Saturday, May 30, 2009

என்னை போல இருக்காதிங்க

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடித்திருக்கா ஹேய்.. தெரியவில்லை...

சுரேஷ் மாலதிய பாக்கும் போதெல்லாம் இந்த பாட்டு தான் அவனுக்கு நினைப்பு வந்து தொலைக்குது...
கொஞ்ச நாளா இந்த பாட்டு தான் சுரேஷ்க்கு சுப்ரபாரதமா இருக்கு...
பின்ன? ஒரு மாசமா மாலதிய பாக்குறான் ... சில சமயம் சிரிக்கிது... சிலசமயம் முறைக்கிது... சில சமயம் பயபுள்ள ஒரு தெரு நாய பாக்குற மாதிரி கூட பாக்க மாட்டுது...
இவனும் அலையுறானே தவிர அவளை லவ் பண்ணுரியாடானு கேட்டா அவனுக்கே தெரியாது...
இருந்தாலும் அவளை பாக்கும் போது நாக்கு மேல ஒட்டிக்கிட்டு பேச்சு வராம கேவலமா சிரிப்பான் பாருங்க...அந்த கொடுமைய பாக்க ரெண்டு கண்ணு இருந்தா அதுல சுண்ணாம்பு தடவிக்கலாம்..

அவளை பத்தி பேச ஆரம்பிச்சா போதும் கிழியுற வரைக்கும் பேசுவான்...
( கேக்குறவன் காது தான்...)
நான் கூட அவன்கிட்ட கேட்டேன் ஏன்டா இப்படி ஒரு ரிசல்டும் தெரியாம இப்படி பைத்தியக்கார பயலா சுத்துற உனக்கே இது அசிங்கமா இல்லயானு?
அட ஒரு தடவ ஏன்டா மார்கழி மாசத்து நாய் மாதிரி அவ பின்னாடியே அலையுற லவ் பண்ணுனா அத அந்த சனியன் கிட்ட சொல்லி தொலைக்கலாம்ல.. அத விட்டுட்டு இப்படி என் காசுல குடிச்சிட்டு எனக்கே பிளேடு போட்டுக்கிட்டு இருக்கனு கூட கேட்டேங்க... அதுக்கும் கொஞ்சம் கூட சூடு சொரண இல்லாம சிரிகிறான்...

ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன பாக்கும் போது தாடி வச்சிக்கிட்டு இருந்தான்... அப்பவே புரிஞ்சி போச்சு பயபுள்ளைக்கு ரிவெட் அடிச்சிடானு ...
இருந்தாலும் கேக்கணுமேனு கேட்டு தொலைச்சேன்...
மச்சான் மாலதிக்கு கல்யாணம்டா... நேத்து அவங்க அண்ணன் பத்திரிக்கை குடுத்துக்கிட்டு இருந்தாருன்னு சொன்னான்.,..
சரி விடு மச்சான்... நீ முன்னாடியே உன் காதல அவ கிட்ட சொல்லி இருக்கனும் இப்போ வருத்தபட்டு என்ன ஆகபோது .. விடு வேலைய பாரு... கஷ்டமா இருந்தா வா டாஸ்மாக் போலாம்னு 'அட்வைஸ் ' பண்ணுனேன்...

போய் ரெண்டாவது குவாட்டர் உள்ள போகும் அந்த நாய் சொல்லுது...
" எனக்கு கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லடா... நான் அவளை லவ் பண்ணுனா தான எனக்கு கஷ்டமா இருக்கும்...?"
"அப்பறம் ஏன்டா தாடி...?"
"இனிமே எப்படி பொழுது போகும்னு யோசிச்சேன்டா அதான் ஷேவ் பண்ண மறந்துட்டேன்... பரவாஇல்ல நம்ம 3 வது தெரு சுகந்திய இனிமே பாலொவ் பண்ண வேண்டியது தான்..."
"அப்போ சுகந்திய லவ் பண்ண போறியா?"
"ஏன்டா இப்படி லவ் லவ்னு அசிங்கமா பேசிக்கிட்டு... கடலை போடுறதுல ஒரு சுகம்டா அதுக்கு தான் மாலதிய ட்ரை பண்ணுனேன் மிஸ் ஆகிடிச்சு... இப்போ சுகந்தி அவ்ளோ தான்..."

நான் மனதிற்குள்...
அட பாவி உண்மையான காதல் தோல்வினு நெனச்சி உனக்கு சரக்கு வாங்கி குடுத்துக்கிட்டு இருக்கேனே... எனக்கு இந்த சமுதாயத்துல என்ன பேரு கிடைக்கும் தெரியுமா?
ரிவெட் அவ உனக்கு வைக்கலடா ... உன்ன குடிக்க கூப்பிட்டு எனக்கு நானே வச்சிகிட்டேன்...
எவ்ளோ ட்ரிக்சா அடுத்தவன் காசுல ஆட்டய போடுறானுங்க?
நான் அவன கூடிக்கிட்டு வந்ததுக்கு என்னோட பர்ஸ் என்னை கேவலமா பாக்க... எனக்கு ஆப்பு வச்சிடான்னு நெனச்சிகிட்டு இருக்கும் போது...

