Tuesday, February 17, 2009

நான் காதலிக்குறேனா............ ?

உங்ககிட்ட சொல்றதுக்கு என்னங்க..
காலைல எழுந்தது இருந்து மனசுகுள்ள ஒரு தடவ , எஸ் எம் எஸ் ல் ஒரு தடவ, கால் பன்னி ஒரு தடவைன்னு குட்மார்னிங் சொலிட்டு
பல்லு விளக்குனியா? , குளிச்சியா ?.. எல்லாம் கேட்டு
அப்ரும் நான் போய் பல்லு விளக்கி குளிச்சி,
சாப்ட போகும் போது கால் வரும்...
"சாப்டியா டா செல்லம்... நான் இப்போ தான் சாப்ட போறேன் .."
"அப்டியா..."
"என்ன சாப்டுற? "
"இட்லி ..."
"அப்டியா அம்மா என்ன செஞ்சி இருக்காங்கனு தெரியுல சாப்டு சொல்றேன்.."
( சாப்ட மட்டும தான் கிச்சன் பக்கம போவாங்க)
அப்பறம் வேலைக்கு போற அவசரத்திலும்..
10 தடவ கால் வந்தாலும்,, சலிக்காம பேசணும்.. ஒரே விஷயமாக இருந்தாலும் சிரிச்சி கொஞ்சிகிட்டு பேசணும்.. இல்லனா கோச்சிகிட்டு ரெண்டு நாள் பேச மாட்டாங்க..
ஆபீஸ்ல யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலும் இவ கால் வந்த உடனே அட்டென்ட் பண்ணும் இல்லனா அதுக்கும் கோபம் வரும் ...
அப்பறம் அவ அனுப்புற மொக்க மெசேஜ்iகு எல்லாம் நமக்கு என்ன வேல இருந்தாலும் அப்டியே விடு விட்டு reply பண்ணனும்...
அப்பறம் lunch time la 10 தடவ போன் பண்ணுனாலும் பேசணும் ( ஒருமேட்டர் மயிரும் இருக்காது)
அப்படி யே அவ பர்த்டே, அவ அப்பா பர்த்டே , அம்மா பர்த்டே , தம்பி பர்த்டே,
அவ வீட்டு நாய் குட்டி பர்த்டே கு எல்லாம் gift வாங்கி இவளுக்கு குடுத்து விஷ் பண்ணிட்டு வந்துடனும் ..
evening friends கூட வெளில இருந்தாலும் இவ பேசுனா இவ கிட்ட மட்டும் தான் பேசணும்..friends கேட்டா office friend நு பொய் சொல்லணும் ..
நைட் என்ன சாப்பாடுன்னு கேக்கணும்.. என்ன சப்டன்னு சொல்லணும் ... அதுக்கு அப்பறம் உலக விஷயங்க(!) பத்தி ஒரு 3 மணி நேரம் பேசணும்..
நடுவுல மூட் வந்து எதாவது கிளுகிளுப்ஆ கேக்க கூடாது .. அப்படி கேட்டா சீ.. நீ இப்படி எல்லாம் பேசுற எனக்கு இதெல்லாம் பிடிகாது.. அப்பாவுக்கு தெரிஞ்சா அப்பா வேற திட்டுவாறு ..( நாம பேசுறத அப்பா கிட்ட சொல்லி விளக்கம் கேக்குற மாதிரி..)
ஒரு வழியா பேசி முடிச்சி குட் நைட் ஸ்வீட் டிரீம்ஸ் சொல்லி போன் வச்சிட்டு படுக்க 2 மணி ஆகிடும்..
என் நண்பன் கிட்ட சொன்னேன்.. இப்படி எல்லாம் இருந்தா.. காதலிக்குறதா அர்த்தமாம்...
நீங்களே சொல்லுங்க சார்... நான் காதலிக்குறேனா............ ?

11 comments:

வினோத் கெளதம் said...

satiyama illa.
spelling mistakes correct panu.

kishore said...

correct panna bore adikuthu

எட்வின் said...

காதல் மாதிரி தெரியலீங்களே; கல்யாணமே ஆயிட்ட மாதிரி இல்ல இருக்கு. ஏன்னா.... அது எப்படி சொல்லுவோம் எங்க கஷ்டத்த எல்லாம். விடுங்க சார் :)

வினோத் கெளதம் said...

Bore adikuthu da

வினோத் கெளதம் said...

//காதல் மாதிரி தெரியலீங்களே; கல்யாணமே ஆயிட்ட மாதிரி இல்ல இருக்கு. //

Romba correct..

Suresh said...

he he eppadi than arambikkum, :-) apprum athae ponnu anna nu koduthudum alwava parthu boss ! nerya peru irukanga eppadi yeruvadiyala sethu parkalaya

kishore said...

yervadi lam namaku pathathu..

பாலா said...

தமிழிஷ்-ல லிங்க் கொடுக்க தெரியலை... லவ்வு வேற கேக்குதா.. லவ்வு... எட்ரா.. அந்த கட்டைய..!

:-)))

kishore said...

பாலா அண்ணா கோச்சிகாதிங்க.. நெட் சரியா வொர்க் பண்ணல அதான் தான் லிங்க் குடுக்க முடியுல... நண்பன் வினோத்கெளதம் தான் தமிலிஷ் பத்தி சொன்னான் இனி குடுதுடுறேன்....

பாலா said...

சும்மா. தமாசு.. பண்ணினேன்.. கிஷோர்.., என்ன இது.. உங்க ஆளோட அப்பா கணக்கா என்கிட்ட பயந்துக்கறீங்க? :-)))))))

kishore said...

பயமா அப்டினா? நாங்க எல்லாம் சிங்கத்துகிட்ட போய் சிங்கள்ஆ மோதுரவங்க (எவ்ளோ நாளைக்கு தான் இப்படி நடிச்சி பொழப்ப ஒட்டறது ?)