இவர் ஒரு பிரபல பதிவர்.. கொடுமையான விஷயம் என்னன்னா இவரை பிரபலம்னு இவர தவிர வேற யாருமே சொன்னது இல்ல. இதுவரைக்கும் ஒரு 50 பதிவு கூட இவரு தாண்டல. எப்படி தான் பிரபலம்னு சொல்லிக்கிட்டு தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு அலையராரோ .. துண்டை ..
இன்று இவரின் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது.. என்னுடைய
விதி.. நெசமாவே எனக்கு நேரம் சரி இல்லங்க..
இவரோட எழுத்து திறமைய பார்த்து பல பேரு பதிவுலகத்த விட்டே ஓடி போய் இருக்காங்க..
இவரு எழுத ஆரம்பிச்சது கடந்த பத்து மாதங்களாக தான்.. அதுக்குள்ளே இவரு பண்ற அலப்பறை இருக்கே ..
எழுத ஆரம்பிச்ச புதுசுல இவரு ஒரு கதை எழுதுனாரு.. அவ்ளோ கேவலமா இருந்துச்சி.. சரி ஆரம்பம் தானே போக போக சரி ஆகிடும்னு.. சில பேரு மனசு இறங்கி வந்து நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் நல்லா எழுத ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க..அது போதாதா இவருக்கு? ஏதோ "ராஜேஷ் குமார்"மாதிரி சொல்ல போனா ராஜேஷ்குமார் கிரைம் கதைய விட தன்னோடது தான் சூப்பர் மாதிரி நெனச்சிகிட்டு ஊரு பூரா சொல்லி தம்பட்டம் அடிச்சிகிட்டாரு.
அதுக்கு அப்பறம் அவரு எழுதுன முக்கால்வாசி பதிவு எல்லாமே கிட்ட தட்ட "பிட்டு" பட கதை தான்.. எல்லாமே பொண்ணுங்கள பத்தி தான் இருக்கும்.. பேசாம இவரு இங்க பதிவு எழுதுறத விட.. எதாவது மஞ்சள் பத்திரிக்கைக்கு "மல்கோவா ஆண்டி" கதை எழுதலாம்..(முன்னாடி அந்த வேலை தான் செஞ்சாரோ என்னவோ யாரு கண்டா ? )
இதெல்லாம் கூட பரவா இல்லங்க.. ஒரு தடவ இங்கிலீஷ் படம் விமர்சனம் எழுதுறேன்னு அவரு பண்ணுன அழும்பு இருக்கே... ஐயோ.. ஐயோ.. மனசுல பெரிய "ஹாலிவுட் பாலா"ன்னு நெனப்பு.. அதை படிச்சிட்டு பதிவுலகமே காரி துப்புச்சி.. இன்கிளுடிங் ஹாலிவுட் பாலா.. அப்போ கூட அவருக்கு சூடு சொரண எதுவுமே வரலங்க..
இப்போ கூட வெளில கிளம்புனா ஒரு "பேனா" கண்டிப்பா அவர் பாக்கெட்ல இருக்குமாம்.. வழில யாரவது பார்த்து "ஆட்டோகிராப்" கேப்பாங்களாம் .. இந்த தகவல ஒரு தடவ "சாட் "பண்ணும் போது அவரே சொன்னது.. அட ங்கொய்யா இவ்ளோ நேரம் ஒரு சைக்கோ கிட்டயா "சாட் " பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனச்சிகிட்டேன்.
எதாவது ஒரு பதிவு போட்டுட்டு.. அதுக்கு யாரவது கமெண்ட் போட மாட்டாங்களான்னுவெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு உக்கார்ந்து இருப்பாரு..
அப்பறம் போய் ஒருத்தர் விடாம கால்ல விழுந்து வோட்டு கேப்பாரு.. அப்போ கூட ஒரு 12 வோட்டுக்கு மேல தேறாது..
