Saturday, June 20, 2009

வறுமையின் விளிம்பு..
இன்று
எத்தனை பேரோ தெரியவில்லை
இதுவரை வந்தவர்களின் முகம் கூட நினைவில் இல்லை..
வலியும் வேதனையும் மட்டுமே வாழ்க்கையாக தேர்ந்தெடுத்த அவளுக்கு
கனிவான வார்த்தைகள் என்பது கதைகளில் வருவது மட்டுமே..

வயிற்று பசி தீர்ப்பவரை விழுந்து யாசிக்கும் இந்த உலகம்
அடுத்தவரின் உடல் பசி போக்கும் அவளுக்கு வைத்த பெயர் வேசி...


நான்கு சுவருக்குள் இவர்களின் சுயரூபத்தை கண்டதாலோ என்னவோ
இந்த உலகத்தின் பேச்சுகளை அவள் என்றுமே லட்சியம் செய்தது இல்லை..

இதோ இன்று...
ஒருவர் பின் ஒருவராக சுவைத்த பின்னரும்
இன்னும் ஒருவருக்காக காத்து இருக்கிறது அவள் காம்புகள்...
இம்முறை பணத்திற்காக அல்ல அவள் குழந்தையின் பசி போக்க.....

Monday, June 15, 2009

மரணத்தில் ஒரு மஞ்சள் குளியல்

நேற்று முன்தினம் மாலை எனக்கு தெரிந்த ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழந்து விட்டார் ..
சாலையை கடக்கும் போது டூவீலர் மோதி தலையில் அடிபட்டு விழுந்தவரை ... அங்கு சவாரி ஏற்றி வந்த ஆட்டோகாரர் தன் சவாரியை இறக்கி அவர்களை வேறு ஆட்டோ பிடிச்சு அனுப்பிவிட்டு.. இவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று கண்பித்து இருக்கிறார்.. அவர்கள் இங்கு பார்க்க முடியாது வேறு இடம்செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அனுப்பி விட்டார்கள்.. பிறகு வேறு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் காவல் நிலையத்தில் தகவல் சொல்லி ஒரு போலீஸ்காரரை அழைத்து கொண்டு இன்னொரு மருத்துவமணைக்கு சென்று காட்ட அவர்கள் இவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட பின்பு சட்டரீதியாக அவரது உடலை அரசு மருத்துவமனை பிணவறைஇல் வைத்து விட்டார்கள்.. அவரின் பாக்கெட் இல் இருந்த செல்லில் அவரின் உறவுகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டார்கள்...

கீழே விழுந்தவரை நமக்கு எதுக்குடா வம்பு என்று செல்லாமல் தனது வருமானத்தை இழப்பதை கூட பொருட்படுத்தாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இவரை காப்பாற்ற நினைத்த அந்த ஆட்டோகாரர் உண்மையில் எனக்கு கடவுளாக தெரிந்தார்.

இனி நடந்தது தான் வேதனையில் உச்ச கட்டம்...

விஷயம் கேள்வி பட்டு உறவுகள் அடித்து பிடித்து வர... பணம் என்ற பிசாசு லஞ்சம் என்ற பெயரில் தனது கோரபற்களை காட்டியபடி உதிரத்தை உறிய தொடங்கியது .

பிணவறை உதவியாளர் பிணவறை திறந்து காட்ட ரூபாய் 100 இல் ஆரம்பித்த லஞ்சம்... மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை மருத்துவர் வர மாட்டார் ..(மதியம் வரை வேலை நேரம் உண்டு ) பிரேத பரிசோதனை நடக்காது ஆகவே இறந்தவரின் உடல் கிடைப்பது சற்று சிரமம்.. பணம் குடுத்தால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லி தொடர .. வேறு வழி இல்லாமல் சம்மதம் தெரிவித்து உறவுகள்.

பணம் கைமாறியது தான் தாமதம்...

மருத்துவர் வந்தார்.. உடனே பரிசோதனை ஒரு மணிநேரத்தில் பரிசோதனை முடிவு... எந்தவித சிரமமும் இன்றி காவல் துறை சம்பந்தபட்ட அனைத்து வேலைகள் முடிந்தன , உடலை ஊருக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தி எல்லாம் தயாரானது...

