Monday, December 28, 2009

கரைவேன் காற்றாய்..நித்தம் துடித்திருந்தேன் உன்னை காண
மொழி தெரிந்தும் தவித்திருந்தேன் உன்னிடம் பேச

தயக்கம் என்னில் நிலைத்திருந்ததாலோ என்னவோ
என்னை தவிக்க விட்டு சென்ற போதும் தனித்திருந்தேன்

உன்னை நிலவிற்கு இணையாய் கவி பாட நான் கவிஞனும் அல்ல
உன்
நினைவுகளை மறக்க நான் வீரனும் அல்ல

யாவரும் அறிந்தது நீ அடுத்தவன் மனைவி என்று
நான் மட்டுமே அறிவது நீ என் நினைவுகளின் துணைவி என்று


மாற்றான் தாரத்தை நினைப்பது பாவம் என்று தெரிந்தும்
உன் நினைவுகளில் என் நிஜங்களை மறக்க முயல்கிறேன்


மலர்வதற்கு
முன் கருகிய என் காதல் தோட்டத்தில்
உன் நினைவுகள் மட்டுமே நீர்வார்த்து கொண்டு இருக்கிறது


ம்.. என்று ஒரு வார்த்தை சொல் நீ இறப்பதற்கு முன்
உன் கடைசி மூச்சு காற்றில் கலப்பதற்குள்

உன் சுவாசத்திற்காக கரைவேன் காற்றாய்..

Sunday, December 27, 2009

கட்டிங் வித் கிஷோர் - 2

க வி கி இல் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..
-----------------------------------------------------------------------------

இன்னைக்கு நாம பார்க்க போற சப்ஜெக்ட் "ஹியூமன் அனாடமி" அதாவது "மனித உடற்கூறுவியல்" .


உடலின் எல்லா பாகங்களும் , அது செய்ய வேண்டிய செயல்களும் நரம்பு மண்டலங்களின் (neuro system ) வழியாக மூளையின் கட்டுபாட்டின் கீழ் தான் இயங்குகிறது.இவை அனைத்தும் சரிவர நடைபெற மிக முக்கியமாக தேவைபடுவது.. உடலின் சமசீரான இரத்த ஓட்டம்.

இதயத்தில் இருந்து அழுத்து விசை மூலம் பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்த படும் இரத்தம் ஆனது மீண்டும் இரத்த நாளங்களின் (blood veins )வழியாக இதயத்திற்கு வந்து அடைகிறது.


வெட்டுபடும் இடங்களில் இருந்து வெளிபடும் இரத்தம் சில நிமிடங்களின் உறைவதும் (blood clotting) மீண்டும் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுரபிகள் மூலமாக சுரந்து கொள்வதும் இரத்தத்தின் சிறப்பு.

இந்த உடலை அறுவை சிகிச்சை செய்வது என்பது கசாப்பு கடையில் கறி வெட்டுவது அல்ல.. மாறாக.. கத்தியை மெதுவாக உடலின் வைத்து சீரான அழுத்தம் குடுத்து சருமத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் கிழித்து பின் முழுமையாக வெட்டி போட வேண்டும்.

ok guys.. i hope you understood what you read regarding the human anatomy. To make things more clear, now we will have a small presentation..
அந்த "அறுவை" சிகிச்சையை தான் அருமையாக எந்த வித பதற்றமும் இல்லாமல் செய்து இருக்கிறார் விஜய்.. அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பேயில்ல.


எனக்கு இவ்வளவு இரத்த இழப்பு ஏற்பட்டதற்கு வீணாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை. எவ்ளவோ விமர்சனங்களை பார்த்தும் திருந்தாமல் நானே எனக்கு வைத்து கொண்ட ஆப்பு இது.


ஒருவருக்கு அதிக அளவிலான இரத்த இழப்பு ஏற்படும் போது அதை சரிகட்ட உடலுக்கும் 3 முதல் 6 மாதம் வரை ஆகும்.
இதற்கு தான் ஒருவர் ஒருமுறை இரத்த தானம் செய்த பிறகு அடுத்த முறைக்கு 3 முதல் 6 மாதம் வரை இடைவெளி விட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீண்டும் விஜய் படம் வர ஒரு 6 மாதம் ஆகும்.. அதுக்குள்ள உடம்ப தேத்தனும்..
மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 22, 2009

கட்டிங் வித் கிஷோர் - 1

இந்த பதிவ படிச்சிட்டு அருமைன்னு சொன்னாலும் சரி.. போடா எருமைன்னு சொன்னாலும் சரி.. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரசிச்ச.. என்னை சந்தோசமாய் இருக்க வைத்த .. சில சமயம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திய எனது வாழ்வில் நடந்த.. நடந்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க போற சரியான மொக்கை பதிவு.. (சாரி கண்ணா....)

