Wednesday, October 6, 2010

வாருங்கள்... வாழ்த்துங்கள்..









நண்பர்களே வருகின்ற 11.10.2010 அன்று நண்பர் வினோத்கெளதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் சுற்றும் நட்பும் சூழ வந்து மணமக்களை வாழ்த்த வருமாறு எனது சார்பாகவும் நண்பர் வினோத்கெளதம் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.

கல்யாண நாள் : அக்டோபர் 11 திங்கட்கிழமை
(11- 10 -2010 )
நேரம்: காலை 6-00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வரவேற்பு : அக்டோபர் 10
இரவு 7 மணிக்குமேல் 9:30 க்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வேலூர் வரவேற்பு : அக்டோபர் 12 மாலை 5 மணிக்குமேல்
இடம்: ரயில்வே இன்ஸ்டியுட், குடியாத்தம் ரோடு, காட்பாடி.


மாப்ள தான் பத்திரிகை வைக்கணும்னு அடம் புடிக்கிறவங்க வினோத்கெளதம் கிட்ட பேசுங்க..

நட்புடன்

-கிஷோர்

Tuesday, September 28, 2010

வழி மேல் விழி வைத்து ..

நீண்ட நாட்களாக பதிவுலகம் (?) பக்கம் வரும் வாய்புகள் குறைவாகவே இருக்கிறது. தவிர பதிவுகளை படிக்கவும் தோன்றுவது இல்லை .

நான் பல தடவ செயல்படுத்தனும்னு நினைக்கிற ஒரு விஷயத்த என்னோட நண்பர்கள் "ஜஸ்ட் லைக் தட்" ன்னு செஞ்சுடுறாங்க. ஆமா என்னோட பதிவுலக நண்பர்கள் பலரும் இப்போ எழுதுறத நிறுத்திடாங்க. ஒருவேளை நானெல்லாம் எழுதுறன்னு அப்படி ஒரு முடிவு எடுத்தாங்களோ ?



கல்லூரி காலம் முடிந்து நண்பர்களை பிரிந்து இருக்கும் நாட்களில் ஒரு வெற்றிடம் மனதில் தோன்றுமே அதை மீண்டும் இப்போ உணர்கிறேன். ஒரு பதிவு எழுதினாலே அது எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து கூடி கும்மி அடித்து செல்வதும். ஒருவரை ஒருவர் ஜாலியாக வம்பிழுப்பதும் உண்மையாகவே கல்லூரி கால கட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்றவர்கள்.

ஹாலிவுட் பாலா, கலையரசன், பப்பு, சர்க்கரை சுரேஷ், கண்ணா, வினோத் கெளதம் என்று ஒன்று கூடி கலாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றும் பசுமையாக இன்றும் மனதில்..... இவர்களில் வினோத்கெளதம் மட்டுமே எனக்கு முன்பே தெரிந்த நண்பன் . மற்ற அனைவரும் பதிவுலகம் மூலமாக கிடைத்த அழகிய நட்பு மலர்கள்.

பழகிய ஒரு சில நாட்களில் "டா" போட்டு பேசும் அளவிற்கு பாசத்துடன் கலந்த நட்பை வழங்கியவர்கள். இன்று "சில " "பல " சொந்த காரணங்களினால் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.

பப்பு படிக்கச் சென்று விட்டான் எப்போவாவது சாட் -ல் கை அசைப்பதோடு சரி.

கலை கல்யாணத்திற்கு அப்புறம் ஆளை காணவில்லை. தொலைபேசியில் எப்போவாது பேசுவதோடு சரி.

திடீர் திடீர் என்று அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி தரும் சர்க்கரை சுரேஷ் இந்த பதிவுலகத்தின் மேல் கோபத்தில் சென்றவர் தான் இதுவரை பதிவுலகம் பக்கம் வர வில்லை.

ஹாலி பாலி "ப்ளாக்"யே அழித்து விட்டார். மற்றவர்களிடம் "டா" போட்டு பேசும் பொழுது இவரை மட்டும் "சார்" , "அண்ணா" என்று அழைக்க சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க கிஷோர் என்று சகோதர பாசத்துடன் பழகியவர். சந்தேகம் எதுவாக இருந்தாலும் எந்த சப்ஜெக்ட் பத்தி இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம் இவரிடம். கொஞ்சமும் எரிச்சல்படாமல் இவரின் பணி சுமைக்கு நடுவிலும் நமக்கான நேரத்தை ஒதுக்கி தருபவர்.

வினோத் கல்யாண வேலையாக இருப்பதால் அவனை இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.

கண்ணா மட்டும் தான் இப்பொழு எழுதி கொண்டு இருக்கிறார்.. அதுவும் முன்பு நிறைய மாதிரி எழுதுவது இல்லை அவர் எழுதி ஒரு மாதம் ஆகிறது.

இப்படி அனைவரும் ஒவ்வொரு திசை பறவைகளாய்...
ஆனால் நிச்சயம் மீண்டும் இந்த பறவைகள் அனைத்தும் இந்த பதிவுலக சரணாலயத்தில் ஒன்று கூடும் என்று அந்த வசந்த காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும்..
- கிஷோர்

Tuesday, August 31, 2010

மாஸ்கோவின் காவிரி - திரைவிமர்சனம்

பொதுவாகவே நான் திரைவிமர்சனம் எழுதுவது கிடையாது. பலரின் பல நாட்கள் கடின உழைப்பை வெறும் 50 ரூபாய் குடுத்து பார்த்து விட்டு நல்லா இல்லை என்று ஒரு வார்த்தையில் கழித்து கட்டுவது அவர்களின் உழைப்பை அசிங்கபடுத்துவதாக எண்ணுபவன் என்ற ஒரு காரணம் ஒருபுறம் இருந்தாலும்.. திரைப்படங்களை சுவாரசியமாக ரசிக்க தெரிந்த எனக்கு அதே சுவாரசியத்தோடு விமர்சணமாக எழுத தெரியாது என்பதை இந்த மாபெரும் வாசகர்கள் கூட்டத்திலே தெள்ளத்தெளிவாக சொல்லிக்கொள்ள கடமைபட்டு இருக்கிறேன் .

அப்படி இருந்தும் சில சமயங்களில் என் மனதுக்கு பிடித்த அல்லது மனதை பாதித்த திரைப்படங்களை பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் சில பதிவுகளில் சொல்லியதுண்டு.. அதை சிலர் தலைகீழாக தொங்கி கொண்டு பார்த்தாயா என்று கேட்டதும் அந்த கேள்வியை இன்னும் சிலர் ஆமோதித்து இன்னும் உயிரோடு இருக்கிறாயா என்று பின்னூட்டம் எழுதியதும் வரலாற்றில் செதுக்கபட்டவை.

சரி விஷயத்திற்கு வருவோம்..

இன்னைக்கு சாயந்திரம் நண்பர் ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு.. மாஸ்கோவின் காவிரி படம் போகலாம் என்று.. சரி ஓசில தானான்னு கிளம்பி போய்டேன்..

தியேட்டர்ரில் மொத்தம் என் கண்ணில் பட்டவர்கள் 14 பேரு.. அதுல இருவர் டிக்கெட் கொடுப்பவர்கள் , இருவர் டிக்கெட் கிழிப்பவர்கள்.. ஆக மீதி படம் பார்த்தது 10 பேரு.. சாட்டிலைட் டெலிகாஸ்ட் என்பதால் படம் சரியான நேரத்திற்கு போட்டார்கள்.

படத்தின் ஸ்டில்களை பார்த்து எதோ நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு படத்தின் முதல் காட்சியில் பார்த்திபன் குரலில் ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சிலயே படத்தை பற்றிய ஒரு கணிப்பு மனக்கண்ணு முன்னாடி தெரிய ஆரம்பிச்சது.




அதாவது.. அந்த ஹீரோ சனியன் பேரு "மாஸ்கோ"வாம் அப்புறம் அந்த ஹீரோயின் மூதேவி பேரு "காவிரி "யாம்.
இதுங்க ரெண்டு பேரும் சந்திச்சி.. லவ் பண்ணி..சண்டை போட்டு.. பிரிஞ்சி.. ஒன்னு சேர்ந்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ.

என்னோட பேராசிரியர் ஒருத்தர் செமினார் எடுக்கும் சொல்வாரு.. கிஷோர் நீ உனக்கு தெரிஞ்ச எதை வேண்டுமானாலும் பலபேர் முன்னால் தைரியமா தயக்கம் இல்லாம சொல்லு. அந்த விஷயத்த பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருக்கலாம். ஆனாலும் அந்த விஷயத்த நீ எப்படி சொல்ற என்பது தான் முக்கியம்.

அதாவது மேட்டர் எதுவா இருந்தாலும் உன்னோட ப்ரெசென்ட்டேஷன் எப்படி இருக்குனு தான் பார்ப்பாங்க. அது தான் முக்கியம்னு சொல்லுவாரு. அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் இன்னைக்கு வரைக்கும் நான் ஒவ்வொரு முறை ப்ரெசென்ட்டேஷன் பண்ணும் போதும் மனசுல வச்சிக்கிட்டு தொடங்குவேன்.

ஒருவேளை எனக்கு ஒரு பேராசிரியர் சொல்லி தந்த மாதிரி டைரக்டர் ரவிவர்மனுக்கு யாரும் சொல்லல போல இருக்கு. அப்படி சொல்லி இருந்தா படம் பார்த்த எனக்கும் இப்போ படிக்கிற உங்களுக்கும் கஷ்டம் இல்லாம போய் இருக்கும்.

சரி படத்தோட கதை என்ன?

அன்பே ஆருயிரே , குஷி, அலைபாயுதே, படங்களை போல பையனுக்கும் பொண்ணுக்கும் காதலுக்கு அப்புறம் வரும் மிஸ்அண்டர்ஸ்டான்டிங் மற்றும் ஈகோ தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் மாஸ்கோவின் காவேரி சென்னையின் கூவமாக மாறிவிட்டது.

இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானம்.. இதை விட மொக்கை காமெடியை இனி எந்த படத்திலும் அவர் செய்ய போவது கிடையாது..

படத்தில் உண்மையான காமெடி.. "நீயா? நானா ?" கோபிநாத் கெட்அப்பில் வரும் சீமான் தான். அதுவும் அவர் போட்டு இருக்கும் சிகப்பு கலர் கோட் சூட். அதை போட்டு கொண்டு வாழ்கையை பற்றி அவர் சீரியஸ் ஆக பேசும் காட்சி சான்சே இல்லை தாரளமாக இரண்டு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கலாம்..சரியான விஷுவல் ட்ரீட்.

