Tuesday, March 31, 2009

நான் இந்தியன் அல்ல......

இந்தியா எனது தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்... இந்த வாக்கியங்களை சொல்லும் போது நாவை வெட்டி கொள்ளலாம் போல தோன்றும்.. நான் எதற்காக இந்த நாட்டிற்காக உழைக்க வேண்டும் ? இந்த நாட்டிற்காக எனது சந்தோசத்தை எதற்கு தியாகம் செய்ய வேண்டும் ? இந்த நாடு எனக்கு என்ன செய்து இருக்கிறது? (இந்தியன் என்ற கேவலமான அடையாளத்தை எனக்கு தந்ததை தவிர..)
நான் படித்த படிப்பிற்கு ஏற்ற ஒரு நல்ல வேலை தர வக்கில்லாத இந்த நாட்டிற்காக நான் எனது சுகங்களை விட்டு தர வேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த வகையில் நியாயம்..?
இந்தியர்கள் யாவரும் என் உடன் பிறந்தோர்...
இதை கேட்கும் போது எது வழிய சிரிக்க தோன்றுகிறது தெரியுமா? இவர்கள் யார் என் மீது உரிமை கொண்டாட ? நான் எதற்காக இவர்களிடம் சகோதர பாசத்துடன் பழக வேண்டும்? நான் கஷ்ட படும் போது எனக்கு உதவி செய்யாதவர்கள்... என் படிப்பை தொடர நான் வழிதேடிய போது எனக்கு வழி காட்டதவர்கள் ... உங்கள் இந்திய மக்கள்... இவர்களுக்காக என் சந்தோசத்தை விட்டு தர முடியாது... ஏன் விட்டு தர வேண்டும்?
இந்திய அரசியல்...
அரசியல் ஒரு சாக்கடை.. இது பொதுவாக சொல்வது... என்னை பொறுத்தவரை இந்திய அரசியல் பல மொழி இன மக்களின் கழிவு கிடங்கு...
இந்திய அரசியல் தலைவர்கள்...
என்னை பொறுத்தவரை இவர்கள் என் மைருக்கு சமானம்... நாட்டு மக்களை பற்றி யோசிக்க வக்கில்லாமல் தன் குடும்ப நலன் பற்றி அக்கறை படும் சுயநலவாதிகள்... தங்கள் சுயலாபத்திற்காக திவிரவாதத்தை நம்... ச்சே.. உங்கள் நாட்டில் வளர செய்தவர்கள்...
இந்திய மக்கள்...
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வெளியே வந்து தங்களின் சுய மரியாதயை நூறுக்கும் இருநூறுக்கும் விலை பேசி விற்று செல்லும் விபச்சாரிகள்...
எனது படிப்பிற்கு வெளி நாட்டில் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் போது நான் ஏன் இந்த @@@@ மகன்களிடம் ஆயரதிற்கும் இரண்டுஆயரதிற்கும் கை கட்டி வேலை செய்ய வேண்டும்?
ஒரு இந்தியனாக என்னை நினைக்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது,,,
இந்தியன் என்ற அடையாளத்தை நான் என்னுள் இருந்து அழித்து விட்டேன்... நான் வெளி நாட்டு குடிஉரிமை பெற்று விட்டேன்... இனி நான் இந்தியன் அல்ல ... ஆம்...
நான் இந்தியன் அல்ல....
இப்படிக்கு
xxxx
நாள் :31.03.1998
இதற்கு கருத்து வெளியட விரும்புவோர் எனது அடுத்த பதிவை படித்து விட்டு வெளிடலாம் . இல்லை நான் இப்போ தான் கட்டைய கைல எடுப்பேன் என்று சொல்பவர்கள்.. ஆரம்பியுங்கள்..
குறிப்பு : நீ நாட்டு பற்று இல்லாதவன்... உன் கேவலமான புத்திய உன் பதிப்பு காட்டுது.. மற்றவர்களை கவர இந்த கேவலமான பதிவு... இது போன்ற விமர்சனங்களை எதிர் பார்க்கபடுகின்றன...
அட ஏன் இப்படி வயசுக்கு வந்த பிள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்தி வரிங்க?
அடிக்கணும்னு முடிவு பண்ணிடிங்கள்ள ..? ம்ம்ம்... ஸ்டார்ட் பண்ணுங்க...

ஹலோ மைக் டெஸ்டிங்...

மைக் டெஸ்டிங் 1 2 3...

Sunday, March 29, 2009

நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."

