம என்னை யாராவது எதாவது சொல்லிட்டாலோ இல்ல செஞ்சிடாலோ ...
வேண்டும் என்றே அதே தவறை மீண்டும் செய்யும் குணம்...
(தப்புன்னு தெரியும் திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் )
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இது எனது நண்பர் வினோத் சொன்ன பதில் தான்...
கொடைக்கானல்..
எத்தனை முறை போனாலும் சலிக்கவே சலிக்காத ஊர்..
ஒரு அமானுஷ்ய அழகு எல்லா இடத்திலும் ஒளிந்து கொண்டு இருக்கும்..
இன்னொரு இடமும் உண்டு
ஏற்காடு... என்னோட பல நினைவுகளை சுமந்து இருக்கும் இடம் அது...
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யாருக்கும் பிரச்சனை இல்லாம
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வேற என்ன ? சூப்பர் பிகர் பார்த்தா சைட் அடிக்கிறது தான் ... சைட் மட்டும் தாங்க..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வீழ்ச்சி என்று தெரிந்திருந்தும் எழுச்சியுடன் போராடும் போர்களம்
31 comments:
சரியான வேகம் தான் உங்களுக்கு கிஷோர்!
ரசித்தேன்!
நன்றி வால்ஸ் ... காப்பி பண்ணும் போது கொஞ்சம் தவறு நடந்து போச்சு... அதான்.. இப்போ ஒகே..
//11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
ப்ளூ ஜீன்ஸ்... மெருன் ஷர்ட் .. வைட் கலர் வைகிங் பனியன்,, கிரே கலர் ஜாக்கி.... வேண்டாம் விடுங்க..
//
இது எல்லாம் ரொம்ப சாஸ்தி... ஆமா சொல்லிட்டேன்.
//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வீழ்ச்சி என்று தெரிந்திருந்தும் எழுச்சியுடன் போராடும் போர்களம்//
நல்லாருக்கு ஆனா லாஜிக் உதைக்குதே...
தன்னம்பிக்கைக்கு எதிரா இருக்கு முதல் பாதி ரெண்டாவது பாதி தன்னம்பிக்கைக்கு ஊக்குவிக்குது.....
வீழ்ச்சி எல்லாத்துக்கும் இல்ல..... ஜெய்ச்சவங்கள பாத்து போராடுவோம் முடிந்தவரை -:)
இவ்ளோ ஸ்பீடா..?!!
உங்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது..
இயல்பாக பதில் அளித்திருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்..
நன்றி பித்தன்..
என்ன டிரஸ் போட்டு இருக்கீங்கனு கேட்டு இருந்தாங்க... பார்த்தேன் நான் சொன்னது எல்லாமே போட்டு இருந்தேன்...
வீழ்ச்சி என்று நான் குறிபிட்டது மரணத்தை மட்டுமே... உலகில் ஒவொரு மனிதனும் தினம் போராடுவது மரணத்தை எதிர்த்து என்பது எனது கருத்து...
நடுவில் ஆயிரம் பொய் வெற்றிகள் ஆயிரம் பொய் தோல்விகள் அவ்வளவு தான்..(கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ?)
இன்னைக்கு காலைல தான் கலையரசன்கிட்ட பேசி கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன்....அதுக்குள்ள நீங்க முந்திட்டீங்க...வட போச்சே......
நன்றி கண்ணா...
பதிவருகா பஞ்சம்...
தமிலிஷ் இல்லனா தமிலெர்ஸ் எதுலயாவது லிங்க் குடுங்க... நிறைய பேரு இருகாங்க... வடை எங்கயும் போகாது...
//2006 மே 3 ...//
??..
//எப்படி எல்லா எக்ஸாம்ளையும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணுனேன்னு எனக்கே இது வரைக்கும் புரியாத புதிர்...//
எல்லாம் நான் சொல்லி கொடுத்து தான்..
//அம்மா செய்தது எல்லாமே பிடிக்கும்.//
உண்மையில் கிஷோர் வீட்ல சாப்பாடு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.. :)_ _ _...
