Sunday, February 1, 2009

அந்த 48 மணி நேரம்

நாள்: 16 .01 . 2008 நேரம்: அதிகாலை .. 3.30 மணி.. இடம் :சேலம் பஸ் ஸ்டாண்ட்.
விஜய் பைக்ஐ நிறுத்திட்டு உள்ளே சென்றான் . சென்னையில் இருந்து வரும் பஸ் வந்துவிட்டதா என்று பார்த்தான்.. இன்னும் வரவில்லை.. இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும்.. தான் இப்பொது செய்வது சரியா என்று யோசித்தான் மனச்சாட்சி தப்பு என்று பொட்டில்அறைந்தாற்போல் சொல்லியது.. இருப்பினும் வர சொன்னது நண்பனாக இருந்ததால் மனசாட்சிஐ அவன் குளிருக்கு அணிந்திருந்த ஸ்வெட்டெர் உள் பேசாமல் பத்திரமாக இருக்க சொலிவிட்டு காத்திருக்க தொடங்கினான்...

நேரம்: 3.40
காலையில் இப்படி வந்து உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது. ஜனவரி மாத குளிர் ஸ்வெட்டெர்ஐ தாண்டிஉள்ளே சென்று அவனை சில்லிட செய்தது.. சரி டீ குடிக்கலாம் என்று அருகில் இருந்த டீ கடைக்கு சென்றான்.அங்கே அந்த அதிகாலை நேரத்திலும் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது ,ஒரு டீ வாங்கி கொண்டு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டான்.அப்போது நான்கு இளம் பெண்கள் அங்கு நின்றுகொண்டு டீ குடிதுகொண்டிருந்தர்கள்.. கல்லூரி விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டிருப்பது அவர்கள் பேசுவதில் இருந்து புரிந்து கொண்டான்.. அந்த நால்வரும் விஜயை சைட் அடித்தவாறு டீ குடித்துகொண்டிருந்தார்கள்,,அதில் ஒருத்தி விஜயை பார்த்து எதோ "எ" ஜோக் அடிக்க மற்ற முவரும் சத்தமாக சிரித்தார்கள்.. அவர்கள் வயது அப்படி .. சேலம் மாநகரின் கனவு நாயகன் அவர்கள் முன் இருந்தால் வேறு என்ன தோணும்?. விஜய் அவர்கள் பேசுவதை கேட்டும் கேட்காதவனாய் சிரித்துகொண்டான் ..

நேரம்:3.45

சென்னைஇல் இருந்து வரும் பேருந்து உள்ளே வந்தது .. விஜய் சென்று பேருந்து அருகில்பார்த்தான். பயணிகள் நெடுந்துர பயணத்தின் அசதியாலும் தூக்க கலகத்திலும் ஒவொருவராக இறங்கி கொண்டிருந்தனர் பதினோராவது ஆளாக சூர்யா இறங்கினான் .. நடிகர் சூர்யாவை நினைவுபடுத்தும் உருவம்.. முகம் அவன் உடம்பில் உள்ள அசதியை கட்டியது . கிழே இறங்கி விஜயை பார்த்தான் முகத்தில் ஒரு பிரகாசம் .. விஜய் சிரித்தபடி அவன்அருகில் வந்தான் ..
விஜய்: எப்படி இருக்க மச்சான்?
சூர்யா: "நல்லா இருக்கேன்டா நீ எப்டி இருக்க? பார்த்து 2 வருஷம் ஆகுதுடா "..
"ம்ம் ... அதான் வந்துடள்ள வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் .. குளுருது .. டீ குடிகிரியா? "
"இல்லடா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஆத்துர்ல டீ குடிக்க நிறுத்துனாங்க அங்கயே குடிச்சிட்டேன் .. நீ வேணும்னா குடி.." என்றான் சூர்யா.
"இல்லடா நானும் இப்போ தான் குடிச்சேன்..சரி வா போகலாம்"
பைக் எடுத்துக்கொண்டு விஜய் ஸ்டார்ட் பண்ண சூர்யா பின்னால் அமர்ந்துகொண்டான்....
கிளம்பும் முன் சூர்யாவிடம் விஜய்," டேய் நல்லா யோசிச்சியா காலைல போய் தான் ஆகணுமா ? எனக்கு சரி இல்லன்னு தோனுதுடா ."
"நான் நல்லா யோசிச்சு தான் வந்துருக்கேன் டா .. ஒன்னும் ஆகாது நான் இருக்கேன்ல ஏன் பயபடுற?"

