Friday, October 2, 2009
காதலும் காமமும்
காத்திருக்கிறேன்..
அவளின் கன்னத்தை என் கைகளில் ஏந்த ..
அவளின் இமைகளை என் இமைகளால் மூட..
அவளின் இதழை என் நாவல் சுவைக்க..
அவளின் கைகள் என் கழுத்தை சுற்றி மாலையாக மாற ..
அவளின் கழுத்து என் மூச்சு காற்றை உணர..
அவளின் பற்கள் என் காது மடல்களை கடிக்க..
அவளின் விரல் நகங்கள் என் தேகத்தில் காயம் ஏற்படுத்த..
அவளின் இடையின் ஸ்பரிசத்தை என் கைகளால் உணர..
அவளின் கால்கள் என் கால்களுகிடையே சிக்கி தவிக்க..
அவளின் தேக வெப்பத்தை என் தேகம் எங்கும் உணர..
இதற்கு பெயர் காதலா? என்றான் ஒருவன்
ஆம் என்றேன்..
இது காமத்தின் பிதற்றல் என்றான்..
மடையர்கள்..
காலம்காலமாக காதலையும் காமத்தையும் பிரித்து பார்கிறார்கள்
காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமம் என்பதை அறியாமலே..
அவளை என் விரல் நகம் கூட தீண்டியது இல்ல இதுவரை...
உலகின் பார்வைக்கு இது
காதலோ.. காமமோ..
என் கண்மணியை கைகளின் ஏந்த காத்திருப்பேன்
என் காலம் முழுதும் ..
-காதலன்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அண்ணே... என்ன ஆச்சி???
காந்தி ஜெயந்திக்கு கூட.. கடைய திறந்தே வச்சிருந்தாங்களா? :) :) :)
புரிஞ்சிபோச்சு! இது அதே தான்!
நா அடிச்சா தாங்க மாட்ட...
நாலு நாளு தூங்க மாட்ட...
அடுத தடவ இதுபோல எழுதுனா,
வீடுபோயி சேர மாட்ட..
-ந.பு.நண்பன்
நீயிங்க்ரதலா மட்டும் தான் இதை எல்லாம் முழுசா உக்கார்ந்து படிக்கிறேன்..
இருந்தாலும் நல்ல முயற்சி..
ஆகா, என்ன ஆச்சு?
//pappu said...
புரிஞ்சிபோச்சு! இது அதே தான்//
இல்லை, அதுக்கும் கொஞ்சம் மேல
@ஹாலிவுட் பாலா
முதல் நாளே வாங்கி வச்சிட்டேன்...
@pappu
அதே தான்னா.. கொஞ்சம் விளக்கமா சொல்லுயா.. சும்மாவே நொண்டி நொங்கு எடுபானுங்க.. ....
@கலையரசன்
போடா.. ஊரே சேர்ந்து தர்ம அடி அடிச்சி சொன்னப்பவே நாங்க எழுதுறத நிறுத்துல.. நீ மிரட்டுன மட்டும் நிறுதிடுவோமா.. போ.. போ.. போய் பொழப்ப பாரு..
@ வினோத்கெளதம்
அன்புள்ள நண்பனுக்கு..
உனக்கே நல்லா தெரியும் நீ சொல்றத எதையுமே நான் நம்ப மாட்டேனு.. அதுவும் உன்னோட "மனசாட்சிய" படிச்சி அப்புறம் சுத்தம்..
இருந்தாலும் ஓட்டுனயேடா ஒரு "பிட்டு.." முழுசா உக்கார்ந்து படிச்சேன்னு...
ங்கொய்யால .. என்னாலயே திரும்பி ஒரு தடவ படிக்க முடியல.. நீ படிச்ச.. அத நான் நம்பனும் ..
@சுபங்கன்
கொஞ்சம் மேலன்னா ஒரு அரை அடி..?
வருகைக்கு நன்றிகள்..
@ கலையரசன்..
ந . பு. ?
நட்புடன்?
விளக்கமா சொல்லி தொலடா.. கண்ட அர்த்தம் எடுக்குது மனசு..
//மடையர்கள்..
காலம்காலமாக காதலையும் காமத்தையும் பிரித்து பார்கிறார்கள்
காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமம் என்பதை அறியாமலே..//
கிடந்து தவிக்குதோ மனசு?
@ வசந்த்
ச்சே ச்சே.. யாரு சொன்னா ? இது யாரோ யாருக்கோ எழுதியது..
நேத்து வினோத் கேட்டான்..
இன்னைக்கு நீ...
ந.பு. நண்பன்னா,
"நக்கல் புடிச்ச" நண்பன்
ஹி.. ஹி.. ஹி...
@ கலையரசன்
ச்சே.. இவ்ளோ தானா.. அப்போ நானா தான் உளறிட்டனா.. இப்படி தாண்டா அசிங்கபடுறது ஊர்ல நானு..
எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்
எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்
Post a Comment