Saturday, May 30, 2009

என்னை போல இருக்காதிங்க

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடித்திருக்கா ஹேய்.. தெரியவில்லை...

சுரேஷ் மாலதிய பாக்கும் போதெல்லாம் இந்த பாட்டு தான் அவனுக்கு நினைப்பு வந்து தொலைக்குது...
கொஞ்ச நாளா இந்த பாட்டு தான் சுரேஷ்க்கு சுப்ரபாரதமா இருக்கு...
பின்ன? ஒரு மாசமா மாலதிய பாக்குறான் ... சில சமயம் சிரிக்கிது... சிலசமயம் முறைக்கிது... சில சமயம் பயபுள்ள ஒரு தெரு நாய பாக்குற மாதிரி கூட பாக்க மாட்டுது...
இவனும் அலையுறானே தவிர அவளை லவ் பண்ணுரியாடானு கேட்டா அவனுக்கே தெரியாது...
இருந்தாலும் அவளை பாக்கும் போது நாக்கு மேல ஒட்டிக்கிட்டு பேச்சு வராம கேவலமா சிரிப்பான் பாருங்க...அந்த கொடுமைய பாக்க ரெண்டு கண்ணு இருந்தா அதுல சுண்ணாம்பு தடவிக்கலாம்..

அவளை பத்தி பேச ஆரம்பிச்சா போதும் கிழியுற வரைக்கும் பேசுவான்...
( கேக்குறவன் காது தான்...)
நான் கூட அவன்கிட்ட கேட்டேன் ஏன்டா இப்படி ஒரு ரிசல்டும் தெரியாம இப்படி பைத்தியக்கார பயலா சுத்துற உனக்கே இது அசிங்கமா இல்லயானு?
அட ஒரு தடவ ஏன்டா மார்கழி மாசத்து நாய் மாதிரி அவ பின்னாடியே அலையுற லவ் பண்ணுனா அத அந்த சனியன் கிட்ட சொல்லி தொலைக்கலாம்ல.. அத விட்டுட்டு இப்படி என் காசுல குடிச்சிட்டு எனக்கே பிளேடு போட்டுக்கிட்டு இருக்கனு கூட கேட்டேங்க... அதுக்கும் கொஞ்சம் கூட சூடு சொரண இல்லாம சிரிகிறான்...

ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன பாக்கும் போது தாடி வச்சிக்கிட்டு இருந்தான்... அப்பவே புரிஞ்சி போச்சு பயபுள்ளைக்கு ரிவெட் அடிச்சிடானு ...
இருந்தாலும் கேக்கணுமேனு கேட்டு தொலைச்சேன்...
மச்சான் மாலதிக்கு கல்யாணம்டா... நேத்து அவங்க அண்ணன் பத்திரிக்கை குடுத்துக்கிட்டு இருந்தாருன்னு சொன்னான்.,..
சரி விடு மச்சான்... நீ முன்னாடியே உன் காதல அவ கிட்ட சொல்லி இருக்கனும் இப்போ வருத்தபட்டு என்ன ஆகபோது .. விடு வேலைய பாரு... கஷ்டமா இருந்தா வா டாஸ்மாக் போலாம்னு 'அட்வைஸ் ' பண்ணுனேன்...

போய் ரெண்டாவது குவாட்டர் உள்ள போகும் அந்த நாய் சொல்லுது...
" எனக்கு கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லடா... நான் அவளை லவ் பண்ணுனா தான எனக்கு கஷ்டமா இருக்கும்...?"
"அப்பறம் ஏன்டா தாடி...?"
"இனிமே எப்படி பொழுது போகும்னு யோசிச்சேன்டா அதான் ஷேவ் பண்ண மறந்துட்டேன்... பரவாஇல்ல நம்ம 3 வது தெரு சுகந்திய இனிமே பாலொவ் பண்ண வேண்டியது தான்..."
"அப்போ சுகந்திய லவ் பண்ண போறியா?"
"ஏன்டா இப்படி லவ் லவ்னு அசிங்கமா பேசிக்கிட்டு... கடலை போடுறதுல ஒரு சுகம்டா அதுக்கு தான் மாலதிய ட்ரை பண்ணுனேன் மிஸ் ஆகிடிச்சு... இப்போ சுகந்தி அவ்ளோ தான்..."