அப்பறம் அவரு காமடி பண்ணறேன்னு படுத்துனது .. கவிதை எழுதுறேன்னு காமடி பண்ணுணது .. போட்டோகிராபின்னு போட்டு பிராண்டுனது எல்லாம் சொன்னா இந்த ஒரு பதிவு பத்தாது..
இப்படி ஒரு ஆளு பதிவு எழுதுலன்னு யாரு அழுதா?
என்னங்க நான் கேக்குறது நியாயம் தான?
அட "இவர்" என்ற "அவர் " யாருன்னு தான கேக்குறிங்க?
கில்மா கதை எழுதுனாலும்.. கொஞ்சம் ஷோக்கான ஆளாத்தான் இருக்காரு அவர் ...
27 comments:
அண்ணாத்த..., பதிவுக்கு சரியான தலைப்பு, இன்னைக்குதான் போட்டு இருக்கீங்க..!
இன்னா.. பில்டப்பு..?! க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....த்த்த்த்த்.... தூப்பர்!!! :) :)
///மஞ்சள் பத்திரிக்கைக்கு "மல்கோவா ஆண்டி" கதை எழுதலாம்////
லிங்க் கிடைக்குமா? :(
/////
ஹாலிவுட் பாலா.. அப்போ கூட அவருக்கு சூடு சொரண எதுவுமே வரலங்க../////
ய்ய்ய்ய்யாயயாயாயாயாய்.....!!
////
கில்மா கதை எழுதுனாலும்.. கொஞ்சம் ஷோக்கான ஆளாத்தான் இருக்காரு அவர்/////
நானாவது... படம்தான்.. ஹாரர்-ன்னு அக்டோபர் மாசத்துக்கு எழுதறேன்.
நீங்க.. ப்ரொஃபைல்லயே படத்தை போட்டு, ஹாலோவீனை கொண்டாடுறீங்க..!! இது ஷோக்கு வேற..!
@ ஹாலிவுட் பாலா
//இன்னா.. பில்டப்பு..?! க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....த்த்த்த்த்.... தூப்பர்!!! :) :)//
சரி.. ரைட்டு ..
//லிங்க் கிடைக்குமா? :(//
இதோ அண்ணிக்கு போன் பண்றேன்.. என்னன்ன கிடைக்கும் பாருங்க..
//நானாவது... படம்தான்.. ஹாரர்-ன்னு அக்டோபர் மாசத்துக்கு எழுதறேன்.
நீங்க.. ப்ரொஃபைல்லயே படத்தை போட்டு, ஹாலோவீனை கொண்டாடுறீங்க..!! இதுல ஷோக்கு வேற..!//
கொழந்த புள்ளய பார்த்து கண்ணு வைகாதிங்கப்பா.
கிறங்களா ஷோக்கா இர்ருக்கு...
பிரபாகர்.
@ பிரபாகர்.
அண்ணாத்த...தேங்க்ஸ்பா
ஹி...ஹி.... என்னத்த சொல்லுறது? நான் ஒரு பதிவுக்கு ஒதுக்கின மேட்டர நீங்க போட்டுட்டீங்கன்ற வருத்தம்தான்.. ம்ச்...
மச்சான் பதிவு சூப்பர்..
அதை விட 'தல'யோட கம்மென்ட் எல்லாம் கலக்கல்..
//நீயெல்லாம் ஏன்டா எழுதுற ?//
இதை படித்தவுடன் என்னை பற்றி தான் எதோ எழுதி இருக்கியோன்னு நினைத்தேன்..
அதுவும் ஒரு ஒரு வரியும் படிக்கும் பொழுது திக்குன்னு இருந்துச்சு..
ஆனா இந்த தலைப்பு வேற எதோ பெரிய ஆளு கூட மோதுற மாதிரி தெரியுது..நடத்து நடத்து..
///
ஆனா இந்த தலைப்பு வேற எதோ பெரிய ஆளு கூட மோதுற மாதிரி தெரியுது..நடத்து நடத்து..///////
அட... நெசந்தான்...! என்ன கிஷோர்.. எதாவது உள்குத்து வேலையா? :)
யோவ் இதுதான தானே தன் தலையில மண்ணள்ளிப்போட்டுகிறது...?