கடந்த வெள்ளி இரவு... சரியாக 9.30 மணி...
கரைகால் நகரம்... பாரதியார் வீதி ..
கிஷோர் (ஆகிய நான்... அட நாந்தேன்... ) அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்... நெடுந்துர பயணத்தின் அலுப்பு அவனை.. ஆட்கொள்ள... உலகத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.. ஒரு ஆழ்ந்த நித்திரை... ( நல்லவேளை ஷாட்ஸ் அணிந்திருந்தான்..)
அப்போது சும்மா கிடந்த சொம்ப எடுத்து ஓட்டை ஆக்கி அதை திரும்ப பற்ற வைப்பது போல ஒரு சத்தம்... தூக்கத்தில் இருந்து கலைந்த கிஷோர்... என்ன இது கொடுரமான சத்தம்.. என்று பார்க்க அவன் செல்போன் அலறி கொண்டிருந்தது.. எடுத்து காது கொடுத்து ஹலோ என்றான்...
துபாய்ல இருந்து கால் ஆணு.. கொறச்சி.. வெயிட் செய்யி... மலையாளத்தில் பேசியது ஒரு ஆண் (என்ன கொடும சார் இது...) குரல்... சரி என்று சொல்லி விட்டு காத்திருக்க தொடங்கினான்...
வந்தது லோக்கல் நம்பர் மாதிரி இருக்கு... துபாய்னு சொல்றான்...( என்னென்ன தகிடுதத்தம் வேலை பண்ணுறானுங்கபா ..)
சிறுது நேரத்தில் ஒரு ஆண் குரல்..
"டேய் ............ (சென்சார் செய்ய பட்டது) நான் தாண்டா ...
"சொல்லுடா என்ன இந்த நேரத்துல...?"
"உலகத்துல என்ன என்னமோ நடக்குது..."
"என்ன ஆச்சி..?"
"உனக்கு BUTTERFLY AWARD குடுத்து இருகாங்க "
"படுக்கை விட்டு எழுந்த கிஷோர் ஆச்சர்யத்துடன் கேட்டான் ..
"டேய் வினோத் என்னடா சொல்ற"
"ஆமா மச்சான்... என்னால இதை நம்ப முடியுல"
"யாருடா குடுத்து இருக்கா?"
"நம்ம வால் பையன் டா.. உனக்கும் பப்புக்கும் குடுத்துஇருக்காரு .."
"சந்தோசம் டா... ஆனா நான் இப்போ எங்க இருக்கேன் எங்க போய்கிட்டு இருக்கேனு தெரியும்ல நான் எப்டிடா நன்றி தெரிவிக்கிறது.."
"தெரியும் மச்சான் கவலைப்படாத அவரு ஆன்லைன்ல வரும் நான் சொல்லிகுறேன் அவரு வந்ததும் நீ சொல்லிடு இல்ல போன்ல பேசு ..."
"ஓகே மச்சான் தேங்க்ஸ் டா.. "
"ஓகே மச்சான் பை குட் நைட் "
" குட் நைட் டா "
அப்பறம் எங்க அவன் துங்குறது ......
படிச்சி முடிசிடிங்களா...?
இதனால இந்த ஊரு.. உலகம்.. மற்ற கிரகம்.. எல்லோதுளையும் இருக்குற எல்லோருக்கும் நான் சொல்லிகிறது என்னனா...
"நல்ல கேட்டுகங்க... நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."
மிக்க
நன்றி வால் பையன்... இதற்கு நான் தகுதியானவன் என்று தோன்றவில்லை..என்னை விட நெறைய பேர் இன்னும் சிறப்பாக எழுதுகின்றார்கள்...(அடக்கமாம் ... ) இருந்தாலும் என்னோட பிளாக்கர் மதிச்சி குடுத்து இருக்கீங்க ..
இனி மேலாவது ஒழுங்கா எழுத முயற்சி பண்றேன்...
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...
இது எல்லாத்துக்கும் முழு முதல் காரணம் என் நண்பர் திரு. வினோத் கெளதம் அவர்கள்... அவர் தான் எனக்கு இந்த தளத்தை அறிமுக படுத்தியவர்.. என்னை ஊகுவித்தவரும் அவரே...
the credit will be goes to my dear lovable friend mr.vinothgowtham.

Saturday, March 21, 2009

காமிணி.. என் தேவதை..

எங்க கிளாஸ்ல மொத்தம் 22 பேரு 12 பயலுங்க(என்னையும் சேர்த்து தான்) 10 தேவதைங்க.. அந்த தேவதைகளுக்கு எல்லாம் ஒரு தேவதை... அவள் தான் இந்த கதையின் நாயகி...

பயலுங்க எல்லாம் டெய்லி எப்படா எம் .ஐ கிளாஸ் வரும்னு காத்துக்கிட்டு இருப்போம்...
காரணம் ஜோதி மிஸ்.. (தப்ப நினைக்காதிங்க நான் அந்த அளவுக்கு மோசம் இல்ல )

ஜோதி மிஸ் தான் எல்லோரையும் அட்டென்ட்டென்ஸ் நம்பர் படி உக்கார வைப்பாங்க... அப்போ நம்ப பேரு காமிணி பக்கதுல வந்துடும் ( பேரு வச்ச எங்க அம்மா அப்பா வாழ்க...)

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த சம்பவம் நடக்கும் போது
எனக்கு ஒரு 8 வயசு.. நான் 3rd std படிச்சிக்கிட்டு இருந்தேன் (நீ இப்போ வரைக்கும் அதான்டா படிச்சிருகன்னு விவேக் மாதிரி சொல்ல கூடாது ..)

காமிணி... என் காமிணி... தேவதை.. சாரி... குட்டி தேவதை..

எம் .ஐ கிளாஸ் அறை மணி நேரம் தான் ஆனாலும் அந்த அறை மணி நேரம் இருக்கே.. வாழ்கைல மறக்க முடியாத எத்தனையோ அறை மணி நேரங்கள்...

