ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்னு நெனச்சி தான் பதிவெல்லாம் போட்டு கிளம்புனேன்..( எங்க போனேன்னு கேக்காதிங்க.. சொல்ல மாட்டேன்.)
திரும்பவும் வந்து பதிவு எழுதனும்னு நெனச்சேன்.. நெனச்சேன்.. நெனக்கிறேன்.. ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியுல..உண்மைய சொல்லனும்னா எழுதறதுக்கு சரக்கு இல்ல
(சரக்குன்னு சொன்னதும் குவாட்டர் , ஆப், புல்லு ன்னு லொள்ளு பண்ணாதிங்க)
அதனால அப்படியே அடங்கிட்டேன்.( சரியான முடிவு.. அப்படியே அடக்கமா இருக்கலாம்னு நீங்க சொல்றது காதுல விழுது)
சரி மொக்கையாவது போடுவோம்னு நெனச்சி ப்ளாக் உள்ள வந்தா கண்ணா பதிவு தான் கண்ணுல பட்டுது.. அந்த பதிவ படிச்ச அப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுட்டேன்..
பாலா கூட பேசும் போது சொன்னாரு.. எதாவது ஆங்கில படம் விமர்சனம் எழுதுடான்னு.. ஏற்கனவே நான் ஒரு ஆங்கில படம் விமர்சனம் எழுதி பல பேரு "சூசைடு " அட்டென்ட் பண்ணினது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவரு சொல்லும் போது இந்த மேட்டர் நியாபகம் வர.. நான் படம் பாக்குறதோட மட்டும் நிறுத்திகிறேனு சொல்லிட்டேன்.
அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
( வினோத் and கலை.. இப்போவும் அதே தான் பண்ணுறடானு "கேனத்தனமா" கமெண்ட் பண்ணாதிங்க ).
சரி அப்போ உனக்கு என்ன தான் தெரியும்னு கேட்டா.. என்னோட பதில் "தேடிகிட்டு இருக்கேன்".
பதிவு எழுதி கொடுமை படுத்த வேணாம்.. கமெண்ட்ல இம்சை பண்ணலாம்னு பார்த்தா.. பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. இவங்க ப்ளாக்ல கமெண்ட் பக்கம் போனா.. select profile ன்னு சொல்லுது.. கூகிள் செலக்ட் பண்ணுனாலும் கமெண்ட் பண்ண முடியல.. எதாவது "செய்வினை " வச்சிடாங்களோ ?
இதுக்கு விளக்கம் கேட்டு ஈரோடு "வால்"மீகி முனிவர்கிட்டயும் , பரிகாரம் கேட்டு "ஹாலிவுட் பாலா"னந்த சாமிகளுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன்.
உங்க யாருக்காவது பதில் தெரிஞ்சாலும் சொல்லுங்க..பதில் வந்ததும் இவர்களுக்கான இம்சை தொடரும்..
33 comments:
மச்சி என்னடா இது....
இப்பிடி குறுகுறுக்க வைச்சுட்டயே...
நல்ல முடிவு...
ஓண்ணுமே தேட வேண்டாம்...
நமக்கு தெரிஞ்சதை நல்லா நேரம் எடுத்து எழுதி நாமளே ரெண்டு தடவை படிச்சு பார்த்தா போதும்..
அட்வைஸ் மாதிரிதான் தெரியுது..
எனக்கு ப்ர்சனலா சில தகவல்கள் வேணும்னு தமிழ் ப்ளாக்ல தேடினப்போ ஒண்ணும் கிடைக்கல... அப்போதான் நமக்கு ஓசில கிடைச்சதை வச்சு நல்லது பண்ணலேன்னாலும் பரவால்ல...கெடுதல் செய்ய வேண்டாம்னு தோணுச்சு..
என்னோட பதிவு யாரையாவது புண்படுத்துச்சுன்னா மன்னிச்சுருங்க....
@ கண்ணா..
அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி.. உன்னோட ப்ளோக்ல இருக்குறது அப்பட்டமான உண்மை..
யாரு மனசையும் புண்படுத்துற அளவுக்கு அதுல ஒன்னும் இல்ல.. டோன்ட் பீல்..
இப்போ எனக்கே என்னால கமெண்ட் பண்ண முடியாம போய்டுச்சி.. கமெண்ட் செட்டிங்க்ஸ்ல போய் embedded below page அ cancel பண்ணிட்டு pop up or full page மாத்திட்டேன்.. இப்போ சரி ஆகிடிச்சி.. அதே போல நீங்களும் மாத்தி செட் பண்ணுனா .. கமெண்ட் பண்ண வசதியா இருக்கும் எனக்கு..
’உங்களுக்காக’.... எம்பட்டையே தூக்கிட்டேன். :)
ஆனாலும்.. இது என்னன்னு கண்டுபிடிக்கனும்.
எம்படில் கமெண்ட் பண்ன முடிஞ்சவுடன் சொல்லுங்க. இந்த தனிப் பேஜில் போய் கமெண்ட் பண்ணுறது.. ஒரு மாதிரி இருக்கு.