அதுவும் அம்மா சாப்பிடமால் போனால் வெளியே விடவே மாட்டார்..
//அருவி குளியல்... தாய் பாசம் மாதிரி... எந்த எதிர் பார்ப்பும் இல்லாம கொட்டிகிட்டே இருக்கும்
கடல்... காதலி மாதிரி... சில சமயம் சுகமான தழுவல் இருக்கும்...//
இவனுங்க கிட்ட இலக்கியமா ரெண்டு வார்த்தை பேச கூடாதுப்பா அப்படியே அவனுகளுது மாதரியே எழுதிரனுங்க..
//கடல் குளியல் அடிக்கடி... மாதம் இருமுறையாவது...//
மாதம் இருமுறை தான் குளியலே..
//சீக்ரம் சொல்றேன்.. (செல்லம் எங்கமா இருக்க?)//
இத நான் சொன்ன நீ போடவா போறா எப்படி இருந்தாலும் comment moderationல தூக்கிடுவ..
அதனால இத நீயே Fill up பண்ணிக்கோ................................... ......................... ................ ..
//கிரே கலர் ஜாக்கி.... வேண்டாம் விடுங்க..//
அட பாவி எங்க வீட்டு கொடியில தொங்கிட்டு இருந்த என்னோட காணமே பார்த்தேன் நீ தானா..
//செஸ்...//
Oho..
//மொழி.. //
நீயும் நானும் பால ஆனந்தல பார்த்தோம்..
//MANUFACTURING TECHNOLOGY BY A.B GUPTA//
டேய் இத யாரு வேனாலும் நம்பலாம் நான் நம்பனுமா..
//வீழ்ச்சி என்று நான் குறிபிட்டது மரணத்தை மட்டுமே... உலகில் ஒவொரு மனிதனும் தினம் போராடுவது மரணத்தை எதிர்த்து என்பது எனது கருத்து...
நடுவில் ஆயிரம் பொய் வெற்றிகள் ஆயிரம் பொய் தோல்விகள் அவ்வளவு தான்..(//
நல்லவே சமாளிக்கிற..
வந்துட்டேன்
படிச்சிட்டேன்
பாப்பா அழுவுறாங்க
அப்புறமா விரிவா கமெண்டு போடுறேன்
//எல்லாம் நான் சொல்லி கொடுத்து தான்..//
ஆமா நல்ல இருந்த பையனுக்கு( நான்தான்) நீ என்னன்னா சொல்லி குடுத்து இருக்க...? கொய்யால ஊருக்குள்ள வா அப்பறம் இருக்கு உனக்கு...
//உண்மையில் கிஷோர் வீட்ல சாப்பாடு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.. :)__...
அதுவும் அம்மா சாப்பிடமால் போனால் வெளியே விடவே மாட்டார்..//
"நன்றி மச்சான்"
//இவனுங்க கிட்ட இலக்கியமா ரெண்டு வார்த்தை பேச கூடாதுப்பா அப்படியே அவனுகளுது மாதரியே எழுதிரனுங்க..//
நேத்து சொன்ன மாதிரி ரைம்ஸ் சொல்லனுமா?
//மாதம் இருமுறை தான் குளியலே..//
ஒரு தடவ உன்னை குளிக்க வைகிறதுகுள்ள நாங்க படுற பாடு... அதுலயும் நீ குளிகிரதுகுள்ள பேசுற பேச்சு... ச்சே... பழச மறக்க முடியுமா மச்சான்..?
//இத நான் சொன்ன நீ போடவா போறா எப்படி இருந்தாலும் comment moderationல தூக்கிடுவ..
அதனால இத நீயே Fill up பண்ணிக்கோ................................... ......................... ................ ..//
கம்பெனி சிக்ரெட் வெளில சொல்லாத டா...
