Wednesday, January 6, 2010

பீர் வித் கிஷோர் ( இது ஒரு மாநில மொழி திரைப்படம்)

வார் ரில் : எங்க எதிர்வீட்டு "பிகர்"மேல சாத்தியமா இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல.

எவனோ ஒருத்தன் எழுதியது.. பல பேருக்கு அவன் யாருன்னு தெரியும் தெரிஞ்சவங்க மூடிகிட்டு சும்மா இருங்க. தெரியாதவங்க தெரிஞ்சிக்க விரும்பாதிங்க. இந்த பதிவுல உள்ள ஒரே நல்ல விஷயம் என்னை "பிரபல" பதிவர்னு சொன்னது தான்.

இது ஏற்கனவே அவரு பதிவுல வந்தது தான் ஆனா ஒரு ரொம்மம்ப்ப நல்லவன பத்தி இப்படி எழுதுனதால கூகுள் ஆண்டவர்க்கு கோபம் வந்து அந்த ப்ளாக்கையே தூக்கிட்டாரு.

இப்போ புது ப்ளாக் போடலாம்னு நினைச்சாரு .. ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி நண்பன் மேல உள்ள பாசத்துல ஓவரா கூவி.. வீட்ல இவரோட சொம்பு ரொம்ப அடி வாங்கிடிச்சி..அதனால என்னோட ப்ளாக்ல போடுறேன் ( போட சொல்லி ஒரே அழுகாச்சி).

இப்போ இதை திரும்ப பதிவா போடுறதுக்கு என்ன அவசியம்ன்னு நீங்க கேட்டாலும் நாங்க சொல்ல தயாரா இல்ல.

ஆனா என்னை பத்தி யாரு என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரியும்.. அந்த நம்பிக்கையுடன் அந்த பதிவு உங்கள் பார்வைக்கு...

இனி அவனின் அசல் அட்டகாசம்..

100 %
அக்மார்க் மொக்கை பதிவு:
நானும்
பிரபல பதிவர் கிஷோர்ரும் பல இடங்கள் ஒன்றாக சுற்றி இருக்கிறோம் என்றாலும் மறக்கவே முடியாத ஒரு அனுபவம் கிஷோரின் நண்பரின் கல்யாணத்துக்கு சேலம் சென்று விட்டு அப்படியே ஏற்காடு சென்றது.

நானும் அவனும் சேலத்தில் உள்ள அவனின் அக்கா வீட்டில் தான் தங்கி இருந்தோம். நடந்தது அவனின் நண்பன்(நண்பி) திருமணம் என்றாலும் என்னையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.நான் சில நிபந்தனையோடு அவன் கூட சென்றேன்.

கண்டிஷன் 1:கல்யாணம் நடந்தது சண்டே, நாங்கள் அங்கே சென்றது சனிக்கிழமை காலை என்னால் ஒரு நாள் கூட அதிகமாக விடுமுறை எடுக்க முடியாது. ஏன் என்றால் நான் ஒரு நாள் லீவ் போட்டால் கூட எனக்கு மண்டை வெடித்து விடும் அவ்வளவு ஒரு சின்சியர் சிகாமணி.
கண்டிஷன் 2:என்னை எக்காரணம் கொண்டும் குடிக்க வற்புறுத்த கூடாது என்று சொல்லியும் அவன் கூட சென்றேன்.

போன முதல் நாள் அன்று கொஞ்சம் சேலத்தை சுற்றி விட்டு அன்று இரவு என்னை வாடா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கலாம் என்று அழைத்து சென்றவன் அவனின் வேலையை காட்ட தொடங்கினான்.

கிப்ட் வாங்கி விட்டு அவன் அழைத்து சென்ற இடம் "டாஸ்மாக்"..எனக்கு அந்த இடத்தை பார்த்ததும் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன..

"டேய், என்னடா இங்க கூப்பிட்டு வந்துட.."..நான்.
"மச்சான் ஒரே ஒரு பீர் டா, சாப்பிட்டு போயருல்லாம்..நீ சொன்ன இங்க வந்து இருப்பியா அதான் சொல்லாமலே கூப்பிட்டு வந்துட்டேன்.."..கிஷோர்.

