விஜய் சொல்வதை கேட்ட சூர்யா சிரித்தான்..
"டேய் கல்யாணம் அவளோட சித்தி பையனுக்கு அத இவங்க வீட்ல நடத்துறாங்கஅவ்ளோதான் இதுக்கு ஏன் பயபடுற?"
"இருந்தாலும் கல்யாண நேரத்துல வீட்ல சொந்தகாரங்க எல்லாம் இருபாங்கஇப்போ போய் அவ கிட்ட என்ன கேக்க முடியும் ?"
"ம்ம் 1oo ருபாய் கடன் கேட்கலாம்... வாடா..."
"அப்படி அவ குடுத்தாலும் பீர் வாங்கி அடிக்கலாம் .. அவ உன்ன நம்பி அத கூட தரமாட்டா.. உன்ன நான் அழைச்சிகிட்டு போறதுக்கு என்ன முறை முறைபானுஎனக்கு தான் தெரியும் .."
" எனக்காக இத ...."
"அசிங்கமா திட்டுரத்துக்கு முனாடி வய மூடிடு.."
பைக் ஸ்டார்ட் செய்து கிளம்பினார்கள்...
போகும் வழிஇல் விஜய சூர்யா விடம்..
"டேய் அவ எத்தன தடவ காரி துப்புனாலும் உனக்கு ஏன்டா சூடு சொரண இருக்க மாட்டுது ?"
" அதான் மச்சான் தெய்விக காதல் .. அதெலாம் உனக்கு புரியாது.."
"நாட்டுல எத்தனையோ கருமம் பிடிச்ச விஷயம் புரிய மாட்டுது இது கூட உனோட கருமமும்.. சீ.. காதலும் புரியாமலே போகட்டும்.."
"டேய் என் காதல தப்பா பேசாத டா.. நீயும் காதலிச்சி பாரு புரியும்..."
விஜய் சிரித்துகொண்டான்... ஏனோ அவன் மனதில் ஓரு நொடி அருந்ததி வந்து போனாள்.
சரி யாக 30 நிமிட பயணத்திற்கு பிறகு சேலம் புற நகர் பகுதில் புதிதாகஉறவாகி இருந்த நகர் உள்ளே பைக் திரும்பியது.. அங்கும் இங்கும் சிதறி இருந்த வீடுகளில் 3 வது கிராஸ் இல் உள்ள கரு நீல வண்ண வீட்டின் முன் நின்றது..
பைக் ஐ நிறுத்தி விட்டு இருவரும் இறங்கினார்கள். அந்த வீடு கல்யாண வீட்டுக்கு உரிய பரபரபோடு இருந்தது..
இருவரும் உள்ளே சென்றார் கள் எதிரில் பெரியவர் ஒஉர்வர் எதிர்ப்பட்டார்.. அவர் விஜய் ஐ பார்த்து புன்னகைதவறு.. வாபா விஜய் உன் பிரண்டு அண்ணன் கல்யாணத்துக்கு இப்போ தான் வர.. வா வா உன் பிரண்டு மேல தான் இருகிறாள் போய்பார்.. ஆமாம் இது யார் என்று சூர்யாவை பார்த்து கேட்டார்...
"இவன் என் பிரண்டு அங்கிள் கல்யாணத்துகு வந்து இருக்கான் சென்னை இல் இருந்து... "
"ஒ!.. அப்போ அவளுக்கும் பிரண்டு தான்னு சொல்லு .."
"ம்ம்... அப்டியும் வச்சுக்கலாம் அங்கிள்"
" சரி நீங்க மேல போய் பாருங்க"
இருவரும் படி ஏறி முதல் மாடிக்கு சென்றார்கள். விஜய் போய் கதவை திறந்தான்..
அங்கு அவள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜூஸ் தயார் செய்து கொண்டு இருந்தாள்...
"லத்திகா..." விஜய் அழைக்க அவள் திரும்பினால்..
"ஹே விஜய் எப்போடா வந்த.. வா வா.. ஜூஸ் குடி என்றாள் .."