படத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம் ரெண்டு மணிநேரம் ஓட கூடிய சின்ன படமாக இருப்பது தான்.


மொத்தத்தில்...

மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ..

Thursday, July 29, 2010

இப்போ நான் என்ன செய்ய?

நேற்று மதியம் ஒரு முக்கிய வேலையாக புதுச்சேரி செல்ல வேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு கொடுத்து விட்டு கிளம்பினேன் .

பைக்கை பஸ்ஸ்டாண்டில் விட்டுவிட்டு கடலூர் செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சில் ஏறி அமர்ந்து மொபைலில் பாட்டு கேட்க தொடங்கினேன்.
பொதுவாகவே சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்தில் பயணம் செய்வதை விரும்புவேன். முன்னாடி போ , பின்னாடி போ , இன்னும் நகர்ந்து உக்காரு போன்ற தொல்லைகளும், போகும் ஒரு மணி நேரத்திற்கு அதிக படியான சவுண்டில் ஓடும் திரைப்படங்களும் இல்லாமல் ஏறுபவர்களை மட்டும் ஏற்றி கொண்டு செல்லும்.. ஆதலால் நிம்மதியாக பயணத்தை அனுபவிக்க அரசு பேருந்தில் பயணம் செய்வேன்.

பஸ் கிளம்பி 5 நிமிடத்தில் ஒரு சிறுமியும் (?) விடலை பையனும் ஏறினார்கள். கண்டிப்பாக கடலூரில் இருந்து வந்து சிதம்பரத்தில் பொழுதை கழித்து (!!!!!???) விட்டு பள்ளி முடியும் நேரம் கடலூர் செல்கிறார்கள் . அந்த பெண் பள்ளி சீருடையில் இருந்தாள். உடலில் உள்ள இளமை தோற்றத்தையும் மீறி முகத்தில் ஒரு குழந்தை தனம் தெரிந்தது. பையன் முகத்தில் பக்கா பொறுக்கி கலை.. பத்தாதற்கு வாயில் புகையிலை வேறு அழுத்தி இருந்தான்.

மதியவேளை என்பதால் பஸ்சில் கூட்டம் இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேர் மட்டுமே இருந்தோம். ஏறுன சனியனுங்க என் கண் எதிர்லையா வந்து உக்காரணும்?

டிக்கெட் எடுத்த சில நிமிடங்களில் ஆரம்பித்தது இவனின் பொறுக்கிதனம். அவளின் உடல் முழுவதும் அவனின் கைகள் விளையாட ஆரம்பித்தது. அதை விட கொடுமை உச்சகட்டமாக அவன் அவளின் கையை எடுத்து தன் "மடியில்" வைத்து கொண்டது தான். அவள் வெட்கத்தாலும் கூச்சதாலும் சில சமயம் அவன் கைகளை தட்டி விட்ட போதும் அந்த உணர்வுகளை ரசித்த படி அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்தாள்.

எழுந்து போய் ஓங்கி அறையலாமா என்று கோபம் வந்தது. அதை பார்த்தால் கோபம் அதிகம் ஆகும் என்று முகத்தை திருப்பி கொண்டேன்..ஆனாலும் மனசு எங்க கேக்குது? திரும்ப திரும்ப பார்க்க வைத்தது .

ஒரு மதிய வேளையில் பல பேர் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு ஆடவன் தன்னிடம் எல்லை மீறி செய்யும் செயலை அனுமதிக்க அவளுக்கு இந்த வயதில் எப்படி தைரியம் வந்தது? இங்கயே இப்படி செய்பவன்.. தனிமையில் என்னவெல்லாம் செய்து இருப்பான்? ஊடகங்களும் திரைப்படங்களும் தான் காரணம் என்று பொதுவாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

வயதிற்கு வந்த பெண் பெற்றோரையும் பள்ளியையும் ஏமாற்றி விட்டு வருவது அவ்ளோ ஈஸியான விஷயமா? இதற்கு முழுமுதற் காரணங்கள் அவளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தான்.

ஒரு வழியாக யாரை பற்றியும் எந்தவித கவலையும் இன்றி இவர்களின் "ஓரல் செக்ஸ்" கடலூர் வரை தொடர்ந்தது. அவர்கள் ஜன்னலோரம் அமர்ந்து இருந்தலால் அவளின் புத்தக பை என் இருக்கையின் அருகில் இருந்தது. பையின் வெளியே நீட்டி கொண்டு இருந்த நோட்டில் இருந்த லேபிளில் உள்ள பெயரை படித்தேன்.. கடலூரில் உள்ள கண்டிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலமான பள்ளி. அவளின் பெயரும் அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள் என்பதும் இருந்தது. வழக்கம் போல் ஒரு சிறந்த இந்திய குடிமகனாக எவனாவது எப்படியாவது போகட்டும் என்று ஊர் வந்ததும் இறங்கி விட்டேன்.


இருந்தாலும் நேற்றில் இருந்து அந்த பெண்ணின் குழந்தை முகமும்.. வயதும்.. தப்பு பண்ணி விட்டமோ? ஓங்கி அறைந்து கேட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்பொழுது நேரடியாக கேக்க முடியாவிட்டாலும் அவளின் பள்ளிக்கு தகவல் தெரிவித்து அவள் பெற்றோர் மூலம் கண்டிக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவ்வபொழுது எழுகிறது. அதே சமயம் இதனால் எழும் பிரச்சனையில் அவள் வயது எந்த முடிவையும் எடுக்க தயங்காது என்று நினைக்கும் பொழுது, சும்மா இருக்க சங்க எதுக்கு எடுத்து ஊதுற ? பஸ்ல போனோமா சீன பார்த்தோமான்னு இருடா உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை? என்றும் நினைக்க தோன்றுகிறது. இப்போ நான் என்ன செய்ய?

Wednesday, July 21, 2010

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ..

புதுச்சேரி என்ற ஊருல ஒரு கிளி இருந்துச்சாம், அதுக்கு கல்யாண வயசாகியும் ஜோடி கிளி கிடைக்காம ரொம்ப ஏக்கத்துல இருந்துச்சாம். அதனால அப்போ அப்போ அந்த கிளி அங்க இருந்து கிளம்பி பக்கத்துக்கு ஊரான சிதம்பரத்துல இருக்குற அதோட பிரண்ட் கிளிய போய் பார்த்து புலம்புமாம்.

இந்த கிளி புலம்புறத தாங்க முடியாத பிரண்ட் கிளி அந்த கிளிக்கு பருக மோரும்.. நீரும்.. தந்து சமாதானபடுத்துமாம். அதுலயும் சமாதானம் ஆகாத அந்த கிளி மோரையும் நீரையும் கலந்து "பருகிட்டு" பிரண்ட் கிளிய பார்த்து ஏன்டா எனக்கு இன்னும் ஜோடி கிடைக்கலன்னு.. காரணமே இல்லாம திட்டுமாம்.

இப்படி ஜோடி இல்லாம இது ஊருக்குள்ள பண்ற அழும்ப பார்த்த பெத்தவங்க கிளிங்க ரெண்டு பெரும் இதை இங்க வச்சிருந்தா "ஊருக்கு" ஆகாதுன்னு அந்த கிளிய வீட்ட விட்டு ரொம்ப தூரத்துல போய் இரை தேட அனுப்பி வச்சாங்களாம் .

வீட்ட விட்டு பிரிஞ்சி போன ஒரு பாலைவானத்துல போய் தங்குச்சாம் . அந்த பாலைவனத்துல தினமும் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சி இரை தேடுவதற்கு ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அதை பெத்தவங்க கிளிகிட்டையும் அதோட பிரண்டு கிளிகிட்டயும் தினமும் தகவல் குடுத்து ஒரே அழுகாச்சியாம்.

இது சீன் போட்டத உண்மைன்னு நம்புன பெத்தவங்க கிளி ரெண்டு பெரும் இந்த கிளிக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டா சரி ஆகிடும்னு ஒரு அழகான பெண் கிளிய பார்த்து முடிவு பண்ணி இந்த கிளிகிட்ட சம்மதம் கேட்டாங்களாம் .அது பத்தாதுன்னு பிரண்ட் கிளி வேற இந்த கிளிகிட்ட அதோட விருப்பத்த பத்தி கேட்டுச்சாம் .

ஆரம்பத்துல ரொம்ப ஓவரா சீன் போட்ட அந்த கிளி..எதுவா இருந்தாலும் அந்த பெண் கிளி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும்னு சொன்ன அந்த கிளி.. ஊர்ல இருக்கும் போது வீட்டுக்கு வராம ஊரு சுத்துன அந்த கிளி.. இப்ப அந்த பெண்கிளி கிட்ட பேச ஆரம்பிச்சதும்...

ஹலோ.. .ஹலோ .. ஸ்டாப்..ஸ்டாப்.. ஹோல்ட் ஆன்..

எவனாவது கதை சொன்னா "உம்" கொட்டி கேட்டுகிட்டு இருப்பிங்களா ?
கிளி கதை கேக்குற வயசா உங்களுக்கு? வேற என்ன செய்யனுமா?

என்னங்க இப்படி கேட்டிங்க? இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்னது தெரியாதா? அட வாங்க.. எவ்ளோ முக்கியமான நாள் இன்னைக்கு.. அதை விட்டுட்டு கிளி கதை எல்லாம் கேட்டுகிட்டு..

22. 07 .2010 . என் நண்பன்
வினோத் கெளதம் -க்கு
பிறந்த நாள்....

இந்த சந்தோசம் உன் வாழ்வில் என்றும் நிலைத்திருக்க..

நீ விரும்பும் அனைத்தும் உன் வாழ்வில் கிடைக்க என்றும் இறைவனை பிராத்திக்கிறேன் .


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY DA MACHAN..

இந்த வருஷம் தான் பேச்சுலரா பிறந்த நாள் கொண்டாடுவான்.. அடுத்த வருஷம் முதல் அவனுக்காகவே படைக்கபட்ட கடவுளின் வரமான பெண்ணுடன் தம்பதி சகிதமாய் கொண்டாடுவான்.

உங்களுடைய ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் கஞ்சதனம் பண்ணாம அவனுக்கு நிறைய நிறைய வாரி வழங்குங்கள்.

