Saturday, October 10, 2009

நீயெல்லாம் ஏன்டா எழுதுற ?

இவர் ஒரு பிரபல பதிவர்.. கொடுமையான விஷயம் என்னன்னா இவரை பிரபலம்னு இவர தவிர வேற யாருமே சொன்னது இல்ல. இதுவரைக்கும் ஒரு 50 பதிவு கூட இவரு தாண்டல. எப்படி தான் பிரபலம்னு சொல்லிக்கிட்டு தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு அலையராரோ .. துண்டை ..

இன்று இவரின் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது.. என்னுடைய
விதி.. நெசமாவே எனக்கு நேரம் சரி இல்லங்க..

இவரோட எழுத்து திறமைய பார்த்து பல பேரு பதிவுலகத்த விட்டே ஓடி போய் இருக்காங்க..

இவரு எழுத ஆரம்பிச்சது கடந்த பத்து மாதங்களாக தான்.. அதுக்குள்ளே இவரு பண்ற அலப்பறை இருக்கே ..

எழுத ஆரம்பிச்ச புதுசுல இவரு ஒரு கதை எழுதுனாரு.. அவ்ளோ கேவலமா இருந்துச்சி.. சரி ஆரம்பம் தானே போக போக சரி ஆகிடும்னு.. சில பேரு மனசு இறங்கி வந்து நல்லா இருக்கு இன்னும் கொஞ்சம் நல்லா எழுத ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க..அது போதாதா இவருக்கு? ஏதோ "ராஜேஷ் குமார்"மாதிரி சொல்ல போனா ராஜேஷ்குமார் கிரைம் கதைய விட தன்னோடது தான் சூப்பர் மாதிரி நெனச்சிகிட்டு ஊரு பூரா சொல்லி தம்பட்டம் அடிச்சிகிட்டாரு.

அதுக்கு அப்பறம் அவரு எழுதுன முக்கால்வாசி பதிவு எல்லாமே கிட்ட தட்ட "பிட்டு" பட கதை தான்.. எல்லாமே பொண்ணுங்கள பத்தி தான் இருக்கும்.. பேசாம இவரு இங்க பதிவு எழுதுறத விட.. எதாவது மஞ்சள் பத்திரிக்கைக்கு "மல்கோவா ஆண்டி" கதை எழுதலாம்..(முன்னாடி அந்த வேலை தான் செஞ்சாரோ என்னவோ யாரு கண்டா ? )

இதெல்லாம் கூட பரவா இல்லங்க.. ஒரு தடவ இங்கிலீஷ் படம் விமர்சனம் எழுதுறேன்னு அவரு பண்ணுன அழும்பு இருக்கே... ஐயோ.. ஐயோ.. மனசுல பெரிய "ஹாலிவுட் பாலா"ன்னு நெனப்பு.. அதை படிச்சிட்டு பதிவுலகமே காரி துப்புச்சி.. இன்கிளுடிங் ஹாலிவுட் பாலா.. அப்போ கூட அவருக்கு சூடு சொரண எதுவுமே வரலங்க..

இப்போ கூட வெளில கிளம்புனா ஒரு "பேனா" கண்டிப்பா அவர் பாக்கெட்ல இருக்குமாம்.. வழில யாரவது பார்த்து "ஆட்டோகிராப்" கேப்பாங்களாம் .. இந்த தகவல ஒரு தடவ "சாட் "பண்ணும் போது அவரே சொன்னது.. அட ங்கொய்யா இவ்ளோ நேரம் ஒரு சைக்கோ கிட்டயா "சாட் " பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனச்சிகிட்டேன்.

எதாவது ஒரு பதிவு போட்டுட்டு.. அதுக்கு யாரவது கமெண்ட் போட மாட்டாங்களான்னுவெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு உக்கார்ந்து இருப்பாரு..
அப்பறம் போய் ஒருத்தர் விடாம கால்ல விழுந்து வோட்டு கேப்பாரு.. அப்போ கூட ஒரு 12 வோட்டுக்கு மேல தேறாது..