கண்ணா சொன்ன மாறி தெரிஞ்சதை எழுதனும்னா..
நான் ப்லாகையும் மூடிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதுதான் போல! :) :)
எனக்கும் இது ஒரு மாதிரியா தான் இருக்கு.. சீக்கிரம் சரி ஆகிடும்னு நினைக்கிறேன்..
//"நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது".//
இந்தியாவுல எங்கேயும் ஆசிரமத்துக்கு போயிட்டு வந்தீங்களா?
@ பாலா
//நான் ப்லாகையும் மூடிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதுதான் போல! :) :)//
தன்னடக்கம்னு சொல்லி கேள்விபட்டு இருக்கேன்.. இப்போ தான் பாக்குறேன்..
[இதையும் comedya எடுத்துகிட்டா கம்பெனி பொறுப்புஆகாது :) :) ]
சரி ஆயுடுச்சா இப்ப..
மச்சான் நீ எது வேணாலும் எழுது படிக்க நான் இருக்கேன்..
(அப்ப தானே நான் எழுதுறதை நீ படிப்ப.)
//நான் ப்லாகையும் மூடிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதுதான் போல! :) :)//
பாருடா தன்னடக்கத்தை..
@ வினோத்
//மச்சான் நீ எது வேணாலும் எழுது படிக்க நான் இருக்கேன்..
(அப்ப தானே நான் எழுதுறதை நீ படிப்ப.)//
இந்த "டீலிங்" எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.
@ சங்கர்
ஹா.. ஹா.. யாமே ஒரு ஆசிரமத்தை நாலு மாதாஜிகளுடன் "இணைந்து" நடத்தி வருகிறோம்.. முடிந்தால் நீங்களும் வாருங்கள் "இன்ச் பை இன்ச் "ஆக இறைவனை காணலாம். வருகைக்கு நன்றி சங்கர்..
பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. ////
நல்லவங்கள ஆண்டவன் என்னைக்கும் கைவிடுறதில்ல. ஹி.. ஹி...
அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?/// யேய்... இதுல உள்குத்து இல்லயே....
கண்ணா சொன்ன மாறி தெரிஞ்சதை எழுதனும்னா..
நான் ப்லாகையும் மூடிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதுதான் போல! :) :)////
இதுதான் பாலா கிட்ட புடிச்சதே!
கிஷோருக்காக... கமெண்டை தனிப் பேஜிலும், மற்றவர்களுக்கு எம்படட் ஆப்ஷனிலும்.. கொடுக்க.. இந்த முறையை பயன்படுத்தலாம்.
=============
முதல்ல... உங்க டேஷ் போர்டில், கமெண்டில் ‘New Page' ஆப்ஷனை செலக்ட் பண்ணி, ஸேவ் பண்ணி, இப்ப ப்லாக் ஓப்பன் பண்ணுங்க.
கீழ ‘Post A Comment'-ன்னு இருக்கும் லிங்கை க்ளிக் பண்ணுங்க.
புதுசா ஓப்பன் ஆகும் கமெண்ட் பேஜின் URL-ஐ அப்படியே காப்பி பண்ணிக்கங்க. அதில்தான் உங்க ப்லாக் ஐடி & போஸ்ட் ஐடி நம்பர் இருக்கும்.
இப்ப..., ஒரு நோட் பேடில்...
< a href="காப்பி செய்த URL இங்க பேஸ்ட்" target="_blank">Kishore, we need TREAT< /a>
ன்னு அடிச்சிட்டு, ஸேவ் பண்ணிடுங்க.
< a -ரெண்டுக்கும் நடுவில் ஸ்பேஸ் இருக்கக் கூடாது. அதே மாதிரி < /a> - இங்கயும் ஸ்பேஸை எடுத்துடுங்க.
இந்த கோடை... ஒவ்வொரு புது.. போஸ்ட் எழுதும் போதும்... கடைசி லைனில் சேர்த்துட்டா.. முடிஞ்சது மேட்டர்... ரொம்ப சிம்பிள்.
(அப்புறம் திரும்ப உங்க கமெண்டை எம்பட் ஆப்ஷனுக்கு மாத்திக்கலாம்.)
=====
இந்த கோடை... டெம்ப்ளேட்டில் போட முடியாது. XML எர்ரர் வரும். அதனால் இதுதான் இப்போதைக்கு நான் கண்டுபிடித்த வழி.
டெம்ப்ளேட்டில் ஆட் பண்ண முடிஞ்சா அப்டேட் பண்ணுறேன்.
"நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
நல்ல முடிவு நடத்துங்க...நடத்துங்க...
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்....
வாழ்த்துகள்...
சொல்ல மறந்திட்டேன். இதில் போஸ்ட் ஐடி மாறிகிட்டே இருக்கும். புது போஸ்ட் பண்ணும்போது.. அந்த ஐடி என்னன்னு கண்டு பிடிக்கனும். இதே வழியை யூஸ் பண்ணலாம்.
இது நியூ வெர்ஷன். இதை.. உங்க டெம்ளேட்டில் கூட போட்டுக்கலாம்.