Friday, July 16, 2010

மாறுபட்ட கண்ணோட்டத்தில் மதராசப்பட்டினம்


நேற்று
நண்பர்களுடன் பார்த்தேன் .. படத்தை பற்றி பல விமர்சனங்கள்.. டைட்டானிக் போல இருக்கு லகான் போல இருக்கு என்று ஏகபட்ட செய்திகள். சில காட்சிகள் அதை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் படம் முழுவதும் ஒன்றி பயணிக்க முடிகிரறது. கதை பற்றி எல்லாம் ஏற்கனவே படித்து இருப்பீர்கள். அதனால் எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டும் ..

கலை, ஒளிபதிவு, ஆர்யா, எமி ஜாக்சன், நாசர்,அமரர் ஹனிபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், ஆர்யாவின் நண்பர்கள் என்று பலரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது . ஆனால் இவர்களையும் மறக்க செய்து படம் முழுவதும் ரணகளபடுத்தி ஆடி இருப்பவர்கள் இசை அமைப்பாளரும் எமி ஜாக்சனின் வயதான வேடம் ஏற்று இருக்கும் நடிகையும் தான்.

இசைஅமைப்பாளர் பாடல்களை விடவும் சிறப்பாக பின்னணி இசையில் கதையோடு பயணம் செய்ய வைக்கிறார்.

வயதான அந்த நடிகை வெறும் முக அசைவுகளில் அவரின் எண்ண ஓட்டங்களை நமக்கு புரிய வைத்து விடுகிறார். ஆர்யாவை தேடி அலையும் போது அவருக்கு கிடைக்கும் ஒரே நம்பிக்கையான ஆர்யாவின் நண்பர் கபீர்- பார்த்தவுடன் வரும் பரவசம்..அடுத்த நிமிடமே அவர் இறந்து போகும் போது நம்பிக்கை பொய்த்து போய் மனம் உடைந்து விடும் கண்ணீர்.. இருந்தாலும் அடுத்த கணமே ஆர்யாவை மீண்டும் சந்திப்போம் என்று முகத்தில் காட்டும் தன்னம்பிக்கை.. ஆர்யாவின் முகவரி கையில் கிடைத்தவுடன் அதை வைத்து கொண்டு அவரின் வயதுக்கு மீறிய துள்ளலுடன் ஒரு நடை.. ஆர்யா சமாதி முன் வரும்போது அவரின் வயதுக்குரிய தள்ளமையுடன் வந்து அமர்வது என்று கடைசி 30 நிமிடங்கள் மிகை படுத்தாமல் அதே சமயம் தன்னுடைய நடிப்பு திறமையை எவருக்கும் விட்டு கொடுக்காமல் அமைதியாக அடித்து ஆடி இருக்கிறார்.

ஆனால் எந்த விமர்சனத்திலும் இவரை பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரிய வில்லை. morgan freeman போன்றோர் ஆங்கில படங்களில் கதை முழுதும் சுமந்து நடிப்பது பற்றி சிலாகித்து எழுதும் நாம் நமது மொழியில் அது நடக்கும் போது அதை பற்றி ஏன் கண்டு கொள்ளவது இல்லை என்று தெரியவில்லை.
அவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் எல்லோரையும் ஆட்டுவித்தவர் இயக்குனர்.. வெள்ளைகார இளமை ப்ளஸ் அழகு கொஞ்சும் ஹீரோயின்.. இளமை கட்டுடலுடன் ஒரு ஹீரோ.. அவர்களுக்குள் காதல் என்று இளமை மசாலா சமாச்சாரங்கள் தூவ பல இடங்களில் வாய்ப்பு இருந்தும் கவர்ச்சியை நம்பாமல் கதையை நம்பி எடுத்து இருக்கிறார். முகம் சுளிக்க வைக்கும் அங்க அசைவுகளோ தேவையற்ற ஆபாச காட்சிகளோ இல்லாமல் எடுத்து இருப்பது நிறைவை தருகிறது.

எனக்கு தெரிந்து கடைசியாக படத்தில் கதாநாயகன் கதாநாயகி இல்லாமல் படத்தின் இறுதி காட்சிகளை ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட் கொண்டு நிறைவாக செய்தது சுப்ரமணியபுரம் படத்தில் தான்.. அதில் கஞ்சாகருப்பை சுற்றி படத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருக்கும். அதன் பிறகு இதில் தான் பார்கிறேன். இயக்குனர் விஜய்க்கு ஒரு லைப் டைம் மூவி.

சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சி. காட்சிகளின் அழுத்தத்தை உணர கண்டிப்பாக திரை அரங்கில் சென்று பாருங்கள் .

Wednesday, July 14, 2010

ஷ்ஷ்ஷ் .... இது ரகசியம் - 1

வணக்கம் ... எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ஏன் வெறின்னு கூட சொல்லலாம்.. ஒரு தொடர்கதைய எழுதிபுடனும்ணு.. நல்ல படிங்க.. அது தொடர்கதை தான் தொடர்பதிவு இல்ல.. நீங்க பாட்டுக்கு அ, ஆ.. எ ,பி, சி ,டி .. பிடிச்சது, கடிச்சதுன்னு எழுத கூப்பிடாதிங்க .. ஆமா அப்படியே என்னைய மதிச்சி நீங்க கூபிட்டுடாலும் ..

சரி விஷயத்துக்கு வருவோம்.. தொடர் எழுதுறதுன்னு முடிவு ஆகி போச்சி.. அது நெடுந்தொடரா ..குறுந்தொடரா.. இல்ல மிடுந்தொடரா.. ( அதாங்க பாதில நிறுத்துறது... எப்புடி ? நாங்களும் செம்மொழி மாநாட்டுக்கு லீவ் போட்டுட்டு பிக்னிக் போன பய பக்கிங்க தான்.. ) அப்படின்னு யோசனை வந்தப்ப
சரி கழுத எழுதுறது தான் எழுதுறோம்.. பல பய புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி இல்லைனாலும் சில "சில்வண்டு " புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி எழுதி வைப்போம்னு இந்த மிடுந்தொடர ஆரம்பிக்கிறேன்..

ஒரு நிமிஷங்க நம்ம கனகாவோட அப்பா பூஜைய நடத்தி முடிச்சதும் கதைய ஆரம்பிக்கலாம்..

நடிகர் ஷண்முகசுந்தரம்: ஆத்தா..மகமாயி.. ஆயரம் கண்ணு உடைய கண்ணாத்தா எங்கள காக்க வந்த காளிஆத்தா.. நம்ம புள்ள கிஷோர் புதுசா ஒரு மிடுந்தொடர ஆரம்பிக்க போகுது.. புதுசா கதை எழுதுறவன பழைய எழுதாளனுங்க மிதக்கிறது ச்சே.. மதிக்கிறது தான ஆத்தா மரியாத? அதனால நீ தான் கிஷோர்க்கு பக்க பலமா நீ இருந்து அந்த புள்ளைய காரி துப்புரவங்க , செருப்பால அடிக்கிறவங்க, எதிர் பதிவு போடுறவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி..

ட்ரைலர்....

இந்த தொடர் கதைய படிக்கச் முன்வந்த அணைத்து தைரியசாலிங்களுகும் என்னோட அசால்டான வணக்கங்கள்..

நீங்கள் தொடர்ந்து படிக்கச் போகும் இந்த கதையின் அத்தியாயங்கள் வழக்கமான காதல் ,மோதல் ,பிரிவு ,உறவு ,உணர்சிகள் அடங்கிய வழக்கமான பாணி கதைகள் அல்ல.

பொதுவாக பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, குடும்பங்கள் - உறவுகள் இடையில் எவ்ளவோ கருத்துக்கள் அதில் வேறுபாடுகள், மோதல்கள் ஆனால் இவை அனைத்தும் கலந்தாலோசித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது வேறு ஒரு மூன்றாம் நபரால் இயல்பாக மிக சுலபமாக தீர்த்து கொள்ள கூடிய விஷயங்கள்..

ஆனால் இது இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் நம்பிக்கை போராட்டம் பற்றிய தொடர்..

இரு நண்பர்கள் இடையே உண்மையும் நம்பிக்கையும் எவ்வளவு தூரம் பயணிகிறதோ தூரம் அதே அளவு தூரத்தை அவர்கள் காக்கும் ரகசியமும் பயணிக்கும்.

அப்படி கல்யாணம் ஆகாத இரு இளைஞ்சர்கள் இடைய உருவான நட்பில் உள்ள "நம்பிக்கை" "ரகசியங்களை " அலசி ஆராயும் தொடர்.



அத்தியாயம் -1



கிருஷ் ... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நடுத்தர வர்கத்து வாலிபன். அழகானவன் அறிவானவன் ஒழுக்கமானவன் குறைவாய் பேசுபவன் என்று அவனை பற்றி விவரிப்பதற்கு இரண்டு மூன்று அத்தியாங்கள் தேவைபடும். ஆதலால் .. சுருக்கமாக.. அவன் கடந்து செல்லும் போது ஒரு முறையாவது அவன் பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அப்படி ஏங்கதவர்கள் திருமணம் ஆகி இருப்பார்கள் அல்லது பார்வை இழந்தவர்களாய் இருப்பார்கள்.

விமல்... எப்பொழுதும் பேசிக்கொண்டு இருப்பவன்.. வேலை, அறிவு, ம்ம்... ஒழுக்கம் இவை அனைத்திலும் கிருஷை போலவே இருப்பவன் .. அழகில் பிரம்மனின் சலுகையை கொஞ்சம் அதிகமாக பெற்று கொண்டவன்.

பள்ளி காலம் முதலே இவர்களை போலவே இவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..

அதிகாலை 4.30 மணி..

செல் போன் தொடர்ந்து அழைக்க.. தூக்கத்தில் இருந்து கண்ணை விழிக்க விரும்பாத கிருஷ்.. கண்ணை மூடிய படி செல்போன் -ஐ எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றான் ..

"டேய் மச்சான் நான்தாண்டா.. "- விமல்

"சொல்லுடா என்ன இவ்ளோ காலைல போன்?" -கிருஷ்

"டேய்.. அது.. அது.."

"என்னடா? சீக்கிரம் சொல்லி தொல தூக்கமா வருது.."

"டேய் எப்படிடா சொல்லுவேன்?"

" ஐயோ காலைல படுத்தாதடா சொல்லு"

"டேய் எனக்கு போன்ல எப்படி சொல்றதுன்னு தெரியுல.. நீ எழுந்து குளிச்சிட்டு ரெடியா இரு .. நான் வீட்டுக்கு வரேன்.. நாம இன்னைக்கு திருச்சி போறோம்.. "

"டேய் என்னடா திடிர்னு.. இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும?" - சலிப்புடன் கிருஷ் கூற..