நான் மனதிற்குள்...
அட பாவி உண்மையான காதல் தோல்வினு நெனச்சி உனக்கு சரக்கு வாங்கி குடுத்துக்கிட்டு இருக்கேனே... எனக்கு இந்த சமுதாயத்துல என்ன பேரு கிடைக்கும் தெரியுமா?
ரிவெட் அவ உனக்கு வைக்கலடா ... உன்ன குடிக்க கூப்பிட்டு எனக்கு நானே வச்சிகிட்டேன்...
எவ்ளோ ட்ரிக்சா அடுத்தவன் காசுல ஆட்டய போடுறானுங்க?
நான் அவன கூடிக்கிட்டு வந்ததுக்கு என்னோட பர்ஸ் என்னை கேவலமா பாக்க... எனக்கு ஆப்பு வச்சிடான்னு நெனச்சிகிட்டு இருக்கும் போது...

அந்த நாய் சொல்லுது... மச்சான் இன்னொரு ஆப் சொல்லேன்..

Friday, May 29, 2009

மாறட்டும் முடிவுகள்

இலங்கை தமிழர் பிரச்சனை...
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கேள்விபடுகிற விஷயம்...
காலை எழுந்தவுடன் சரோஜ் நாராயண சாமி சொல்லும் முதல் விஷயம் நேற்று இலங்கைல் நடந்த போரில் எல்டிடிஈனர் 20 பேர் கொல்லபட்டனர்... இது குறித்து அந்நாட்டு அதிபர் எமது செய்தியாளர்களிடம் கூறும்போது ... என்பது தான்...
28 வருஷமா இதை தான் கேக்குறேன்... பார்கிறேன்.
சில சமயம் பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்ற நஞ்சையும் மனதில் விதைத்தன நமது செய்தி தொடர்பு துறைகளும் , நமது தேசமும்...

இலங்கை அரசிற்கு உதவும் இந்திய நாட்டின் பிரதமரை கொன்றால் தான் நமது மக்களின் துயரம் நீங்கும் என்று எந்த கோணத்தில் முடிவு செய்தார்களோ...அதுவும் பொய்த்து போனது...
ஈழத்தில் கொலைகளும் கற்பழிப்புகளும்.. இன்று வரை தொடர்கிறது ...

பழிக்கு பழி என்ற நோக்கம் எந்த காலத்திலும் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தாது என்பதற்கு இலங்கயில் தமிழ்ர்களின் இன்றைய நிலையே ஒரு சாட்சி ...

நமது தலைவனை இழந்து விட்டோமா ? இல்லையா ? இனி யார் நம்மை வழி நடத்தி நமக்காக குரல் கொடுப்பார்கள்? என்ற ஆயிரம் கேள்விகளுடன் கொஞ்சம் இருந்த நிம்மதியும் தொலைத்து நிற்கும் மக்களுக்கு புலிகள் தலைவர் உயருடன் இருக்கிறார் என்று கூறும் புலிகள் அவரே நான் நலமுடன் இருக்கிறேன் என்று பேசி ஒலிஒளி பதிவு செய்து வெளியட தாமதிப்பது ஏன் என்று புரியவில்லை....

அப்படி காசட் வெளி வந்தால் அவர் இருக்கும் இடம் தெரிந்து கைது செய்யபடுவார்.. அதனால் அவர் திரும்பவும் வந்து போராட முடியாது என்பது சிலரின் கருத்து ...
அதுவரை தம் மக்கள் தன் கண்முன் அழிவதை எங்கோ இருந்து தொலைக்காட்சி மூலம் ஒரு தலைவர் பார்த்து கொண்டு இருப்பாரா?
அப்படி பார்ப்பவர் ஒரு இனத்தின் தலைவராக இருக்க தகுதி அற்றவராக தான் இருக்க முடியும் .

நம்ம மீசைகார வீரப்பன் எத்தனை காசெட் அனுப்பினார் ? அவரே அனுப்பும் போது இவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லை...
மக்கள் சற்று நிம்மதியாகவாது இருப்பார்கள் ..

அதை விடுங்க...

தமிழ் ஈழம் , தமிழ் மக்கள் என்று பேசும் நாம் இங்கு தஞ்சம் அடைந்த அகதிகளுக்கு என்ன மரியாதை குடுக்கிறோம் என்பது நம்முடைய மனசாட்சிக்கு தெரியும் ..
ஏன் அரசாங்கத்திடம் நாம் பெரும் அனைத்து நன்மைகளையும் அவர்களுக்கும் பெற்று தர முன் வருவது இல்லை? எத்தனை பேர் அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் உதவி இருக்கிறோம்...?
எல்லோரும் தரும் போது நானும் 50 ருபாய் தருகிறேன் என்பதா அவர்கள் எதிர்பார்ப்பது? உண்மையான ஆதரவு அல்லவா?இலங்கைக்கு செல்ல வேண்டாம்...
தமிழ்நாட்டில் இருக்கும் ராமேஸ்வரம் ,தனுஷ்கோடிக்கு சென்று எத்தனை பேர் அவர்கள் நிலைமையை நேரில் கண்டு அவர்களுக்கு உதவி இருக்கிறோம்?