சரி விஷயத்திற்கு போவோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சி..இதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சா.. ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதுறாங்க.. (அப்போ அவங்க எழுதுறது எல்லாம் மொக்கையான்னு கேக்காதிங்க .. எனக்கு பதில் தெரியாது..ஆனா கண்டிப்பா நான் எழுதுறது மொக்கை தான் )

தலைப்பு வைக்கிறதுலையும் ஒரு நியாய தர்மம் இருக்கனும் இல்லைங்களா?

உலகத்துலயே ஒருத்தன் அனுபவிக்கிற கொடுமையான நிகழ்வு எதுன்னு நினைகிறிங்க..?
காதல் தோல்வி?
நண்பர்கள் பிரிவு?
தனிமை?
தொடர் தோல்விகள் ?

அது எல்லாம் சும்மாங்க..

அதெல்லாம் கூட எதோ ஒரு வகைல தாங்கிக்கலாம். இல்ல இன்னொருத்தர் கிட்ட சொல்லியாச்சும் மனச ஆத்திக்கலாம் ..
ஆனா ஒருத்தன் குடிக்கும் போது அதை வேடிக்கை பார்த்துகிட்டு அவன் திரும்ப திரும்ப சொல்றத குடிக்கிற பழக்கம் இல்லாம வெறும் கடலைய மட்டும் கொறிசிகிட்டு கேக்குறவன் இருக்கான் பாருங்க.. அவன் அனுபவிக்கிற வேதனை.. கஷ்டம்..(அதெல்லாம் என்னை மாதிரி கஷ்டபட்டவங்களுக்கு தான் தெரியும்)

ஹலோ.. ஹலோ .. . எங்க கிளம்புறிங்க? வெயிட்..
இனிமே நீங்க அந்த கஷ்டத்த தான் அனுபிவிக்க போறீங்க..
அதான் "கட்டிங் வித் கிஷோர் "
பேர்லயாவது சரக்கு இருக்கட்டுமேனு தான் "கட்டிங்"ன்னு வச்சேன்..

------------------------------------------------------------------------------------------
இனி மொக்கைகள் ஆ"ரம்பம்" (வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்.. )


கடந்த சனிக்கிழமை "அவதார் " பார்த்தேன்.. அவதாரம் போக வேண்டியது என்னோட பிடிவாதத்தால முதல் தடவை தப்பிச்சிட்டேன்..
பாலா இந்த படத்த "ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு.. எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது .. சின்ன புள்ள தனமான கதைன்னாலும் நல்லா தான் ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க.. என்னா ஒண்ணு.. "நாவி " வேஷத்துல ஹீரோயின் மட்டும் இல்ல எந்த பொன்னை பார்த்தாலும் ஒரு கிளுகிளுப்பு வரல..

உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.. இதுல தியேட்டர் ஒரு "காஞ்சி " போனது அவங்க ரெண்டு பேரும் "கிஸ்"பண்னும் போது விசில் அடிக்கிது..

எப்படியோ கொடுத்த காசுக்கு கலர் கலரா காட்டுனாங்க.

அப்புறம் நேத்து ரெண்டாவது தடவையும் விதி என் வாழ்க்கைல விளையாட பார்த்துச்சி.. திரும்பவும் அவதாரம் போக வேண்டியது..இருந்தாலும் இப்போவும் என்னை கடவுள் கைவிடல..

என் நண்பர்கள்ல ஒரு மகான் .. "கந்த கோட்டை " தான் வருவேன்னு அடம்பிடிக்க.. எனக்கு ஒன்னும் இல்லடா நான் வரேன்.. மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு கேளு அப்படின்னு சொல்லிட்டு அவங்க முகத்த பார்த்தா.. வினோத் கிட்ட நீ துபாய்ல வேலை பார்க்க வேணாம் இந்தியா வந்துடுன்னு சொன்னா அவன் முகம் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை பேரு முகத்துளையும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்..

சரின்னு ஒரு வழியா படத்துக்கு போனோம்..

படத்தை பற்றி ஒரு பார்வை..

"பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..
"நகுல்" பண்ணுற முக சேஷ்டைகள் ரொம்ப கேவலமா இருக்கு..
"சம்பத்" அ முடிஞ்ச அளவுக்கு கேவலபடுத்தி இருக்காங்க.
"கெளதம் "(சண்டை கோழியில் விஷால் நண்பராக வந்தவர் ) குடுத்த ரோல முடிஞ்ச அளவுக்கு நெருடல் இல்லாம பண்ணிட்டு செத்து போறார்..

ஒரே ஆறுதல் சந்தானம் தான்.. அவரும் "செகண்ட் ஆப் "ல ரொம்ப இல்ல..

கதையா ? நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் படங்கள கொஞ்சம் ரீவைண்டு பண்ணிகிங்க..

ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்.
-------------------------------------------------------------------------------------------

இப்போ நான் கடவுள் கிட்ட வேண்டிகிற ஒரே விஷயம்.. சனிக்கிழமை சீக்கிரம் வர கூடாதுன்னு தான்..

எங்க ஊருல ஆறு தியேட்டர்ல மூணு இடிச்சிடாங்க மீதி மூணு தான் இருக்கு.. அதுல ரெண்டு தியேட்டர்ல பார்த்தாச்சி.. மீதி இருக்குறது.. அவதாரம் தான்..

சனிக்கிழமை
ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. அதுக்குள்ள எதாவது ஒரு படம் மாறிட வழி பண்ணுங்கனு தான். இருந்தாலும் இந்த தடவையும் டவுள் கை விடமாட்டார்னு நம்புறேன் ...

சரிங்க.. முதல் மொக்கையே கொஞ்சம் ஓவரா போச்சி.. மீண்டும் சிந்திப்போம்..

Tuesday, December 15, 2009

ஐ.. மீ.. மைசெல்ப்..

ரெண்டு வாரத்துல திரும்பி வரணும்னு நெனச்சி தான் பதிவெல்லாம் போட்டு கிளம்புனேன்..( எங்க போனேன்னு கேக்காதிங்க.. சொல்ல மாட்டேன்.)
திரும்பவும் வந்து பதிவு எழுதனும்னு நெனச்சேன்.. நெனச்சேன்.. நெனக்கிறேன்.. ஆனா என்ன எழுதுறதுன்னு தான் தெரியுல..உண்மைய சொல்லனும்னா எழுதறதுக்கு சரக்கு இல்ல
(சரக்குன்னு சொன்னதும் குவாட்டர் , ஆப், புல்லு ன்னு லொள்ளு பண்ணாதிங்க)
அதனால அப்படியே அடங்கிட்டேன்.( சரியான முடிவு.. அப்படியே அடக்கமா இருக்கலாம்னு நீங்க சொல்றது காதுல விழுது)

சரி மொக்கையாவது போடுவோம்னு நெனச்சி ப்ளாக் உள்ள வந்தா கண்ணா பதிவு தான் கண்ணுல பட்டுது.. அந்த பதிவ படிச்ச அப்புறம் அந்த எண்ணத்தையும் விட்டுட்டேன்..

பாலா கூட பேசும் போது சொன்னாரு.. எதாவது ஆங்கில படம் விமர்சனம் எழுதுடான்னு.. ஏற்கனவே நான் ஒரு ஆங்கில படம் விமர்சனம் எழுதி பல பேரு "சூசைடு " அட்டென்ட் பண்ணினது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவரு சொல்லும் போது இந்த மேட்டர் நியாபகம் வர.. நான் படம் பாக்குறதோட மட்டும் நிறுத்திகிறேனு சொல்லிட்டேன்.

அப்போ எடுத்த முடிவுதான் இப்போவும் பாலோவ் பண்றேன்.. "நமக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் தெளிவா செய்யணும் அதை விட்டுட்டு அடுத்தவன பார்த்து கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன், விமர்சனம் எழுதுறேன், மொக்க போடுறேன், காமடியா எழுதுறேன்னு அடுத்தவன சாகடிக்க கூடாது". எப்பூடி ?
( வினோத் and கலை.. இப்போவும் அதே தான் பண்ணுறடானு "கேனத்தனமா" கமெண்ட் பண்ணாதிங்க ).

சரி அப்போ உனக்கு என்ன தான் தெரியும்னு கேட்டா.. என்னோட பதில் "தேடிகிட்டு இருக்கேன்".

பதிவு எழுதி கொடுமை படுத்த வேணாம்.. கமெண்ட்ல இம்சை பண்ணலாம்னு பார்த்தா.. பாலா.. பப்பு.. கார்த்தி (அறிவு தேடல்)..இவங்க ப்ளாக்ல எல்லாம் என்னால கமெண்ட் பண்ண முடியல.. இவங்க ப்ளாக் கமெண்ட் பக்கம் போனா.. select profile ன்னு சொல்லுது.. கூகிள் செலக்ட் பண்ணுனாலும் கமெண்ட் பண்ண முடியல.. எதாவது "செய்வினை " வச்சிடாங்களோ ?
இதுக்கு விளக்கம் கேட்டு ஈரோடு "வால்"மீகி முனிவர்கிட்டயும் , பரிகாரம் கேட்டு "ஹாலிவுட் பாலா"னந்த சாமிகளுக்கும் மெயில் அனுப்பி இருக்கேன்.
உங்க யாருக்காவது பதில் தெரிஞ்சாலும் சொல்லுங்க..பதில் வந்ததும் இவர்களுக்கான இம்சை தொடரும்..