"நீ இருக்குறது தான்டா பயமே.. உனக்காக நான் வேற மாட்டபோறேன் .."

"டேய் உன் உயிர் நண்பனுக்காக இதுகூட செய்யமாடியா? "
"ஆமா இது ஒன்னு சொல்லிடு எனக்கு மட்டும் தான் தெரியும் நீ உயிர் எடுக்குற நண்பன்னு.."
"சரிடா உனக்கு இஷ்டம் இல்லனா இப்போவே திரும்பி போயிடவா ? சென்னை பஸ் ரெடியா இருக்கு.."
"நான் எப்டியும் போக சொல்ல மாட்டேங்குற திமிருல பேசுற.. சரி வந்துட்ட நடக்குறது நடகட்டும்.."
இருவரும் வீட்டுக்கு சென்று உறங்கினார்கள்..

நேரம் : காலை 7 மணி..
சூர்யா எழுந்து அரக்க பரக்க கிளம்பினான். "விஜய் எழுந்திருடா குளிச்சிட்டு கிளம்பனும்"
கண் விழித்த விஜய் சூர்யாவை பார்த்து மெதுவாக கேட்டான்.."அப்போ நிச்சயம் அவளை போய் பாக்கமுடிவு பண்ணிடியா?"

"ம்ம்.. இதுல என்ன சந்தேகம் ?அதுக்கு தான வந்துருக்கேன்.."
"டேய் எல்லாத்தையும் மறந்துடு டா.. உணக்கு ஒரு நல்ல லைப் அமையும்.. சந்தோசமா இருக்கும்.."
சூர்யா முகம் மாறினான்.. அவன் முகத்தில் ஒரு வெறி தெரிந்தது..
"சந்தோஷமா ? எனக்கா? எப்படி டா சந்தோசமா இருப்பேன்? உனக்கு எல்லாம் தெரியும் ல? "
"ஆனா இந்த நேரத்துல அதும் இனிக்கு போய் அவளை பாக்குறது தப்புன்னு தோனுது டா"
" டேய் நீ என் மேல உண்மையான பாசம் வச்சிருந்தா என் கூட வா இல்ல நான் மட்டும் போறேன் .. போகட்டுமா?"
"சரி கோச்சிக்காதடா.. ஒரு 10 நிமிஷத்துல ரெடி ஆகிடுறேன்"
விஜய் சொனது போல 10 நிமிஷத்தில் ரெடி ஆகிவிட்டான். இருவரும் பைக்கில் அமர்ந்து கொள்ள விஜய் கிக்கரை உதைத்தான்..
"போலாமா"-விஜய்
"ம்ம்"
"டேய் யோசிச்சிட்டியா? இப்போ கூட ஒனும் இல்ல உனக்கு டைம் பாஸ் ஆகுறதுக்கு ஏற்காடு போயிடு வரலாம்.. என்ன சொல்ற?"
"டேய் என்ன குழப்பாதடா ஏற்காடு நாளைக்கு போலாம்.. இப்போ நேர அவ வீட்டுக்கு போறோம் அவ்ளோதான்.. நீ ஏன் இப்டி பயபடுற? நான் இருக்கேன்ல தைரியமா வாடா "
"அதுக்கு இல்லடா இனிக்கு அவளை போய் பாக்குறது சரின்னு தோனல"
கோபம் ஆனா சூர்யா விஜய் ஐ பார்த்து கோபத்துடன் கேட்டான் ...
"இப்போ அவளை போய் பாக்குறதுல என்ன பிரச்சனை உனக்கு?"
விஜய் மெதுவாக சொன்னான்...