உதவ கூட வேண்டாம் அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் இல்லாமல் நடந்து இருக்கிறோமா ?
பெண்கள் அங்கு இருந்து இங்கு வந்து அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் ... உண்மையாக சொன்னால்.. உடுத்தும் உடைகளை பெறுவதற்கு கூட அவர்கள் கற்பை விலை கொடுக்க வேண்டி இருக்கிறது... இது மறுக்க முடியாத உண்மை...


இந்த நிலைமையில் தமிழ் ஈழம் , தமிழ் மக்கள் என்று பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது ? பேசுவதற்கு வாயும் கேட்பதற்கு நாலு இந்திய இளிச்சவாயர்கள் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?

நமது சொந்த நாட்டில் அவர்களுக்கு நிம்மதியை தர வக்கிலாத நாம் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுத்து மயிரு புடுங்க போகிறோமா ?

மனதிலும் , உடல்களிலும் ரணங்களை சுமந்து நிற்கும் அவர்களுக்கு அறுதல் தரவேண்டம் ...
அடிமையாக நடத்தாமல் இருங்கள் ..

நமது சகோதர சகோதிரிகள் நமக்காக இருக்கிறார்கள் என்று நம்பி வந்த அவர்களுக்கு இந்த அவலங்கள் தான் நாம் தரும் பரிசா ? நாடு விட்டு நாடு வந்தாலும் தொடரும் கற்பழிப்புகளும், ரணங்களும் , மன உளைச்சல்களும் தான் அவர்களின் முடிவா ?

மாறட்டும் முடிவுகள்...

Thursday, May 28, 2009

திரும்பி பார்கிறேன்..-கிஷோர்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் பெற்றோர் வைத்த பெயர் கிறிஸ்டோபர் ஜெயராஜ். நீளம் கருதி.. பள்ளியில் சேர்த்த பெயர் ஜெயராஜ்... வீட்டில் அழைக்கும் பெயர் கிஷோர்... எனக்கு பிடித்த பெயர் தான். இது என் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கும் பெயர்...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

2006 மே 3 ...


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்துக்கு நான் டாக்டர் ஆகிஇருக்க வேண்டியவன்... பொறியாளர் ஆகிட்டேன்... என் கையெழுத்துக்கு எப்படி எல்லா எக்ஸாம்ளையும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணுனேன்னு எனக்கே இது வரைக்கும் புரியாத புதிர்...

4).பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்தது எல்லாமே பிடிக்கும்... குறிப்பா அம்மா செய்யுற அப்பள குழம்பு...
அதிகமா காலி பண்ணறது நான் தான்..
நான்-வெஜ் அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க... அதுவும் மீன் குழம்புணா வெளில எங்கயும் அன்னைக்கு சாப்ட மாட்டேன்.. இதுல ஒரு ஸ்பெஷல் என்னன்னா எங்க அம்மா சுத்த சைவம்... டேஸ்ட் பண்ணி பாக்காமலே சமைச்சது அவ்ளோ பெர்பெக்ட் ஆ இருக்கும்...
அப்பறம் ஆல் டைம் பேவரிட் .. சிக்கன் சப்பாத்தி

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்... என்னோட நட்பு வட்டாரம் ரொம்ப சின்னது... ஆனா எனக்கு நண்பன்னு முடிவு பண்ணிட்டா யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு குடுக்கமாட்டேன் ...


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி குளியல்... தாய் பாசம் மாதிரி... எந்த எதிர் பார்ப்பும் இல்லாம கொட்டிகிட்டே இருக்கும்
கடல்... காதலி மாதிரி... சில சமயம் சுகமான தழுவல் இருக்கும்... சில சமயம்...பொய் கோபமான அடி இருக்கும்...
ரெண்டையும் விரும்புகிறவன் ...
அருவி குளியல் அதிக வாய்ப்பு இல்லை...கடைசியா மங்கி பால்ஸ்...
கடல் குளியல் அடிக்கடி... மாதம் இருமுறையாவது...7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்...பின்பு அவர் பழகும் விதம்... நிச்சயம் வெளி தோற்றம் அல்ல...
அவர்கள் பழகும் விதம் எனது முதல் சந்திப்பில் பிடித்தால் மட்டுமே ... மறுபடி அவரை தொடர்வேன் ...


