Monday, January 25, 2010

எங்கே செல்லும்.. பாகம் - 6

விசா வின் ஆலோசனையில் முகிலன் ஆரம்பித்து வைத்த கதையை பலாவும்,பிரபாகரும், ஹாலிவுட் பாலாவும் , வினோத்கௌதமும் தொடர.. தானே போய் உக்கார்ந்த கதையாய் இப்பொழுது நான்...

(
முழுசா படிக்க இந்த பக்கம் போங்க..உங்களுக்கு பிடித்த எபிசோடு எழுதிய நண்பர்களுக்கு, அவர்கள் ப்லாகில் பின்னூட்டுங்கள்.)
இனி ..
-----------------------------------------------------------------------------
விமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் .. ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.

அதை தொடர்ந்து கேப்டனின் குரல்..

"dear passengers, we are returning to the chennai airport due to some techinical fault.
dont worry still flight is in control.
sorry for the inconvenience."

இது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.

அவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை அழுத்தினான் ..
சில நொடிகளில் மறுமுனை நேரடியாக

"நீ இன்னும் பிளைட் ஏறலியா ?" என்று பதற்றமாக கேட்டது .

"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி.. ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்" - ராஜேஷ்

"ஓ! அவன் என்ன பண்றான்?"

"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை "- ராஜேஷ்

" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல? அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு .. அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்."

"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா? இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ? "- ராஜேஷ்

"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா ? நீ சொன்னத மட்டும் செய்..
கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு"

"சரி" என்றான் ராஜேஷ்

மறுமுனை கட் ஆனது.
--------------------------------------------------------------------------

"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா ?"- ஸ்வாதி

"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க?" - ஆவுடையப்பன்

"சார். நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்.."

"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க"

"சரி சார்.." என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .

------------------------------------------------------------------------
ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..

ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..
தலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..
ராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.

எதுவும் புரியவில்லை..

என்ன இது இவன் பேசுறான்? போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி ? மருந்து வேலை செய்யலியா?
மெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
--------------------------------------------------------------------------
அதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..

"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு
இருந்தாள் ஸ்வாதி ..
-------------------------------------------------------------------------
இவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி? என்று யோசித்தபடி.."ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு? " அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட்டான்.

அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..

அ.. ர்.. ஜூ .. ன்..

அ.. ர் .. ஜூன்..

அர்.. ஜூன்..

அர்ஜுன்..

(தொடரும்)..
தொடரபோவது நண்பர் சுபதமிழினியன்.. வாழ்த்துக்கள் :)


------------------------------------------------------------------------------
டொய்ங் : முடிந்த வரை 10 பாகதிற்க்குள் முடிக்க பாருங்க.. அப்போ தான் விறுவிறுப்பா இருக்கும் அடுத்தது தொடங்கவும் வசதியா இருக்கும் . இல்லனா டெலி சீரியல் மாதிரி ஆகிட போது..

யாருக்கு முதலில் எழுத விருப்பமிருந்தாலும் இங்கே துண்டை போட்டு இடம்பிடிச்சிடுங்க. கதையை அடுத்த ஏரியாவுக்கு கொண்டு செல்வது உங்க பாடு. :-) ]

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப்பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப்பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும்யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின்அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்குமேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.

Saturday, January 9, 2010

கட்டிங் வித் கிஷோர் - 3

வணக்கம் உங்கள் அனைவரையும் க வி கி -ல் மீண்டும் சந்திப்பதில் குஜாலான மகிழ்ச்சி..
--------------------------------------------------------------------------
தொடர் பதிவு தொடங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு..

இன்றைய தேதியில் பதிவுலகத்தில் "தொடர் பதிவிற்கு" அமோக ஆதரவு இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ABCD யில் தொடங்கி டிராபிக் "கான்ஸ்" வரைக்கும் எல்லாம் தொடர் மயம் தான்.
ஆனால் அவர்கள் தொடங்கும் பதிவு சில பதிவர்களின் அலட்சியபோக்காலும் சோம்பேறித்தனத்தாலும் பாதியில் நின்று விட கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இப்படி தொடர் பதிவு எழுத நினைபவர்களை மேலும் உற்சாகபடுத்தவும் அவர்களை ஊக்கபடுத்தவும் நானும் நண்பர் பதிவர் திரு.வினோத்கெளதம் அவர்களும் 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடத்தி ஆலோசனைகளை தொடர் எழுத நினைபவர்களுக்கு தர ஆயுத்தமாகி உள்ளோம்.

