Wednesday, July 21, 2010

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ..

புதுச்சேரி என்ற ஊருல ஒரு கிளி இருந்துச்சாம், அதுக்கு கல்யாண வயசாகியும் ஜோடி கிளி கிடைக்காம ரொம்ப ஏக்கத்துல இருந்துச்சாம். அதனால அப்போ அப்போ அந்த கிளி அங்க இருந்து கிளம்பி பக்கத்துக்கு ஊரான சிதம்பரத்துல இருக்குற அதோட பிரண்ட் கிளிய போய் பார்த்து புலம்புமாம்.

இந்த கிளி புலம்புறத தாங்க முடியாத பிரண்ட் கிளி அந்த கிளிக்கு பருக மோரும்.. நீரும்.. தந்து சமாதானபடுத்துமாம். அதுலயும் சமாதானம் ஆகாத அந்த கிளி மோரையும் நீரையும் கலந்து "பருகிட்டு" பிரண்ட் கிளிய பார்த்து ஏன்டா எனக்கு இன்னும் ஜோடி கிடைக்கலன்னு.. காரணமே இல்லாம திட்டுமாம்.

இப்படி ஜோடி இல்லாம இது ஊருக்குள்ள பண்ற அழும்ப பார்த்த பெத்தவங்க கிளிங்க ரெண்டு பெரும் இதை இங்க வச்சிருந்தா "ஊருக்கு" ஆகாதுன்னு அந்த கிளிய வீட்ட விட்டு ரொம்ப தூரத்துல போய் இரை தேட அனுப்பி வச்சாங்களாம் .

வீட்ட விட்டு பிரிஞ்சி போன ஒரு பாலைவானத்துல போய் தங்குச்சாம் . அந்த பாலைவனத்துல தினமும் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சி இரை தேடுவதற்கு ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அதை பெத்தவங்க கிளிகிட்டையும் அதோட பிரண்டு கிளிகிட்டயும் தினமும் தகவல் குடுத்து ஒரே அழுகாச்சியாம்.

இது சீன் போட்டத உண்மைன்னு நம்புன பெத்தவங்க கிளி ரெண்டு பெரும் இந்த கிளிக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டா சரி ஆகிடும்னு ஒரு அழகான பெண் கிளிய பார்த்து முடிவு பண்ணி இந்த கிளிகிட்ட சம்மதம் கேட்டாங்களாம் .அது பத்தாதுன்னு பிரண்ட் கிளி வேற இந்த கிளிகிட்ட அதோட விருப்பத்த பத்தி கேட்டுச்சாம் .

ஆரம்பத்துல ரொம்ப ஓவரா சீன் போட்ட அந்த கிளி..எதுவா இருந்தாலும் அந்த பெண் கிளி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும்னு சொன்ன அந்த கிளி.. ஊர்ல இருக்கும் போது வீட்டுக்கு வராம ஊரு சுத்துன அந்த கிளி.. இப்ப அந்த பெண்கிளி கிட்ட பேச ஆரம்பிச்சதும்...

ஹலோ.. .ஹலோ .. ஸ்டாப்..ஸ்டாப்.. ஹோல்ட் ஆன்..

எவனாவது கதை சொன்னா "உம்" கொட்டி கேட்டுகிட்டு இருப்பிங்களா ?
கிளி கதை கேக்குற வயசா உங்களுக்கு? வேற என்ன செய்யனுமா?

என்னங்க இப்படி கேட்டிங்க? இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்னது தெரியாதா? அட வாங்க.. எவ்ளோ முக்கியமான நாள் இன்னைக்கு.. அதை விட்டுட்டு கிளி கதை எல்லாம் கேட்டுகிட்டு..

22. 07 .2010 . என் நண்பன்
வினோத் கெளதம் -க்கு
பிறந்த நாள்....

இந்த சந்தோசம் உன் வாழ்வில் என்றும் நிலைத்திருக்க..

நீ விரும்பும் அனைத்தும் உன் வாழ்வில் கிடைக்க என்றும் இறைவனை பிராத்திக்கிறேன் .


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY DA MACHAN..

