இலங்கை தமிழர் பிரச்சனை...
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கேள்விபடுகிற விஷயம்...
காலை எழுந்தவுடன் சரோஜ் நாராயண சாமி சொல்லும் முதல் விஷயம் நேற்று இலங்கைல் நடந்த போரில் எல்டிடிஈனர் 20 பேர் கொல்லபட்டனர்... இது குறித்து அந்நாட்டு அதிபர் எமது செய்தியாளர்களிடம் கூறும்போது ... என்பது தான்...
28 வருஷமா இதை தான் கேக்குறேன்... பார்கிறேன்.
சில சமயம் பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்ற நஞ்சையும் மனதில் விதைத்தன நமது செய்தி தொடர்பு துறைகளும் , நமது தேசமும்...
இலங்கை அரசிற்கு உதவும் இந்திய நாட்டின் பிரதமரை கொன்றால் தான் நமது மக்களின் துயரம் நீங்கும் என்று எந்த கோணத்தில் முடிவு செய்தார்களோ...அதுவும் பொய்த்து போனது...
ஈழத்தில் கொலைகளும் கற்பழிப்புகளும்.. இன்று வரை தொடர்கிறது ...
பழிக்கு பழி என்ற நோக்கம் எந்த காலத்திலும் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தாது என்பதற்கு இலங்கயில் தமிழ்ர்களின் இன்றைய நிலையே ஒரு சாட்சி ...
நமது தலைவனை இழந்து விட்டோமா ? இல்லையா ? இனி யார் நம்மை வழி நடத்தி நமக்காக குரல் கொடுப்பார்கள்? என்ற ஆயிரம் கேள்விகளுடன் கொஞ்சம் இருந்த நிம்மதியும் தொலைத்து நிற்கும் மக்களுக்கு புலிகள் தலைவர் உயருடன் இருக்கிறார் என்று கூறும் புலிகள் அவரே நான் நலமுடன் இருக்கிறேன் என்று பேசி ஒலிஒளி பதிவு செய்து வெளியட தாமதிப்பது ஏன் என்று புரியவில்லை....
அப்படி காசட் வெளி வந்தால் அவர் இருக்கும் இடம் தெரிந்து கைது செய்யபடுவார்.. அதனால் அவர் திரும்பவும் வந்து போராட முடியாது என்பது சிலரின் கருத்து ...
அதுவரை தம் மக்கள் தன் கண்முன் அழிவதை எங்கோ இருந்து தொலைக்காட்சி மூலம் ஒரு தலைவர் பார்த்து கொண்டு இருப்பாரா?
அப்படி பார்ப்பவர் ஒரு இனத்தின் தலைவராக இருக்க தகுதி அற்றவராக தான் இருக்க முடியும் .
நம்ம மீசைகார வீரப்பன் எத்தனை காசெட் அனுப்பினார் ? அவரே அனுப்பும் போது இவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லை...
மக்கள் சற்று நிம்மதியாகவாது இருப்பார்கள் ..
அதை விடுங்க...
தமிழ் ஈழம் , தமிழ் மக்கள் என்று பேசும் நாம் இங்கு தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு என்ன மரியாதை குடுக்கிறோம் என்பது நம்முடைய மனசாட்சிக்கு தெரியும் ..
ஏன் அரசாங்கத்திடம் நாம் பெரும் அனைத்து நன்மைகளையும் அவர்களுக்கும் பெற்று தர முன் வருவது இல்லை? எத்தனை பேர் அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் உதவி இருக்கிறோம்...?
எல்லோரும் தரும் போது நானும் 50 ருபாய் தருகிறேன் என்பதா அவர்கள் எதிர்பார்ப்பது? உண்மையான ஆதரவு அல்லவா?
இலங்கைக்கு செல்ல வேண்டாம்...
தமிழ்நாட்டில் இருக்கும் ராமேஸ்வரம் ,தனுஷ்கோடிக்கு சென்று எத்தனை பேர் அவர்கள் நிலைமையை நேரில் கண்டு அவர்களுக்கு உதவி இருக்கிறோம்?
உதவ கூட வேண்டாம் அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் இல்லாமல் நடந்து இருக்கிறோமா ?
பெண்கள் அங்கு இருந்து இங்கு வந்து அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் ... உண்மையாக சொன்னால்.. உடுத்தும் உடைகளை பெறுவதற்கு கூட அவர்கள் கற்பை விலை கொடுக்க வேண்டி இருக்கிறது... இது மறுக்க முடியாத உண்மை...