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: யாரையும் சிரித்தபடி எதிர்கொள்ளும் வழக்கம் ..

பிடிக்காத விஷயம் : பிடிவாதம்... . ( இதனாலே நிறைய பேர இழந்துருகேன் )


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு என்னால் தற்போது பதில் அளிக்க முடியவில்லை.
சீக்ரம் சொல்றேன்.. (செல்லம் எங்கமா இருக்க?)


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

என்னோட அன்பான அக்கா... அப்புறம் நண்பன்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ப்ளூ ஜீன்ஸ்... மெருன் ஷர்ட் .. வைட் கலர் வைகிங் பனியன்,, கிரே கலர் ஜாக்கி.... வேண்டாம் விடுங்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எவனோ ஒருவன் வாசிக்கிறான் ... அலைபாயுதே


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

சிகப்பு

14.பிடித்த மணம்?

என் மனதை வருடும் எந்த மனமும் ...
குறிப்பாக
குழந்தையின் மேல் வரும் பவுடர் வாசம்
சந்தனம்..
அம்மாவின் சமையல் வாசம்
இப்படி நெறைய..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கலையரசன் -வடலூர்காரர்.. வந்த சிறிது நாட்களில் பலரை கொள்ளை அடித்தவர்... அட அவர் எழுத்தின் மூலமாக அடுத்தவங்க மனசங்க...

பப்பு - இளைமையான எழுத்துக்கு சொந்தகாரர்... அவரின் சில எழுத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடு வந்தாலும் அவரின் வயசுக்கு ஏற்ற சிந்தனை மற்றும் அவரின் வயதுக்கு உரிய சமூக பார்வை... கலக்கல் தான் ... அவரது பதிவுகள் இப்போது ஆங்கிலத்தில்...

ஹாலிவுட் பாலா
அண்ணா... இவர் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்...
ஆங்கில படங்களின் விமர்சனத்தால் பின்னி பெடல் எடுப்பவர்.... விரைவில் அவர் மீண்டும் வர எதிர் பார்கிறேன்...

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

வினோத்கெளதம் எனது நீண்ட கால நண்பன்... பதிவுலகை எனக்கு அறிமுக படுத்தியவன்...
அவன் பேசுவதை மட்டும் ரசித்த என்னை அவன் எழுத்தின் மூலம் வியக்க செய்தவன்..
அவன் எழுதிய பதிவுகள் தற்போது இல்லை என்றாலும் புது முகவரியில் தொடர்கிறான்...
அவன் எழுதியது அனைத்தும் எனக்கு பிடித்தது...
குறிப்பாக தற்போதைய முகவரில் எழுதிய
வாழ்கையின் பக்கங்களில் விதியின் செயல்கள் நான் மிகவும் ரசித்த ஒன்று...17. பிடித்த விளையாட்டு?

ஷட்டில் , செஸ்... அப்பறம் நம்ம கபடி...

18.கண்ணாடி அணிபவரா?

அணிபவன்... படம் பார்க்க போகும் போது மட்டும் .. (பின்ன.. போய் கதை வசனம் மட்டும் கேட்டுகிட்டா வர முடியும் ?)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

என்னை சிறிது நேரம் இந்த உலகத்தில் இருந்து மறக்க செய்யும் படங்கள் .... எந்த மொழியாக இருந்தாலும்... குறிப்பாக... வன்முறை இல்லாத மெல்லிய காதல் இழை ஓடும் கதைஅம்சம் உள்ள திரை படங்கள் ...
மொழி.. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று20.கடைசியாகப் பார்த்த படம்?

ராஜாதி ராஜா... (அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க ? காலத்தின் கட்டாயம் )

21.பிடித்த பருவ காலம் எது?