ஒரு வழியாக ஊருக்கு கொண்டு வந்து நல்லபடியாக காரியங்கள் நடந்தன...
ஆனால் இதற்கு லஞ்சமாக மட்டுமே செலவானது ரூபாய் 5000...
இதை தங்களின் குடும்பத்திற்க்காக செலவு செய்யும் போது அவர்களுகே அருவெறுப்பாக இருக்காதா ?

இதில் மிக கேவலமான விஷயம் என்னவென்றால் இவர்களின் கீழ்த்தரமான செயலுக்கு அந்த தொகை பிக்செட் ரேட்டாம்.. அந்த அறையில் மேலும் இரண்டு உடல்கள் இருந்தன.. அதில் ஒன்று மிக மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது ... இவர்களிடமும் அந்த லஞ்ச பிசாசுகள் இதே மாதிரி தான் கேப்பானுங்க என்று நினைக்கும் போது நெஞ்சம் கனத்தது.. கடவுளே இவர்களிடம் இருந்து அவர்களை காப்பாற்று, நல்லபடியாக இவர்களுக்கு அவரின் உடலை பெற்றுதா என்று மானசீகமாக வேண்டிக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது...

அங்கு இறந்தவர்களின் முகத்தில் கூட ஒரு அமைதியை கண்ட எனக்கு மனசாட்சியை கொன்ற இவர்களின் முகம் கொடூரதின் உச்சகட்டமாக மனித உருவில் நடமாடும் பிணத்தை தின்னும் பேய்களாக மட்டுமே தெரிந்தது.

Friday, June 12, 2009

எனது உயிர் நண்பா ...

வினோத்கெளதம்...
பொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும் போதே "$##$^$ " என்று வளர்ந்து நிற்கிறது .

எனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...

சரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம் கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...

அப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...

1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..
கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)

2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..

3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...

4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இவன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..

5. இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)

நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...

Thursday, June 11, 2009

அழைக்காமலே..

பூஜா இளமையான அம்சமான அழகான 16 வயசு பருவ சிட்டு...
இவளுக்கு கொஞ்ச நாளாவே ஒரு பயங்கரமாக கனவு வருது... இவளோட செத்து போன அம்மா இவ கனவுல வந்து இவ கிட்ட எதோ சொல்ல வராங்க ..

இவளுக்கு எப்போ இருந்து பிரச்சனை ?

அன்று ஒரு நாள் தன் காதலன் ரகு கூட பார்டில கலந்து கிட்டு வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு செத்து போன சிறுமி உருவம் அவளை வீட்டுக்கு போக வேணாம்னு எச்சரிக்க ... இருந்தும் வீட்டுக்கு போன போது... அவளோட அப்பா ராஜீவ் .. அவருக்கு வேலைக்கு உதவியா இருக்குற 30 வயசு பெண் சுசீலா கூட வீட்டில் இருக்க... வீட்டுக்கு அருகில் போட் ஹவுஸ் இல் நோயாளியாக இருக்கும் அம்மாவை பார்க்க சென்றாள் ... அப்போ அம்மா இவளை பாத்து எதோ சொல்ல முயற்சிக்க அதை புரியாமல் வீடு நோக்கி வந்த பூஜா கண்ட கடைசி காட்சி... அம்மா வீட்டோடு எரிந்து சாம்பல் ஆனது தான் .. அதன் பிறகு அன்று நடந்தது எதுவும் இவள் நினைவுக்கு வர மாட்டுது .

வெளியூர்இல் இருந்த பூஜா அம்மா இறந்தவுடன் அவள் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவிட.. அம்மா இருந்த இடத்தில் சுசீலா இருப்பது கண்டு மனதுக்குள் குமிறியவாறு அந்த வீட்டில் இருகிறாள்... அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் சகோதரி நிர்மலா தான்... அவளை விட மூத்தவள்... தனது தந்தை செயல்பார்த்து நேரடியாக அவரை எதிர்பவள்.. இருப்பினும் அவளும் அதே வீட்டில் தான் இருகிறாள்.. சில சமயம் அவள் போதை பழக்கங்களை நாடுவதும் உண்டு...