"இப்போ தான் வந்தேன்.. நான் மட்டும் இல்ல.."
"அப்பரும் .."
விஜய் திரும்பி.. "டேய் வா டா உள்ள.."
சூர்யா உள்ளே வந்தான்..
லத்திகா வின் முகத்தில் ஆச்சர்யம் கலந்த கோபத்தை காண முடிந்தது..
"லத்திகா.." சூர்யா மெதுவாக அழைக்க...
"என் பேரசொல்லாத அதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல.."என்றவள் விஜயை பார்த்து விஜய் நீ "இப்படி பண்ணுவன்னு நெனகல.."
"கோபபடாத லத்திகா அவன் உன்ன பார்க்கணும்னு தான் சென்னை ல இருந்து இவ்ளோ தூரம் வந்த இருக்கான்.. என்ன விஷயம்னு தான் கேளேன்.." என்றான் விஜய்
"கேக்க என்ன இருக்கு விஜய்? அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே?"
"லத்திகா அன்னைக்கு நடந்தது எனோட தப்பு தான்... அதுக்காக என்னை வேணாம்னு சொல்றது நியாயமா? " சூர்யா கேக்க..
"சூர்யா ப்ளீஸ் நான் எதையும் நெனச்சி பார்க்க விரும்பல... இனிமே என் வாழ்கைல வராதிங்க.. சூர்யா னு ஓரு கேரக்டர் என் லைப்ல வந்ததே நான் மறந்துட்டேன்.. நீங்க உங்களுக்கு ஓரு லைப் அமசிகுங்க.. dont disturb me.. please go on with your life.."
"அப்போ இது தான் உன் முடிவா?"
"ஆமாம்"
"அப்போ எனோட முடிவா சொல்றேன் கேட்டுகோ .. நான் நாளைக்கு வரைக்கும் சேலம் ல தான் இருப்பேன் அதுக்குள்ள நல்ல முடிவு எடு... இல்ல .. எடுக்கனும் புரியுதா..? என்ற சூர்யா விஜய் ஐ பார்த்து வாடா போலாம் என்றபடி வெளியேறினான்.."
விஜய் தர்ம சங்கடமான நிலைமை உணர்தவனாக.. லத்திகா நான் வரேன் நாளைக்கு கல்யாணத்துல மீட் பண்லாம் என்று கூறிவிட்டு சென்றான்.
லத்திகா சிலை போல் நின்றாள்.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது.
அவள் மனம் 2 மாதங்களுக்கு முன்னால் சென்றது..
சென்னை...
அந்த IT company கம்பெனி முன் தன்தோழிகளோடு பேசிய படி சென்று கொண்டிருந்தாள்...
அபோது அவன் முன் டிப் டாப் உடை அணிந்த இருவர் வந்து..
"மேடம்.. we are from vivek multinational company.. this is our new product especially made for working womens.. can you please spend your tremendous time for us for just only 5 mins madam.. please..? என்று கேட்க அவர்களை பார்த்த லத்திகா விற்கு பாவமாக இருந்தது..
"எஸ்"
"தேங்க்ஸ் மேடம்... இது எங்க கம்பெனி புது பிராடுக்ட் வெய்ல் பட்டு சருமம் கருத்து போகம இருக்க இந்த லோஷன் கிரீம் மேடம்.. ஆபீஸ் போற பெண்களுக்கு ரொம்ப நல்லது மேடம்.. ஜஸ்ட் ட்ரை பன்னுங்க மேடம்."
"ஓகே.. ஹொவ் மச்?"
"ஜஸ்ட் 150 ருபீஸ் மேடம்.."
"ஓகே ஒன்னு குடுங்க .. இதுல எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது?"
"இந்தாங்க மேடம் விசிட்டின் கார்டு.. உங்களுக்கு எதாவது பிரச்சனன இந்த நம்பர்கு போன் பன்னுங்க"
"ஓகே.. உங்க பேர்?"