"டேய் நான் தான் இதே மாதிரி இடத்துக்கு எல்லாம் வர மாட்டேனு உனக்கு நல்லா தெரியும்"..என்று நான் புலம்ப ஆரம்பித்தேன்.
"டேய், புலம்பாத இங்க வேணாம் வாங்கிட்டு ஏற்காடு போற பத்தாவது ஹேர் பின் பெண்ட் போய்டுவோம்.."

"எதோ பண்ணி தொலை.."
வந்தவன் இரண்டு பீர் வாங்கி கொண்டு வந்தான்.

"டேய் என்னடா இது.."..நான்.

"நீயும் அடிடா.."..கிஷோர்.

"டேய்..நான் உங்கிட்ட வரப்பவே சொன்னேன்..உனக்கே தெரியும் நான் வருசத்துக்கு ஒரு முறை தான் அடிப்பேன் அதுவும் அரை பாட்டில் தான் என்று..ஏண்டா இப்படி பண்ணுற.."

"ஒரு தடவடா ப்ளீஸ்"..என்று கெஞ்ச ஆரம்பித்தான்..

சரி என்று தலையில் அடித்து கொண்டே வண்டியயை ஏற்காடு செல்லும் பாதையில் ஓட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு வண்டியை ஓட்டும் பொழுதே ஒரு சந்தேகம்..

"டேய் செக் போஸ்ட் எதுவும் வராதா"..என்றேன்.

"அது எல்லாம் வராது நீ போ நான் பாத்துக்குறேன்"..என்றான்.

செக் போஸ்ட்டும் வந்தது..போலீஸ் ஒருவரும் வண்டியை நிறுத்தி முன்னாடி இருந்த பீர் பாட்டிலை எடுத்து இது என்னது என்று என்னை பார்த்து கேக்கும் பொழுது சொன்ன மாதிரி ஒரு பத்து அடி தள்ளி நடக்கிற சம்பவத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருந்தான்.

நானும் பேசி சமாளித்து ஏற்காடு போகமால் வண்டியை கிழ் நோக்கி திருப்பி ஒட்டினேன்.அப்பயும் அடங்காத அவன் இரண்டாவது ஹேர் பின் பெண்ட்ல் நின்று அடிப்போம் என்றான்..தலை எழுத்தே என்று நினைத்து கொண்டு வேறு வழி இல்லமால் அன்று கொஞ்சம் குடித்தேன்.

குடித்து விட்டு அவன் வண்டியை ஓட்டிய வேகம் இருக்கிறதே..எப்பா ஒரு இடத்தில் சங்கு ஊத வேண்டியது..ஜஸ்ட் தப்பிதோம். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து உறங்கினோம்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் நான் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன்.

அவனை எழுப்பி கல்யாணத்துக்கு கிளப்புவதற்குள் பெரும்ப்பாடு ஆகிவிட்டது இத்தனைக்கும் அவனின் நண்பன் திருமணம் வேறு.

திருமணத்தை முடித்தவுடன் ஏற்காடு அவனின் உறவினர் பைக்கில் சென்றோம்.

அங்கே சென்றவுடன் மறுபடியும் குடிக்கலாம் என்று ஒரே அழுகாச்சி.சொன்னால் கேக்கவும் மாட்டான்.எனக்கு அவன் அழுவதை பார்தால் மனசு கஷ்டம் ஆகி விடும்.வேறு வழியே இல்லமால் மனசு வெறுத்து போய் மறுப்படியும் ஒத்துக்கொண்டேன்.

பீர் வாங்கி வந்தவன் என்னை கூப்பிட்டு கொண்டு வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு மலை மேல் சென்றான்.ஏற்கனவே பல முறை வந்து இருப்பான் போல் என்று நினைத்து கொண்டேன்.

வண்டியை நிறுத்தி விட்டு கையில் பீரை கண்ணும் கருத்துமாக எடுத்து வந்தவன் சாவியை வண்டியில் வைத்து விட்டு வந்தான்.மறுபடியும் நான் ஓடி சென்று சாவியை கையில் எடுத்து வந்தேன்.குடி என்று வந்து விட்டால் அவன் அப்படி ஒரு ஆள் எதை பற்றியும் கவலை பட மாட்டான் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாது.

அவன் அடிக்க தொடங்கினான்

நான் அடிப்பதை போல் அக்டிங் கொடுத்து கொண்டே எல்லாவற்றையும் கிழே ஊற்றினேன்.என்ன பண்ணுவது அந்த கருமத்தை நினைத்தாலே எனக்கு குமட்டி கொண்டு வரும்.