"டேய் விஷயம் தெரிஞ்சா இப்படி சாதரணமா கேக்கமாட்ட?" என்றான் விமல்

"அப்போ என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன்.."

"அது.. அது.. வந்து.. மேகா .."

"என்னது ... மேகாவா .. ?

படுக்கையை விட்டு எழுந்த கிருஷ் முகத்தில் வியர்வைகள் முத்தாய் சிதறி கிடக்க அவன் கண்களின் பயம் பரவி கிடந்தது..


தொடரும்..

Monday, July 12, 2010

மிருதுவாய் ஒரு முத்தம்..

நரேனுக்கு போன் பேசி வைத்ததும் இந்த நொடியே வீட்டில் இருக்க வேண்டும் போல் தோன்றியது.. காரணம் வர்ஷிதா..

பெயரை நினைக்கும் போதே மனசுக்குள் பட்டம்பூசிகள் பறந்தன.

என்ன செய்ய? இன்னும் முழுசா ஐந்து மணி நேரம் இருக்கு.. புதுச்சேரி போய் சேர்வதற்கு.. நேற்று இரவு எட்டு மணிக்கு விசாகபட்டினத்தில் இந்த ரயில் பயணம் ஆரம்பம் ஆனது.. தப்பு பண்ணிட்டமோ..? பேசாம சென்னை வரை பிளைட்ல வந்து இருக்கலாமோ? இதுக்கு போய் எவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ன்னு பேரு வச்சான்? ச்சே.. அடுத்த தடவ இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது.. இல்ல.. இல்ல.. இனிமே அவளை பிரிஞ்சி வரவே கூடாது.

எண்ணங்கள் பலவாறு சிந்தனை ஓட்டத்தில் பறந்து செல்ல.. அவன் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் புதுச்சேரி செல்லும் ரயில் அதற்கு உரிய நேரத்தில் உரிய நிறுத்தங்களில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

பெட்டியினுள் ஏசி காற்று மிதமாக பரவி கிடக்க தலையணை எடுத்து முதுகிற்கு கொடுத்த படி ஜன்னலோரம் சாய்ந்து கண்ணாடி வழியே கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடி வர்ஷிதாவின் நினைவுகளில் மூழ்கினான்.

வர்ஷிதா..

அழகு தேவதை.. தேவதை? இந்த வார்த்தை வர்ணனை கூட அவளின் அழகில் தோற்று விடும் என்பதே நிஜம்..

அவளின் காற்றில் சிரித்தாடும் கருங்கூந்தல் ஆகட்டும்..

கோபம் வரும் சமயங்களில் இடுப்பில் கை வைத்து உதட்டை சுழித்து பெரிய கண்கள் கொண்டு முறைப்பது ஆகட்டும் ..

ரோஜா இதழ் .. இல்லை அதை விட நிறமுள்ள இதழ் திறந்து வெண்ணிற பற்கள் தெரிய சிரிப்பது அகடும்..
அப்படி சிரிக்கும் பொழுது அவள் இரு கன்னங்களில் விழும் குழிகள் ஆகட்டும்..

எதை சொல்ல.? இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளின் அந்த கன்னக்குழியில் விழுந்தவன் தான் இது வரை எழ முடியவில்லை.. எழவும் விரும்பவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவளை பிரிந்து ஒரு வார பயணம்.ஒவ்வொரு நாட்களும் ஒரு யுத்த களத்தை சந்திப்பது போன்று.. ச்சே.. திரும்பவும் வாழ் நாளில் இப்படி ஒரு வேதனையை அனுபவிக்க நான் தயாராக இல்லை என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.

ரயில் இபோழுது விழுப்புரத்தை வந்தடைந்திருந்தது.. இன்னும் 40 நிமிஷம் பின் வீட்ற்கு ஒரு 10 நிமிட பயணம்.. முள் படுக்கை என்றால் என்னவென்று உணர்ந்த நொடிபோழுதுகள் அவை.

என்னதான் தினமும் தொலை பேசியில் பேசினாலும் அவளும் ஏங்கிதான் போய் இருப்பாள்..பேசும் பொழுது அவள் குரலிலே தெரிந்ததே.. வீட்டிற்கு போனதும் அவளை இறுக கட்டி விட்டுப்போன ஒரு வாரத்திற்கும் சேர்த்து முத்த மழை பொழிய வேண்டும்..

ஒரு வழியாக பிற்பகல் இரண்டு மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையம் வந்தடைந்து, அரக்க பரக்க ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடித்தான்..

வந்து திறப்பதற்குள் மீண்டும் ஒரு முறை அடித்தான்.. அதுவும் பொறுக்க முடியாமல் வர்ஷிதா என்று கத்தினான்.

சில கணங்களில் கதவை திறந்து வெளிபட்டாள் அவள்.. வர்ஷிதா.. உண்மையாகவே தேவதை தான்..

"வர்ஷிகுட்டி.............." என்று கத்தியவாறு கதவை கூட மூடாமல் அவளை அள்ளி எடுத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தான்..

அம்மா... அம்மா.. இங்க வா... வந்து பாரு.. அப்பா...... மழலை மொழியில் அம்மாவை அழைத்தவள் அவன் கன்னங்களில் மிருதுவாய் ஒரு முத்தம் பதித்தாள்.




Saturday, June 26, 2010

நான் ஒன்னுமே பண்ணலடா..

"டேய் நான் ஒன்னுமே பண்ணலடா" என்றான் பாலா பரிதாபமாக..

மொபைல் போன்- பிட்டு படம் பார்பதற்காகவே கண்டுபிடிக்க பட்ட ஒரு பொருளாய் நினைத்து அதில் கவனம் செலுத்தி கொண்டு இருந்த பிரபுவிடம் நூறாவது முறையாக நச்சரித்து கொண்டு இருந்தான் பாலா..

திரும்பவும் அவன் நச்சரிக்க ..

"டேய் நீ ஒன்னும் தான் பண்ணல விடு" என்றான் சற்று கடுப்புடன் பிரபு.


"சரி கோச்சிகாதடா நீ எத்தன பொண்ணுங்க நம்பர் வச்சி இருக்க அதுல ஒரு பொண்ண எனக்கு லைன் மாத்திவிடுடா எனக்கும் ஆசையா இருக்குடா"என்றான் விடாமல் .

"டேய் பாலா உனக்கு இதெல்லாம் செட் ஆகாதுடா .. ஒன்னு முழுசா நல்லவனா இருக்கனும் இல்ல முழுசா கெட்டவனா இருக்கனும். நீ மனசுல ஆசையா வச்சிக்கிட்டு அதே மனசாட்சிக்கு பயப்படுறவன் .. இப்படி தான் போன தடவ நீ ரொம்ப டார்ச்சர் பண்ணுன்னு ஒரு பிகர் கிட்ட கூட்டிகிட்டு போனேன் ஆனா நீ என்ன பண்ணுன?" - பிரபு

"நான் ஒன்னுமே பண்ணலடா... "- பாலா

"அதை தான்டா நானும் சொல்றேன் நீ ஒன்னுமே பண்ணல .. அந்தபொண்ணு ரொம்ப டையர்ட் இருக்குன்னு தூங்கட்டும்ன்னு சும்மா வந்தவன் தான நீ?"-பிரபு

"டேய் பாவம்டா அந்த பொண்ணு காசுக்காக அன்னைக்கு யார் கூடவோ போய்ட்டு வந்து திரும்பவும் நம்ம கிட்ட வந்துச்சி.. அது கண்ணுலயும் முகத்துலையும் ஒரு அசதி தெரிஞ்சிதுடா .. இருந்தாலும் அந்த பொண்ணு பரவா இல்லன்னு தான் சொன்னிச்சி .. எனக்கு தான் பார்க்க பாவமா இருந்துச்சி அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன் அது தப்பா ?" - பாலா

"டேய் அவளே பரவா இல்லன்னு சொல்லும் போது நீ ஏன்டா சும்மா இருந்த? டேய் நீ செய்யலைனா கூட பரவ இல்ல என்னையும் இல்ல செய்ய விடல.. அதை எங்க போய் சொல்றது? ராத்திரி பூரா தூங்க வச்சி காவல் காத்தது தான் மிச்சம்.." - பிரபு

"டேய் அது முடிஞ்சி போன விஷயம்.. நீ இன்னொரு நம்பர் குடு.. அதுக்கு அப்புறம் பாரு நான் யாருன்னு தெரியும்... "- பாலா

"சரி இந்தா இந்த பொண்ணு பேரு சஞ்சனா கோயம்புத்தூர்ல வேலை செய்யுறா.. நல்லா பேசுவா கரெக்ட் பண்ணிகிறது உன் சாமர்த்தியம் .. நான் வேலை விஷயமா சென்னை கிளம்புறேன்.. என்னை ஆள விடு.. இதையும் சொதபிடாதடா.."

"சரிடா நான் பார்த்துக்குறேன்.." என்ற பாலா பிரபுவை வழி அனுப்பி விட்டு சஞ்சனாவிற்கு டயல் செய்ய தொடங்கினான்..


சில நொடிகளில்..

"ஹலோ.. "

"ஹலோ சஞ்சனாவா ?"

"ஆமா நான் சஞ்சனா தான் பேசுறேன்... நீங்க?"

"நான் பாலா.. பிரபுவோட பிரண்ட் ..."

"எந்த பாலா? எந்த பிரபு..?"

"பிரபுங்க.. பாண்டிச்சேரில இருக்கான்ல .. அவன் தான் உங்க நம்பர் குடுத்தான்."

"ஓ.. பாண்டி பிரபு வா?"

"ஏன் வேற யாரையாவது உங்களுக்கு பிரபு என்ற பேருல தெரியுமா?"

"அது எதுக்கு உங்களுக்கு? என்ன விஷயம் சொல்லுங்க"

"இல்ல உங்க கிட்ட பேசலாம்னு தான்.. "

"என்கிட்ட என்ன பேசணும்?"

"பிரபு தான் சொன்னான்.. நீங்க ரொம்ப ஜாலியா பேசுவிங்கன்னு..."

"அதுக்கு? "

"நாம ரெண்டு பேரும் ஜாலிய பேசலாமா?"

"ஹலோ என்ன விளயாடுறிங்களா ? நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? யார கேட்டு பிரபு உங்க கிட்ட நம்பர் குடுத்தான்?"- சற்று கோபத்துடன் இருந்தது அவள் குரல்.


"என்னங்க இப்படி பேசுறிங்க.. நீங்க ரொம்ப ப்ரீ டைப் ன்னு சொன்னானே.."-பாலா

"ப்ரீ டைப்னா?"