முதல் ரெண்டு வாரம் நம்பள அவ கண்டுகவே இல்லங்க.. பொதுவா பொண்ணுங்களுக்கு கதை கேக்குறதுல ஆர்வம் அதிகம்.. அவ மட்டும் விதி விளக்கா... ?
நானும் என்னனோவோ (பென்சில் வச்சி நோட்ல கிறுக்குகிறது வாட்டேர் பாட்டில் வச்சி பென்ச்ல தட்டுறது , லஞ்ச் பாக்ஸ் வச்சி சத்தம் எழுபுரதுனு ) ட்ரை பண்ணி பார்ப்பேன்.. அவ கவனத்த என் பக்கம் திருப்ப.. ம்ம்ம்... ஒரு ரிஆக் ஷணும் இருக்காது..( என் முயற்சி எல்லாம் பாழா போச்சே...) ஒரு தடவ இதுக்காக ஜோதி மிஸ் கிட்ட முதுகுல செம சாத்து வாங்கி இருக்கேன்... முதுகு ரெண்டா போன மாதிரி வலிச்சாலும் வந்து உக்காரும் போது வலிக்காத மாதிரி சிரிச்சிக்கிட்டு பில்டப் குடுத்து உக்காருவேன்.. அப்போ கூட அவ திரும்ப கதை கேக்குறதுல தான் இருப்பா...(நானும் வலிக்காத மாதிரியே எவ்ளோ நேரம் தான் நடிக்குறது ? )

எப்படி அவள நம்ம பக்கம் திரும்ப வைக்குதுன்னு நான் யோசிச்சி யோசிச்சி பல அறை மணி நேரங்கள் வீனா போயிருக்கு.. அப்போ தான் அந்த கடவுளா பார்த்து எனக்கு அந்த வாய்ப்ப தந்தாரு பட்டர் சாக்லேட் ரூபத்துல.. என்ஜாய்டா கிஷோர்னு..

அவளுக்கு ரொம்ப பிடிச்சது பட்டர் சாக்லேட் அவ லஞ்ச் பேக்ல எப்போவும் பட்டர் சாக்லேட் இருக்கும்... அதை அவ மோரல் கிளாஸ்ல மிஸ்க்கு தெரியாம தின்றது அவளுக்கு மட்டுமே தெரிந்த கலை.. இது போதாதா நமக்கு...? மறு நாள் எங்க வீட்ல சொல்லி ரெண்டு சாக்லேட் வாங்கி என் பாக்கெட்ல வச்சிகிட்டேன்... ( அத வாங்குறதுகுள்ள எவ்ளோ அடி? எவ்ளோ உதை ? எவ்ளோ திட்டு? ஏன்னா.. பட்டர் சாக்லேட் அப்போ அவ்ளோவா கிடைக்காது.. அத அப்பறமா இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன் )

அன்னைக்கு மோரல் கிளாஸ்ல காமிணி அசந்த நேரம் அவ லஞ்ச் பேக்ல இருந்த சாக்லேட் ஒரு சிலரால் திருடபட்டு விட்டது
(ஆட்டைய போட சொன்னதே நான் தான்னு இது வரைக்கும் அவளுக்கு தெரியாது..) கொஞ்ச நேரத்தில் அவ பாக் திறந்து பார்க்க.. ஏமாற்றத்துடன் மற்றவர்களை பார்த்தாள்... நான் ஒன்னும் தெரியாதவனை போல கிளாஸ் கவனிக்க தொடங்கினேன்... மெதுவாக கேட்டாள் என் லஞ்ச் பேக்ல வச்சிருந்த சாக்லேட் காணல நீ பார்த்தியான்னு...
"தெரியுல காமினி.. ஆனா வினோத்தும் பார்த்திபனும் தான் சாக்லேட் சாப்பிடுரானுங்க ... அது உன் சாக்லேட் தானான்னு தெரியுல... "
காமினி திரும்பி அவர்களை முறைத்தாள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா என்பது போல இருந்தது அவள் பார்வை... ம்ம்ம்ம்.... அந்த ஜென்மங்களுக்கு அதெல்லாம் உரைத்தால் தான...?
நான் மெதுவாக என் பாக்கெட்ல இருந்த சாக்லேட் எடுத்து நீ வேணும்னா என்னோட சாக்லேட் சாப்டு என்றேன்...
"அப்போ உணக்கு?"என்றாள்
"என்னகு வேண்டாம் நீ சாப்டு உனக்கு தான ரொம்ப பிடிக்கும்"
"இல்ல வேணம் நீ வச்சிக்கோ"
"வேண்டம் நீ சாப்டு மிஸ் பாத்துட போறாங்க" என்றேன்
"சரி.. அவங்க பாக்குறதுகுள்ள ஒன்னு எடுத்து பாதி பாதி சாப்பிடலாம் அப்பறமா இனொனு சாப்டலாம் " என்றாள்
"ம்ம்ம்... சரி "
அவள் கட்டி இருந்த டைல சாக்லேட் வச்சி கடிச்சி எனக்கு பாதி தந்தாள்...
" எச்சி விட்டேன்.. பால் விட்டேன்" சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம்.. அதுல இருந்து காமினி எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டா...
அன்னைக்கு நான் சாக்லேட் மட்டும் தான் குடுத்தேன்... ஆனா அதுக்கு அப்பறம் அவ டெய்லி எனக்கு எதாவது எடுத்து வந்து தருவா(சாக்லேட், டாய் , பென்சில், ரப்பர்.. இப்படி நெறையா ...) இப்படியே அவ வேற ஸ்கூல்க்கு போற வரைக்கும் ஜாலியா போச்சு...
ம்ம்ம்ம்ம்ம்ம்.....அது ஒரு கனாக்காலம்.........

இந்த தலைப்ப பாத்துட்டு ஜொள்ளு விட்டுகிட்டு உள்ள வந்து படிச்சிட்டு உங்க காதுல புகை வந்தா நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி கொள்ள கடமை பட்டிருக்கிறேன் ..

"டேய் கிஷோர்.. "
"ம்ம்ம்"
"இப்படி திரும்பு.."
"ஏன்"
"திரும்பு சொல்றோம் "
(திரும்பி ) "சொல்லுங்க..."