"டேய் நாளைக்கு கல்யாணம் டா............"

நண்பர்களே இது எனது முதல் பாதிப்பு.. இந்த கதை நான் தொடர்வதும் விடுவதும் உங்கள் விமர்சனங்களை பொறுத்து..
நட்புடன்
கிஷோர்





49 comments:

வினோத் கெளதம் said...

நண்பரே அருமையான கதை , சுவரஸ்யமான எழுத்து நடை, மேலும் பல பகுதிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன். ஆனால் எதற்கு தேவை இல்லாமல் சில இடங்கள் Bolt Letterல் இருக்கின்றது..இருந்தாலும் உங்களுடைய கற்பனை திறன் அபாரம்..Please Continue..

வினோத் கெளதம் said...

Remove the word verfication.

வினோத் கெளதம் said...

பதிப்பு அல்லது பாதிப்பு

கார்க்கிபவா said...

தொடருங்கள் :)))

kishore said...

உங்கள் ஆதரவுக்கு நன்றி கார்கி

kishore said...

உங்கள் ஆதரவுக்கு நன்றி வினோத் கௌதம்... தவறை சுட்டி காட்டியதற்கும் நன்றி இனி திருத்தி கொள்கிறேன்.. ஆனால் வெறும் கதையாக இருந்தாலும் எல்லா பதிப்புகளும் பாதிப்பில் இருந்து உருவாவது தான் என்று உங்களுக்கு தெரியாததா?

பிரேம்குமார் அசோகன் said...

நல்ல எழுத்து நடை!! தொடருங்கள்...

வினோத் கெளதம் said...
This comment has been removed by a blog administrator.
kishore said...

நன்றி பிரேம்

kishore said...
This comment has been removed by the author.
kishore said...
This comment has been removed by the author.
வினோத் கெளதம் said...
This comment has been removed by a blog administrator.
வினோத் கெளதம் said...

13

வினோத் கெளதம் said...

14

வினோத் கெளதம் said...

15

வினோத் கெளதம் said...

16

வினோத் கெளதம் said...

17

வினோத் கெளதம் said...

18

வினோத் கெளதம் said...

19

வினோத் கெளதம் said...

22

வினோத் கெளதம் said...

23

வினோத் கெளதம் said...

25

வினோத் கெளதம் said...

கணினி அழுவுது..

வினோத் கெளதம் said...

விடுவனா.. நான் யாரு..

வினோத் கெளதம் said...

29

வினோத் கெளதம் said...

30

வினோத் கெளதம் said...

manager calling..

வினோத் கெளதம் said...

32

வினோத் கெளதம் said...

33

வினோத் கெளதம் said...

wat r u dng vinoth..

வினோத் கெளதம் said...

யோவ் போயா..நான் டெய்லி இதான் பண்றேன்..

வினோத் கெளதம் said...

37

வினோத் கெளதம் said...

அப்படி திட்டித்து கிள்ளம்புற வழிய பாரு..

வினோத் கெளதம் said...

40

வினோத் கெளதம் said...

41

வினோத் கெளதம் said...

42

வினோத் கெளதம் said...

43

வினோத் கெளதம் said...

44

வினோத் கெளதம் said...

45

வினோத் கெளதம் said...

46

வினோத் கெளதம் said...

48

வினோத் கெளதம் said...

49

வினோத் கெளதம் said...

50

வினோத் கெளதம் said...

என்னால இதன்ப்பா முடியும்..மீதிய IPSaa அனுப்ப சொல்லு..

kishore said...

டேய் ஓவரா பேசாத

வினோத் கெளதம் said...

அப்படி தாண்டா பேசுவேன் வெண்ண..

kishore said...

i finished that story da read it and lev ur comments

priya said...

nice nice.. continue.. iam eagrly waiting for ur story.. all the best..

Anonymous said...

adingoyala