அப்பறம் அவரு காமடி பண்ணறேன்னு படுத்துனது .. கவிதை எழுதுறேன்னு காமடி பண்ணுணது .. போட்டோகிராபின்னு போட்டு பிராண்டுனது எல்லாம் சொன்னா இந்த ஒரு பதிவு பத்தாது..

இப்படி ஒரு ஆளு பதிவு எழுதுலன்னு யாரு அழுதா?
என்னங்க நான் கேக்குறது நியாயம் தான?


அட "இவர்" என்ற "அவர் " யாருன்னு தான கேக்குறிங்க?

கில்மா கதை எழுதுனாலும்.. கொஞ்சம் ஷோக்கான ஆளாத்தான் இருக்காரு அவர் ...

Saturday, October 3, 2009

பதிவுலக நட்பு

இணைய தளம் என்றாலே பொண்ணுங்க கூட கடலை போடுறது மட்டும் தான்னு நெனச்சிகிட்டு இருந்த என்னை மடார்னு மண்டைல அடிச்சி இந்த பிளாக்கர் பக்கம் இழுத்துட்டு வந்தவன் வினோத்கெளதம். இவனால தான் நான் இன்னும் பல வெப்சைட்(!?) எல்லாம் தெரிசிகிட்டேன்.. அதை எல்லாம் சொன்னா கலாச்சார காவல்காரங்க "பிட்டு" படத்த பாக்குறத கொஞ்சம் நிறுத்திட்டு சண்டைக்கு வருவாங்க..

பொதுவாகவே யார் கூடவும் உடனே நட்பு பாராட்டுதல் என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. என்னோட நட்பு வட்டம் ரொம்ப சின்னது..
எவ்ளோ தான் பேசி பழகுனாலும் அவங்க கிட்ட என்னோட சொந்த விஷயங்கள பகிர்கிற அளவுக்கு நான் தயாராவதற்கு ரொம்ப நாள் ஆகும்..

முகம் தெரியாதவர்களிடம் நட்பு பாராட்டுவதை விட முதலில் நமது பக்கத்தில் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவது தான் மனிததன்மை என்பது என் எண்ணம்..(கொஞ்சம் உண்மையும் கூட )

அப்படி இருந்த எனக்கு இன்னைக்கு முகம் தெரியாத பலரின் நட்புகள் கூட கிடைச்சி இருக்குன்னா அதற்கு முழு காரணமும் இந்த பிளாக்கர் தான்.

இந்த பிளாக்கர் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாளைக்கு இது ஒரு போதை மருந்து போல தேரிஞ்சாலும் ( இதை வினோத் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் ) இதை சரியான விதத்தில் பயன்படுத்தும் போது மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக இருக்கிறது என்பதே நிஜம்...

சில சமயம் வீட்டிலோ வெளியிலோ பிரச்சனை காரணமாக சோர்ந்து போகும் போது முகம் தெரியாத நட்புகள்.. ஹாய் கிஷோர் எப்படி இருக்க? என்று கேக்கும் போது உண்மையில் மனசு லேசாவதை உணர்ந்து இருக்கிறேன்..
அப்படி எனக்கு கிடைத்த சிலரின் நட்புக்கள் பற்றி இங்கே..

1. ஹாலிவுட் பாலா
சார்.. அண்ணா ... என்று ஆரம்பித்த நட்பு .. இன்று பாலா என்று பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இருக்கிறது.. இவர் என்னிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசும் போது நான் அவருக்கு சரியாக பதில் அளிக்க முடியாத இடத்தில் இருந்தேன்.. இத்தனைக்கும் அவர் அவருக்கு வேலை கிடைத்தது பற்றி சொல்வதற்காக வந்த கால் அது..
அதன் பின் அவர் என்னிடம் பேசிய போது நான் நடந்ததை கூறி வருத்தம் தெரிவிக்க. இதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல கிஷோர்.. உங்களுக்கு எப்போ பேசனும் என்றாலும் மிஸ்டு கால் குடுங்க நானே பேசுறேன் என்று கூறிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது (இத்தனைக்கும் ISD கால்). அதைவிட என்னை வியக்க செய்த விஷயம் அவர் என்னிடம் பேசும் போது ரொம்ப நாள் பேசி பழகிய நபரிடம் பேசுவது போல ஒரு சகோதர உணர்வு.. வேலை, சினிமா , குடும்பம் என்று எல்லாத்தையும் பத்தி பேசுவார்.. தேங்க்ஸ் பாலா..