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.... .

அப்படி காரி துப்பிட்டு ஓட்ட போட்டுட்டு போங்க

Thursday, March 19, 2009

திரும்பவும் வந்துடோம்ல...

கடந்த வாரத்துல ஒரு நாலு நாளைக்கு சாப்பிட முடியுல.. தூங்க முடியுல ... எல்லோர்கிட்டயும் கோப படுறேன்,... என்ன ஆச்சி எனக்கு? எப்போவும் அந்த விஷயத்த பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தா பொழப்ப பாக்க வேணாமா? எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு அடிக்கடி கேள்வி கேட்டுப்பேன்... மத்தவங்களுக்கு எல்லாம் நல்லா தானா நடக்குது அது எனக்கும் நடக்கணும்னு நெனகறது தபா? அப்பறம் ஏன் நடக்க மாட்டுது...?

யாரு கிட்டயாவது கேக்கலாமா? தப்பா நெனசிடா ? (இல்ல இவனுக்கு ஒன்னுமே தெரியலனு நெனசிபாங்களோ ) வேணாம்.. யாரு கிட்டயும் கேக்க வேணாம்.. என்ன காரணம்னு பார்க்கலாம்..

ஐயோ... என்னத்த பார்த்தும் ஒன்னும் புரிய மாட்டுது... சரி கேட்ருவோம்... ஆனா யாருகிட்ட கேக்குறது..?அப்படி யாரு இதுக்கு முக்கியத்துவம் குடுத்து சொல்ல போறாங்க ?

அட சொன்னாங்கல... எனக்கும் பதில் சொன்னாங்கல ... இப்போ தெளிவாய்டோம்ல...

அடங்கொய்யால வந்துடாண்டானு நீங்க கட்டைய கைல எடுக்குறது தெரியுது அடி வாங்குறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்...
மேட்டர் இதாங்க...
ஒருவாரமா என்னோட நியூ போஸ்ட்ஸ் எதுவுமே பாலோயர்ஸ் பேஜ் ல அப்டேட் ஆகல ... யாருகிட்ட கேக்கலாம்னு யோசிச்சி... யோசிச்சி... அப்பறம் கேட்டேன்... பதில் வந்துடிச்சி... நெட் வொர்க் ப்ராப்ளம்
இப்போ சரி ஆகிடுச்சி... திரும்பவும் வந்துடோம்ல...
(நன்றி ஹாலிவுட் பாலா அண்ணா)

Monday, March 16, 2009

என் சந்தேகத்த தீர்த்து வைக்க யாருமே இல்லையா ?

எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் சரி.. ஒரு ரெண்டு வாரமானு வச்சுக்குங்க (சரியா சொல்லு ஒரு வாரமா ரெண்டு வாரமா னு கேட்டு ஸ்டொமக் பர்னிங் கிளப்பாதிங்க ) என்னோட பிளாக்கர்ல நான் புதுசா எது அப்டேட் பண்ணுனாலும் என் பிளாக்கர் பாலோ பண்ற நண்பர்கள் பிளாக்கர்ல அப்டேட் ஆகமாட்டுது... இது ஒரு ரெண்டு வாரமா தான்... என்ன காரணம்? யார் செய்த தாமதம்..?
தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க...( கரெக்டா பதில் சொன்னா ஊட்டில ஒரு எஸ்டேட் வித் பங்களா மற்றும் சுவிஸ் பேங்க்ல உங்க பேருல ஒரு 3 ரூபா 49 காசு டெபாசிட் பண்ணப்படும் )
தெரியாதவங்க அப்போ அப்போ என் பிளாக்கர் ஓபன் பண்ணி யாரவது பதில் சொல்லி இருகாங்கலானு பாத்துகுங்க...
நட்புடன்
கிஷோர்

Sunday, March 15, 2009

ஏன் பிரிந்து சென்றாய் நண்பா...?

என் உயிர் நண்பனே..
நலம். நலம் அறிய அவா..
வழக்கமாக இப்படி தான் இந்த கடிதத்தை ஆரம்பிக்க நினைத்தேன்
உனக்கு தெரியும் நான் பொய் சொல்கிறேன் என்று... ஆகையால் ...
நலம் என்ற வார்த்தை மறந்து விட்ட நண்பன் எழுதுவது...
எப்படி உன்னால் தூங்க முடிகிறது நண்பா?என்னால் முடியவில்லை.. இன்றுடன் 2 வருடம் ஆகிறது நாம் பிரிந்து... தவறு... நீ என்னை விட்டு விலகி சென்று...
நினைத்து பார்கிறேன் நமக்குள் இந்த பிரிவு ஏன் என்று...?
பொதுவாக இரு நண்பர்களுக்குள் பிரிவு வந்தால் அதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பாள்.. மற்றபடி நான் பெரியவன், நீ பெரியவன் , போட்டி , பொறாமை, வஞ்சம்,பழிதீர்த்தல் இவைகளால் பிரிவார்கள் (இவைகளால் பிரிபவர்கள் நண்பர்களாக நடித்து கொண்டிருந்தார்கள் என்பது தான் உண்மை ) இவை எதுவும் நம்மை பிரிக்கவில்லை நண்பா.. பின் எது நம்மை பிரித்து..?