நம்ம ஆளுங்க எந்த விஷயத்த செய்ய சொன்னாலும் அதுல தனக்கு என்ன லாபம் வரும்னு தான் பாப்பாங்க .. நம்ம நாட்டு பழக்கம் அப்படி அதனால அவங்கள குத்தம் சொல்ல முடியாது.

அதனால தொடர் தொடங்க நினைபவர்களுக்கு ஏதுவாகவும் ,தொடரை எழுத அழைக்கபடுவோர் ஆவலோடு அதில் பங்கேற்கவும் சில விஷயங்களை தொடர் எழுத நினைப்பவர் செயல்படுத்த வேண்டும்.

அது என்ன விஷயம் என்பதை தெரிந்து கொள்ள தொடர் பதிவு எழுத நினைக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அன்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும்
வெளிமாநிலம் மற்றும் உலக பதிவர்கள் சேர்ந்தவர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் குறிப்பாக அமீரகத்தை சேர்ந்த அன்பர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று தங்கள் சேவையை பதிவுலகத்திற்கு ஆற்றி தொடர் பதிவை செழித்தோங்க செய்ய வேண்டுகிறோம்.

குறிப்பு : ஆலோசனைகளுக்கு கட்டணம் எதுவும் கண்டிப்பாக வசூலிக்க படமாட்டாது. ஆலோசனைகளை பதிவில் குறிப்பிட முடியாததிற்கு சில பதிவுலக அரசியல் காரணம் இருப்பதால் தொடர் எழுத நினைபவர்கள் தயவு கூர்ந்து மின்னஞ்சலில் மட்டும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------
ஒரு " "ஜோக் (வ = வயது வந்தோர் மட்டும் )

நம்ம ஆளு ஒருத்தன் "அது "ல ரொம்ப வீக்..

ராணுவ பயிற்சிக்கு ஆள் எடுகிறாங்கனு கேள்விபட்டு ராணுவத்திற்கு தேவையான "காக்கி" கலர் பான்ட் எடுத்து போட்டுகிட்டு அவனும் போனான்.

அங்க ஒரு அழகான பொண்ணு தான் இன்டெர்வீவ் பண்ணிக்கிட்டு இருந்துச்சி.
நம்ம ஆளு கடைசியா போய் நின்னான்.

இவன் முறை வந்ததும் அந்த பொண்ணு முன்னாடி போய் நின்னான்.

இவனை பார்த்ததும் "யு ஆர் ரிஜெக்டெட்" என்றாள் அந்த பெண்.

இவன் ஒன்னும் புரியாமல் காரணம் கேட்க..

அவள் சொல்லிய பதில்..

இது ஒன்னும் "நேவி " இன்டெர்வீவ் இல்ல உன் இஷ்டத்துக்கு "வொய்ட் " பான்ட் போட்டுகிட்டு வர..


----------------------------------------------------------------------

மீண்டும் சிந்திப்போம்... :)

Friday, January 8, 2010

நம்ம ஆளு

சென்ற வாரம் ஒரு நாள் என்னோட அப்பாவை பாண்டிச்சேரில உள்ள ஒரு மருத்தவமணைக்கு அழைச்சிகிட்டு போய் இருந்தேன்.அப்பாவ டெஸ்ட் பண்ண மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அழைச்சிட்டு போய்டாங்க.. டெஸ்டிங் ஒரு மணி நேரம் அங்க மற்ற யாருக்கும் அனுமதி இல்ல அதனால வெளில இருந்த சேர்ல உக்கார்ந்து இருந்தேன்.

அப்போ பக்கத்துல ஒருத்தர்.. ஐம்பது வயசிருக்கும் அவரோட மனைவிய உள்ள அனுப்பிட்டு அவரும் என் கூட உக்கார்ந்து இருந்தாரு.நாங்க ரெண்டு பேரு தான் அந்த வராண்டாவுல இருந்தோம்.

