Monday, December 28, 2009

கரைவேன் காற்றாய்..



நித்தம் துடித்திருந்தேன் உன்னை காண
மொழி தெரிந்தும் தவித்திருந்தேன் உன்னிடம் பேச

தயக்கம் என்னில் நிலைத்திருந்ததாலோ என்னவோ
என்னை தவிக்க விட்டு சென்ற போதும் தனித்திருந்தேன்

உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன்
நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல

யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று


மாற்றான் தாரத்தை நினைப்பது பாவம் என்று தெரிந்தும்
உன் நினைவுகளில் என் நிஜங்களை மறக்க முயல்கிறேன்


மலர்வதற்கு
முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது


ம்.. என்று ஒரு வார்த்தை சொல் நீ இறப்பதற்கு முன்
உன் கடைசி மூச்சு காற்றில் கலப்பதற்குள்

உன் சுவாசத்திற்காக கரைவேன் காற்றாய்..

23 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

பீலிங்க்ஸ்! பீலிங்க்ஸ் !!

kishore said...

நோ பீலிங்க்ஸ் ஆப் இந்தியா மச்சி..

கண்ணா.. said...

//யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று//

மச்சி ரெண்டு நாளைக்கு முந்தி வினோத்து ஓரு கதைன்னு சொல்லி ஒண்ணு எழ்தினானே....

நீ கூட படிக்காமலே கமெண்ட் போட்டு வந்தியே....


அந்த கதைல வர்ற சம்பவம் மாதிரில்லா இருக்கு...

கடைசி அது உன் கதைதானா............

kishore said...

@ கண்ணா
பயபுள்ள எப்படி கோத்துவிடுது பாரு.. வயசானாலும் உனக்கு இந்த வில்லதனம் மட்டும் போகல.. (வினோத் சொந்த வாழ்க்கைல .. ச்சே..இல்ல.. இல்ல.. கதைல இருந்து எடுத்தது இல்ல இது.)

நாணல் said...

சொல்லப்படாத காதலின் வலி...

வினோத் கெளதம் said...

தெரிந்த காதலின் வலி..

வினோத் கெளதம் said...

இருந்தாலும் எதுக்கு திடிர்னு இதே மாதிரி..

திவ்யாஹரி said...

மலர்வதற்கு முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது

enna achi? ean sogam?

Prabhu said...

என்ன இது?

வினோத்தும் கிஷோரும் இப்படி அடுத்தவன் பொண்டாட்டி கதையேவா?
ச்சே... இந்த பசங்க மோசம்..

ப்ரியமுடன் வசந்த் said...

அடப்பாவி மக்கா...!

ப்ரியமுடன் வசந்த் said...

ஆனாலும் கவிதை இலக்கியதரம்...

சீமான்கனி said...

அட பார்ர்ரா இது வேறயா...

//உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன் நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல//

ரசித்தேன் அருமை நண்பா...

கலையரசன் said...

கவிதையை (?) படிக்கலை..
அதனால, புடிச்சிருந்தது!!

இதுபோல நிறைய எழுது! ம்..ம்..

kishore said...

@ நாணல்

நன்றிங்க..

@ வினோத்கெளதம்

யு ஆர் மை ஸ்வீட் பிரண்ட் னா? மரி எந்துக்குடா ?

Delete
@ திவ்யா ஹரி

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க..
தங்கள் வருகைக்கு நன்றி தோழி..
உங்கள் கவிதைகளை வாசித்து வருகிறேன்.. அருமை..
உங்கள் ப்ளாக்ல கமெண்ட் பண்ண embedded below post யூஸ் பண்றீங்க.. அதுல என்னால கமெண்ட் பண்ண முடியல.. popup window or full page இருந்தா நானும் கமெண்ட் பண்ண வசதியா இருக்கும்..

@ பப்பு

இதோடா

@ வசந்த்
நன்றி வசந்த்..

Delete
@ சீமங்கனி
நன்றி நண்பா
Delete
@ கலையரசன்,

குசும்பு.. ராஸ்கல்..

பாலா said...

////உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன் நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல////

என்னக் கொடுமை... சென்ஷி இது???

இப்படி போட்டு கொத்துறாரே??? நீங்க சொன்ன அந்த ‘கலக்கி’யை குடிச்சப்புறம் எழுதினதா இது கிஷோர்? :) :)

பாலா said...

////யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று///

எங்கயாவது போய் முட்டிகலாம்னு இருக்கு!!!! :) :)

இருந்தாலும் புரியற மாதிரி கவிதைங்கறனால.... இதை வாழ்த்தி... வ...வ... வர...வரவேற்போம்..!!!

kishore said...

ஊருல சும்மா உக்காந்து இருந்தவர மெயில் அனுப்பி கூப்ட்டு சொறிஞ்சிகிறியேடா கிஷோர்..

ஓகே நானும் இனிமே கவிதை எழுதல.. நீங்களும் இனிமே மிக்ஸ்சர் , ஜாங்கிரின்னு எழுத கூடாது டீல் ஓகே வா?

geethappriyan said...

ரொம்ப நல்ல கவிதை வரிகள் கிஷோர்.கலக்குங்க தொடர்ந்து

//யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று//

நச்

பாலா said...

///நச்/////

கார்த்திக்கேயன்... இந்த ‘நச்’ சவுண்ட்.. எங்கயாவது முட்டிக்கும் போது வந்ததா???

பாலா said...

வேணும்னா.. இப்படி டீல் வைக்க முடியுமான்னு பாருங்க.

ஒரு மாசம் கவிதை எழுதாம இருந்தா... பரிசா 5 18+ பரிகாரம் உங்களுக்காக. சரியா?

பாலா said...

மிக்ஸர், ஜாங்கிரி எல்லாம் மிக்ஸிங்ல வரும்.

kishore said...

@கார்த்திகேயன்
உண்மைய தான சொல்றிங்க? என்னை வச்சி ஏதும்..

@ஹாலிவுட் பாலா
அவரு கேட்டாரா .. ஏன் சார் இப்படி.. ஊருல அம்புட்டு பயலும் இப்படி தான் எழுதி கவிதைன்னு சொலிட்டு அலையுரானுங்க.. நான் சொன்ன மட்டும் உங்களுக்கு ஏன் இப்படி..
டார்ச்சர் பன்றாங்கையா..

//ஒரு மாசம் கவிதை எழுதாம இருந்தா... பரிசா 5 18+ பரிகாரம் உங்களுக்காக. சரியா//

ஐ.. அஸ்கு புஸ்கு.. இந்த கதையே வேணாம்.. எல்லா நேரமும் அலையமாட்டேன்..

வினோத் கெளதம் said...

A-J*k = K**m :)