"அதாங்க பசங்க எங்க கூப்டாலும் போவிங்கலாம்.."

"ஹலோ என்ன பேசுறிங்க ?"

"இல்லங்க பசங்க கூட நல்லா என்ஜாய் பண்ணுவிங்கலாம்.."

"ஹலோ மிஸ்டர் புதுசா ஒரு பொண்ணு கிட்ட பேசுறா மாதிரியா பேசுறிங்க? மரியாதையா பேசுங்க.."

"என்னங்க இப்படி பிகு பண்ணிக்கிறிங்க ... சரி நான் விஷயத்துக்கு வரேன்.. நீங்க அந்த மாதிரி பொண்ணு தான?"

"டேய் விட்டா என்னடா ரொம்ப ஓவரா பேசுற ?" ஒருமைக்கு தாவினாள் சஞ்சனா

"நீ தாண்டி ஓவரா நடிக்கிற.. நேரடிய கேக்குறேன் உன் ரேட் எவ்வளவு ?" என்றான் விடாமல் பாலா..

"அடிங்... ^$#^@%&@ போலீஸ்ல சொல்லிடுவேன்.. மரியாதையா நிறுத்து.."

"அடிங்கோயால.. @#$%&*^@$#%#$ என்னடி லோக்கல் மாதிரி பேசுற... நாங்களும் பேசுவோம்.. காசு கூட வேணும்னா கேட்டு வாங்கிக்க.. அதை விட்டுட்டு ஏன் இப்படி நடிக்கிற?"

"டேய் உனக்கு யாரு நம்பர் குடுத்தா? பிரபு தான முதல்ல அவன கிழிக்கிறேன்... நீ போன வை.." என்றவள் தொடர்பை துண்டித்தாள்..

மறுநாள்..

"டேய் நான் உங்கிட்ட என்னடா சொன்னேன்.. நல்லா பேசுவானு தான சொன்னேன்.. நேத்து அவ பேசுன பேச்சுல மொபைல் வெடிச்சி காது கிழிஞ்சிடிச்சி...அப்படி என்ன தாண்டா பண்ணுன ?" - பிரபு

"நான் ஒன்னுமே பண்ணலடா" என்றான் பாலா ஏதும் நடக்காத மாதிரி குழந்தைதனமான முகத்தோடு....

"டேய்.. உன்னை.... " கோபத்துடன் பிரபு பாலாவை பார்க்க..

அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல்..

"சரி மச்சி அதை விடு.. வேற நம்பர் இருக்கா?"- பாலா

ஏது வேற நம்பர் ஆஆஆஆஅ ...........?

பாலா நிமிர்ந்து பார்பதுக்குள் தலைதெறிக்க ஓடி கொண்டு இருந்தான் பிரபு.

பிட்டு..
இது மாதிரி கேரக்டர் எல்லாம் நாம் தினமும் சந்திக்கிற நபர்கள் தான். நான் தினமும் சந்திக்கிற நண்பர்களிடம் எடுத்த லீட் இது.. மற்றபடி கதை முழுதும் கற்பனையே.. கதைக்கும் என் நண்பர்களுக்கும் எந்த வித பிட்டும் இல்லை..

Monday, May 3, 2010

செண்பக பூ..


"மஹா.."

"ம்ம்.."

"ஏய்.. உன்னைதாண்டி.."

"சொல்லுடா..."

"கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்.."

"சொல்லு.."

"ப்ளிஸ்.. ஒரே ஒரு தடவ நிமிர்ந்து பாரேன்.."

"சிவா என்னனு சொல்லி தொலையேன்.. பக்கத்துல தான இருக்கேன்.."

"இல்ல என்ன பாரு அப்போ தான் சொல்லுவேன்.."

"சரி இப்போ சொல்லு.."

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"

"கல்யாணமா...? என்ன சிவா விளையாடுறியா ?"

"இல்லடி நிஜமாதான் சொல்றேன்.. நாம ரெண்டு பெரும்
கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"சிவா உன்னை எனக்கு பிடிக்கும்.. அதனால தான் நீ கூப்பிட்டதும் வந்தேன்.. ஆனா நீ இப்படி திடிர்னு கேப்பன்னு நினைச்சி கூட பாக்கல .. இதெல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது சிவா.. நாம இப்படியே இருப்போம்.."

"இப்படியேனா?"

"இப்படி தான்.. நீ சிவா..நான் மஹா.. அது போதும்.."

"இல்ல .. இப்படி வெறும் சிவா.. மஹான்னு இருக்குறத விட.. மகாலட்சுமிசிவராமன்னு மாறனும்.."

"அது இந்த ஜென்மத்துல நடக்காது சிவா.."

"ஏன் நடக்காது?"

"ஏய்.. என்னை பத்தி தெரியும்ல.."

"தெரியும்.. "

"என்ன தெரியும்?"

"நீ மஹா.."

"அப்புறம்?"

"வயசு 26"

"அப்புறம்?"

"நான் சிவா.. வயசு 29 .. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்.."

"ப்ச்.. என்னை பத்தி சொல்லு"

"அது.."

"ம்ம்.. அது.. "

"அது"

"சொல்லு.."

"அது.."

"சரி நானே சொல்றேன். நான் மஹா வயசு 26.. என்னோட கஸ்டமர்ங்க கிட்ட சொல்ற வயசு 22.. நான் சம்பாதிக்கிறேன்.. என்னோட உடம்ப வித்து.. பெத்த அப்பனே என்னை இந்த தொழில்ல கொண்டு வந்து விட்டுட்டான்.. நேத்து ராத்திரி வரைக்கும் பேர் தெரியாத யார் யாரோ என்னோட புருஷன்.. இன்னைக்கு யாருன்னு தெரிஞ்சிக்க இதோ இங்க உக்கார்ந்து இருக்கேன்.. சரியா? "

"......."

"நீ சிவா.. படிச்சவன்.. அழகானவன்.. நல்ல குடும்பத்துல பிறந்தவன்.. நல்ல வேலைல இருந்து நிறைய சம்பாதிகிறவன்.. என்னோட ஒன்னா படிச்சவன்.. போன மாசம் திடிர்னு என்னை வழில பார்த்து பேசி பழகி. என்னை பத்தி தெரிஞ்சதும் விலகாம இப்போ கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றவன்.."

"........."

"சிவா.. சினிமாவுல தான் இதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும்.. ஆனா இது நிஜம்.. நிதர்சனம்... யோசிச்சி பாரு.. நான் என்ன தொழில் பண்றேன்னு தைரியமா சொல்றதுகே உன்னால முடியல .. நாளைக்கு கல்யணம் ஆகி நாம ரெண்டு பெரும் இதே தெருவுல போனா.. சத்தியமா புருஷன் பொண்டாட்டி போறங்கன்னா சொல்லுவாங்க? இன்னைக்கு எவனையோ பிடிசிட்டான்னு தான் பேசுவாங்க..
அப்படி பேசும் போது உன்னால தாங்க முடியுமோ இல்லையோ.. என்னோட மனச மட்டும் உண்மையா நேசிக்கிற ஒருத்தன் மனசு ஒடிஞ்சி போறத தினம் தினம் என்னால பார்க்க முடியாது சிவா.. அதுக்கு இன்னும் கொஞ்ச காலம் இந்த நரகத்துலயே வாழ்ந்து செத்து போய்டுறேன்டா .. ப்ளீஸ்.. "

"............"


"சிவா.. இப்போ கூட நீ சரின்னு சொன்னா உன்னோட படுக்க தயாரா இருக்கேன்.. சத்தியமா ஒரு கஸ்டமர் கூட படுக்குறதா நினைச்சி இல்ல. என்னையும் மனசார நேசிச்ச ஒரு மனசுக்கு நான் தர காணிக்கையா நினைச்சி.. இது தகுதியான காணிக்கை இல்லன்னு என்னக்கு தெரியும்.. யார் யாரோ.. எப்படி எப்படியோ கசக்கி பிழிந்த உடம்பு இது.. ஆனா உனக்கு கொடுக்க என்கிட்ட இந்த உடம்ப தவிர வேற ஒன்னும் இல்ல.."

" எனக்கு தேவை இந்த உடம்பு மட்டும் இல்ல மஹா.. உன்னோட மனசும் தான்"

"பொண்ணுங்கள " பூ " ன்னு சொல்லுவாங்கடா .. நான் அதுலயும் ஸ்பெஷல் கேட்டகிரி .. நான் "செண்பக பூ" டா கசக்கி பிழிய பிழிய வாசம் குடுத்துகிட்டே இருப்பேன்..வாசனை தீர்ந்து போகுற வரைக்கும் பல பேரு கசக்கி மோந்து பார்பாங்க.. காஞ்சி போனதும் குப்பைக்கு போய்டுவேன்.."

"இன்னிமே என்னோட வாழ்க்கைல உன்னை பார்க்க விரும்பலடா.. என்னை உண்மைய நேசிச்ச ஒரு மனசு இருக்குங்குற ஒரே சந்தோசம் போதும் எனக்கு.. நீ நல்லா இருக்கனும்.. சந்தோசமா இருக்கனும்.. நான் கிளம்புறேன்.. சத்தியமா உன்னை திரும்ப சந்திக்க மாட்டேன்".

கண்களை துடைத்தவாறு இவன் முகம் பார்க்காமல் திரும்பி செல்லும் மஹாவை பார்த்து கொண்டே இருப்பதை தவிர வேற ஒன்றும் தோணவில்லை அவனுக்கு.

Wednesday, March 31, 2010

கட்டிங் வித் கிஷோர் - 5

சந்தோசம்

கொஞ்ச நாளா மனசு உண்மையா சந்தோஷபடுற மாதிரி சில சம்பவங்கள் நடந்துகிட்டு வருது.. ஆமாங்க.. என்னோட நண்பர் ஒருத்தருக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருது.. ஏற்கனவே வீட்டுல முடிவு பண்ணிட்டாலும் பொன்னும் பையனும் பேசி புரிஞ்சிக்கிட்டு அவங்க சம்மதம் சொல்லட்டும்ன்னு வெயிட் பண்றாங்க.. எங்க சைடுல பையன் தான் கொஞ்சம் கிறுக்கு புடிச்சவன்.. எதையும் திடமா முடிவுபண்ணி சொல்ல மாட்டான் (தெரியாது ).. அதனால பையன் என்ன சொன்னாலும் கல்யாணம் நிச்சயம் நடக்கும்.
எப்படியும் நிச்சயமா சரக்கும்,புது டிரஸ்சும் கிடைக்கும்.. சோ மீ வெய்டிங் பார் தட் டே :) .. கண்டிப்பா கல்யாணம் முடிவு ஆனதும் பையன் யாருன்னு சொல்றேன்.. அதுவரைக்கும் வீணா என்னோட நண்பர்கள் பேர இழுத்துடாதிங்க.. :)

கொஞ்சம் கஷ்டம்

என்னோட போன பதிவுல வாங்கிய ஓட்டு எண்ணிக்கை 16.. ஆனா வந்த கமெண்ட் மொத்தம் 5.. அதுவும் அனுப்புனது 3 பேரு. காரணம் நீங்க நினைக்கிறது தான்.. நான் யாரோட பதிவுக்கும் போய் கமெண்ட் பண்றது இல்ல.