விட்டு கொடுப்பது தான் உண்மையான நட்பு... ஆனால் அந்த விட்டு கொடுத்தலே நமது நட்பின் பிரிவிற்கு காரணமாக அமைந்ததற்கு யாரை குற்றம் சொல்வது...?
பள்ளியில் தொடங்கிய நம் நட்பு.. கல்லூரி முடிந்து நாம் வேலைக்கு செல்லும் வரை இருந்த நட்பு.. இப்பொது காற்றில் கரைந்துவிட்டதா ..?
என்னால் எதையும் மறக்க முடியாது நண்பா... எதை மறக்க சொல்கிறாய்..?
பள்ளி நாட்களில் என் தோல் மீது உன் கை போட்டு நாம் நடந்து சென்றதையா ?
உனக்கு வேறு கல்லூரில் இடம் கிடைத்தும் சேராமல் நான் சேர்ந்த கல்லூரியில் இடம் கேட்டு என்னுடன் சேர்ந்து படிததையா?
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் போது எனக்கு உடல் நிலை பாதிக்கபட நீயும் தேர்வுக்கு செல்லாமல் என்னுடன் மருத்தவமனையில் இருந்ததையா?
படித்து முடித்தவுடன் நம் இருவருக்குமே ஒரே நிறுவனத்தில் நல்ல கிடைததையா?
வேலை கிடைத்தும் என்னை விட அதிகம் சந்தோஷபட்டது நீ தானே நண்பா?
அந்த சந்தோசம் 2 வருடம் தான் நீடிக்கும் என்று எனக்கு தெரிந்து இருந்தால் நான் அன்றே வேலயை விட்டு இருப்பேன் ..
இதே நாள்... அன்று திங்கள் கிழமை...
காலை அலுவலகத்திற்கு சென்ற போது அனைவரும் என்னிடம் வந்து என் கை குலுக்கி.. வாழ்த்து தெரிவித்து நான் பதவிஉயர்வு பெற்று விட்டேன் என்றும் அதற்காக நான் வெளி நாட்டிற்கு செல்லவேண்டும் அங்கே 2 வருடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள் ... அதை கேட்டவுடன் என் கண்கள் தேடியது உன்னை தானே நண்பா ?
உன் இருக்கைக்கு வந்து பார்த்தால் அது காலியாக இருந்தது.. சரி இன்னும் வரவில்லை என்று நினைத்து கொண்டு என் இருக்கைக்கு சென்றேன்... அப்போது தான் அந்த கடிதத்தை கண்டேன்...
என் உயிர் நண்பா...
வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
xxxxxxxx
அலுவலகத்தில் விசாரித்த போது நீ வரமாட்டாய் என்றும்,
"என்ன சார் உங்க நண்பர் வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றது உங்களுக்கு தெரியாதா? " என்று கேக்க உடைந்து போனேன் நான்... அப்போது என் மனம் நினைத்தது.. ஏன் நண்பா எனக்கு ஒரு நல்லது நடந்தால் அது உனக்கு சந்தோசம் தரவில்லையா...?
இதற்கான விடை எனக்கு சில நிமிடங்களில் தெரிந்தது..
நான் என் நண்பனை சந்தேகபட்டது என் வாழ்வில் நான் செய்த மன்னிக்க முடியாத தவறு என்று...
இந்த பதவி உயர்வு மொத்தம் இரண்டு பேருக்கு... ஆனால் பந்தயத்தில் இருந்ததோ மூவர்... ஒருவருக்கு நிச்சயம் கிடைத்துவிட...நாம் இருவர் மட்டுமே... இருவரில் ஒருவர் என்ற நிலை..இது உனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்து அதை எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீ விட்டு கொடுத்து இருக்கிறாய்... என்னிடம் சொல்லி இருந்தால் நீ எடுத்த முடிவிற்கு நான் ஒத்து கொண்டிருக்க மாட்டேன் என்று தெரிந்து தான் நீ என்னிடம் கூட சொல்லாமல் துரமாக சென்றுவிட்டாயா நண்பா...?
நானும் அன்றே என் வேலை விட்டு இருப்பேன் ஆனால் இன்னும்
நீ விட்டுகுடுத்த வேலையல்தான் நான் இன்னும் இருக்கிறேன் காரணம் இது எனக்கு என் நண்பன் தந்தது...
ஆனாலும் ஒவ்வொரு நாளும் நான் வேலைக்கு செல்லும் போது நம் நட்பின் நினைவுகள் என் நெஞ்சில் தென்றலாக வீசுவதற்கு பதிலாக சூறாவளியாக சுழன்று அடிக்கிறது...
நான் என் நண்பனை ஒரு கணம் சந்தேகபட்டத்திற்கு அவனிடம் நேரில் மன்னிப்பு கேட்காமல் இந்த வேதனை என்னை விட்டு நீங்குமா?
இந்த வேதனை தாங்கி கொண்டு எப்படி தினம் நான் நித்திரை எதிர்நோக்க முடியும்...?
இந்த கடிதம் கண்டு நீ என்னிடம் வருவாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...
நீ வரவில்லை என்றாலும் நான் நித்திரை கொள்வேன்....
நிரந்தரமாக...
நட்புடன்
-கிஷோர்
போட்டுட்டு போங்க... அட ஓட்ட சொன்னேங்க...

Saturday, March 14, 2009

நாங்களும் சீரியஸ் விஷயங்கள் பத்தி எழுதுவோம்ல..