Edit HTML -ல் எக்ஸ்பேண்ட் க்ளிக் பண்ணி இப்படி தேடிப்பாருங்க.
< data:postCommentMsg/> (ஸ்பேஸை எடுத்துடுங்க).
அதுக்குக் கீழ் இந்த கமெண்டை பேஸ்ட் பண்ணுங்க. Blog ID மட்டும், முன்னாடி சொன்ன முறையில் கண்டு பிடிச்சிக்கங்க. அதை XXXXXX-ல் ரீப்ளேஸ் பண்ணிட்டா முடிஞ்சது.
< a expr:href='"https://www.blogger.com/comment.g?blogID=XXXXXXXXXXXXXXXXXX&postID=" + data:post.id + ""'> / கிஷோர் கமெண்ட் < /a>
(முன்னாடியே சொன்ன < a அப்புறம் < /a> ஸ்பேஸை எடுத்துட்டு)
======
BlogID -ஐ ப்லாகர், பப்ளிக்கா எடுக்க எந்த வேரியபிளும் தரலை. அதனால்.. இதுதான் இப்போதைக்கு பெஸ்ட்.
ஒவ்வொரு போஸ்டுக்கும்... நீங்க எதுவும் பண்ணத் தேவையில்லை. இந்த கோடை.. நீங்க எங்க வேணும்னாலும் பேஸ்ட் பண்ணிக்கலாம்.
தமிழிஷ்-க்கு கீழ வேணும்னா... tamilish-னு சர்ச் பண்ணி.. அதுக்கு கீழ போட்டாலும் வொர்க் ஆகும்.
பாலா வழி என்னால முடியல. உங்களுக்காக எம்பட் பண்ணிருக்கேன். உங்களுக்கு சரி பண்ணிட்டு சொல்லுங்க. பொதுவா நான் எம்பட்ட விரும்புறதில்லை.. :)
//"தேடிகிட்டு இருக்கேன்"//
நல்லா கவர்ஆல் மாட்டிகிட்டு "உள்ள" இறங்கி தேடு!!!
இன்னான்னு, ஊட்டுல தொலச்சிட்டு...
எதிர் வீட்டு ஆன்ட்டி ஊட்டுல தேடாத....
Team Viewer இன்ஸ்டால் பண்ணு, பிராப்ளத்தை சரி பண்றேன்னு சொன்னா கேக்க மாட்டுற?
பாரு பாலா எம்புட்டு கஷ்ட படுறாருன்னு...
நம்மள மாதிரி அடுத்த பக்கத்தில் கமெண்ட் பாக்ஸ் திறக்குற மாதிரி இருக்குறவங்க பக்கத்தில் இந்த பிரச்சனை இல்லை!
:)))
@ பப்பு .
நீ நல்லவன்.. அதை நான் நம்பனும்.. ரைட் . உள்குத்து எல்லாம் illa.. அப்படி இருந்த நன் நேரடியாவே சொல்லிடுவேன் . பப்பு காப்பி அடிக்கதனு ..
@ ஹாலிவுட் பாலா
நன்றி பாலா.. சிரமத்திற்கு வருந்துகிறேன்
@ கலையரசன்
ரைட்டு மச்சி
@ seemangani
நன்றி.
@ வால்ஸ்
நன்றி
@ பித்தன்
நன்றி மச்சி
கிஷோர் வெல்கம் பேக்
என்னங்க போன்ல கூட பேசமுடியலயே?ஊர்ல வச்சி,
ஒண்ணும் எழுத விஷயம் இல்லாட்டி
கலையை மாதிரி போட்டோ போட்டு கமெண்ட் போடுங்க,இல்லாட்டி டூர் போட்டோ போட்டு வெறுப்பேட்துங்க.இதுக்கு போய் ஃபீல் பண்ணிக்கிட்டு?ஓட்டுக்கள் போட்டாச்சி
நல்ல முடிவுதான் நல்லாயிருடி...
வேட்டைக்காரன் படத்த பத்தி நீங்க எழுதலாமே :-):-):-):-)
@கார்த்திகேயன்
நன்றி நண்பா
@ வசந்த்
நன்றி வசந்த்
@nvnkmr
உங்களுக்கு முன்னாடியே நான் பார்க்கணுமா? நடக்காது..
nan china ponu than ana soldren nu thapa eduthukathinga nama eluthe elutha thane nala varum saraku illina thinamum nama evlo vishayam pakrom athula ethavathu try panunga.
nala comedyah eluthuvinga so one small request don't stop posting just publish something surely most of us will read
@ angel
யாருங்க சொன்னா நான் எழுதுறத நிறுத்த போறேன்னு?. எழுதுறதுக்கு விஷயம் கிடைக்கும் போது கண்டிப்பா உங்கள இம்சை பண்ணுவேன்..
நீங்க சிதம்பரமா?
hollywood bala வலைத்தலதுல சொல்லிருந்தார்.
www.cdmsaran.blogspot.com
ஆமாங்க.. அட நீங்களும் நம்மூரு தானா?
Post a Comment