ஆனா உண்மை நிலவரம் என்னன்னா.. நான் follow பண்ற எல்லோரோட பதிவையும் படிக்கிறேன்.. ஆனா எனக்கு பிடிச்ச பதிவுகள்ள என்னால கமெண்ட் பண்ண முடியாததற்கு காரணம் அவங்களோட template -ல comment form placement -ல popup window அல்லது embeded ஆக இருப்பது தான். அப்படி இருந்தால் என்னால் comment செய்ய இயலவில்லை.. full page இருந்தால் மட்டுமே comment பண்ண முடிகிறது.. அதே போல தமிலிஷும் வோட்டு போடுவதற்கு குறைந்த பட்சம் 15 முறையாவது கிளிக் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி செய்தும் சில சமயம் வோட்டு விழுவது இல்லை..

இதனாலே நல்ல பதிவுகளுக்கு மற்றும் நண்பர்கள் பதிவுகளுக்கு கூட comment பண்ண முடிவது இல்லை.. குறிப்பாக பப்பு, கீதப்ரியன் போன்றவர்களின் பதிவுகள்..

இந்த பிரச்சனைக்கு ஹாலிபாலி எனக்கு மட்டும் தனியாக comment போட வசதி செய்து உள்ளார்..

அதே முறையை எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கும்.. எனவே இந்த இரு பிரச்சனைகளையும் தீர்க்க வழி இருந்தா சொல்லுங்க..


இது என்ன பீலிங்க்னு புரியலங்க..

எவ்ளோ சொல்லியும் கேக்காம எங்க வீட்லயும் எனக்கு தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிச்சிடாங்க.. பயோடேட்டா மற்றும் போட்டோ கேக்கும் போது எதோ ஒரு ஆர்வத்துல எழுதி குடுத்துடாலும்.. என்னோவோ மனசுல.. சந்தோசம், வெறுமை , பயம் , குருகுறுப்புன்னு எல்லாம் கலந்துகட்டி ஒரு உணர்வு .. இது என்ன பீலிங்க்னே புரியல.. கல்யாணம் ஆனா பெரியவங்க யாரவது இருந்தா இது என்ன பீலிங்க்னு சொல்லுங்க..

மீண்டும் சந்திப்போம் ...

Saturday, March 20, 2010

நான் - நீ - தற்கொலை

ஹலோ எப்படி இருக்கீங்க?
பார்த்து ரொம்ப நாள் ஆச்சி.. அப்புறம்.. வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு உங்களுக்கு? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா? எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க .. ஆமா.. இனிமே நான் விசாரிச்சத சொல்லி என்ன பண்ண போறீங்க.. எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல அது போதும்..

ஏன் இப்படி பேசுறனா ? ஓ.. நான் இதுவரைக்கும் உங்க கிட்ட சொல்லல இல்ல.. நாளைக்கு நான் இருக்க மாட்டேன்.. இல்லங்க ஊருக்கெல்லாம் போகல.. உலகத்த விட்டே போக போறேன்.. ஆமா இன்னைக்கு ராத்திரி நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.

ஏன்னு கேட்டா என்ன சொல்றது ? எனக்கு வாழ பிடிக்கல அவ்ளோ தான்..
ச்சே ச்சே.. காதல் தோல்வி.. வேலை கிடைக்கல.. குடும்பத்துல கஷ்டம் இப்படி எந்த அற்பமான காரணமும் இல்லங்க..

அப்புறம் ஏன் இந்த முடிவா? சரி வாங்க உக்கார்ந்து பேசுவோம்..

என்னவோ தெரியலங்க.. கொஞ்ச நாளா.. மனசு ஒரு மாதிரியா இருக்கு.. யார் கூடவும் பேச பிடிக்கல.. தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங்..

நல்ல குடும்பம்.. தேவையான அளவுக்கு சம்பளம் வர வேலை, எதையும் பகிர்ந்துக்க நண்பர்கள், சந்தோசமான வாழ்கை ன்னு எல்லாம் இருந்தும் எதோ ஒரு வெற்றிடம் இருக்குற மாதிரி தோணுது மனசுல.. எனக்கும் சில சமயம் சில பேர பார்த்தா தோணுது.. இவன் எல்லாம் எந்த நம்பிக்கைல வாழுறான்? நாம ஏன் சாகனும்னு?ஆனா அப்புறம் ஒரு தனிமை கிடைக்கும் போது யோசிச்சி பார்த்தா சாகனும்னு தோணுதே..

அட போன மாசம் கூட கடை தெருவுல ஒரு புதுசா கல்யாணம் ஆனா ஜோடிய பார்த்தேன்.. பொண்ணு சும்மா ரதி மாதிரி... ஸ்ஸ்ஸ்ஸ்........ என்னத்த சொல்ல... ஆனா அவ புருஷன்.. அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க.. அப்போ கூட நினச்சேன்.. இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு கல்லை கொண்டு அடிச்சி கொன்னுருக்கலாம்னு.. ஆனாலும் அந்த பொண்ணு அவன் கூட சகிச்சிகிட்டு வாழுது .. ஒருவேளை அவளுக்கு புடிச்ச குணம் அவன் கிட்ட இருக்குதோ என்னவோ.. இருந்தாலும் கடவுளோட காம்பினேஷன் செலெக்ஷன் கொடுமைய நினச்சி ரொம்ப கோபம் வந்துசிங்க.

அது கூட பரவாஇல்ல போன வாரம் மார்க்கெட் போய் இருந்தேன்.. தக்காளி கிலோ எட்டு ரூபான்னு வித்துகிட்டு இருந்தவன் ஒரு வெளிமாநிலகாரண பார்த்ததும் kg 15 ருபீஸ்ன்னு இங்கிலிஷ்ல சொல்லி விக்குறான்.அப்போ கூட தோணிச்சி இப்படி ஊரை ஏமாத்தி பொழைக்கிற இவன் எல்லாம் வாழும் போது நான் ஏன் சாகனும்னு.. ஆனாலும் நான் சாக விருப்பபடுறேன்.

இன்னைக்கு காலைல கூட நான் பாட்டுக்கு வண்டில போய்கிட்டு இருந்தேன்.. வழி ஒருத்தன் லிப்ட் கேட்டான் தெரிஞ்சவன்னு நம்பி கூட்டிகிட்டு போனேன்.. பயணம் செஞ்ச 5 நிமிஷத்துல ஒரு சோகக்கதைய சொல்லி 50 ரூபா கறந்துட்டான் . ஏமாந்தது என்னோட தப்பு தான் இருந்தாலும் ஏமாத்துறவன் எல்லாம் சந்தோசமா வாழுற உலகத்துல நான் ஏன் சாகனும்? ஆனாலும் தோணுதே...

இந்த உலகத்துல மனுஷன்ல இருந்து அவன் உருவாக்குன கடவுள் வரைக்கும் யாரும் நல்லவங்க இல்லங்க. எல்லோரும் சுயநலத்தோட தான் மத்தவங்க கிட்ட பழகனும்னு நினைக்கிறாங்க.. அடுத்தவங்க கஷ்டத்துல இவங்களுக்கு ஒரு சந்தோசத்த எதிர்பார்த்து பழகுறாங்க ..

ஆனா எவளோ பேர பார்த்தும் மனசு மாறாத நான் இப்போ மனச மாத்திக்கலாம்னு நினைக்கிறேன்

இப்போ கூட பாருங்க உங்களுக்கு எவ்ளோவோ வேலை இருக்கும் ஆனாலும் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சும் இவ்ளோ நேரம் வெட்டியா உக்கார்ந்து கதைகேட்டு மனசுக்குள்ள சந்தோஷபடுறிங்க பாருங்க. உங்கள மாதிரி ஜென்மம் எல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகனும். நான் வாழனும்.. வாழ்வேன்.

Thursday, March 11, 2010

கட்டிங் வித் கிஷோர் - 4

சில வருடங்களுக்கு முன்பு.. என்னோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி சட்டிஸ்கர் மாநிலம் பச்சேலி என்ற ஊரில் இருந்தார்கள். விடுமுறைக்காக அங்கே சென்று இருந்தேன் .மாமாவிற்கு அடிக்கடி லீவ் போட முடியாத காரணத்தால் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

ஒரு நாள் 100 கிமீ தொலைவில் இருக்கும் சித்திரகோட் பால்ஸ் போவதென்று முடிவு செய்து.. கிளம்பினோம்..நான்,அக்கா எனது நண்பர்கள் இருவர்..
அழகு கொஞ்சும் மலை காடுகளையும் நீர்விழ்சிகளையும் பற்றி இன்னொரு பதிவில் படங்களுடன் சொல்கிறேன் ..
நாங்கள் போன பாதை மலைவாழ் மக்கள் வசிக்கும் காட்டு பகுதி.. சொல்லி வைத்தார் போல் இரண்டு மலைகளை தாண்டியதும் வண்டி மக்கர் செய்து விட.. மலை சரிவில் தூரத்தில் மலைவாழ் மக்களின் குடிஇருப்புகள் தெரிய.. ரேடியேடற்கு தண்ணி எடுப்பதற்காக நானும் என் நண்பர்களில் ஒருவனும் மட்டும் கேன் எடுத்துக்கொண்டு மலை சரிவில் இருந்த மலைவாழ் மக்களின் ஊருக்குள் சென்றோம் .

போகும் வழியில் நமது அரசு அந்த மலைகளிலும் சாலை வசதி தண்ணீர் வசதி செய்து இருப்பதை பற்றி பெருமையுடன் பேசி கொண்டு சென்றோம்.. ஆனால் அது எந்த ஜென்மத்திலும் ஏழைமக்களுக்கு சென்று அடையாத வசதிகள் தான் என்று ஊருக்குள் நுழைந்ததும் புரிந்தது. யாரும் இல்லாத பகுதியில் சாலை வசதிகளும் மின்சார வசதிகளும் செய்து வைத்திருக்கும் அரசு மக்கள் வாழும் பகுதிகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஆச்சர்யம் (அலட்சியம் ).