பனி காலம்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

MANUFACTURING TECHNOLOGY BY A.B GUPTA
(ஓவரா இருக்குனு நினைக்காதிங்க.. நண்பர் ஒருவர் வகுப்பு எடுக்க நோட்ஸ் கேட்டு இருக்கிறார்... வேற வழி இல்லாம படிக்கிறேன் ஒன்னும் புரியமாட்டுது )

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தோணும் போது ... எப்போ தோணும்னு எனக்கே தெரியாது...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : என்னை ஒரு நொடி நிறுத்தி மனதை வருடும் ஓசை எதுவும்...
பிடிக்காத சப்தம்: அரசியல் மேடை பேச்சு...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மேற்கு வங்கம் . என் அக்கா வீடு அங்கு இருக்கும் போது போவேன்...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்குனு சொன்ன யாரும் நம்ப மாட்றாங்க ...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நான் தப்பு பண்ணாம என்னை யாராவது எதாவது சொல்லிட்டாலோ இல்ல செஞ்சிடாலோ ...
வேண்டும் என்றே அதே தவறை மீண்டும் செய்யும் குணம்...
(தப்புன்னு தெரியும் திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன் )

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இது எனது நண்பர் வினோத் சொன்ன பதில் தான்...

கொடைக்கானல்..

எத்தனை முறை போனாலும் சலிக்கவே சலிக்காத ஊர்..
ஒரு அமானுஷ்ய அழகு எல்லா இடத்திலும் ஒளிந்து கொண்டு இருக்கும்..

இன்னொரு இடமும் உண்டு

ஏற்காடு... என்னோட பல நினைவுகளை சுமந்து இருக்கும் இடம் அது...


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் பிரச்சனை இல்லாம

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

வேற என்ன ? சூப்பர் பிகர் பார்த்தா சைட் அடிக்கிறது தான் ... சைட் மட்டும் தாங்க..


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வீழ்ச்சி என்று தெரிந்திருந்தும் எழுச்சியுடன் போராடும் போர்களம்

Sunday, May 17, 2009

வெளிநாட்டு மோகம்...

இது நான் எழுதி இரண்டு மதங்கள் ஆகின்றன... நான் இந்தியன் இல்லை இரண்டாம் பாகமாக வெளிஇட இருந்தேன்.. சில காரணகளுகாக தவிர்த்து விட்டேன்.. இப்பொழுது உங்கள் கருத்துகளுக்காக இங்கே வேறு தலைப்பில்..

2004 ..

ஹாய்
கைஸ் எப்படி இருக்கீங்க ? அதே மாதிரி தான் இருபிங்க.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. நிம்மதியான வெளிநாட்டு வாழ்க்கை நான் இங்க வந்து 5 ஆகுது.
நல்ல வேலை... கை நெறைய சம்பாதிக்கிறேன் வீடு ,கார் எல்லா வசதியும் இருக்கு..
காலைல 6 மணிக்கு போனா இரவு 11 மணிக்கெல்லாம் வந்துடுவேன்... வாரத்துல ஒரு நாள் லீவ் ... அன்னைக்கு நல்ல ஊர் சுத்துவேன்..நெனச்செதெல்லாம் வாங்குவேன்... இங்கே ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிகிட்டேன் ... அவளும் சம்பாதிகுறா ... நல்லா போகுது லைப்...
10 வருடங்களுக்கு பிறகு... 2009..
நான் வேலைக்கு சேர்ந்து 10 வருடங்கள் ஆகிறது ... இன்று எனது மேலதிகாரியை பார்த்து எனது காண்ராட் ரினிவல் பண்ணனும் ,, திரும்பவும் ஒரு 10 வருஷம் எக்ஸ்டென்சன் தருவாங்கன்னு நெனைக்குறேன் ... சும்மாவா 10 வருஷம் இந்த கம்பனிக்கு எப்ப்டி உழசிருகேன்...நான் இல்லன இங்க ஒரு வேலையும் நடக்காது...

அலுவலகத்தில்..

"good morning sir"
"yeah.. gud morng mr.xxx.. get in... take your seat please..
"thankyou sir"
"mmm.. anything important?"
"yes sir... about my contract"
"contract..? its going to be finish off na?"
"yes sir... thats y i came to meet you to renewal my contract"
"renewal...? what are you talking about?"
"i want to extend my contract for some more years..."
"are you joking mr.xxx? your contract period is only for 10 years.. your extension is not possible"
"what?"
"yeah... we need youngsters... not you... we need only young indians... they are so brilliant than you and they only can work hard.."
"but i worked for this company for 10 years"
" thats y we gave you salary"
" i hav no anyother experiences than your company.. where shall i go?"
"thats your mistake mr.xxx.. we are not responsible for that.. you should try another job before winding of your contract..you may go now"
"you bastard..."
"hey mind your tounge .. you black indian bitch... security... send him out"

ஐயோ இப்படி எல்லாம் ஒரு நிமிஷத்துல என் கை விட்டு போச்சே .. பரவாஇல்லை என் மனைவி வேலை பாக்குறா ஒரு 6 மாசம் ஓட்டிட்டா வேற வேல தேடிக்கலாம்...
இரவு வீட்டில் ..