இந்த நிலைமையில் தமிழ் ஈழம் , தமிழ் மக்கள் என்று பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது ? பேசுவதற்கு வாயும் கேட்பதற்கு நாலு இந்திய இளிச்சவாயர்கள் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?
நமது சொந்த நாட்டில் அவர்களுக்கு நிம்மதியை தர வக்கிலாத நாம் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுத்து மயிரு புடுங்க போகிறோமா ?
மனதிலும் , உடல்களிலும் ரணங்களை சுமந்து நிற்கும் அவர்களுக்கு அறுதல் தரவேண்டம் ...
அடிமையாக நடத்தாமல் இருங்கள் ..
நமது சகோதர சகோதிரிகள் நமக்காக இருக்கிறார்கள் என்று நம்பி வந்த அவர்களுக்கு இந்த அவலங்கள் தான் நாம் தரும் பரிசா ? நாடு விட்டு நாடு வந்தாலும் தொடரும் கற்பழிப்புகளும், ரணங்களும் , மன உளைச்சல்களும் தான் அவர்களின் முடிவா ?
மாறட்டும் முடிவுகள்...
17 comments:
//நமது சொந்த நாட்டில் அவர்களுக்கு நிம்மதியை தர வக்கிலாத நாம் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுத்து மயிரு புடுங்க போகிறோமா ?
மனதிலும் , உடல்களிலும் ரணங்களை சுமந்து நிற்கும் அவர்களுக்கு அறுதல் தரவேண்டம் ...
அடிமையாக நடத்தாமல் இருங்கள் ..//
இவ்வளவு நடந்தும் கூட அவர்வகளுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லை நமக்கு.
-:(
//இவ்வளவு நடந்தும் கூட அவர்வகளுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லை நமக்கு.//
அதை...சொல்லுங்க....
நம்ம தலைவன் படத்திற்கு பால் அபிஷேகம் பண்ணவே நமக்கு நேரம் சரியா இருக்கு .. அவங்க குழந்தைங்க பால் இல்லாம செத்தா நமக்கு என்ன? கேள்வி படும் போது ஒன்னு கூடி உச் கொட்டிட்டு நாம நம்ம வேலைய பார்க்கலாம்...
ஆமாம் உண்மை நாம் இங்கு வரும் அகதிகளை அடிமை மாதிரி நடதுக்கிறோம்..
ஆனால் அங்கு இருக்கிற மக்களக்கு வக்கலத்து வாங்குகிறோம்..
உலகம் இவ்வளவு தான்..
anne kishore anne... ithu varai neengal eela thamilargalukku enna panni irukkenga?
தடித்த சொற்களை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற சென்ஸிடிவ்வான விஷயங்களைப் பேசுகையில் முடிந்தவரையில் சிலவற்றை தவிர்க்கலாம்.. ஐயா பிரபாகரன் இறந்துவிட்டதை பத்மநாதன் அண்மையில் அறிவித்தார். தமிழ்நெட் தளத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன. மேலும் புகைப்படம் வெளியிடுவது, அகதிகளுக்கு நிதியுதவி என்பதெல்லாம் ஏற்கனவே அரைத்தமாவு தானே?
அண்ணே அனானி அண்ணே இது போன்ற கேள்விகள் நான் இது பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே எதிர்பார்த்தது தான்... எனது 10 நாள் சம்பளத்த அனுப்புறேன்... இதுவே ரொம்ப ரொம்ப கம்மி தான்... எதுவும் செய்யாம அடுத்தவங்கள கேள்வி கேக்க கூடாதுனு தான்...
முடிஞ்சா இப்படி கேள்வி கேக்குறத விட்டுட்டு உங்கள முடிஞ்சத செய்யுங்க....
உங்களுக்கு சந்தேகம் இருந்தா விசாரிச்சிட்டு கூட செய்யலாம் ..
Tiruchirapalli Multipurpose Social Service Society
P.O. Box no. 12 Melapudur,
Tiruchirapalli - 620001
Tamilnadu, India
Phone: 91-431-410026
Fax: 463319
E-mail: tmsss@md3.vsnl.net.in
Contact person: Fr. T. Eugune, Director cum Secretary
Nature of work: Provides relief to the Srilankan refugees and rehabilitate them by providing facilities for health care, drinking water, street lightning of the refugee camp, vocational training to the refugee youths, supply text and note books to the school going children.