அந்த நாய் சொல்லுது... மச்சான் இன்னொரு ஆப் சொல்லேன்..

11 comments:

Suresh said...

கதை எல்லாம் சூப்பர் ஆனா கேரக்டர் பெயர் தான் ;)

KISHORE said...

என்ன பண்றது மச்சான்.. சுரேஷ்னு பேரு வச்சா இப்படி தான் இருபாங்க போல இருக்கு...

கலையரசன் said...

எனக்கு கூட லவ் பெயிலியர்தான்..
ஊருக்கு வந்தவுடன, சொல்லியனுப்புறேன்!
வந்து மொய் வச்சிடு!
(அதான் மாப்பு கடைசியா சொன்ன Halfஉ)

KISHORE said...

@ கலையரசன்
டேய் இனிமே எவனாவது லவ் கிவ் னு ஊருக்குள்ள வந்திங்க... சரக்குல ஆசிட் கலந்து குடுத்துடுவேன்

வெங்கிராஜா said...

ஐயோ பாவமுங்க நீங்க... எப்பவுமே இந்த கூட உக்காந்து சரக்கு வாங்கித்தர்றவனும், தூது போறவனும் தான் உதை வாங்குறான்.. ஹீரோவும், வில்லனும் அழகா ஒவ்வொரு ஃபிகரை தள்ளிட்டு போயிடுறானுங்க!

//சுரேஷ்னு பேரு வச்சா இப்படி தான் இருபாங்க போல இருக்கு//
LOL.... அசிங்கப்பட்டான்(ர்) ஆட்டோக்காரன்!

Kanna said...

சுரேஷ்னு பேர் வைச்சதுல நிறைய உள்குத்து இருக்கும் போல இருக்கே....


கலைக்கு சரக்குனாலும் வாங்கி குடு...ஆனா மதியம் சாப்பாட்டுக்கு மட்டும் கூப்டுறாத...எதும் சந்தேகம்னா அவனே வாக்குமூலம் குடுத்த கேள்வி் பதிலை படிச்சுபாரு.....


மச்சான் போட்டோல பின்னாடி போர்டு தெரியுதே....? மழை ஏதும் பெஞ்சதுனால பள்ளிகூடம் பக்கம் ஏதும் ஓதுங்கினயா..?

vinoth gowtham said...

மச்சான் டிஸ்கி தான் சூப்பரு..
கதை ஹீரோ பேர் வித்தியாசமா இருக்கு..

KISHORE said...

@ வெங்கி..

உண்மை தான் வெங்கி... காதலுக்கு தூது போனவனும்... காதல தோல்விக்கு சரக்கு வாங்கி குடுதவனும் நிம்மதியா இருந்ததா சரித்திரமே இல்ல

KISHORE said...

//Kanna said...

சுரேஷ்னு பேர் வைச்சதுல நிறைய உள்குத்து இருக்கும் போல இருக்கே....


கலைக்கு சரக்குனாலும் வாங்கி குடு...ஆனா மதியம் சாப்பாட்டுக்கு மட்டும் கூப்டுறாத...எதும் சந்தேகம்னா அவனே வாக்குமூலம் குடுத்த கேள்வி் பதிலை படிச்சுபாரு.....


மச்சான் போட்டோல பின்னாடி போர்டு தெரியுதே....? மழை ஏதும் பெஞ்சதுனால பள்ளிகூடம் பக்கம் ஏதும் ஓதுங்கினயா..?//
ஐயோ ஒரு குத்தும் இல்ல... சும்மா ஒரு பேருக்காக வச்சது .அவன் என் பதிவுலக மச்சான்..

கலைக்கு சாப்பாடுனாலும் புல் மீல்ஸ் தான் சரகுனாலும் புல்லு தான்...

பள்ளிகூடம்மா ? அது எல்லாம் தேர்தல் அப்போ வோட்டு போட பள்ளிகூடம் பக்கம் போனதோட சரி...

KISHORE said...

//vinoth gowtham said... மச்சான் டிஸ்கி தான் சூப்பரு..
கதை ஹீரோ பேர் வித்தியாசமா இருக்கு.//

நன்றி மச்சான்...

ஏன்டா எல்லோரும் இப்படியே படுதுரிங்க...?

சுரேஷ நான் கேவலமா பேசுறதும் அவன் என்ன ரொம்ப கேவலமா பேசுறதும்... கலாம்காலமா நடக்குறது தானே ?

vinoth gowtham said...
This comment has been removed by a blog administrator.