"honey"
"yeah...."
"i want to search a new job.."
"why? what happend to your job?"
"my contract is going to finish by next week..."
"next week? you know very well that your contract going to be finish.. then you didn't search another job six months before? how can you find new job with in a week?"
"i trusted in renewal of my contract but now not possible "
"bull shit... how can you run our family?"
"you are earning na?"
"so?"
"we will manage for six months... i will get new job with in this gap"
" r u crazy?.. i cant.. i cant live with you... i'm going to divorce you .. bye"

ச்சே இவ்ளோ தான வெளி நாட்டு வாழ்க்கை.. உடம்புல தெம்பும் புதுசா யோசிக்கிற மூளைக்கு மட்டும் தான் இங்க மதிப்பா ? இப்படி என் சோகத்தை தீர்த்து கொள்ள என் கஷ்டத்தை சொல்லி அழ கூட ஒரு துணை இல்லாமல் நிற்கிறேனே.... வயசான காலத்துல நிமதியான வாழ்க்கை வாழ இங்க உள்ளவர்களுக்கு மட்டும் தான் உரிமையா?

10 வருடம் என் ரத்தத்தை சிந்தி வேலை செஞ்சது பணத்துக்கு மட்டுமா செய்தேன்..நிம்மதியான வாழ்கைக்காகவும் தானே ?
இந்த உழைப்பை நான் இந்தியாவில் காட்டி இருந்தால்.. எவ்ளவு கவுரவமாக இருந்திருக்கலாம்?

என்னை மன்னியுங்கள் எனது சகோதர சகோதிரிகளே.. இந்தியாவில் நான் இருக்கும் போது கஷ்டம் என்று இருந்தாலும் ஒரு நாளும் என்னை பசியோடு தவிக்க விட்டதில்லை நீங்கள்..
என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள எத்தனை உறவுகள், நண்பர்கள்.. உங்களை எல்லாம் துச்சமாக மதித்து நடந்ததற்கு எனக்கு இந்த தண்டனையா? எனக்கு உணவும் கல்வியும் இலவசமாக அளித்து எனது இந்திய தாய் திருநாடு அல்லவா?
இப்போது உணர்கிறேன்.. ஆனாலும் நான் என் தாய் நாட்டிற்கு இப்போது திரும்ப போவதில்லை.. இபொழுது என் உடம்பு , ஓடுகிற ரத்தம் எல்லாம் வெளி நாட்டுகாரன் தான் சுயலாபத்திற்காக என்னை வளர்த்தது.. ஒரு நாய் போன்று... நான் இந்தியன் என்ற அந்த தகுதியை இழந்து 10 வருடங்கள் ஆகின்றன.. நான் மீண்டும் இங்கே ஒரு வேலை தேடி... அவர்கள் என்னை அவர்கள் நாட்டிற்காக பயன்படுத்தும் நேரம் அதை உதறி விட்டு எனது உழைப்பு எனது தாய் நாட்டிற்கு மட்டும் என சொல்லி என் தாய் நாட்டிற்கு வருவேன்.. நிச்சயம் வருவேன்..
இந்தியனாக...

Sunday, May 10, 2009

சிதம்பர சொர்க்கம்...

சிதம்பரம்னு சொன்னா எல்லோருக்கும் நினைவுக்கு வருவது... நடராஜர் கோவிலும், பக்கதுல இருக்குற பிச்சாவரம்.. அது ரெண்டு தான்....
ஆனா.. இயற்கை எழில் கொஞ்சும் ஆனால் இன்னும் சுற்றுல தலமாக அறிவிக்காத பல இடங்கள் நிறைய உண்டு...
( நல்லவேளை சுற்றுலா தலமாக மாற்றி அதையும் கெடுக்காம இருகாங்க ) பிச்சாவரம் போகனும்னு நெனகிரவங்க.. பக்கதுல இந்த இடங்களுக்கும் போலாம்...
அட எந்த இடம்னு இன்னும் சொல்லல இல்ல...?
நெறைய இருக்குங்க...
முடசல் ஓடை, எம் .ஜி.ஆர் திட்டு , திட்டு, கிள்ளை பீச்... இப்படி நெறையா...


