Wednesday, April 29, 2009

விண்ணை தாண்டி வருவாயா?




நிலா... என் மிக சிறந்த நண்பர்களுள் ஒருவள் ... சின்ன வயசுல.. நிலவா பாத்துக்கிட்டு சாப்பாடு சாப்டது... நிலாவ பாத்துகிட்டே ஓடி கீழ விழுந்தது... நிலா கரையும் போது அழுதது.. வளரும் போது சிரித்தது...
நிலவுல பாட்டி வட சுடுறாங்கனு நம்புனது... இப்படி நிலா.. என் சிறுவயதில் கள்ளம் இல்லா சிரிப்புடன் என் தோழியாய் தன் பயணத்தை என்னுடன் தொடங்கியவள் ...

நான் வளர்ந்து கல்லூரி படிக்கும் போது... காதலை சுவாசிக்கும் போது... காதலாய் என்னை பார்த்த போது... அவள் எனக்கு அவளாய் தெரிந்தாள்...








நான்
காதலை இழந்தபோது.. தனிமை நான் நேசிக்க தொடங்கிய போது.. எனது தோழி எனக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையாக மாறி தனது பயணத்தை தொடர்ந்தாள்...

மீண்டும் நான் வாழ்வை தொடர்ந்த போதும் ... சகோதரியாக , சகோதரனாக, தந்தையாக, அன்னையாக, நண்பனாக...என்னுடன் இன்னும் இருக்கிறாள் ...


இப்படி என்னுடன் பல நாள் பழகியவள் என் வாழ்வின் துயரங்களில் மௌனமாய் தன் பார்வையாலும், புன்னகையாலும் மட்டுமே விடை சொன்னவள் ..
என்னுடன் இதுவரை பேசாதது ஏனோ?
நீ என்னுடன் பேசும் தருணதிற்காக இந்த தரணியில் தினம் தினம் என் ஆயுள் வரை காத்திருப்பேன் தோழி..
விண்ணை தாண்டி வருவாயா?

Sunday, April 26, 2009

நிறுத்துங்க உங்க சண்டைய...

கொஞ்ச நாளாவே வலை பூவுல ஒரே பஞ்சயத்து தான் போங்க... இவரு அவரை திட்டுறது... அவரு இவரை திட்டுறது... இவரு அருவா எடுக்குறது.. அவரு ஆசிட் ஊத்துறதுனு... ஒரே தாறுமாறா போகுது...

என்ன பிரச்சனை?

ஒரே காரணம் தான்..

தனி நபர் விமர்சனம்....

நான் ஏற்கனவே என்னோட பதிவுல சொல்லி இருக்குற மாதிரி... இந்த தளம் உருவாக்கபட்டதின் அடிப்படை நோக்கமே ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை தயக்கம் இன்றி பகிர்ந்து கொள்ள மட்டுமே...

அதை விடுத்து கத்தி சண்டை போடுறாங்க...

பினூடதுல இவங்க போடுற சண்டைய பார்த்தா... தெரியாத்தனமா இவங்க ப்ளாக் பாலொவ் பண்ணிடோம்னு தான் சத்தியமா தோனுது..

நீ என்னத்த எழுதி கிழிச்சிட்ட எங்களுக்கு புத்தி சொல்ல வந்துடனு கேப்பிங்கனு தெரியும்..
நாங்க தான் எழுதல... அட நீங்க எழுதுறத படிச்சி பொழுத ஓட்டலாம்னு ஒரு வேண்டுதல் தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...

ஒருவர் தனது கருத்தை பதிவாக வெளியட முழு உரிமை உண்டு அதை போல அதை படித்தவர்களுக்கும் தன்னுடைய கருத்தை சொல்ல முழு உரிமை உண்டு...

இங்க பிரச்சனை ஆரம்பிகிறதே பினூடதுல தான்...