கதைகளில் சினிமாக்களில் பார்ப்பதை போல யாரும் எங்களை சுற்றி வளைக்க வில்லை.. மாறாக குறுகிய தலைகளும் சற்றே உப்பிய வையறுமாய் நீண்ட காது மடல்களில் பெரிய வளையங்களுடன் வெள்ளந்தி சிரிப்புடன் இருந்த மக்கள் புதியதாக எங்களை கண்டதும் ஓடி ஒளிந்தது தான் ஆச்சர்யம் . இன்றும் மேலாடை அணியாத பெண்கள்,வாடி வதங்கிய குழந்தைகள் வறுமையின் வறுமையின் அத்தனை நிலைகளையும் காண முடிந்தது.

அவர்களிடம் தூரத்தில் நின்ற வண்டியை காட்டி வாட்டர் கேனையும் காட்டி தண்ணீர் வேண்டும் என்றோம். எங்களை மாறி மாறி பார்த்தவர்கள் நம்பிக்கை வந்தவர்களாய் தண்ணீர் பிடித்து கொடுத்தார்கள்.

எங்களுக்கும் சற்று பயம் நீங்கி அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். சந்தோசத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ள மொழி ஒரு தடை இல்லை என்பதாலோ என்னவோ அவர்களின் நிலையை அவர்களின் புரியாத பாஷைகளிலும் சைகைகளிலும் விளக்க புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாதாம் இவர்கள் ஓட்டு போடும் இயந்திரம் இல்லை அதனால் அரசுக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதாலும் எந்த விதமான சலுகைகளும் அரசிடம் இருந்து கிடைப்பது இல்லை. வாழ்வோ சாவோ எல்லாம் இவர்களுக்குள்ளே பார்த்து கொள்கிறார்கள் . காட்டில் கிடைக்கும் பழங்களை மலைக்கு கீழே இருக்கும் ஊர்களுக்கு சென்று விற்று அந்த பணத்தில் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

நேரம் ஆகி விட்ட படியால் அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.. வரும் போது அவர்களிடம் ஒரு கூடை நிறைய நாவல் மற்றும் பலா பழம் வாங்கினோம் அதற்கு அவர்கள் பெற்று கொண்ட தொகை வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டாயபடுத்தி கொடுத்ததும் அதிக பணம் வாங்க மறுத்து விட்டார்கள்..
அந்த இடத்தை விட்டு கனத்த மனதுடன் வெளி வந்தோம்.. மீண்டும் காதுகளில் அந்த குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பு சத்தம்..
-----------------------------------------------------------------

நித்தியானந்தா ஜி

சாமியார் நடிகையுடன் படுக்கை அறை காட்சிகள் என்று பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் விளம்பரம் செய்து தங்கள் ரேட்டிங்கை உயர்த்தி கொண்டனர்.

உலகையே தனது பேச்சால் மயக்கிய ஒருவன் எதில் கோட்டை விட்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
யாரை குறை சொல்வது?
40 வயது நிரம்பாத ஒருவனை சாமி என்று பின் தொடர்ந்து சென்றவர்களையா ?
அவனை பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியட்ட பத்திரிக்கைகளையா ?
பணமும் புகழும் மரியாதையும் இந்த சமூகத்தில் கிடைத்த பின்பும் அடங்காமல் ஆட்டம் ஆடியவணையா?

யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது.. அரங்கேறிய அசிங்கங்களுக்கு மூவருமே காரணம்.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவன் பேரில் நில அபகரிப்பு மோசடி செய்தி ஒரு நாளிதழில் வந்த போது கண்டு கொள்ளாமல் இப்பொது மட்டும் இதை செய்தியாக போட்டு தங்களை மக்கள் முன் நியாயஸ்தர்களாக கட்டி கொள்ளும் மீடியாக்கள் வாழ்க..

ஒருவேளை புகழ் பெற்ற நடிகையுடன் இல்லாமல் வேறு பெண்களுடன் இருந்த காட்சிகளை பத்திரிகைகளும் மீடியகளும் இவ்வளவு பிரபலபடுத்தி இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.

ரஞ்சிதாவை புகழ் பெற்ற நடிகை என்ற ஒரே காரணத்திற்காக முகத்தை கூட மறைக்காமல் முன்னிறுத்தி அந்தரங்க ஆபாசங்களை குடும்பங்களில் சிறு பிள்ளைகள் கூட பார்பார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் வீட்டின் நடு கூடம் வரை கொண்டுவந்த மீடியாக்கள் காஞ்சிபுரம் பூசாரியுடன் கருவறையில் விளையாடிய குடும்ப "குத்து " விளக்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏனோ?

நித்தி உனக்கு ஒரு பெர்சனல் அட்வைஸ்.. இப்படி ஓடி ஒளியாம தைரியமா வெளில வந்து மக்கள் கிட்ட செருப்படியோ இல்ல அழுகுன முட்டை வீச்சோ வாங்கிட்டு பாதுகாப்பா ஜெயிலுக்கு போய்டு... நீ ஜெயிலுக்கு போய்டா இந்த மானங்கெட்ட மக்களும் சீக்கிரம் உன்ன மறந்துட்டு வேற எவனாச்சும் புதுசா வருவான் அவன் பின்னாடி போய்டுவானுங்க . நீ அங்க போய் உன்னோட சூப்பர் சீனியர் பிரேம் (பிரேமானந்தா) இருக்காருல்ல அவர பாலோவ் பண்ணி நீயும் ஜெயிலுக்கு பக்கத்துலயே ஒரு ஆசிரமம் வச்சி போலீஸ் பாதுகாப்போட பிசினஸ் பண்ணு.. எவன் என்ன கேப்பானு அப்போ பார்த்துடுவோம்..

எதோ நானும் ஒரு‘வுமனைஸர்’ [பெண்களை நேசிப்பவன் - நன்றி : திரு.சாரு பின் நவீனத்துவ எழுத்தாளர் (என்று ஆள் வைத்து சொல்லிகொள்பவர்) :) ] என்ற முறைல சொல்றேன்.. வீணா பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடாத..
--------------------------------------------------------------------
ரத்த கண்ணீர்.. இந்த படத்தின் காட்சிகளை அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் ஆனால் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு நேற்று அமைந்தது.

M.R.R அந்த காலத்துலயே ஸ்டைல், மானரிசம், டயலாக் டெலிவரி, நக்கல் என்று எல்லாத்துலயும் புகுந்து விளையாடி இருக்கிறார். அம்மாவை கவுன் போட சொல்வதும், மாமாவை வெளியே போக சொல்வதும், இந்திய அரசை கிண்டல் பண்ணுவதுமாய் மனுஷன் பின்னி இருக்கிறார்.
அதிலும் நோய் வந்த பின்பும் அவரின் குசும்பு குறையாத பேச்சை ரொம்பவே ரசிக்க வைத்தார். M.N ராஜம் அவர்களும் தைரியமாக யாரும் நடிக்க தயங்கும் வாய்ப்பை பெற்று அசத்தி இருக்கிறார்..

டேய் நித்தி..உன் படத்த ஊரே பாக்குறது இருக்கட்டும் நீ முதல்ல இந்த படத்த பாரு. you must see this movie..

---------------------------------------
மீண்டும் சநதிப்போம் ..

Tuesday, March 2, 2010

இது தான் காதலா?

அர்ச்சனா ரெஸ்டாராண்ட் ...போன மாதம் கல்யணம் ஆகி இருந்த வினோத்தும் நந்தினியும் வேறு உலகத்தில் இருப்பதாக நினைத்து கொண்டு அந்த ஹோட்டல்லின் கடைசி டேபிள்லில் உணவுடன் உணர்வையும் அசைபோட்டு கொண்டு இருந்தனர் . பேசும் போது எதேச்சையாக எதிர்புறம் பார்வையை செலுத்திய நந்தினிக்கு அதற்கு மேல் அவள் கணவன் வினோத்திடம் சகஜமாக பேசமுடிய வில்லை.. காரணம் எதிர் டேபிள்லில் "சிவா".. அவளின் முன்னால் காதலன்..

சிவாவின் விழிகளில் ஏளனம் .. என்ன இருந்தாலும் என் கூட ரெண்டு வருஷம் சுத்துணவ தான என்ற ஒரு அலட்சிய பார்வை.

அவளை பார்த்தபடியே பேரர் கொண்டு வந்த ஜூஸை பருகினான்.. ஜூஸ் இல் இருந்த சில்லிப்பு அவன் மனதில் இருந்த தீக்கு இரையாகி காணாமல் போய் கொண்டு இருந்தது..
எத்தன நாள் இதே மாதிரி என்கூட ஹோட்டல்ல சாப்பிட்டு இருப்பா? இன்னைக்கு அவன் புருஷன் கூட.. பத்தினி மாதிரி..
இவள் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லன்னு நினைச்சிட்டா போல இருக்கு..
பாருடி நான் சந்தோசமா இருக்கேன்.. இன்னைக்கு நான் அன்னைக்கு இருந்ததை விட அதிகம் சம்பாதிக்கிறேன் .. அன்னை நான் இருந்த நிலைமையை காரணம் காட்டி தான என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிகிட்ட? இப்போ நான் சந்தோசமா இருக்கேன்.. ஆனா நிம்மதியா இல்லை . நான் இன்னைக்கு இருக்குற நிலைமைய உங்கிட்ட சொல்லி உன்னை அழவச்சி பார்த்தாதான் எனக்கு நிம்மதி. அந்த சந்தர்ப்பதிற்காக தான் காத்துகிட்டு இருக்கேன்..

சிவா நினைத்தபடியே அவனுக்கு சந்தர்பம் அமைந்தது.. வினோத் எதையோ மறந்தவனாய் அவளிடம் சொல்லி விட்டு காருக்கு திரும்ப.. அவள் எழுந்து கை கழுவ சென்றாள்.. இது தான் சரியான் சந்தர்ப்பம் என்று எண்ணியவனாய் மின்னலாய் அவளை பின் தொடர்ந்தான்..

அந்த அறை கதவை திறந்ததும்.. அவன் எதிர்பார்க்காமல் அந்த குரல் கேட்டது..

எப்படி இருக்கீங்க சிவா?-நந்தினி

பேசினால் பயந்து ஓடுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து வந்த கேள்வியால் இன்னும் கோபம் தலைகேறியது.. ..