இதெல்லாம் மதியான நேரத்துல மல்லாக்க படுத்துகிட்டு மனசாச்சி தட்டி விட்டு யோசிச்சது...
நாங்களும் சீரியஸ் விஷயங்கள் பத்தி எழுதுவோம்ல...
1. ஒட்டு போடுற மிஷன்ல யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பலனு ஒரு பட்டன் வர போகுதாம் ... (அதுக்கும் கள்ள ஒட்டு போடுவாங்களா ?)
௨. தமிழ் நாட்டுல புதுசா இன்னும் சில இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிக்க போரங்கலம்...( இன்ஜினியரிங் படிச்சவங்க எல்லாம் சேர்ந்து எங்க ஊர்ல பொட்டி கடை ஆரம்பிச்சி இருகோம் புதுசா இன்ஜினியரிங் காலேஜ் கட்டி அட்மிச்சின் போடும் போது பசங்களுக்கு எங்க கம்பெனி அட்ரஸ் குடுக்க அரசு ஏற்பாடு செய்யுமா ?)
3.லல்லு- நான் தான் அடுத்த பிரதமர் (எங்க ஊர்ல ஒருத்தரு உங்கள விட நெறைய மாடு வச்சி இருக்காரு அவர ஜனாதிபதி ஆக்க கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க )
4.ஜெயலலிதா-என்ன பேசுவது என்று தெரியாமல் குடும்ப பாச சுழளில் சிக்கி கொண்டு பிதற்றுகிறார் மைனாரிட்டி தி மு க அரசு நடத்தும் கருணாநிதி ( எத்தன படத்துல நடிச்சி இருக்கீங்க ஒரே டியாலக் பேசுனா மக்களுக்கு போர் அடிக்காது? டியலாக் மாத்தி பேசுங்க)
5.கருணாநிதி - இலங்கை தமிழருக்காக உருகுவது போல் நாடகமாடுகிறார் இந்த அம்மையார் ஜெயலலிதா(ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா முடியல .. தெரியாம தான் கேக்குறேன் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு என்ன பேசலாம்னு மொத நாளே போன்ல பேசிபிங்களா ? )
6.ராமதாஸ் - யாரு அட்சி நடத்துனாலும் மதுவிலக்கு கொண்டு வரவைப்போம்..( யாரு ஆட்சிய புடிச்சாலும் அவங்க கூட கூட்டனி வச்சிபோம்னு சொல்ல வரிங்க அதான ?)
7.திருமாவளவன்- இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களுக்காக பாடுபடுவோம்..( என்ன சார் ஷூட்டிங் எப்படி போய் கிட்டு இருக்கு.. கால்ஷீட் பிரச்சனைய பாருங்க அத விட்டு மக்கள் அது இதுனு தமாஸ் பண்ணாதிங்க )
8. விஜயகாந்த் - கூட்டனி பத்தி முடிவு எடுப்போம்.( ஏன் சார் நீங்க 50 ரூபா செலவு செஞ்சி பிரியாணி போடுற உங்க கட்சி மீட்டிங் பக்கம் வர தொண்டருங்க ஏன் அவங்க காசு 20 ரூபா செலவு பண்ணி உங்க படத்துக்கு வர மாட்றாங்க ?)
9 .சரத் குமார் - கூட்டனி பற்றி அழைப்பு வந்தால் அது பற்றி முடிவு செய்வோம் ( விஜயகாந்த் பரவாஇல்ல... உங்க தொண்டருங்க கட்சி மீட்டிங் பக்கமே வர மாற்றங்க போல இருக்கு? பேசாம மீட்டிங்க்கு சித்தி கூட வராம நமிதா கூட வாங்க கூட்டம் கலகட்டும் )
9. கார்த்திக் - யு சி.. என்ன மாதிரி ஒரு சி எம் தான் தமில்நாட்கு டேவனு மக்கள் லைக் பண்றாங்க ( முன்னாடி சொன்ன ரெண்டு பேரையாவது ஒரு லிஸ்ட் சேத்துக்கலாம்.. உங்க கட்சி மீட்டிங் உங்கள பாக்குறதே ரொம்ப ரேர்னு சொல்றாங்க... மீட்டிங் என்ன ஷூடிங்க்னு நெஞ்சிங்களா கட் அடிக்க..)
10. சுப்ரமணிய சாமி - கருணாநிதி பத்தி என்கிட்ட எவிடேன்ஸ் இருக்கு ஜெயலலிதா பத்தி என்கிட்டஎவிடேன்ஸ் இருக்கு சோனியாஜி நாளைக்கு இத்தாலிக்கு போறாங்க இந்தியாவ பேரம் பேச.. நாளைக்கு நான் கோர்ட் எல்லா எவிடேன்ஸ் சப்மிட் பண்ணுவேன்... (அட போங்க சார் உங்கள நெஞ்சிலே சிரிப்பு சிரிப்பா வருது...)

Friday, March 13, 2009

என்னை மன்னிப்பாயா சுமதி...?