நான் வழக்கம் போல என்னோட மொபைல் போன் எடுத்து நோண்டிகிட்டு இருந்தேன்.. அவரும் எதோ பேப்பர் கைல வச்சிக்கிட்டு பார்த்துகிட்டு இருந்தார். அவருக்கு ரொம்ப "போர்" அடிச்சிருக்கும் போல.. தம்பி அப்பாவுக்கு என்ன? என்று பேச்சை ஆரம்பிச்சாரு.. நானும் அவரோட வயசுக்கு மரியாதை கொடுத்து என்னோட மிக "முக்கியமான" வேலைய பாதில நிறுத்திட்டு அவர் கிட்ட பேசுனேன்.

பேச்சு ஊரு, படிப்பு, வேலை பத்தி எல்லாம் போச்சி. நானும் அவரு கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்புறமா அவரு கேட்ட ஒரு கேள்வி தான் ஹை-லைட்.. நான் பதில் சொல்ல விரும்பாத கேள்வியும் கூட .

என்னை இப்போ தான் அவரோட வாழ்நாளுல முதல் முறையா பாக்குறாரு.. பேசி ஒரு பத்து நிமிஷம் கூட ஆகல. ஆனா இதுவரை அறிமுகம் இல்லாத ஒருத்தன் கிட்ட கொஞ்சம் கூட வெட்கபடாம அவரு கேட்ட கேள்வி.. தம்பி நீங்க "என்ன" ஆளுங்க?

நான் பதில் சொல்லாமல் சிரித்து விட்டு மீண்டும் என்னோட மொபைல நோண்ட தொடங்கினேன்.. அப்போவும் விடாமல் தம்பி நீங்க பார்த்தா "நம்ம ஆளு" மாதிரி தெரியிறிங்க.. சொந்த ஊரு வேற "நம்ம " பக்கம்னு சொல்றிங்க. அங்க "நம்ம ஆளுங்க" தான அதிகம்.. எனக்கு இப்போவும் அங்க நிறைய சொந்தகாரங்க இருக்காங்க தம்பி என்றார்.

நான் அமைதியாக சார் "இந்த" மாதிரி கேள்விக்கெல்லாம் நான் எப்போவும் பதில் சொல்றது இல்ல என்றேன்.

என்ன தம்பி இதுக்கு போய் கோச்சிகிறிங்க? நம்ம நாட்ல ஒரு மனுஷன் பிறந்ததுல இருந்து இறக்கிற வரைக்கும் "இதோட" அடையாளம் இல்லாம இருக்க முடியுமா? அட சும்மா சொல்லுங்க நீங்க "நம்ம" ஆளுதான? , என்றார்.


நானும் கோபத்தை கட்டுபடுத்திகிட்டு சார் இப்போ தான் என்னை பாக்குறிங்க அறிமுகம் இல்லாத ஒருத்தர்கிட்ட அதுக்குள்ள எப்படி இதெல்லாம் கேக்குறிங்க? என்றேன்.

என்ன தம்பி இப்படி சொல்லிடிங்க..இதுல என்ன தப்பு இருக்கு? என்னைக்குமே நம்ம நாட்டுல "இது" தான் தம்பி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முதலீடு.. "இதை" ஒழிக்கிறோம்னு சொல்லி தான் வோட்டு கேப்பாங்க ஆனா "இது " இல்லாம எவனும் அரசியல் பண்ண முடியாது. நம்ம தொகுதிய எடுத்துக்கோயேன் " நம்ம" ஆளுங்க சப்போர்ட் இல்லனா "இவன் " அங்க வந்து ஜெயிச்சி இருக்க முடியுமா என்று கேட்டு முழுமையாக என்னை "அவங்க" என்றே ஆக்கி பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

இதற்கு மேலும் தாங்கமுடியாமல் வேண்டுமென்றே சார் என்னோட அப்பா அம்மாவோடது காதல் திருமணம். அப்பாவும் அம்மாவும் வேற வேற மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவங்க. இப்போ சொல்லுங்க "நான் யாரு"? என்றேன்.

அதற்கும் சளைக்காமல் அப்பா என்ன "ஆளோ" அது தான் தம்பி பிள்ளைங்களுக்கும் என்றார்.