அதையும் நல்லா அள்ளிப்போட்டுருக்கீங்க அப்பு...
@ பப்பு.
//ஹி...ஹி.... என்னத்த சொல்லுறது? நான் ஒரு பதிவுக்கு ஒதுக்கின மேட்டர நீங்க போட்டுட்டீங்கன்ற வருத்தம்தான்..//
எல்லாருமே இப்படி தான் நினைபாங்களோ?
@ வினோத் கெளதம்
தேங்க்ஸ் மச்சி..
//இதை படித்தவுடன் என்னை பற்றி தான் எதோ எழுதி இருக்கியோன்னு நினைத்தேன்..
அதுவும் ஒரு ஒரு வரியும் படிக்கும் பொழுது திக்குன்னு இருந்துச்சு..//
எத்தன நாளைக்கு தான் உன்னையே திட்றது.. அதான் ஒரு மாறுதலுக்கு..
//ஆனா இந்த தலைப்பு வேற எதோ பெரிய ஆளு கூட மோதுற மாதிரி தெரியுது..நடத்து நடத்து..//
ஏன்டா சும்மா போறவங்கள் கூப்ட்டு சொறிஞ்சி விட சொல்ற.. ?
@ ஹாலிவுட் பாலா ..
உள்,வெளி, ரைட், லெப்ட் , டாப் ,பாட்டம் எதுவும் இல்லங்க..
@ வசந்த்
மண்ணள்ளி போட்டுகிறதுன்னு முடிவு ஆகிடுச்சி.. அப்புறம் அதுல என்ன கஞ்ச தனம்..? நல்லா நிறைய அள்ளி போட்டுக்கணும் அப்பு..
ஏன்டா? உனக்கும் வேற மேட்டர் கிடைக்கலையா? ரைட்டு..
அந்த கேமராவை தூக்கிபோட்டு உடைச்சாதான் சரிவருவன்னு நினைக்கிறேன்!
இடுகையோட தலைப்பு..
உனக்கு நீயே போட்டோ எடுக்கும்போது தோனுச்சா?
@ கலையரசன்
எப்படி மச்சான் கரெக்ட் ஆ கண்டுபுடிச்ச ?
yaar andha aalu
//*இதுவரைக்கும் ஒரு 50 பதிவு கூட இவரு தாண்டல*//
//*இவரு எழுத ஆரம்பிச்சது கடந்த பத்து மாதங்களாக தான்..*//
//*எழுத ஆரம்பிச்ச புதுசுல இவரு ஒரு கதை எழுதுனாரு.. அவ்ளோ கேவலமா இருந்துச்சி..*//
என்ன திட்ற மாதிரியே இருந்திச்சு தல.... பயந்திட்டேன்....
@ அனானி.
என்னங்க இவ்ளோ கொழந்த புள்ளையா இருக்கீங்க.. அதான் கலர் போட்டு காமிச்சி இருக்கேன்ல.. வேற யாரு நான் தான்..
@ ராம்..
வருகைக்கு நன்றி ராம்.. நிறைய பேருக்கு அந்த சந்தேகம் வருது ஏன்னு தெரியல..
ஏங்க இப்படி சொல்றிங்க, அவரு நிஜமாலுமே பிராபல பதிவர் தானுங்க!
@ வால்ஸ்..
நீங்க மட்டும் தாங்க சின்ன பையன் மனசு கஷ்டபட கூடாதுன்னு ஆறுதலா சொல்றிங்க.. நன்றிங்கோய்..
yen epdi thedirnu ungalukku neengalae pugal maala suttikureenga??? :) naan kooda romba serious pathivu nenachen.. sema build up :)
@kanagu..
thanks for your visit and comment.
என்னா வில்லத்தனம்...
உங்களுக்கு நீங்களே சாட் பண்ணிக்குவீன்களோ....?
Post a Comment