பீரை அடித்து விட்டு அவன் பண்ண அலம்பல் இருக்கிறதே..எப்ப..சொல்லி மாளாது வசமா வந்து சிக்கினேன் என்று நினைத்து கொண்டு ஒரு வழியாக சேலம் கிளம்பு வண்டியை எடுத்தேன்..

மறுபடியும் நான் தான் ஓட்டுவேன் என்று ஒரே அடம் பிடித்தான்.சரி ஒட்டி தொல என்று ஒரு விட பயத்தோடு கொடுத்தேன்.சாதரண சாலை என்றால் பரவா இல்லை..மலை சாலை வேறு..ஒரு வித நடுக்கதோடு அவன் பின்னால் அமர்ந்தேன்.

பயந்த மாதிரியே அவன் ஓட்டிய வேகம் இருக்கிறதே..அட வேகமாக போனால் கூட பரவா இல்லை..ஒவ்வொரு வளைவு வரும் பொழுது கையை விட்டு கொண்டே வளைந்தான்..எதிரில் வந்த ஒரு வண்டி விடமால் எல்லோரும் திட்டி கொண்டே சென்றார்கள்..

சேலம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆனது..

டிஸ்கி 1 : இது பாதி கற்பனை பதிவு..வழக்கம் போல் நானும் அவனும் கல்யாணத்திற்கு போய் விட்டு செவேனே என்று திரும்பி விட்டோம்.தண்ணி எல்லாம் ஒன்றும் கிடையாது..நானும் அவனும் உத்தமர்கள்..

டிஸ்கி 2 :மேல உள்ள டிஸ்கி அவன் எழுதுனது தான்.. நல்ல விஷயத்த எவ்ளோ லேட் சொல்றானுங்க. இவனுங்க மாதிரி ஆளுங்க இருந்தா "2012 " கன்பார்ம் தான் போல இருக்கு.

9 comments:

pappu said...

என்ன இது? என்னைய்யா சொறிஞ்சிட்டு இருக்கீங்க!

pappu said...

எங்ககிட்டயும் ரீடர் இருக்கு!

ஹாலிவுட் பாலா said...

மேட்டர் கிடைக்கலைன்னா... ஒரு பியரை வுட்டுட்டு.. குப்புறடிக்க வேண்டியதுதானே...??

ஏனய்யா.. மறு ஒளிபரப்பெல்லாம்?! இதுல.. ரெண்டு பேரும்... ‘உத்தமன்’ கதையை வேற பேசறீங்க!! :) :)

கலையரசன் said...

//என்ன இது? என்னைய்யா சொறிஞ்சிட்டு இருக்கீங்க!//

//மேட்டர் கிடைக்கலைன்னா... ஒரு பியரை வுட்டுட்டு.. குப்புறடிக்க வேண்டியதுதானே...?? ஏனய்யா.. மறு ஒளிபரப்பெல்லாம்?//

நீ இந்த பாட்டை வாங்குறத்துக்கு, விஷத்தை குடிச்சிட்டு... சாவலாம்!

வருஷத்தின் முதல் பதிவு. அதனால, நல்லாயிரு ராஸா...

கண்ணா.. said...

மீள் பதிவெல்லாம் போடுற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆளாயிட்டயா.....


என்னாங்டா இது டைட்டில், பீர் வித் கிஷோரு....மோரு வித் குமாருன்னு...

இதுல நாங்க குடிக்கவே இல்லன்னு வேற துண்ட போட்டு தாண்டுறானுவோ...

இந்த கலாச்சார சீரழிவை தடுக்க யாராவது நாட்டாமை சொம்ப தூக்கிட்டு உடனே வரவும்

வினோத்கெளதம் said...

Bull Shit..;)

Innum rendu vote Potta puniyavaan's yaarunga.

KISHORE said...

@ பப்பு

ஹா.. ஹா..

@ பாலா

ஹீ.. ஹீ..

@ கலை

ஹே .. ஹே..

@ கண்ணா
ஓஹோ..

@ வினோத்
ஆஹா ..

seemangani said...

சத்தியமா நான் இந்த பதிவை படிக்கலை...இந்த பீர பற்றியும் கிஷோர பற்றியும் ஒண்ணுமே தெரியாது...ஆள விடுங்கப்பா...

KISHORE said...

@ seemangani
nandri