"சூர்யா"
"ஓகே.. இந்தாங்க பணம் ... " கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.
அடுத்த வாரத்தில் ஓரு நாள் பஸ் காக காத்து இருக்கும் போது ஒருவன் டெட்டி பியர் விற்று கொண்டிருந்தான்..
இவள் அருகில் வந்து "மேடம் டெட்டி பியர் மேடம்.. வங்கிகுங்க மேடம்.. நல்லா இருக்கும் மேடம் பெஸ்ட் குவாலிட்டி மேடம்..."
"சூர்யா"
"ஆமாம் நீங்க?"
"என்ன மரதுடிங்க அணிக்கு லோஷன் வித்திங்க.. இனிக்கு பொம்ம விக்குரீங்க"
"ஒ சொலுங்க மேடம் எப்டி இருக்கீங்க..?
"என் பேர் மேடம் இல்ல... லத்திகா.."
"சொலுங்க லத்திகா.."
"லத்திகா போதும் .."
"சரி சொல்லு லத்திகா ..."
"குட்... வாங்க காப்பி சாப்டுகிடே பேசலாம்..."
" ஆனா இந்த பொம்ம?"
"அட வாங்க சூர்யா"
அனைத்தையும் விட்டு விட்டு அவள் பின் சென்றான்.
நாட்கள் செல்ல செல்ல சந்திப்பு coffee, breakfast,lunch, dinner என்று மாறியது.. கூடவே இருவரின் நட்பும் காதலாக மாறியது... இப்படி தென்றலாக சென்ற அவர்கள் வாழ்கையில் ஓரு நாள் நிஷா புயல் தாக்கியது..
அன்று... லத்திகா சூர்யாவை பார்க்க ஆபிஸ் அறை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றல்..
சூர்யாவும் காதிலிக்க தொடங்கிய பின் அந்த வேலை வேண்டாம் என்று ஓரு கம்பெனி இல் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்..
இன்னும் சற்று நேரத்தில் சூர்யா ஆபிஸ் வந்து விடும்.. மனம் நிறைய சந்தோசத்துடனும் காதலுடனும் சென்றாள்..
"excuse me.." ரெசெப்னிஸ்ட் நிமிர்ந்து பார்த்தாள்.
"எஸ்"
"can i meet mr.surya please?"
"surya? sorry mam he is on leave today."
"லீவ்? நான் அவர பார்க்கணுமே "
"சாரி மேடம்.. ஐ டோன்ட் நோ .. ஆனா யாரோ relative GH ல அட்மிட் அங்க போகனும்னு சொன்னார்.. நீங்க அங்க போய் பாருங்க "
"ஓகே.. தேங்க்ஸ் " சொல்லி விட்டு ஜி ஹச் கிளம்பினாள் ..
"யாராக இருக்கும்?" யோசனையுடன் ஜி ஹெச் வந்து இறங்கினாள்..
எங்கு சென்று பார்ப்பது ?
யோசனை யுடன் அங்கு இருந்த சேர் மீது அமர்ந்தாள்..
அப்போது ஓரு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக சிரித்த படி அவர்களை கடந்து போனார்கள்.. அவள் கொஞ்சமும் கூசம் இலாமல் அவன் மீது சாய்ந்த படி சென்றாள் ..
அது...அது... சூர்யா... என் சூர்யா... என் சூர்யா தான்... அவள் யார்?
சூர்யா... கத்தினாள் .. திரும்பிய சூர்யா வெளிறின முகத்தோடு அவளை பார்த்து..
"லத்திகா.. நீ எங்க இங்க..?"
"ஏன்.. உன் வேஷம் களஞ்சி போச்சுன்னு வேதனையா இருக்கா? சீ... உன்ன மாதிரி ஓரு பொம்பள பொறுக்கிய நம்பினேன் பாரு என் புத்திய செருப்பல அடிச்சிகனும்... குட் பை"
"லத்தீஈக்காஆஅ......" அவள் அவன் குரல்ஐ கேக்கும் தூரதில் இல்லை .