குமாருக்கு ராத்திரி முழுதும் தூக்கம் வரல.. நாளைக்கு காலைல சுமதி கிட்ட எப்படி சொல்றது? சொல்லாம இருந்தா இந்த பசங்க வேற சும்மா விட மாட்டனுங்க..
ரமேஷ், முரளி கூட சமாளிச்சுடலாம் ஆனா இந்த செந்தில் பய இருக்கானே அவன மட்டும் சமாளிக்க முடியாது.. மானத்த வாங்கிடுவான்..
இதுக்கு ஒரே வழி எப்டியாவது நாளைக்கு சுமதி கிட்ட சொலிடனும்...
சொன்னா சுமதி என்ன செய்வா? சரின்னு சொல்லுவாளா .. இல்ல பிரச்சனை பண்ணி அசிங்க படுதிடுவாள? சரின்னு சொன்னா அத விட சந்தோஷமான விஷயம் எனக்கு ஏதும் இல்ல ஆனா யாருகிட்டயாவது சொல்லி பிரச்சனை பண்ணிட்டா ...?
அவ அப்பாவ வேற ஒரு தடவ கடை தெருல பாத்துருகான்.. போலீஸ்காரன் மாதிரி இருபாரு... அவருகிட்ட அடி வாங்க முடியுமா? படுத்து கொண்டே தன்னோட உடம்பை ஒரு தடவை தடவி பார்த்து கொண்டான்... என்ன ஆனாலும் சரி நாளைக்கு காலைல சுமதிய பார்த்து சொல்லிடனும்...
காலைஇல் எழுந்து அவசர அவசரமாக சாப்ட கூட தோணாமல் கிளம்பினான்.. மனசு முழுசும்...
சுமதி... சுமதி.. சுமதி...
வழயில் ரமேஷும் முரளியும் சேர்ந்து கொண்டார்கள்
"என்னடா இன்னைக்காவது சொல்லுவியா?" -ரமேஷ்
"எங்கடா சொல்ல போறான் இணைக்கும் நாம போய்ட்டு திரும்ப வரவேண்டியது தான் "-முரளி
"டேய் கிண்டல் பண்ணாதிங்கடா இன்னைக்கு எப்டியாச்சும் சொலிடுறேன்"
செந்தில் எங்க காணோம்?
அவன் வேற வந்த சும்மா இருக்க மாட்டான் எதாவது சொல்லி ரவுசு பண்ணுவான்.. இன்னைக்கு செத்தேன்... மனசுக்குள் நெனச்சிட்டு இருக்கும் போதே செந்தில் வந்து சொன்னான்...
"டேய் சுமதி வராடா போய் சொல்லுடா ... "
"இருடா இப்போதான் உள்ள வரா கிளாஸ் முடியட்டும் சொல்லிடுறேன்"
"கிழிச்ச..."
குமாருக்கு அவமானமாக இருந்தது...
"சரிடா செகண்ட் அவர் முடிஞ்சதும் பிரேக்ல சொல்லிடுறேன்.."
"நீ மட்டும் சொல்லம வா அப்புறம் வசிக்கிறோம் கச்சேரி..."
ச்சே... இன்னைக்குனு பார்த்து நேரம் இவ்ளோ சீகரமா போது...ஐயோ இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு.. குமார் யோசித்து கொண்டு இருக்கும்போதே கிளாஸ் முடிந்துவிட்டது..
ரமேஷ், செந்தில், முரளி மூவரும் குமார் பக்கம் திரும்பி பார்க்க, குமார் சுமதிபக்கம் அவள் வகுப்பிலிருந்து வெளியில் சென்று கொண்டிருந்தாள்..
அனேகமாக லைப்ரரி பக்கம் தான் போவாள்..
"டேய் போடா அவ தனியாதான் போறா ..."- செந்தில்
"சரிடா நீங்க இங்க இருங்க" சொல்லிவிட்டு மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சுமதி பின்னால் தொடர்ந்தான் ...
லைப்ரரி அருகில் சுமதி சென்ற பொது..
சுமதி..... குமார் சற்று வேகமாக அழைக்க திரும்பிய சுமதி குமாரை பார்த்து...
"என்ன குமார்?"
"இல்ல உங்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"என்ன விஷயம்...?"
"தப்பா நெனச்சிக்க......"
"சொல்லு பரவால்ல"
"இல்ல நீ யாருகிட்டயும் சொல்லமாடன்னு சொல்லு"
"ச்சே.. சீக்ரம் சொல்லு குமார் டைம் ஆகுது"
"போன வாரத்துல இருந்து சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன் ..
நீ தப்பா நெனசிடுவியோனு தான் சொல்லல.. இது எங்க பசங்களுக்கு கூட தெரியும்... அவங்க தான் சொல்லிடுடானு தைரியம் குடுத்தாங்க.."
" குமார்... என்ன சொல்லணும் ?"
"அது ..அது.."
"சொல்லுடா நான் போகணும்"
"இல்ல அது வந்து..."
"இப்போ சொல்ல போறியா இல்ல நான் போகட்டுமா?"
"அது..."
"போடா நான் போறேன் "
சுமதி.. சுமதி.. நில்லு சொலிடுறேன்...
"என்ன?"
குமார் தயங்கியவாறு சொல்ல ஆரம்பித்தான்...
"போனவாரம் ஒரு நாள் மத்தியானம் நீ சாப்டாம பட்டினி இருந்தல்ல "
"ஆமா"
"அதுக்கு காரணம் நான் தான் காரணம்"
" நீயா?"
"ம்ம்ம்.. அன்னிக்கு நான் தான் உன் லஞ்ச் பாக்ஸ்ல இருந்து சாப்பாட எடுத்தேன். அன்னிக்கு உங்க வீட்ல இருந்து எடுத்து வந்த சப்பாத்தியும் குர்மாவும் வாசனையா இருந்துச்சி... அதான் நானும் என் ப்ரண்ட்சும் எடுத்து சாப்டோம்... அன்னைக்கு ஒன்னும் தெரியுல ஆனா உங்க அப்பாவ அன்னிக்கு சாயந்தரம் பார்த்ததுல இருந்து பயமா இருக்கு... நீ எங்க உங்க வீட்ல போய் சொல்லிடுவியோனு ... அதான் பசங்க உன்கிட்ட உண்மைய சொன்ன நீ தப்பா நெனக்க மாட்டேனு சொன்னாங்க.. அதன் சொல்லிட்டேன் சாரி சுமதி என்னை மன்னிச்சிடு.. வீட்ல போய் சொல்லிடாத..."
"ச்சே இவ்ளோ தானா...? "
"ம்ம்ம்..."
"நீ கூட வேற எதோ தான் சொல்ல போறேன்னு இருந்தேன்... சரியான சாப்பாடு ராமனா இருக்க "
"என்னனு நெனச்ச"
"ம்ம்ம்... நீ சின்ன பையன்...அதெல்லாம் உனக்கு புரியாது... போடா கிளாஸ்கு டைம் ஆச்சு... பெல் அடிசிடாங்க..."
"ம்ம்ம் ... சரி சுமதி " என்றவாறு குமார் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தான்..