பூஜாவின் காதலன் ரகு.. இவள் வீட்டிற்கு எல்லா வேலையும் செய்பவன்... இவர்களை சந்திக்க விடாமல் சதி செய்கிறாள் சுசீலா.. இருப்பினும் இரு பெண்கள் மீதும் பாசம் இருப்பது போன்றும் இருகிறாள்...

ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... வீட்டிற்கு வந்து பூஜா தான் அறைக்கு வர...அங்கு இருந்தான் ரகு... ஆனால் அவனுள் எதோ மாற்றம்... அவளுடன் பேசி போதே அவன் உடல் நிலை மாற்றம் ஆகிறது... அந்த நிலையிலும் அவன் அவளிடம் சொல்லியது ... "அன்று இரவு பார்ட்டி முடிந்தவுடன் உன் பின்னால் வந்து உன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் பார்த்தேன்... உன் அம்மா அப்போவே சொன்னாங்க நான் தான் கேக்கல " மேலும் அவன் உருவம் மோசமாக ஆனது...
இதனால் பயந்து அறையை விட்டு வந்த பூஜா மீண்டும் அறைக்கு செல்ல அது காலியாக இருந்தது...

மறுநாள் காலையில் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றில் ரகுவின் பிணம்... அவனின் இறுதி சடங்கிற்கு சென்ற பூஜா அங்கே ஒரு சிறுமியை சந்திகிறாள்... அவளை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்...
"! அவள் அன்று பிணமாக வந்த எச்சரிதவள்... "
தன்னை அறியாம அவள் பின்னால் செல்ல அந்த சிறுமி இன்னும் இரு சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.. அவர்களை பின் சென்ற பூஜா ஒரு கல்லறை மேல் சென்று விழுந்தாள்... எழுத்து பார்த்த போது அது ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களின் கல்லறை என்பது புரிகிறது...

தனக்கு வரும் மர்ம கனவை பற்றி ஒரு நாள் பூஜா நிர்மலாவிடம் கூறினாள் .. அம்மாவின் சாவுக்கு காரணம் சுசீலா தான் என்கிறாள் நிர்மலா.
இதை உறுதிபடுத்த சுசீலாவின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் இருவரும்..
அவர்களின் தேடுதல்லில் சுசீலா அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்தவள் என்றும் அவர்களை கொன்று தப்பித்து வந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்கள்... அந்த சிறுமியின் அம்மாவின் கழத்தில் இருந்த முத்து மணி இப்போது சுசீலா கழுத்தில்.. இது ஒன்றே அவர்களின் சந்தேகத்தை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது...
இந்த விஷயத்தை அவரின் அப்பாவிடம் சொல்ல நினைத்தும் ஆனால் அப்பா அவளின் மேல் உள்ள மோகத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்வதை நம்பபோவது இல்லை என்று சொல்லாமல் தவிர்தார்கள்..

இந்த நிலையில் ஒரு நாள் ராஜீவ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல ..
வீட்டில் பூஜா, நிர்மலா, சுசீலா மட்டுமே...
நிர்மலா பூஜாவிடம் நம்பகமான ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவரிடம் உதவி கேட்கலாம் என்று சொல்ல சரி என்றாள் ... இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சுசீலா வீட்டை விட்டு கிளம்பும் போது நிர்மலாவிற்கு போதை ஊசி போட்டு விட்டு பூஜாவை பிடிக்கவும் முயற்சி செய்கிறாள் எனினும் பூஜா தப்பி சென்று அவரை பார்த்தாள் ... அவர் அவளை அமர சொல்லி சுசீலாவை வரவழைத்து பூஜாவிற்கும் போதை ஊசி போட்டுவிடுகிறார்கள்..

சுசீலா பூஜாவை வீட்டிற்கு தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி அவளின் ஆடைகளை கலைத்தாள் .. பாதி மயக்கத்தில் இருக்கும் பூஜா அருகில் இருக்கும் கத்தியை எடுத்து சுசீலாவை தாக்க நினைக்க சுசீலா அந்த கத்தியை எடுத்து கொண்டாள் .. பூஜாவிடம் பேசி கொண்டே அவளின் ஆடைகளை சுசீலா களைந்து கொண்டு இருக்கும் போது மயக்கம் தெளிந்த நிர்மலா பின்னால் இருந்து சுசீலாவை தாக்க வந்தாள் ... இதை கவனித்தபடி பூஜா மயக்கமடைந்தாள் .