இந்த பதிவுல எம் ஜி ஆர் திட்டு பத்தி பார்க்கலாம் ...
உங்களுக்கு பிடிச்சிருந்தா மற்ற இடங்களை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்...


பேருக்கு
ஏற்ற மாதிரி.. எம் .ஜி. ஆர், திட்டு ஒரு தீவு...
எம். ஜி. ஆர் அங்க வந்ததா சொல்றாங்க... பிச்சவரதுல எம். ஜி. ஆர்.. நடிச்ச படம் ஷூட்டிங் நடக்கும் பொது. அவர் வந்தாருன்னு சொல்றாங்க...
ஆனா அங்க ஒரு எம்.ஜி. ஆர் சிலை இருக்கு... அது அந்த தீவ நோக்கி கை காட்டுற மாதிரி வச்சி இருப்பாங்க...

மீனவர்கள்.. தங்களோட சந்தோஷமான வாழ்கைய யார் தொந்தரவும் இல்லாம வாழ்ந்துகிட்டு இருந்த தீவு அது .. ஆனால் சுனாமிக்கு பிறகு அந்த அழகான தீவு தன்னோட அன்பான மக்களை இழந்துட்டு ... தன்னோட அழகை மட்டும் இன்னும் மிச்சம் வச்சிருக்கு...


ஆனாலும் அவங்க வாழ்ந்த வீடு, தோப்பு, உடைந்த படகுகள் எல்லாமே இன்னும் அந்த கொடுரத்துக்கு சாட்சியா அங்கே அமைதியா இருக்கு... அந்த அமைதி கூட அந்த தீவுக்கு ஒரு திகிலான அழகை தருது... அதை பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கும் ...

எனக்கு தோணும் போதெல்லாம் அங்கே நண்பர்களுடன் போவேன்... குளிச்சிக்கிட்டு விளையாடினா நேரம் போவதே தெரியாது... இந்த கடற்கரைல சுண்டல் இல்ல, மாங்கா இல்ல,கடலை இல்ல, கடலை போடுறவங்களும் இல்லை.. தனிமை விரும்பிங்களுக்கு ஏற்ற இடம்.. சனி, ஞாயிறு கொஞ்சம் கூட்டம் வரும் மற்ற நாள் எல்லாமே அமைதி தான்...

அங்கிருந்து
.. பிச்சாவரம் கடலையும், பரங்கிபேட்டை கடலையும் பார்க்கலாம்...


எப்படி போறது?
சிதம்பரதுல இருந்து ஒரு 12 கீ மீ தூரத்துல இருக்கு... பிச்சாவரம் பஸ் நெறைய இருக்கு ... ஆனா வண்டி வச்சிருந்தா இன்னும் வசதி...
சிதம்பரம் பிச்சாவரம் ரூட்ல கிள்ளை தாண்டினதும்..வலது புறம் பிச்சாவரம் போகும் வழி... இடது புறம் ஒரு 20 அடி தள்ளி போய் கிள்ளை காவல் நிலையம் தாண்டி வலது புறம் திரும்பி ஒரு 2 கீமீ போன எம். ஜி. ஆர் திட்டு வரும்...நேரா திட்டுக்கு வண்டில போக முடியாது... வண்டிய ஆத்துக்கு இந்த பக்கம் நிறுத்திட்டு .. படகுல போகணும்... ஒரு 10 நிமிட படகு பயணம்... போக வர ரெண்டுக்கும் சேத்து ஒரு ஆளுக்கு 20 ருபாய் கேப்பாங்க... கூட்டம் அதிகம்உள்ள நாள்னா 30 ருபாய் கேப்பாங்க ..அக்கரைல தீவு... அங்க போய் இறங்குனா நேரம் போவதே தெரியாது...


நானும்
எனது நண்பர் பதிவர் வினோத்கெளதம் அவர்களும் அடிக்கடி போகும் இடம் இது... அமைதியான இடம்.. நாங்க போகும் போது அவன் பண்ற அழும்ப எல்லாம் ஒரு தனி பதிவாக தான் எழுதணும்.விரைவில் எழுதபோறேன்.
வார இறுதில் குடும்பத்துடன் பயம் இல்லாமல் செல்லலாம்... எது தேவை என்றாலும் கிள்ளைல இல்லை சிதம்பரம்துல வாங்கிக்கிட்டு போய்டனும்... எதுவும் அங்க இல்ல.. அழகு மட்டும் உள்ள அற்புதமான இடம்...
அட ஒரு தடவ போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க...