இந்த வருஷம் தான் பேச்சுலரா பிறந்த நாள் கொண்டாடுவான்.. அடுத்த வருஷம் முதல் அவனுக்காகவே படைக்கபட்ட கடவுளின் வரமான பெண்ணுடன் தம்பதி சகிதமாய் கொண்டாடுவான்.

உங்களுடைய ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் கஞ்சதனம் பண்ணாம அவனுக்கு நிறைய நிறைய வாரி வழங்குங்கள்.

18 comments:

சீமான்கனி said...

அந்த கிளி ரெம்ப நல்ல கிளியா??நண்பருக்கு கஞ்சத்தனமில்லாத நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...

வினோத்கெளதம் said...

நன்றிகள் பல மச்சான்..
இப்படி புட்டு புட்டு வச்சி இருக்கியே நல்லா இரு..:)
எந்த கிளி பொலம்ப்புனதுனு எனக்கு தாண்டா தெரியும்..

வினோத்கெளதம் said...

நன்றிகள் சீமான்கனி..:)

கண்ணா.. said...

அமீரக அஜீத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....:)))

கண்ணா.. said...

//ஆரம்பத்துல ரொம்ப ஓவரா சீன் போட்ட அந்த கிளி..எதுவா இருந்தாலும் அந்த பெண் கிளி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும்னு சொன்ன அந்த கிளி.. ஊர்ல இருக்கும் போது வீட்டுக்கு வராம ஊரு சுத்துன அந்த கிளி.. இப்ப அந்த பெண்கிளி கிட்ட பேச ஆரம்பிச்சதும்...
//

ம் ... அப்புறம்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் மச்சி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு,
நீ இன்று போல் என்றும் சிரித்துக்கொண்டே இருக்கோனும்.[திருமண்மானபின்னும்]
இந்த பக்கம் வந்தால் பார்ட்டி குடுத்துட்டுபோப்பா!!!!நீ நான் ஆதவன் நம்ம குட்டிஷாக்

நாகா said...

வாழ்த்துக்கள் வினோத்!

வினோத்கெளதம் said...

வாழ்த்துக்கள் கூறி நெகிழ வைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..:))

ஹாலிவுட் பாலா said...

தாரை தப்பட்டைகள் கிழிய வேண்டாமா...???!!!!!!!!!!!

=====

வாழ்த்துகள் வினோத்!!! அந்தக் கிளிக் கதையை நீங்க கண்டினியு பண்ணுங்க வினோத்.

சீக்கிரம் உங்க ப்ளாகை ஓப்பன் பண்ணுங்க. கும்மிக்கு ஒரு இடம் மிஸ்ஸாகுது.

ஹாலிவுட் பாலா said...

நேத்து பூரா கமெண்ட் போட முடியலை. வேர்ட் வெரிஃபிகேஷன் வந்து கொன்னுடுச்சி.

ஹாலிவுட் பாலா said...

//அமீரக அஜீத்திற்கு //

அமீரக டிகாப்ரியோ
அமீரக ரிக்கி மார்டின்
அமீரக ஜாக்கிச்சான்
அமீரக ஒபாமா

கோபிநாத் said...

இங்கையும் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா மச்சி ;)))

கிளி கதை கலக்கல் மச்சி ;)))

KISHORE said...

நண்பனை வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

KISHORE said...

@ கண்ணா
அப்புறம்.. ரொம்ப கேவலமா இருக்கும் டா.. அதனால போன்ல பேசும் போது சொல்றேன்.. :)

KISHORE said...

@ ஹாலி பாலி..

//அந்தக் கிளிக் கதையை நீங்க கண்டினியு பண்ணுங்க வினோத்.//

பாலி... எவனாவது தனக்கு தானே ஆப்பு வச்சிபானு நினைகிறிங்க?

வால்பையன் said...

வாழ்த்துக்கள் வினோத்!

பார்த்து பல வருசம் ஆச்சு!
எப்போ வர்றிங்க!?

வினோத்கெளதம் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள் பல..

@ ஹாலி : தல என் ப்ளாக் தொறந்து தான்கீது..

@ வால்ஸ்: வால்ஸ் கூடிய விரைவில் சந்திப்போம்..என் கல்யாணத்தில்..:)