
இந்த தளம் உருவாக்கபட்டதின் அடிப்படை நோக்கமே ஒருவர் மற்றவரோடு கருத்துக்களை தயக்கம் இன்றி பகரிந்து கொள்வதற்கு மட்டுமே...
இன்று எத்தனை நம்மில் எத்தனை பேர் இதை சரியாக பயன் படுத்துகிறோம்..?
ஒருவர் அவருடைய பதிப்பை வெளிஇட்டால் அவருக்கு வாக்களிப்பது நமது உரிமை... நாம் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் ... ஆனால் அதை படித்து நமது கருத்தை வெளிடும் போது ஒரு கருத்து தெரிவித்தால் மட்டும் போதுமானது என்பது என் தாழ்மையான கருத்து...அதை விடுத்து கருதுரைகளில் வெறும் எண்களை மட்டும் வெளிடுவது சரியா?
இந்த தளம் இன்று எத்தனயோ முகம் தெரியாத நண்பர்களை உருவாக்கி உள்ளது..உண்மை தான்.. இல்லை என்று மறுக்க முடியாது...நண்பருக்காக எத்தனை கருத்தகளை வேண்டுமானாலும் வெளியட வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு என்று மறுக்க முடியாதது அது போன்று ஒருவரின் பதிப்பை இங்கு வெளியான பின் அதை படித்து கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதும் மறுக்க முடியாதது...

ஒருவர் மற்றவருடைய பதிப்பை பார்த்து ரசித்து கருத்து சொல்ல விரும்பினாலும் அதை அவர்கள் செய்யாமல் போவதற்கு காரணம் பதிவு வெளிடவரின் கருத்துஉரை எண்ணிக்கை.. 200 , 250 என்று இருக்கும். சரி என்று எடுத்து பார்த்தல் அதில் 100 மேற்பட்ட கருத்துக்கள் வெறும் எண்ணிக்கையாக மட்டும் உள்ளது.. அதற்கு பதிவு வெளிஇட்டவர் எப்படி பதில் தர முடியும் நன்றி என்று சொல்வதை விட? அதனால் பதிவு வெளிஇட்டவர் பதிலுரை வெளிஇடமல் விட்டுவிடுகிறார்..

இதனால் அவருடைய பதிப்பை காணும் புதியவர்கள் இத்தன பேர் அனுப்பும் கர்துகளுக்கு பதில் தர முடியாதவர் நமது கருத்துக்கு மட்டும் பதிலுரை வெளிடுவரா என்ற எண்ணத்தில்அந்த பதிப்பை ரசித்து கருத்து தெரிவிக்க விரும்பியும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் விடுகின்றனர்..
இது எனது தனிபட்ட கருத்து மட்டுமே.. உங்களை புண்படுத்தும் நோக்கதிற்காக இதை வெளியடவில்லை நான் ரசித்த சில பதிப்புகளுக்கு என் கருத்துக்களை வெளிஇடமல் போனதிற்காக சொல்கிறேன்.. (ஆமாம் இவரு கருத்து சொல்லாம போனா இப்போ என்ன ஆகாபோது என்று நீங்கள் நினைக்கலாம்.. என்னை போன்று சிலருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கலாம் அதற்காக தான் சொல்றேன்.. தவறு என்றால் மண்ணித்து இந்த பதிப்பை மறந்துவிடுங்கள் ..) நண்பர்களுக்காக கருத்தை வெளிஇடுவோர் சற்று சிந்தியுங்கள்......
நட்புடன்
கிஷோர்..