மயக்கம் தெளிந்த பூஜா எழுந்து பார்க்க தரை எல்லாம் ஒரே ரத்த கறை... ரத்த கறையை தொடர்ந்த பூஜா அது ஒரு பெரிய பெட்டியில் சென்று முடிவதை பார்த்து பெட்டியை திறக்க அதனுள் பிணமாய் சுசீலா...

பூஜா சுற்றிலும் பார்க்க... அங்கே கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நிர்மலா... இருவரும் செய்வது அறியாமல் நிற்கவும் ராஜீவ் கார் போர்டிகோவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது... காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய ராஜீவ் பூஜாவை நோக்கி ஓடிவந்து "என்ன ஆச்சு ?" என்று கேட்க...
"சுசீலா தான் அம்மாவை கொன்றதாக"சொல்கிறாள் நிர்மலா...
அதை
அவர் காதில் வாங்காமல் பூஜாவிடம் திரும்ப கேட்க...
பூஜாவும் "நிர்மலா சொல்வது சரி "என்று கூறினாள்..
"நான் சொல்வதை அப்பா நம்ப மாட்டார் " என்று கூறுகிறாள் நிர்மலா...
"இல்லை அப்பா... சுசீலா தான் அம்மாவை கொன்றாள் ,என்னையும் நிர்மலாவயும் கூட கொல்லவந்தாள் அதனால் தான் நிர்மலா சுசீலாவை கொன்றாள் " என்று பூஜா கூற
அதிர்ச்சி
அடைந்த ராஜீவ்...
நிர்மலாவா
? என்றார்...
ஆமாம் நிர்மலா சொல்வது உண்மை... நீயே சொல் நிர்மலா என பூஜா கூற...

என்னடி உளர்ற... நிர்மலா செத்து போய் ஒரு வருஷம் ஆகுது என்றார் ராஜீவ்...

அப்போ யாரு சுசீலாவ கொன்னது ?, அம்மாவ யாரு கொன்னது? நிர்மலாவ யாரு கொன்னது? ரகுவ யாரு கொன்னது ? இதுக்கு எல்லாம் பதில் தெரியனும்னா
"the uninvited "
படத்த பாருங்க...
"the uninvited "


பூஜாவாக
anna கதாபத்திரத்தில் Emily Browning
நிர்மலாவாக alex கதாபாத்திரத்தில் Arielle Kebbel
சுசீலாவாக rachel கதாபாத்திரத்தில் Elizhabeth Banks
ரகுவாக maat கதாபாத்திரத்தில் Jesse Moss
ராஜீவ்
வாக stephen கதாபாத்திரத்தில் David Strathairn
சாவித்திரியாக mom கதாபாத்திரத்தில் Maya Massar

directed by Guard brothers


இசை மட்டும் அப்போ அப்போ ஓம் சாந்தி ஓம் படத்த நினைவு படுத்துது...
படத்த பத்தி என்னோட பார்வை சொல்லனும்னா திரில்லர் சஸ்பென்ஸ் எதிர் பாக்குறவங்களுக்கு சரியான தீனி... கூடவே இளமை துள்ளும் அழகு பெண்களின் டூ பீஸ் காட்சியும் உண்டு.. ஜொள்ளு விட்டுகிட்டு என்ஜாய் பண்ணலாம்..
இயக்குனருக்கு செய்யும் மரியாதையை காரணமாக சில சம்பவங்களை, காட்சிகளை தவிர்த்து விட்டேன்...

தமிழ் இந்த கதை எதுக்குனா ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இதே கதைய தமிழ் படமா நமக்கு யாரவது சுட்டு தருவாங்க அப்போ படத்துக்கு கதை, தலைப்பு, கதாபாத்திர பெயர் வைக்க மண்டைய பிச்சிக்க கூடாது இல்லையா?

படம் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... படம் பார்த்துட்டு சொல்லுங்க