இன்று...
நேரம்:மாலை 4 மணி
ஹோட்டல் சிட்டி வியு அந்த A/C பார் கூட்டம் இலாமல் இருந்தது .. சூர்யா 2 வது பீர் உள்ளே இறக்கி கொண்டிருந்தான்..விஜய் அவன் முன் அமர்திருந்தன்..அவன் எதிரில் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்.
"டேய் விஜய் .. ஏன்டா அவ என்ன புரிஞ்சிக்க மாற்றா? அணிக்கு பார்த்தது என் பிரண்டு சிஸ்டர் டா அவ கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்லாதவ அவன் வரமுடியாத தாள நான் போனேன்.. அத பார்த்து தப்பா நெனசிடா .. எவ்ளோ தடவ அவல காண்டக்ட் பண்ண ட்ரை பண்ணேன் முடியுல.."
இது அவன் சொல்வது 22 வது முறை..
"சரி டா நான் பேசுறேன் கொஞ்சம் பொறுமையா இரு ..கல்யாணம் முடியட்டும்.."
"அவ.. ஒத்துக மாட்டா டா.. அவ கிட்ட இருக்க ஈகோ அவள விடாது.." சூர்யா அழுது விட்டான்.. i really love her da.. she is my soul..."
"சரி வா வீட்டுக்கு போலாம்.. உனக்கு ஓவர் ஆகிடிச்சு "என்ற விஜய் அவனை கைதாங்கள்ஆக அழைத்து சென்றான் .
நேரம்: இரவு 10 மணி..
விஜய் சூர்யா தூங்கிவிட்டான் என்று உறுதி செய்த பின் உடை மாற்றி கொண்டு பைக்கில் கிளம்பினான்.. பைக் நேராக லத்திகா வீட்டிற்கு முன் நின்றது...
"வா விஜய் என்ன இந்த நேரத்துல? காலைல வரலாம்ல " -லத்திகா
" உன்ன அவசரமா பாக்கனும்னு தோனுச்சி அதான் வந்தேன்"
"ஏன்"
"பேசணும்"
"சூர்யா வ தவிர எது வேனாலும் பேசு"
"அது எப்படி நான் வந்ததே அதுக்குதான்"
"பேச ஒனும் இல்ல விஜய்"
"உனக்கு அவன பத்தி பேச இஷ்டம் இல்லையா இல்ல அவன நெனக்க இஷ்டம் இல்லையா?
"....."
"உண்மைய சொல்லு உனக்கு இனும் அவன் மேல காதல் இல்ல?"
"இருக்கு அதான் அவன கொல்லாம விட்டு வச்சிருக்கேன் .. இல்ல அவன் எனக்கு செஞ்ச துரோகத்துக்கு அவன அந்த இடத்துலே வெட்டிருபேன்.."
"ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் லத்திகா... அவன அணிக்கு ஓரு பொண்ணு கூட பார்த்தேன்னு சொல்றயே அவ யாருன்னு அவன் கிட்ட கேட்டியா ?'
"..............."
விஜய் அன்று நடந்த எல்லாத்தையும் அவளிடம் சொன்னான்..
"நெஜமா தான் சொல்றிய விஜய்?'
"இது கதை அல்ல நிஜம்"
"ச்சே தப்பு பண்ணிடென் விஜய்.. நான் சூர்யாவ உடனே பாக்கணும்.. என்ன அழச்சிக்கிட்டு போ ..."
"இப்போ முடியாது"
"ஏன்"
"அவன் உன்ன பாக்குற நெலமைல இல்ல"
"ஐயோ என் சூர்யாவுக்கு என்ன ஆச்சு"
"அது நல்லா தான் இருக்கு.. 2 பீர் அ உள்ள ஏத்திட்டு கவலை இல்லாம தூங்குறான்"
"அட பாவி அவன் குடி பானா ?