//அட பாவி எங்க வீட்டு கொடியில தொங்கிட்டு இருந்த என்னோட காணமே பார்த்தேன் நீ தானா..//
சாரி நாங்க குழந்தையடோத எல்லாம் திருடுறது இல்லன்னு எங்க சங்கத்துல முடிவு பணிருகொம்
//செஸ்...
Oho..//
செஸ் டா செஸ் ... தப்பவே நெனக்கிறது... தூ ...
//மொழி..
நீயும் நானும் பால ஆனந்தல பார்த்தோம்..//
ஸ்வீட் மெமொரிஸ்
//MANUFACTURING TECHNOLOGY BY A.B GUPTA
டேய் இத யாரு வேனாலும் நம்பலாம் நான் நம்பனுமா..//
டேய் இதுக்கு முன்னாடி படிச்சவங்க யாராவது இதை பத்தி கேட்டாங்க? அவங்க பாட்டுக்கு படிச்சிட்டு சத்தம்போடாம காரி துப்பிட்டு போனங்கள்ள ? நீ மட்டும் ஏன்டா?
//வீழ்ச்சி என்று நான் குறிபிட்டது மரணத்தை மட்டுமே... உலகில் ஒவொரு மனிதனும் தினம் போராடுவது மரணத்தை எதிர்த்து என்பது எனது கருத்து...
நடுவில் ஆயிரம் பொய் வெற்றிகள் ஆயிரம் பொய் தோல்விகள் அவ்வளவு தான்..
நல்லவே சமாளிக்கிற.//
நானும் எவ்ளோ தான் மச்சி சமாளிக்கிறது... அப்படி இருந்தும் நோண்டி நொங்கு எடுக்குறாங்க ... முடியல...
@வினோத் கெளதம்
//2006 மே 3 ...//
நிஜமாவே உனக்கு தெரியாது?
@ சுரேஷ்
மெதுவா வா மச்சான் ஒன்னும் அவசரம் இல்ல
மாப்பு வச்சிட்டியே ஆப்பு...
எப்புடி மாப் என் பேரு தோனுச்சு உனக்கு?
வீழ்ச்சி என்று தெரிந்திருந்தும் எழுச்சியுடன் போராடும் போர்களம்
ரசிசேன்... ரசிச்சிகிட்டுருக்கேன்... ரசிப்பேன்
கடைசியா போக போறமே, அததான நீ வீழ்ச்சின்னு சொல்ற...
எப்பூடி மாம்ஸ் உன்னால மட்டும் முடியுது? நேர்ல வர்றேன் சொல்லிக்குடு!
அதுவா மச்சான்... கண்ண மூடிக்கிட்டு யோசிச்சனா ... டமால்னு உன் பேரு தான் வருது என்ன செய்ய..?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........... எவ்ளவு சமாளிக்க வேண்டி இருக்கு...?
//காதல் இழை ஓடும் கதைஅம்சம் உள்ள திரை படங்கள் ...//
யாரு மாப்பு அது?
ச்.. சொல்லு, அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் சொல்லு!
நீ சொல்லநா என்ன? வினோத் சொல்லிட்டான்.
(வினோத் காப்பாதிட்டுப்பா..)
//ரசிசேன்... ரசிச்சிகிட்டுருக்கேன்... ரசிப்பேன்
கடைசியா போக போறமே, அததான நீ வீழ்ச்சின்னு சொல்ற...
எப்பூடி மாம்ஸ் உன்னால மட்டும் முடியுது? நேர்ல வர்றேன் சொல்லிக்குடு!//
தேங்க்ஸ் மச்சான்
கரெக்டா சொல்ற மச்சான்...
அது எல்லாம் தானா வருதுடா..
நீ வா மச்சான் எனக்கு வினோத் என்னன்ன குடுத்தானோ அத்தனையும் சொல்லி தரேன்...
நீயும் உருபட்டுடுவ ...
//யாரு மாப்பு அது?
ச்.. சொல்லு, அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் சொல்லு!
நீ சொல்லநா என்ன? வினோத் சொல்லிட்டான்.