அப்படினா நான் "உங்க ஆளு " இல்ல என்றேன் அமைதியாக .

அதுவரை என்னை "நம்ம ஆளாக " நினைத்து பாசம் கொட்டியவர். திடீர் என்று பேச்சை நிறுத்திக்கொண்டு அவர் வச்சி இருந்த பேப்பர்-ஐ மீண்டும் மேய தொடங்கினார். நானும் நிம்மதியாக என்னோட மிக முக்கியமான வேலையை தொடர்ந்தேன்.

இது போன்று பல சந்தர்பங்களில் பலர் "இதே " கேள்வியை என்னிடம் கேட்டு இருகிறார்கள். குறிப்பாக சேலம், ஈரோடு,கோயம்புத்தூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் (நான் அடிக்கடி போகும் இடங்கள் ) இந்த கேள்வி என்னிடம் பல தடவை கேட்கபட்டு இருக்கிறது.

ஆனா யோசிச்சி பார்த்தா அவரு சொன்னது உண்மை தான். எப்போவுமே "இது" இல்லாம நம்ம நாட்டுல அரசியல் இல்ல. இருந்தாலும் ஒருத்தரை பார்த்ததும் அவரிடம் "மதம்" மற்றும் "ஜாதி" ரீதியாக அணுகும் இவரை போன்ற ஜென்மங்கள் எப்போ தான் திருந்துவாங்களோ?

இதற்கு கருத்து சொல்ல விரும்புபவர்கள் பெரியாரோ, பாரதியோ மீண்டும் பிறந்து வந்தால் தான் நாடு திருந்தும் என்ற ரீதியில் கருத்து இடவேண்டாம். என்னை பொறுத்த வரை அவர்கள் இருவருமே முயன்ற வரை மட்டுமே முயற்சி எடுத்தவர்கள் அதனால் "ஜாதி ஒழிப்பு" போரில் முழுமையாக தோற்று போனவர்கள்.

நாமும் முயன்ற வரை என்று இல்லாமல் முழுமையான முயற்சி எடுத்துது "இது" இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Wednesday, January 6, 2010

பீர் வித் கிஷோர் ( இது ஒரு மாநில மொழி திரைப்படம்)

வார் ரில் : எங்க எதிர்வீட்டு "பிகர்"மேல சாத்தியமா இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல.

எவனோ ஒருத்தன் எழுதியது.. பல பேருக்கு அவன் யாருன்னு தெரியும் தெரிஞ்சவங்க மூடிகிட்டு சும்மா இருங்க. தெரியாதவங்க தெரிஞ்சிக்க விரும்பாதிங்க. இந்த பதிவுல உள்ள ஒரே நல்ல விஷயம் என்னை "பிரபல" பதிவர்னு சொன்னது தான்.

இது ஏற்கனவே அவரு பதிவுல வந்தது தான் ஆனா ஒரு ரொம்மம்ப்ப நல்லவன பத்தி இப்படி எழுதுனதால கூகுள் ஆண்டவர்க்கு கோபம் வந்து அந்த ப்ளாக்கையே தூக்கிட்டாரு.

இப்போ புது ப்ளாக் போடலாம்னு நினைச்சாரு .. ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி நண்பன் மேல உள்ள பாசத்துல ஓவரா கூவி.. வீட்ல இவரோட சொம்பு ரொம்ப அடி வாங்கிடிச்சி..அதனால என்னோட ப்ளாக்ல போடுறேன் ( போட சொல்லி ஒரே அழுகாச்சி).

இப்போ இதை திரும்ப பதிவா போடுறதுக்கு என்ன அவசியம்ன்னு நீங்க கேட்டாலும் நாங்க சொல்ல தயாரா இல்ல.

ஆனா என்னை பத்தி யாரு என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரியும்.. அந்த நம்பிக்கையுடன் அந்த பதிவு உங்கள் பார்வைக்கு...

இனி அவனின் அசல் அட்டகாசம்..

100 %
அக்மார்க் மொக்கை பதிவு:












நானும்
பிரபல பதிவர் கிஷோர்ரும் பல இடங்கள் ஒன்றாக சுற்றி இருக்கிறோம் என்றாலும் மறக்கவே முடியாத ஒரு அனுபவம் கிஷோரின் நண்பரின் கல்யாணத்துக்கு சேலம் சென்று விட்டு அப்படியே ஏற்காடு சென்றது.