மாணவர்கள் பிரேக் முடிந்து கிளாஸ் ரூம்க்கு திரும்பி கொண்டிருந்தார்கள்...

"என்னடா சொல்லிடியா..? என்ன சொன்னா?" நண்பர்கள் கேக்க
"நீ சின்ன பையன் உனக்கு அதெலாம் புரியாதுன்னு சொன்னாட " என்றான் குமார்...
"எப்டியோ நாம சாப்டத அவ யாருகிட்டயும் போட்டு குடுக்காம இருந்தா சரிதான்.." நண்பர்கள் அனைவரும் சந்தோஷத்தில் சிரிக்க...

அவர்களை கேவலமான ஒரு பார்வை பார்த்தவாறு கிளாஸ் ரூம்குள் நுழைந்தாள் சுமதி..
பிளாக் போர்டில் பெரிதாக எழுதி இருந்தது...
"VIII STANDARD 'A' SECTION "

Monday, March 9, 2009

நீங்களே சொல்லுங்க...


என்னாத்த எழுதுறதுனு தெரியுல..
இத மேலோட்டமா பார்த்தா வைத்தெரிச்சல் மாதிரி தான் தோணும்... உள்ள போய் படிங்க... படிச்சிட்டு சொல்லுங்க..
சினிமா விமர்சனம் எழுதலாம்னா ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் (பிட் படம் கூட விடுறது இல்ல) அலசி காயபோடுறாங்க.. (hollywood bala , cablesankar)
அரசியல் எழுதலாம்னா உலக அரசியல்ல இருந்து உள்ளூர் பஞ்சாயத்து போர்டு அரசியல் வரைக்கும் கிளிச்சி தொங்கவிடுறாங்க..(சுரேஷ்)
கதை எழுதலாம்னா நம்ம கதையே ஊரு சிரிக்கிற மாதிரி இருக்கு..
கவிதை எழுதலாம்னா படிச்சிட்டு நானே காரி துப்புற மாதிரி இருக்கு..
ஆனாலும்
இவங்க எல்லாம் எப்டிதான் மத்தவங்க படிக்குற மாதிரி எழுதுறாங்க தெரியுல.. (ஷன்முகப்ரியன் சார்)
பிரேம் எதையும் விடுறது இல்ல ,
கார்கி அண்ண பத்திசொல்லவே வேண்டாம் அவர் ஒரு ஆல் ரௌண்டேர்..

அட சமூக அக்கறை பத்தி எழுதலாம்னா அதுக்கு முதல்ல நீ திருந்துடான்னு மனச்சாட்சி செருப்ப எடுத்து காமிக்குது...

எல்லாத்தையும் விட்டு நம்ம ரேஞ்சுக்கு ஒரு கிளுகிளுப்பு மேட்டர் எழுதலாம்னா
எழுத ஆரம்பிச்சவுடனே நமக்கு கிளுகிளுப்பு ஆகிடுது ( அப்பறம் எங்க எழுதுறது)...

அப்படி நான் எதாவது எழுதுனாலும் எனக்கு நல்லா இருக்க மாதிரி தெரியுது.. ஆனா கமெண்ட்ஸ் பார்த்தா... அட போங்க அதெலாம் கேட்டுகிட்டு...

எப்படி தான் வாரத்துக்கு 10 ,15 பதிவு போடுறங்கனு தெரியுல ...உக்காந்து யோசிப்பாங்க போலிருக்கு ...(ஸ்டொமக் பர்னிங்...)

இப்டியே போனா என்னைக்கு நான் பதிவு போட்டு அத நீங்க படிச்சிட்டு என்ன திட்றது..?

நானும் ஒரு முடிவு எடுத்துட்டேன்.. எப்டியாவது ஒரு 1000 இல்ல 2000 பதிவு போட்டு உங்கள பழி தீர்துகாலம்னு .. ஆனா பாருங்க இந்த மேட்டர் கருமம் தான் கிடைக்க மாட்டுது... ஆனாலும் விட போறது இல்ல...

அதான் உங்க கிட்டயே கேட்டு எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்... இதுக்கு நீங்களே ஒரு பைசல் பண்ணுங்க... எவ்ளோ ரூவா செலவானாலும் பரவாஇல்ல..

என்னா படிசிடிங்களா .. என்னா பண்றது மேலோட்டமா பார்த்தாலும் உள்லோட்டமா பார்த்தாலும் வைத்தெரிச்சல் வைத்தெரிச்சல்லா தெரியும்...
நட்புடன்
- கிஷோர்
(சிலர் பேரை குறிபிட்டது உரிமையுடனும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டிர்கள் என்ற நம்பிக்கையுடனும்... மேலும் இங்கு உள்ள படத்திற்கும் இந்த விஷயத்திற்கும் சட்ட ரீதியாக எந்த தொடர்பும் இல்லை..)
குறிப்பு : உங்க கம்ப்யூட்டர் கருகி போன வாசன வந்தா நான் காரணம் இல்ல