"ம்ம்... எல்லாம் உன்னால தான் சரி நான் கலையுல கல்யாணத்துல பாக்குறேன் "
"ம்ம்.. அவரையும் அழச்சிக்கிட்டு வா.."
"அவரா? ம்ம் எல்லாம் நேரம் தான் " விஜய் சிரித்தபடி கிளம்பினான்.
நாள் :17.01.2008. நேரம்: காலை 8 மணி
கல்யாண மண்டபம்
விஜய் சூர்யாவுடன் amarnthu இருந்தான் அருகில் லத்திகா.. அண்ணா நீங்க சாப்டுங்க என்றாள் விஜய் ஐ பார்த்து..
"என்னது அண்ணா வா"
"ம்ம்"
"அப்போ அவரு "
"நான் பார்த்துக்குறேன் "
"நேரம் டா உனக்கு " என்ற படி எழுந்து சென்றான் விஜய்
"சாரி சூர்யா உங்கள தப்பா நெனச்சிட்டேன்.. மனிசிடுன்ங்க"
"என்ன இது திடீர் மாற்றம்?"
"இந்த மாற்றம் நேத்து இரவே வந்துடுச்சி விஜய் அண்ணா தான் வந்து எல்லா உண்மையும் சொன்னாரு"
"அவன் எப்போ வந்தான்?"
"நீங்க நேத்து மப்புல இருந்தபோ "
"அட பாவி அதையும் சொளிடன"
"ம்ம்ம்.. இந்த ஓரு தடவ விடுறேன் இனொரு தடவ குடிகிரனு கேள்வி பட்டேன் கொன்னுடுவேன்."
"சாரி டா செல்லம் இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன் இது என் பிரண்டு விஜய் மேல சத்தியம்"
"டேய் என்ன கொல்றதுனு முடிவு பண்ணிட்டியா ? என்றபடி விஜய் வந்தான்...
"தேங்க்ஸ் டா மச்சான்.."-சூர்யா
"ஓகே ஓகே கல்யாணம் முடிஞ்சதும் சாயந்திரம் லத்திகா வ எங்கயாச்சும் அழச்சிட்டு போ பைக் எடுத்துக்கோ.."
"ஓகே டா"
நேரம்: இரவு ௧0 மணி
சூர்யா பைக்கை நிறுத்தி விட்டு உள்ள வந்தான்.
"என்னடா என்ஜாய் பண்ணியா? -விஜய்
"போ மச்சான் இதெலாம் கேட்டுகிட்டு"
"டேய் உலகத்துல ஓரு கொடுமையான விஷயம் எது தெரியுமா?"
"என்ன டா"
" நீ வெட்கபடுறது தான்" என்ற விஜய் ஐ நோக்கி அடிக்க ஓடினான் சூர்யா..
"ஓகே ஓகே.. சீக்ரம் படு காலைல 3.20 மணிக்கு பஸ் உனக்கு"
நாள்:18.01.2008 நேரம் :அதிகாலை 3.10 மணி இடம்:சேலம் பேருந்து நிலையம்
"டேய் பார்த்து போடா போயிடு போன் பண்ணு சரியா?
"ம்ம்ம்... தேங்க்ஸ் மச்சான் நீ சென்னைக்கு வாட"
"டைம் இருந்தா கண்டிபா வரேன் டா.. லத்திகா அடுத்த வாரம் தானா அங்க வரா?
"ஆமாம் டா"
"அவள நல்லா பாத்துக்கோ டா"
" சரி டா"
"சரி மச்சான் பஸ் வந்துடுச்சி நீ போய் இடம் போடு.. நான் பைக் நிறுத்திட்டு வரேன்.." என்றான் விஜய்
"வேண்டாம் டா நீ கிளம்பு குளுருது நீ வீட்டுக்கு போய் தூங்கு. நான் போய்குறேன்..
"சரி டா பார்த்து போ"
" ஓகே டா சி யு "
சூர்யா பேருந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.. இனும் 10 நிமிடத்தில் கிளம்பிடும்.. வெளி இல் எட்டி பார்த்தான் விஜய் காணவில்லை .. கிளம்பிட்டான் போல...