நானும் அவனும் சேலத்தில் உள்ள அவனின் அக்கா வீட்டில் தான் தங்கி இருந்தோம். நடந்தது அவனின் நண்பன்(நண்பி) திருமணம் என்றாலும் என்னையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.நான் சில நிபந்தனையோடு அவன் கூட சென்றேன்.

கண்டிஷன் 1:கல்யாணம் நடந்தது சண்டே, நாங்கள் அங்கே சென்றது சனிக்கிழமை காலை என்னால் ஒரு நாள் கூட அதிகமாக விடுமுறை எடுக்க முடியாது. ஏன் என்றால் நான் ஒரு நாள் லீவ் போட்டால் கூட எனக்கு மண்டை வெடித்து விடும் அவ்வளவு ஒரு சின்சியர் சிகாமணி.
கண்டிஷன் 2:என்னை எக்காரணம் கொண்டும் குடிக்க வற்புறுத்த கூடாது என்று சொல்லியும் அவன் கூட சென்றேன்.

போன முதல் நாள் அன்று கொஞ்சம் சேலத்தை சுற்றி விட்டு அன்று இரவு என்னை வாடா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கலாம் என்று அழைத்து சென்றவன் அவனின் வேலையை காட்ட தொடங்கினான்.

கிப்ட் வாங்கி விட்டு அவன் அழைத்து சென்ற இடம் "டாஸ்மாக்"..எனக்கு அந்த இடத்தை பார்த்ததும் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன..

"டேய், என்னடா இங்க கூப்பிட்டு வந்துட.."..நான்.
"மச்சான் ஒரே ஒரு பீர் டா, சாப்பிட்டு போயருல்லாம்..நீ சொன்ன இங்க வந்து இருப்பியா அதான் சொல்லாமலே கூப்பிட்டு வந்துட்டேன்.."..கிஷோர்.

"டேய் நான் தான் இதே மாதிரி இடத்துக்கு எல்லாம் வர மாட்டேனு உனக்கு நல்லா தெரியும்"..என்று நான் புலம்ப ஆரம்பித்தேன்.
"டேய், புலம்பாத இங்க வேணாம் வாங்கிட்டு ஏற்காடு போற பத்தாவது ஹேர் பின் பெண்ட் போய்டுவோம்.."

"எதோ பண்ணி தொலை.."
வந்தவன் இரண்டு பீர் வாங்கி கொண்டு வந்தான்.

"டேய் என்னடா இது.."..நான்.

"நீயும் அடிடா.."..கிஷோர்.

"டேய்..நான் உங்கிட்ட வரப்பவே சொன்னேன்..உனக்கே தெரியும் நான் வருசத்துக்கு ஒரு முறை தான் அடிப்பேன் அதுவும் அரை பாட்டில் தான் என்று..ஏண்டா இப்படி பண்ணுற.."

"ஒரு தடவடா ப்ளீஸ்"..என்று கெஞ்ச ஆரம்பித்தான்..

சரி என்று தலையில் அடித்து கொண்டே வண்டியயை ஏற்காடு செல்லும் பாதையில் ஓட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு வண்டியை ஓட்டும் பொழுதே ஒரு சந்தேகம்..

"டேய் செக் போஸ்ட் எதுவும் வராதா"..என்றேன்.

"அது எல்லாம் வராது நீ போ நான் பாத்துக்குறேன்"..என்றான்.

செக் போஸ்ட்டும் வந்தது..போலீஸ் ஒருவரும் வண்டியை நிறுத்தி முன்னாடி இருந்த பீர் பாட்டிலை எடுத்து இது என்னது என்று என்னை பார்த்து கேக்கும் பொழுது சொன்ன மாதிரி ஒரு பத்து அடி தள்ளி நடக்கிற சம்பவத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருந்தான்.

நானும் பேசி சமாளித்து ஏற்காடு போகமால் வண்டியை கிழ் நோக்கி திருப்பி ஒட்டினேன்.அப்பயும் அடங்காத அவன் இரண்டாவது ஹேர் பின் பெண்ட்ல் நின்று அடிப்போம் என்றான்..தலை எழுத்தே என்று நினைத்து கொண்டு வேறு வழி இல்லமால் அன்று கொஞ்சம் குடித்தேன்.