ஒருவர் பதிவு பற்றிய உங்கள் கருத்து முரணாக இருந்தால் அதை நாசுக்காக வெளிஇடுங்கள்... அதுவும் பதிவை பற்றி மட்டும்...
அதை தவிர்த்து எழுதியவரை பற்றிய தனி நபர் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை...
இன்று பிரபலமாக இருக்கும் பதிவுலக பிதாமகன்கள் (அட இந்த வார்த்தைய யாருப்பா கண்டு பிடிச்சது.. மொதல்ல மகாபாரதம் சீரியல நிறுத்தனும்..) அனைவருமே ஆரம்பத்தில் புதியவர்களாக இருந்தவர்கள் தான் என்பதையும்... நமது பதிவுக்கு பின்னுட்டங்கள் எதாவது வந்து இருக்கிறதா என்று காத்து கிடந்தவர்கள் தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது....

புதியவர்களும் எல்லாம் தெரியும் என்கின்ற போக்கை விட்டுவிட்டு எழுதுவது நல்லது...

அதனால இந்த நாட்டமையோட தீர்ப்பு என்னன்னா?
பயபுள்ளைங்க இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பதிவுல அடிச்சிகிட்டு வாரி விட்டுக்கிட்டு அலையுறத நிறுத்தனும்... அப்படி செய்யலைனா .. இவங்கள இந்த பதிவு உலகத்த விட்டே 18 வருஷம் தள்ளி வைக்கிறேன்... இவங்க கூட யாரும் அன்னம் தண்ணி புழங்க கூடாது...(வோட்டு போடுறது) நல்லது கேட்டது போக கூடது...(பினூட்டம் போடுறது)... அப்படி செஞ்சா அவங்களையும் தள்ளி வைக்கிறேன்...
அப்புறம் இந்த தீர்ப்ப மாத்தி சொல்ல சொல்லி யாரவது சவுண்டு விட்டு பினூட்டம் போட்டிங்கனா .. அவங்களையும் 18 வருஷம் தள்ளி வச்சிடுவேன்...
இதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு...

ஏலே... சண்முகம்.... விடுறா வண்டிய ...

Thursday, April 16, 2009

யாரோ அவன்...

தலைப்ப பாத்து இது ஒரு காதல் கதைனோ இல்லை ஒரு கிரைம் கதைனோ நெனச்சி உள்ள வந்து படிச்சி கமெண்ட் போட்டு வைதேரிச்சல் கிளபாதிங்க...
இது ரெண்டு P P பற்றிய கதைங்க... P P னா அட ... பொறுக்கி பொறம்போக்குங்க ... இன்னும் உங்க மனசுல என்ன என்ன தோணுதோ அதெல்லாம் திட்டுங்க..( உன்ன நெனச்சா தான் அதிகமா திட்ட முடியும்னு சொல்ல கூடாது ..)
சரி விஷயத்துக்கு வருவோம் ...

இந்த கதை ஈரோடு பஸ் ஸ்டாண்டுல ஆரம்பிகிறது ...

ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி... ஒரு நாள் என் மாமா வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு திரும்புரதுகாக ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... என்னோட பஸ் டைம் 9.30 மணிக்கு தான்... நான் 9 மணிகே வந்துட்டேன்... சரி மேல போய் கண்ணன்ல எதாவது சாப்பிடலாம்னு யோசிச்சி அப்பறம் வேணாம்னு விட்டுவிட்டேன்...
பஸ் வேற ரெடியா இருந்துச்சு... எப்போவும் நைட் டிராவல் பண்ற நான் அன்னைக்கு டே டைம்ல டிராவல் பண்ண வேண்டிய கட்டாயம்...
இன்னும் 7 மணிநேரம் போகணும் (என்ன கொடுமை சார்...)
ஒரு வழியாக பஸ் கிளம்பிச்சு...
கிளம்பி..ஒரு அரை மணிநேரம் இருக்கும்... சங்ககிரி வந்ததும் டமார்னு ஒரு சத்தம்...
என்னனு பாத்தா முன்னாடி டயர் வெடிச்சி கிழிஞ்சி போச்சு...(ஆரம்பமே இப்படியா?)
ஒரு வழியா டயர் மாத்தி கிளம்ப ஒரு மணிநேரம் ஆச்சு...
சேலம் வரைக்கும் அப்படி ஒரு வேகம் ரோடு நல்ல இருந்தால இருக்கும்... சேலம் வந்ததும் ஒரு அரை மணி நேரம் நிறுத்திடாங்க..(வழக்கமா 10 நிமிஷம் தான்) கேட்டதுக்கு வேற ஸ்டெப்னி ரெடி பண்ணிட்டு போலாம்னு சொல்லிடாங்க..( அட ரொம்ப பொறுப்பா இருகாங்க )
ஒரு வழிய சேலத்துல இருந்து கிளம்புனாங்க... நம்மள வீட்டுக்கு தான் கூடிக்கிட்டு போறாங்களோனு நம்பி ஏறி உக்காந்தேன்... அது நேரா ஆத்தூர் பக்கத்துல இருக்க ஒரு டிபன் சென்டர் முன்னாடி போய் நினுச்சி... கண்டக்டர் காலைல இருந்து விரதமாம்.. அதன் விரதம் முடிக்க விசில் ஊதிடாறு .. (தேவுடா)
விரதம் முடிக்க கண்டக்டர் இறங்க அவரு பின்னாடி டிரைவர் வழியில் தனக்கு ஒரு சிறு தீனி முடிச்சிகிட்டார்...
பஸ் ஆத்தூர் விட்டு கிளம்ப... திரும்பவும் வேகம்... அவசர படாதிங்க ஒரு 45 நிமிஷம்தான் திரும்பவும் v குற்றோடு வந்ததும் லஞ்ச் பிரேக்...( முன்னாடி நிறுத்துனது கண்டக்டர் விரதம் முடிக்க.. இப்போ வழக்கமா சாபிடவாம் )
லஞ்ச் முடிஞ்சி பஸ் எடுத்தாரு... இனிமே விருத்தாசலம் வரைக்கும் அவரு வேகமா போக நெனச்சாலும் அது முடியாது... நம்ம ரோடு அப்படி...
சரியா 1.30 மணிநேரம் தாலாட்டு... ஒப்பாரி... குத்து பாட்டு
(ரோடு தூக்கி தூக்கி போடுது) முடிஞ்சி பஸ் விருத்தாசலம் வந்துச்சி...
விருத்தசலம் பஸ் ஸ்டாண்டுல ஒரு 10 நிமிஷம்... டீ குடிகவாம்...
அப்பறம் கிளம்பி நெய்வேலி, வடலூர் வர... அதுக்கு அப்புறம் குறிஞ்சி பாடி வழியா திருப்பி விட்டாங்க.. வடலூர் தாண்டி பாலம் உடஞ்சி போச்சாம்...
ஒரு வழியா நான் சிதம்பரம் வந்து சேர மணி 6...
4.30 கு வர வேண்டிய பஸ் அது...
கதை அவ்ளோதான்...
அதுக்கு அப்பறம் ஏன் லேட்னு வீட்ல வேற கதை நடந்துச்சு அத விடுங்க...

எனக்கு இன்னைக்கு வரைக்கும் பல சந்தேகம் .. ரொம்ப துரம் போற பஸ்னா எதாவது ஒரு இடம் தான சாப்ட நிறுத்துவாங்க..? இவங்க மட்டும் எப்படி பல இடத்துல எதோ சொந்தமா டுரிஸ்ட் வண்டி எடுத்துட்டு போன மாதிரி நிறுத்துனாங்க?
இத்தன எடத்துல நிறுத்தி சாப்டும் , டீ குடிச்சும் ஒரு எடத்துல கூட மூச்சா போக நிறுத்தல ஏன்...?(சாப்பிடுற எடத்துல போய் மூச்சா போறதுக்கு பதிலா ஆசிட்ல கால விடலாம் )
பஸ்ல உள்ளவங்க (நான் உள்பட ) திட்டியும், பொலம்பியும் கொஞ்சம் கூட சூடு சொரண இல்லாம எப்படி அவங்கள அதே மாத்ரி இருக்க முடியுது.. ?
இப்படிபட்ட டிரைவர் கண்டக்டர் எல்லாம் எவன் செலக்ட் பண்றது.. அவன் யாரோ?
தெரிஞ்ச சொல்லுங்க அவன் வீட்டுக்கு ஆட்டோ இல்ல.. சுமோ இல்ல.. லாரி அனுபலாம்...
யாரோ அவன்...?