(வினோத் காப்பாதிட்டுப்பா..)//
வினோத் ஒரு ரகசியத்த காக்குற பூதம் மாதிரி... ச்சே கடவுள் மாதிரி...
(செல்லம் எங்கமா இருக்க?)
தெரியாத மாதிரி கேக்குற?
டேய், டேய்... இந்த டக்கால்டி,
உட்டாலக்கடி, சோம்பப்படி...
இதலொம்.. உன் பசங்ககிட்ட வச்சிக்க.
நம்மகிட்ட வேனாம்!
(ஏய்.. முடியலடா.. சொல்லித்தொலடா)
அதிகமா டா போட்டுட்டேன் தப்பா நெனச்சுக்காதடா!
எனக்கும் தெரியுலடா ... உனக்கு தெரிஞ்ச சொல்லு
//2006 மே 3//
ஏன் மாப்பு அழுத?
நானே கெஸ் பண்னது என்ன அப்படின்ன...
அக்கா கல்யாணம் ஆன நாளா?
(தப்பா இருந்த மன்னிச்சிக்கப்பா)
மொத்தத்துல, உன்னோட கேள்வி பதில்..
டாப்பு டக்கரு!
எனக்கு கிழிஞ்சிபோச்சி நிக்கரு!!
ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா... அக்கா கல்யாணம் நடந்தது 2004 ல
தேங்க்ஸ் மச்சி...
தச்சிடலாம்...
மல்லிகா ஷெராவத்துக்கு டிரஸ் தகிரவரு நமக்கு தெரிஞ்சவரு தான் ... அந்த பொண்ணுக்கு எப்போவாது டிரஸ் போடனும்னு தோணுன இவருகிட்ட தான் தச்சிகும்...
//இன்னைக்கு காலைல தான் கலையரசன்கிட்ட பேசி கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன்//
யோவ் வெங்கடேசு, எதுக்குன்னு கரெக்ட்டா சொல்லுய்யா..
ஏதாவது தப்பா நெனைக்கப் போறாங்க!
அவ்வ்வ்வ்வ்..
//இன்னைக்கு காலைல தான் கலையரசன்கிட்ட பேசி கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன்//
யோவ் வெங்கடேசு, எதுக்குன்னு கரெக்ட்டா சொல்லுய்யா..
ஏதாவது தப்பா நெனைக்கப் போறாங்க!
அவ்வ்வ்வ்வ்..
ஹிஹி... சம்யோசிதமான பதில்கள்! ரசித்தேன்... ஆனாலும் சில டூ மச்களை மன்னிகவே முடியாது. குறிப்பாக ஜாக்கி/ வைக்கிங்க்! க்ர்க்ர்...
//இன்னைக்கு காலைல தான் கலையரசன்கிட்ட பேசி கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன்//
//யோவ் வெங்கடேசு, எதுக்குன்னு கரெக்ட்டா சொல்லுய்யா..
ஏதாவது தப்பா நெனைக்கப் போறாங்க!
அவ்வ்வ்வ்வ்..//
என்ன நடக்குது அங்க..?
//ஹிஹி... சம்யோசிதமான பதில்கள்! ரசித்தேன்... ஆனாலும் சில டூ மச்களை மன்னிகவே முடியாது. குறிப்பாக ஜாக்கி/ வைக்கிங்க்! க்ர்க்ர்...//
நன்றி வெங்கி... என்ன பண்றது உண்மைய சொன்னா நம்மள கெட்டவன்னு சொல்லுது இந்த உலகம் ...
பேட்டில்லாம் போடுற அளவு எங்க அண்ணன் பெரிய ஆள் ஆகிட்டாரு. என்னய கூப்பிட வேற செஞ்சிருக்கீங்க. நானும் இந்த சாக்குல பெரிய ஆள் ஆகிட்டேன்.
இது பேட்டி இல்ல பப்பு.. நம்மள நாமே பார்த்து காரி துப்பிகிறது... நீயும் துப்பிகோ
Post a Comment