2. கலையரசன்

வினோத் கூட வேலை பாக்குறாரு.. வினோத் அறிமுக படுத்தி வச்சதாலோ என்னவோ "என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" பார்முலா வொர்க்அவுட் ஆகிடுச்சி.. முதல் தடவ பேசும்போதே "டா" போட்டு பேசும் அளவிற்கு பழகுவதற்கு இனிமையானவன்.. இந்த மாசம் ஊருக்கு வரான்.
மீட் பண்ணனும் மச்சி..

3. பப்பு @ பிரபு

மதுரைகாரர் .. மதுரை குசும்பு அத்தனயும் அவரின் எழுத்தில் இருக்கும்..
சாட்டில் வந்தால் இரவு 11 மணி வரை கூட பேசுவார்.. எல்லா விஷயத்தையும்..
குறிப்பாக காலேஜ்ல் நடக்கும் அவரின் "சொந்த விஷயத்தையும் " பற்றி சொல்லி கருத்து(!!!???) கேட்பார்.
மனதில் பட்டதை பளிச் என்று சொல்ல கூடியவர்..
மதுரை வந்தா "ஜில் ஜில் ஜிகர்தண்டா " வாங்கி குடுக்கணும் புரிஞ்சிதா..

4 . வினோத் கெளதம்

இவனை பதிவுலக நண்பன் என்று சொல்ல முடியாது.. எனது நீண்ட கால நண்பன்.. எல்லா விஷயத்துலயும் எனக்கு சரியான ஆலோசனை கூறுபவன் ஆறுதலாக இருப்பவன் .
இவனின் நட்பு எனக்கு கிடைத்தது என்னுடைய விதி.. அவனுக்கு கடவுளின் சதி..
(ஹா.. ஹா.. சும்மா தமாசு.. )
ஏற்கனவே சொல்லியது தான் .. "really blessed to have a friend like him"

இன்னும் இருக்காங்க.. சக்கரை சுரேஷ்,பித்தன்,கண்ணா, விஜய், வசந்த், மந்திரன், வால் பையன், இப்படி நிறைய.. பேசி பழகவில்லை என்றாலும் நட்புடன் விசாரிப்புகள் இருக்கும்..
அவர்களை பற்றி விரைவில்..

Friday, October 2, 2009

காதலும் காமமும்


காத்திருக்கிறேன்..
அவளின் கன்னத்தை என் கைகளில் ஏந்த ..
அவளின் இமைகளை என் இமைகளால் மூட..
அவளின் இதழை என் நாவல் சுவைக்க..
அவளின் கைகள் என் கழுத்தை சுற்றி மாலையாக மாற ..
அவளின் கழுத்து என் மூச்சு காற்றை உணர..
அவளின் பற்கள் என் காது மடல்களை கடிக்க..
அவளின் விரல் நகங்கள் என் தேகத்தில் காயம் ஏற்படுத்த..
அவளின் இடையின் ஸ்பரிசத்தை என் கைகளால் உணர..
அவளின் கால்கள் என் கால்களுகிடையே சிக்கி தவிக்க..
அவளின் தேக வெப்பத்தை என் தேகம் எங்கும் உணர..
இதற்கு பெயர் காதலா? என்றான் ஒருவன்
ஆம் என்றேன்..
இது காமத்தின் பிதற்றல் என்றான்..
மடையர்கள்..
காலம்
காலமாக காதலையும் காமத்தையும் பிரித்து பார்கிறார்கள்
காதலின் உச்சகட்ட வெளிப்பாடு காமம் என்பதை அறியாமலே..
அவளை என் விரல் நகம் கூட தீண்டியது இல்ல இதுவரை...
உலகின் பார்வைக்கு இது
காதலோ.. காமமோ..
என் கண்மணியை கைகளின் ஏந்த காத்திருப்பேன்
என் காலம் முழுதும் ..

-காதலன்