Monday, April 13, 2009

History Mystery

இது என் நண்பன் எனக்கு மெயில் அனுப்பியது.. பாருங்க பாத்துட்டுசொல்லுங்க... History Mystery



Have a history teacher explain this----- if they can.



Abraham Lincoln was elected to Congress in 1846.
John F. Kennedy was elected to Congress in 1946.

Abraham Lincoln was elected President in 1860.
John F. Kennedy was elected President in 1960.

Both were particularly concerned with civil rights.
Both wives lost their children while living in the White House.

Both Presidents were shot on a Friday.
Both Presidents were shot in the head

Now it gets really weird.

Lincoln 's secretary was named Kennedy.
Kennedy's Secretary was named Lincoln .

Both were assassinated by Southerners.
Both were succeeded by Southerners named Johnson.

Andrew Johnson, who succeeded Lincoln , was born in 1808.
Lyndon Johnson, who succeeded Kennedy, was born in 1908



John Wilkes Booth, who assassinated Lincoln , was born in 1839.
Lee Harvey Oswald, who assassinated Kennedy, was born in 1939.




Both assassins were known by their three names.
Both names are composed of fifteen letters.

Now hang on to your seat.

Lincoln was shot at the theater named 'Ford.'
Kennedy was shot in a car called ' Lincoln ' made by 'Ford.'

Lincoln was shot in a theater and his assassin ran and hid in a warehouse.
Kennedy was shot from a warehouse and his assassin ran and hid in a theater.

Booth and Oswald were assassinated before their trials.

And here's the kicker..

A week before Lincoln was shot, he was in Monroe , Maryland
A week before Kennedy was shot, he was with Marilyn Monroe.


Creepy huh? Send this to as many people as you can, cause: Hey, this is one history lesson most people probably will not mind reading!

Thursday, April 9, 2009

என்னுள் அவள்...


ஆதிரா...
எனக்காக பேசி... எனக்காக சிரித்து... எனக்காக மகிழ்ந்து ... எனக்காக பசித்து ... எனக்காக புசித்து...எனக்காக வாழ்வதாக சொல்லி என்னை தவிக்க விட்டு சென்றவள்...

அன்று ஒரு நாள் நாம் இணைவது காலத்தின் கட்டாயம் என்றாய் ... பின் ஒரு நாள் நாம் பிரிவது விதியின் விளையாட்டு என்றாய் ..

இந்த விதியின் சதி எனக்கு முன்பே தெரிந்திருந்தால்... நிறுத்தி இருப்பேன்.. கால துடிப்பை அல்ல உன் கால் கொலுசொலி கேட்டு துடிக்கும் என் இதய துடிப்பை..

நம் திருமணம் பற்றி வீட்டில் சொல் என்றேன்...
மறுத்தாய்...
ஏன் ? என்றேன்..
வீட்டில் வேறு இடம் பார்கிறார்கள் என்றாய்...
இன்னும் ஒரு வருடம் பொறுமையாக இரு நான் அதற்குள் நான் ஓரளவு சம்பாதித்து விடுவேன் என்றேன்...
மாப்பிள்ளை என்னை விட அதிகம் சம்பாரிகிறவர் என்றாய்..
அப்போ நான்? என்றேன்...
நீ தகுதியானவனா ? என்று உன்னை நீயே கேட்டுகொள் என்றாய்...
அது என்னை விரும்பும் போது தெரியவில்லையா? என்றேன்...
அது தான் நான் செய்த தப்பு என்றாய்...

இன்றும் என் இதயம் இயங்குகிறது... ஒரு இயந்திரத்தை போல.. ஆனால் துடிப்பது இல்லை... ஆம் அது தன் துடிப்பை நிறுத்திவிட்டது... அன்று நீ சொன்ன ஒரு வார்த்தையால்...

ஓடிவிட்டன வருடங்கள்..என்னவள் இன்னொருவனுடயவள் ஆக மாறி..
எவ்வளவோ முயன்று அவளின் நினைவுகளை என்னுள் இருந்து முற்றிலுமாக அழித்துவிட்டேன் என நினைத்தேன் ...