குடித்து விட்டு அவன் வண்டியை ஓட்டிய வேகம் இருக்கிறதே..எப்பா ஒரு இடத்தில் சங்கு ஊத வேண்டியது..ஜஸ்ட் தப்பிதோம். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து உறங்கினோம்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் நான் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன்.

அவனை எழுப்பி கல்யாணத்துக்கு கிளப்புவதற்குள் பெரும்ப்பாடு ஆகிவிட்டது இத்தனைக்கும் அவனின் நண்பன் திருமணம் வேறு.

திருமணத்தை முடித்தவுடன் ஏற்காடு அவனின் உறவினர் பைக்கில் சென்றோம்.

அங்கே சென்றவுடன் மறுபடியும் குடிக்கலாம் என்று ஒரே அழுகாச்சி.சொன்னால் கேக்கவும் மாட்டான்.எனக்கு அவன் அழுவதை பார்தால் மனசு கஷ்டம் ஆகி விடும்.வேறு வழியே இல்லமால் மனசு வெறுத்து போய் மறுப்படியும் ஒத்துக்கொண்டேன்.

பீர் வாங்கி வந்தவன் என்னை கூப்பிட்டு கொண்டு வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு மலை மேல் சென்றான்.ஏற்கனவே பல முறை வந்து இருப்பான் போல் என்று நினைத்து கொண்டேன்.

வண்டியை நிறுத்தி விட்டு கையில் பீரை கண்ணும் கருத்துமாக எடுத்து வந்தவன் சாவியை வண்டியில் வைத்து விட்டு வந்தான்.மறுபடியும் நான் ஓடி சென்று சாவியை கையில் எடுத்து வந்தேன்.குடி என்று வந்து விட்டால் அவன் அப்படி ஒரு ஆள் எதை பற்றியும் கவலை பட மாட்டான் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாது.

அவன் அடிக்க தொடங்கினான்

நான் அடிப்பதை போல் அக்டிங் கொடுத்து கொண்டே எல்லாவற்றையும் கிழே ஊற்றினேன்.என்ன பண்ணுவது அந்த கருமத்தை நினைத்தாலே எனக்கு குமட்டி கொண்டு வரும்.

பீரை அடித்து விட்டு அவன் பண்ண அலம்பல் இருக்கிறதே..எப்ப..சொல்லி மாளாது வசமா வந்து சிக்கினேன் என்று நினைத்து கொண்டு ஒரு வழியாக சேலம் கிளம்பு வண்டியை எடுத்தேன்..

மறுபடியும் நான் தான் ஓட்டுவேன் என்று ஒரே அடம் பிடித்தான்.சரி ஒட்டி தொல என்று ஒரு விட பயத்தோடு கொடுத்தேன்.சாதரண சாலை என்றால் பரவா இல்லை..மலை சாலை வேறு..ஒரு வித நடுக்கதோடு அவன் பின்னால் அமர்ந்தேன்.

பயந்த மாதிரியே அவன் ஓட்டிய வேகம் இருக்கிறதே..அட வேகமாக போனால் கூட பரவா இல்லை..ஒவ்வொரு வளைவு வரும் பொழுது கையை விட்டு கொண்டே வளைந்தான்..எதிரில் வந்த ஒரு வண்டி விடமால் எல்லோரும் திட்டி கொண்டே சென்றார்கள்..

சேலம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆனது..

டிஸ்கி 1 : இது பாதி கற்பனை பதிவு..வழக்கம் போல் நானும் அவனும் கல்யாணத்திற்கு போய் விட்டு செவேனே என்று திரும்பி விட்டோம்.தண்ணி எல்லாம் ஒன்றும் கிடையாது..நானும் அவனும் உத்தமர்கள்..

டிஸ்கி 2 :மேல உள்ள டிஸ்கி அவன் எழுதுனது தான்.. நல்ல விஷயத்த எவ்ளோ லேட் சொல்றானுங்க. இவனுங்க மாதிரி ஆளுங்க இருந்தா "2012 " கன்பார்ம் தான் போல இருக்கு.