Wednesday, May 6, 2009

கனவுகள் காணும் வயசு...

ஹலோ எக்ஸ் கியுஸ் மீ.. கொஞ்சம் செக்சியா இருக்கும் பரவா இல்லையா ?


பெயர்
: கிஷோர்

வயது:கனவுகள் காணும் வயசு 17 (11 வருஷத்துக்கு முன்னாடி)

படிப்பு: கல்லூரி முதலாம் ஆண்டு.

பிரச்சனை: வயசு கோளாறு...
பிரச்சனை விரிவாக்கம்...இப்போ
எல்லாம் எனக்குள்ள எதோ ஒரு மாற்றம்... என் பார்வையில் ஒரு குறுகுறுப்பு தெரிவது எனக்கே தெரியுது...
யாரை பார்த்தாலும் ஒரு விஷம புன்னகை என்னுள் எழுகிறது...
யார பத்தி வேனாலும் என்னால சுலபமா தப்பா கமெண்ட் பண்ண முடியுது... அவங்க என்னைவிட வயசுல பெரியவங்கள இருந்தாலும்...(ஆனாலும் அது தப்புன்னு தெரியுது)நேத்து கூட எதிர் வீட்டு பொண்ணு எப்போவும் போல தான் என்கிட்ட பேசுச்சி ...
ஆனா என்னால தான் சரியா முகம் குடுத்து பேச முடியல... (ஏன் அவ முகத்த பாத்துகூட பேசமுடியல... தூ... மனுஷனா நீ?)


காலேஜ்எந்த பொண்ணு கிராஸ் பண்ணுனாலும் ... அந்த பொண்ண பத்தி ஒரு கமண்ட் பண்றேன்.. ஏன்னு தெரியுல... என்ன வேணும் எனக்கு?
யாராவது ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா போன எனக்குள்ள அவங்கள பத்தி நல்ல விதமா நினைக்க தோணல...
தெருவுல..
பஸ்ல...
மார்க்கெட்ல...
தீயடேர்ல...

அதெல்லாம் விடுங்க... நேத்து காலேஜ்ல மேம் கிளாஸ் எடுக்கும் போது...(ச்சே சொல்லவே வெக்கமா இருக்கு... என்ன பத்தி என்ன நினைகிரிங்கனு என்னால உணர முடியுது... ஆனா அதான் நடந்தது...)இப்படி எந்த பொண்ணுங்கள பாத்தாலும் எனக்குள் எழுகிற ஒரு குறுகுறுப்பு ..
அவர்களை என் பக்கம் திசை திருப்ப நான் எடுக்கும் நடவடிக்கைகள்... எல்லாமே என்னகே புதுசா தெரியுது...

பசங்க சொல்றாங்க இதுக்கு பேரு வயசு கோளாரம் ...


எனக்கு ஒன்னும் மட்டும் நல்லா புரியுது...
இது கனவுகள் காணும் வயசு தான்...
ஆனால் நான் காணும் கனவுகள்........................? கடவுளே....

சரி... அது நடந்து பதினோரு வருஷம் ஆச்சு... இப்போ அதுக்கு என்னனு தானா கேக்குறிங்க...?

அப்போ வந்த பல குழப்பங்களுக்கு இன்னும் எனக்கு விடை தெரியுல...

என்ன கேட்டா எந்த அம்பள பசங்களுக்கும் தெரியாதுன்னு தான் சொல்வேன்...

பொண்ணுங்களுக்கு வீட்ல அம்மா பசங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் சொல்லி குடுப்பாங்க .. ஆனா நாம பயலுங்க... தானா தெரிஞ்சிகிட்டா தான் உண்டு...


அப்படி தானா தெரிஞ்சிகுற பசங்க உண்மைய தெரிஞ்சிகுறது இல்லன்னு சொல்லணும்...


இதுல கசப்பான உண்மை என்னன்னா பசங்க தனக்குள்ள வர மாற்றங்கள பத்தி பொண்ணுங்க புரிஞ்சி வச்சிருக்குற அளவுகளுக்கு கூட புரிஞ்சிக்கிறது இல்ல...

இனிமேலாவது... பசங்க கிட்ட (ஆணோ, பெண்ணோ) அந்த அந்த வயசுல ஏற்படுற மாற்றங்கள பத்தி.. மனம்விட்டு பேசி அவங்கள தெளிவுபடுத்துவோம்...