ஆனாலும் நேற்று பேருந்தில்.. ஒரு குழந்தை என்னை பார்த்து சிரிக்க.. அதை அழைத்து மடியில் அமர்த்தி... உன் பெயர் என்ன என்றேன்...
மழலை மொழி மாறாமல் சொன்னது... ஆதிரா..

பெயரை கேட்டதும் அதன் பெற்றோரிடம் குடுக்க நினைத்தும் செய்யவில்லை...
ஆம்... அவளை என் நெஞ்சோடு அனைத்து கொண்டேன்...

நீ என்னிடம் பேசியதும் பழகியதும் பின்பு விலகியதும் நீ சொன்னது போல விதியின் விளையாட்டாக இருக்கலாம்... ஆனால் எனது காதல் நிஜமானது.. உணர்வானது... உன்னதமானது...

Saturday, April 4, 2009

எங்க இருக்கா என் பொண்டாட்டி... ?

சொல்லறதுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு...

இந்த மாசமும் அடுத்த மாசமும் ஏகபட்ட கல்யாண பத்திரிகை வந்திருக்கு .. நண்பர்கள், கூட வேலை பாக்குறவங்க, சொந்த காரங்க அப்படின்னு ஏகபட்ட கல்யாணம்...

நான் என்ன சொல்ல வரன்னு கேக்குறிங்க அதானா...?

நிச்சயம் ஆன உடனே இவனுங்க பண்ற அழும்பு இருக்கே... அந்த பொண்ணு நம்பர் நிச்சயம் நடக்கும் போதே கால்ல விழுந்து கெஞ்சி கூதாடி வாங்கிட்டு வந்துடுரானுங்க.. முக்கியமான விஷயம் பேசும் போதெல்லாம் நம்ம கிட்ட ஓசி வாங்கி பேசுரவனுங்க... இப்போ 500,1000 னு டாப் அப் பண்ணி மணி கணக்குல கடலை போடுறானுங்க..( அந்த பக்கம் விதியேனு அட்டென்ட் பண்ணிட்டு இருக்கும் அந்த பொண்ணு...)

ஒரு பொண்ணு இவனுங்க பேசுரத கேக்குதுன்னு இவனுங்க பண்றது இருக்கே... காந்தி , புத்தர் எல்லாம் இவனுங்க கிட்ட வந்து எப்படி நல்லவனா இருக்குறதுனு கேட்டுகிட்டு போகணும்... அப்படி ஒரு பிட்டு... அட இவனுங்கள விடுங்க... ஏதோ காஞ்சி கிடந்தவனுங்க ஒரு பொண்ணு மாட்டிகிட்டதும் மேயுரானுங்கனு விட்டுடலாம்..

புதுசா கல்யாணம் பண்ணிட்டு ரவுசு பன்றவனுங்க இருக்கானுங்க பாருங்க... ஐயோ... நம்ம வைத்தெரிச்சல கொட்டிகிறதுகுன்னே நம்ம முன்னாடி வருவானுங்க... மச்சான் இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்ரமா போகணும் wife வெளில அழச்சிக்கிட்டு போகணும்... அட்ஜஸ்ட் பண்ணிகடா ..சரி போய் தொலைன்னு சொன்னாலும்... நைட் புல்லா தூக்கம் இல்லடா நாளைக்கும் லீவ் போடலாம்னு இருக்கேனு வெறுபேதுவானுங்க ..

அட இது கூட பரவா இல்லைங்க... பொண்டாட்டிய வெளிய அழச்சிட்டு போகும் போது இவனுங்க பண்றது இருக்கே.. எவ்ளோ இடைஞ்சல் பண்ணுவானுங்க தெரியுமா?
அட.. கல்யாணம் ஆகாத பசங்க ரோட்ல போவங்கலே ... அவங்க கண்ணுக்கு அப்படி இப்படி தெரியாம நடந்துக்கணும் ... அவங்க வைத்தெரிச்சல் பட்டா உருப்பட முடியாதுன்னு.. அறிவு வேணம்...? பைக்ல கட்டி புடிச்சிகிட்டு போறது... தியேட்டர்ல படத்த (தவிர) பாக்குறது... தேவை இல்லாதது எல்லாம் சிரிச்சி சிரிச்சி பேசுறது... ஒரே ஐஸ் கிரீம் வாங்கி பல்லு கூட விளக்காம நக்கி நக்கி சாப்டுறது... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....................