ச்சே.. கொஞ்சம் கூட வெக்கபடாம பேசுற.. எத்தன நாள் என்கூட இதே மாதிரி சுத்தி இருப்ப.. என்று ஆரம்பித்தவன்.. மனதில் இருந்ததை எல்லாம் அவளிடம் நெருப்பு துண்டங்களாக கொட்டினான்.

இதெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவளின் இதழ்களில் ஒரு சின்ன புன்சிரிப்பு.. விழிகளில் பரவசம்.. மற்றபடி அவளிடம் எந்த பதிலும் இல்லை..
இதை பார்த்தவனுக்கு இன்னும் கோபம் அதிகம் ஆகியது..

ச்சே.. என்ன ஜென்மம் நீ? இவ்ளோ பேசுறேன் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம சிரிக்கிற.. உன்னை போயா ரெண்டு வருஷம் உருகி உருகி காதலித்தேன்? ஒருத்தனுக்கு காதலியா துரோகம் பண்ணிட்டு இப்போ அடுத்தவனுக்கு மனைவியா அதையே செய்யறியே உனக்கு வெக்கமா இல்ல? தயவுசெஞ்சி உன் புருஷனுக்காது இனிமே உண்மையா இரு..

"இனி என் வாழ்நாள் முழுக்க நான் நினைச்சி கூட பார்க்க விரும்பாத ஒரே நபர் நீயா தான் இருக்க போற.." என்று சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் கதவை வேகமாக திறந்து வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றவுடன். அந்த அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று.. மனதிற்குள் பேச தொடங்கினாள் ..
இல்ல சிவா.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணல.. நான் எப்படி சிவா எனக்கே துரோகம் பண்ணிக்க முடியும்?.
சிவா அன்னைக்கு நீங்க இருந்த நிலைமைல.. உங்க சொந்த வாழ்கையை பத்தி கவலைபடல.. என்னை கல்யாணம் செய்யணும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் தான் உங்க மனசுல இருந்துச்சி.
எனக்காக நீங்க உங்களுக்கு வந்த வாழ்கைல உயர போகிற நல்ல சந்தர்பங்களை எல்லாம் உதறி தள்ள தயாரா இருந்திங்க..

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாழ்கை இருக்கு.. நிதர்சன வாழ்கை.. அதற்கு காதல் மட்டும் பத்தாது சிவா.. கல்யாணத்துக்கு பின்னாடி நமக்குள்ள வர சின்ன சின்ன பிரச்சினைகளை கூட என்னால தாங்கிக்க முடியாது சிவா.

நான் ரசித்து ரசித்து உருகி உருகி காதலித்த.. காதலை மட்டுமே எனக்கு தந்த என் சிவா முகம் திருப்பி போறத என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது..

என்னோட சிவா வாழ்நாள் முழுக்க நல்லா இருக்கனும்.. என்னோட சிவா வாழ்கைய கெடுக்குற எந்த விஷயத்தையும் எதிர்க்க நந்தினி தயங்கமாட்டா..
அதுக்காக இந்த நந்தினி எதுவானாலும் செய்வா..
அவளையே விட்டு கொடுக்கறத கூட..
இதற்கு இந்த உலகம் என்னை ஆயரம் பேர் சொல்லி அழைக்கலாம்.. எனக்கு கவலை இல்லை ..
என்னை பார்த்து "இது தான் காதலா?" என்று கேட்கலாம்.
ஆம்.. என்னை பொறுத்தவரை "இதுவும் காதல் தான்".

Monday, February 22, 2010

டீன் ஏஜ் - நான்

டீன் ஏஜ் பருவம் பத்தி எழுத அழைப்பு விட்ருக்காங்க .. விசில் அடிச்சி கூப்பிட்டவன் வினோத்கெளதம்..

என்னோட டீன் ஏஜ் பத்தி சொல்லனும்னா..80% இனம் புரியாத காம உணர்வு.. 15% ஜாலி லைப்.. 5 % படிப்பு.. இதான் நான் நானா இருந்தது.. (பலருக்கும் இப்படி தான்னு நினைக்கிறன்.. ஆனா ஏன் சொல்ல மாட்றாங்கன்னு தெரியல ..)

13 வயசு..

சயின்ஸ் புக்ல இருக்குற பூச்சிகளின் இனபெருக்க முறையை படிச்சாலே ஒரு மாதிரி தான்.. பொண்ணுங்க பார்த்தாலே ஒரு கிளுகிளுப்பு.. பேசிட்டா காத்துல பறக்குற கதை தான்.. ( அந்த பேச்சும் வெறும் புக் வாங்குறது,, பேனா குடுக்குறதுன்னு .. சப்ப மட்டர் தான்.)

14 வயசு

சில சமயம் டிராயரும் சில சமயம் பாண்டும் அணிந்த காலம் அது.. என்னத்த சொல்ல...? அதுவரை உலகிலேயே மிக வசதியான உடையாக இருந்த டிராயர் அவ்வப்போது சங்கடமாக உணர வைத்த காலம் இது..

15 வயசு

அரும்பு மீசையும் உடலில் ஆங்காங்கே ஏற்பட்ட மாற்றங்களும் தனி திமிரை வர வைத்த காலம்.. அதுவரை யாரையும் அக்கா,அண்ணி , ஆண்டி என்று பழகிய எனக்கு.. எல்லோரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பித்த காலம்..

16 வயசு

பிசிக்ஸ் மேம் போர்டில் ஒரு கையை உயர்த்தி பிடித்து கொண்டு நடத்திய பாடத்தை பற்றி " is it clear students?" என்று கேட்க போர்டில் இருப்பதை "மட்டும் " பார்க்காமல் "very clear " மேம் என்று ஜொள்ளுடன் பதில் உரைத்த காலம்..

17 வயசு

டேய் மச்சி சீனிவாசல " love cover girl" ன்னு ஒரு படம் வந்து இருக்குடா ஆரம்பம் முதல் கடைசி வரை டிரஸ் இல்லையாம் அப்படீயே காட்டுராங்கலாம் .. மதியம் போலாமா ? .-நான்

டேய் மதியம் ஆட்டோமொபைல் லேப் இருக்குடா.. நமக்கு lab incharge யாருன்னு தெரியும்ல g.v சார்.. அப்புறம் அடுத்த வாரம் கஞ்சி காச்சிடுவாரு -பார்த்திபன்

டேய் நான் விசாரிச்சிட்டேன் அவரு மதியம் வரலயம் அவரும் senior instructor -ரும் எதோ முக்கியமான வேலையா வெளில போய் இருக்காங்களாம் .. இன்னைக்கு s.p தான் incharge.. பாரு கார்த்தி கூட பார்த்தே ஆகணும்னு அடம் புடிக்கிறான். விட்டா அழுதுடுவான் போல இருக்கு.- நான்

ஆமா மச்சான் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா.. வாடா போலாம்.. ப்ளீஸ்.. - கார்த்தி

சரி வாங்க போலாம் - பார்த்திபன்

படம் போட ஆரம்பித்த 10 வது நிமிடம் கார்த்தி மெதுவாக.. மச்சான் அங்க பாரு g.v -யும் senior instructor -ரும் உக்கார்ந்து இருக்காங்க.. மச்சான் அவங்க கண்ணுல மாட்டுனா அவ்ளோ தான்.. கிளாஸ் போகாததுக்கும் இங்க அவனுங்கள பார்த்ததுக்கும் சேர்த்து ரிவெட் வைப்பாங்க.. போய்டலாம் என்று சொல்ல.. சத்தம் காட்டாமல் வெளியில் ஓடி வந்த காலம்..

18 வயசு.. & 19 வயசு..

அட படிக்கிற காலம்ங்க.. அதான் சொன்னேன்ல 5 % படிப்புன்னு..

தொடர விரும்புவோர் தொடரலாம்.. நான் அழைப்பது கண்ணா மற்றும் பப்பு..( ஆமா பப்பு உனக்கு டீன் ஏஜ் முடிஞ்சிடுச்சா?)

Monday, January 25, 2010

எங்கே செல்லும்.. பாகம் - 6

விசா வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை பலாவும்,பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் , வினோத்கௌதமும் தொடர.. தானே போய் உக்கார்ந்த கதையாய் இப்பொழுது நான்...

(
முழுசா படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிசோடு எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.)
இனி ..
-----------------------------------------------------------------------------
விமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் .. ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.

அதை தொடர்ந்து கேப்டனின் குரல்..

"dear passengers, we are returning to the chennai airport due to some techinical fault.
dont worry still flight is in control.
sorry for the inconvenience."

இது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.

அவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை அழுத்தினான் ..
சில நொடிகளில் மறுமுனை நேரடியாக

"நீ இன்னும் பிளைட் ஏறலியா ?" என்று பதற்றமாக கேட்டது .

"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி.. ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்" - ராஜேஷ்

"ஓ! அவன் என்ன பண்றான்?"

"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை "- ராஜேஷ்

" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல? அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு .. அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்."

"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா? இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ? "- ராஜேஷ்

"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா ? நீ சொன்னத மட்டும் செய்..
கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு"

"சரி" என்றான் ராஜேஷ்

மறுமுனை கட் ஆனது.
--------------------------------------------------------------------------

"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா ?"- ஸ்வாதி

"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க?" - ஆவுடையப்பன்

"சார். நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்.."

"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க"

"சரி சார்.." என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .

------------------------------------------------------------------------
ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..

ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..
தலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..
ராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.

எதுவும் புரியவில்லை..

என்ன இது இவன் பேசுறான்? போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி ? மருந்து வேலை செய்யலியா?
மெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
--------------------------------------------------------------------------
அதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..

"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு
இருந்தாள் ஸ்வாதி ..
-------------------------------------------------------------------------
இவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி? என்று யோசித்தபடி.."ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு? " அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட்டான்.

அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..

அ.. ர்.. ஜூ .. ன்..

அ.. ர் .. ஜூன்..

அர்.. ஜூன்..

அர்ஜுன்..

(தொடரும்)..
தொடரபோவது நண்பர் சுபதமிழினியன்.. வாழ்த்துக்கள் :)


------------------------------------------------------------------------------
டொய்ங் : முடிந்த வரை 10 பாகதிற்க்குள் முடிக்க பாருங்க.. அப்போ தான் விறுவிறுப்பா இருக்கும் அடுத்தது தொடங்கவும் வசதியா இருக்கும் . இல்லனா டெலி சீரியல் மாதிரி ஆகிட போது..

யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.