பைக் எடுத்த விஜய் டீ குடிக்க ஓரு கடை இல் பைக் நிறுத்தி டீ குடித்தான்.. குளிருக்கு இதமாக இருந்தது... சரி கிளம்பலாம் போய் கொஞ்ச நேரம் துங்கிட்டு காலைல ஆபிஸ் போனும் என்று எண்ணியவனாய் பைக்கை ஸ்டார்ட் செய்தான்... பைக் 60 வது கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது..
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற அவளில் ஓரு வளைவில் வேகத்தை குறைக்காமல் திரும்ப.....
எதிரில் வந்த சென்னை செல்லும் பேருந்தை கவனிகாதவனாய்.. கிரிச்... டமார்........... ஓரு நொடியில் பேருந்தில் இரு சகரங்களும் விஜய் மீது ஏறி இறங்கி இருந்தது... ரத்த வெள்ளத்தில் துடித்த அவன் கால்கள் ஓரு நிமிடத்தில் நின்றது... கண்கள் நிலைகுத்தி நிற்க அவன் உயிர் பிரிந்தது...
சத்தம் கேட்டு திடுக்கிட சூர்யா பேருந்துஇல் இருந்து இறங்கிய அனைவருடனும் சேர்ந்து இறங்கினான்...
"என்ன ஆச்சு சார்" பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டான் "
"யாரோ ஒருத்தன் பைக்ல வந்து மோதி இறந்துட்டான் சார் பாவம் சின்ன வயசு.."
சூர்யா போய் பார்க்கும் ஆவலில் போய் பார்க்க... அங்கு பைக் உருக்குலைந்து இருந்தது...
"இந்த பைக்... பைக்.... விஜய்......... அயோ விஜய்........."
சூர்யா இன்னும் சற்று தள்ளி போய் பார்த்தான்...
அங்கே விஜய் சடலமாய்..........
விஜய்.................................... சூர்யாவின் சத்தம் காற்றில் கரைந்தது...
சூர்யா விஜய் அருகில் சென்று அவன் கைஐ பிடித்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாதவனாய் அமர்ந்தான் ... விஜய் கைஇல் கற்றிருந்த கடிகாரம் நின்று போயிருந்தது.
நேரம் :3.30 மணி....
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்...
நட்புடன்
கிஷோர்.
O
7 comments:
ஏன் நண்பா கடைசியில் விஜய்க்கு இந்த முடிவு.. எதிர்பார்கவில்லை..
நல்ல வேகம் கதையில்..அதே போல் நிறைய எதிர் பார்க்காத திருப்பங்கள்..
முடிவு மட்டும் எனக்கு பிடிக்கவில்லை..
உங்கள் விமர்சனதிற்கு நன்றி நண்பா.. கற்பனை கதைஇல் பல பிறப்புகளும் இறப்புகளும் சகஜம் தானே ..
(மனதிற்குள்.... கொயால... கதைல விஜய் விபத்துல சாகலனா சூர்யா விஜய கொனுடுவான் )
முடிவு கூட ஓக்கேதான்.. ஆனா இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தா சூப்பர். ரொம்ப நீளமா இருக்கில்ல?
அப்புறம் அந்த கடைசி வரி கலக்கல்..
அட.. இந்த பதிவை... நான படிச்சிருக்கேன் முன்னாடி. சைஸை பார்த்துட்டு எஸ்கேப் ஆனவந்தான்... இன்னைக்குதான் ரிட்டன் ஆகறேன்.
:-0)))
இது ஆரம்பிச்ச புதுசுல ஒரு ஆர்வத்துல எழுதுனது.. ஆர்வம் கொஞ்சம் அதிகம் ஆக கதையும் அதிகம் ஆகிடுச்சு... இனி திருதிகுறேன்
hayo hayo
romba arsiyal pesadha nanba appuram vittukku auto(pazhaya style) sorry tata sumo varrum by govind
Post a Comment