நான் பல சமயங்கள மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சது உண்டு... இப்படி காலத்துக்கும் அடுத்தவனுக்கு மொய் வச்சே நம்ம வாழ்கை ஓடிடுமோனு...?

டேய் நிறுத்து உன் வைத்தெரிச்சல ... தீயுற வாசம் வருதுன்னு சொல்றது காதுல விழுது ...

இத விட ஒரு வயசு பையன் நேரடியா எப்படிங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்குறது...?

இதனால பொண்ணு பாத்துட்டு வந்தவன்.. நிச்சயம் ஆனவன்... புதுசா கல்யாணம் ஆனவன் இவனுங்களுக்கெல்லாம் நான் சொல்லிகிறது ஒன்னு தான்... நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...நாங்களும் கல்யாணம் பண்ணுவோம்...

என்ன ஒன்னு எனக்குனு பொறந்தவ.. அந்த தேவதை.. எங்க இருக்கானு தான் தெரியுல...

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

எங்க இருக்கா என் பொண்டாட்டி...?
சொல்லிட்டு அப்படியே ஓட்ட குத்திட்டு போங்க...

Wednesday, April 1, 2009

நான் இந்தியன் அல்ல -2

எவன் சொன்னது நான் இந்தியன் இல்லை என்று... நான் இந்தியன் டா ... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா...




முதல்
பரிசு...பிரிட்டிஷ் ஏர் வேய்ஸ் விமானம் (மாடல் ) ஒன்று... பெறுபவர்... ஹாலிவுட் பாலா @ பவர் பாலா @ பாலா சார் @ பாலா அண்ணா @ பாலா அங்கிள் @ பாலா தாத் ..(போதும் நிப்பாட்டு...)

இரண்டாவது பரிசு..ஹவ்ரா மெயில் /சி கம்பர்ட்மென்ட் (கண்டம் ஆனது) ஒன்று... பெறுபவர்... பப்பு @ பிரபு @ பப்புக்குட்டி @ பப்பி... (டேய் அடங்கு ..)

மூன்றாவது பரிசு...ஹீரோ ஹோண்டா பைக் கீ பஞ்ச் (மட்டும்) ஒன்று... பெறுபவர்.. வால் பையன் @ வால் சிறுவன் @ வால் வாலிப பையன் @வால் வயசான ... (டேய் எட்றா அந்த கட்டைய ...)

அப்பறம்... ஆஹ்... சொல்ல மறந்துட்டேன்... இந்த பரிசு இவங்களுக்கு குடுத்ததற்கு காரணம்... நான் டகால்டி விடுறேன்னு கொஞ்சம் சந்தேகபட்டதற்காக...

பாலா புல்லா கண்டு பிடிச்சிட்டாரு ..

வால் பையன் என்ன நினைசாருன்னு எனக்கு இதுவரைக்கும் தெரியல..

பப்பு... கொஞ்சம் நம்பினாலும் கொஞ்சம் சந்தேகத்தோட இருந்தாரு..

அப்பறம்...

அப்பறம்...

ஆறுதல் பரிசு... பெறுபவர்கள் வினோத் கெளதம் , ஜோ, பெருமாள்...

பய புள்ளைங்களா திருந்துங்க.... எவனாச்சும் எதாச்சும் எழுதி இதுக்கு விமர்சனத்த அடுத்த பதிவுல போடுங்கனு சொன்னா பப்பரகாணு படிச்சிட்டு அதுக்கு ரொம்ப யோசிச்சி வேற பதில் போடுறிங்க... இப்படி இருந்தா நாளைய பாரதம் உங்கள நம்பி எப்படி நல்லா இருக்கும் ...? கொஞ்சம் யோசிச்சி பொறுப்பா நடந்துக்க வேணாம்? என்ன சின்ன புள்ள தனமா இருக்கு... ?

ஆங்... உங்க பரிசு என்னனு சொல்லாம விட்டுட்டேனே...



"பிம்பிளிகி பிலாபி ... "