Specialisation: Relief and rehabilitation
இல்ல அங்க இருக்குறவங்களுக்கு உதவுரதுனாலும் கீழ சொல்லி உள்ள முகவரிக்கு செய்யலாம்... (இந்த முகவரி பதிவர் ஜோ ஆனந்த் பதிவில் உள்ளது)
Disaster Response Emergency Fund
Sri Lanka Red Cross Society
307 T.B. Jaya Mawatha, Colombo 10
Telephone: 5347000
A/c no. 5783021
Bank of Ceylon - Hyde Park branch
நன்றி வெங்கி .. நிதி உதவி செய்வது தவறு இல்லை... செய்யனும்னு முடிவு எடுத்த பிறகு.. இங்கு உள்ளவர்களுக்கு கல்வி, உடை, உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்ய நம்மாலான உதவிகளை செய்வோம்...
@ வினோத் கெளதம்
அது இங்க மட்டும் இல்ல நண்பா.... உலகத்துல அகதியா போற எல்லா இடத்துலயும் நடக்குது.. ஆனா அவங்கள அப்படி நடத்திட்டு அவங்களுகே குரல் கொடுக்குற கூத்து இங்க மட்டும் தான்...
அண்ணன் அனானி அவர்களுக்கு..... இன்னும் நிறைய உண்மையான தொண்டு நிறுவனகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது சென்னை , புதுவை , மதுரை போன்ற இடங்களில்... வேண்டும் என்றால் அவர்களின் முகவரியும் தருகிறேன்...
இதன் முலம் ஒரு உண்மை மட்டும் அப்பட்டமாக தெரிகிறது..
"நீ ஒரு தமிழன துரோகி.."
இப்படிக்கு,
வினோத் கெளதம்,
புதுவை.
விடு மாப்பு அந்த அனானி டாபரை..
முதலில், உனக்கு ஒரு ராயல் சலியூட்!
பதிவுல மட்டும் "உச்" கொட்டாம உன் 10 நாள்
சம்பளத்த அனுப்பிவச்சிட்டு பேசறப்பாரு..
யூ ஆர் ரியலி கிரேட்!
நானும் கண்டிப்பா அனுப்புறேன்..
நல்ல பதிவு கிஷோர்,
உதவிய உன் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள்..
நானும் முயற்சி செய்கிறேன்..
தகவலுக்கு நன்றி
//Anonymous said...
இதன் முலம் ஒரு உண்மை மட்டும் அப்பட்டமாக தெரிகிறது..
"நீ ஒரு தமிழன துரோகி.."
இப்படிக்கு,
வினோத் கெளதம்,
புதுவை.//
உங்கள் கண்டுபிடிபிற்கும் வாழ்த்துக்கு நன்றி அனானி ...
நம்மை நம்பி வந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்பவர்களுக்கு உதவுவது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றால் ... நான் தமிழின துரோகியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்...
எனது நண்பன் பெயரில் அனானி கருத்து சொல்லி இருக்கீங்க... எப்படியும் இதை வெளிஇட மாட்டேன் என்ற நம்பிக்கையாக இதை சொல்லி இருக்கீங்க.. உங்கள் நம்பிக்கையை காப்பற்ற முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
இதை என் நண்பன் நினைத்தால் அவன் நேரடியாகவே சொல்லி இருப்பான்.. நாங்கள் பழகிய நாள் முதல் இதுவரை எந்த விஷயத்தையும் என்னுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள அவன் தயங்கியது இல்லை... இப்படி அனானியாக வந்து என்னிடம் சொல்லவேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை...
சுருக்கமா சொல்லனும்னா அவன் ஆம்பிள்ளை....
@கலையரசன்
அனுப்புடா புதுவை அட்ரஸ் வேணும்னா தரேன்...
@கண்ணா
நன்றி கண்ணா... தாரளமாக செய்யுங்கள்
பாராட்டுகள் பெறுவதன் மூலம் நாம் செய்தவற்றிகு பிரதிபலன் பெற்றது போல் ஆகிவிடும்.
இது போன்ற விஷங்களுக்கு பாராட்டை தவிர்ப்பது நலம்...
ur quatation regarding our act against the present condition of refugees is 100% true.very good article sir and hats off
@ govind
thanyou sir...
Post a Comment