Monday, March 9, 2009

நீங்களே சொல்லுங்க...


என்னாத்த எழுதுறதுனு தெரியுல..
இத மேலோட்டமா பார்த்தா வைத்தெரிச்சல் மாதிரி தான் தோணும்... உள்ள போய் படிங்க... படிச்சிட்டு சொல்லுங்க..
சினிமா விமர்சனம் எழுதலாம்னா ஹாலிவுட்ல இருந்து கோலிவுட் வரைக்கும் (பிட் படம் கூட விடுறது இல்ல) அலசி காயபோடுறாங்க.. (hollywood bala , cablesankar)
அரசியல் எழுதலாம்னா உலக அரசியல்ல இருந்து உள்ளூர் பஞ்சாயத்து போர்டு அரசியல் வரைக்கும் கிளிச்சி தொங்கவிடுறாங்க..(சுரேஷ்)
கதை எழுதலாம்னா நம்ம கதையே ஊரு சிரிக்கிற மாதிரி இருக்கு..
கவிதை எழுதலாம்னா படிச்சிட்டு நானே காரி துப்புற மாதிரி இருக்கு..
ஆனாலும்
இவங்க எல்லாம் எப்டிதான் மத்தவங்க படிக்குற மாதிரி எழுதுறாங்க தெரியுல.. (ஷன்முகப்ரியன் சார்)
பிரேம் எதையும் விடுறது இல்ல ,
கார்கி அண்ண பத்திசொல்லவே வேண்டாம் அவர் ஒரு ஆல் ரௌண்டேர்..

அட சமூக அக்கறை பத்தி எழுதலாம்னா அதுக்கு முதல்ல நீ திருந்துடான்னு மனச்சாட்சி செருப்ப எடுத்து காமிக்குது...

எல்லாத்தையும் விட்டு நம்ம ரேஞ்சுக்கு ஒரு கிளுகிளுப்பு மேட்டர் எழுதலாம்னா
எழுத ஆரம்பிச்சவுடனே நமக்கு கிளுகிளுப்பு ஆகிடுது ( அப்பறம் எங்க எழுதுறது)...

அப்படி நான் எதாவது எழுதுனாலும் எனக்கு நல்லா இருக்க மாதிரி தெரியுது.. ஆனா கமெண்ட்ஸ் பார்த்தா... அட போங்க அதெலாம் கேட்டுகிட்டு...

எப்படி தான் வாரத்துக்கு 10 ,15 பதிவு போடுறங்கனு தெரியுல ...உக்காந்து யோசிப்பாங்க போலிருக்கு ...(ஸ்டொமக் பர்னிங்...)

இப்டியே போனா என்னைக்கு நான் பதிவு போட்டு அத நீங்க படிச்சிட்டு என்ன திட்றது..?

நானும் ஒரு முடிவு எடுத்துட்டேன்.. எப்டியாவது ஒரு 1000 இல்ல 2000 பதிவு போட்டு உங்கள பழி தீர்துகாலம்னு .. ஆனா பாருங்க இந்த மேட்டர் கருமம் தான் கிடைக்க மாட்டுது... ஆனாலும் விட போறது இல்ல...

அதான் உங்க கிட்டயே கேட்டு எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்... இதுக்கு நீங்களே ஒரு பைசல் பண்ணுங்க... எவ்ளோ ரூவா செலவானாலும் பரவாஇல்ல..

என்னா படிசிடிங்களா .. என்னா பண்றது மேலோட்டமா பார்த்தாலும் உள்லோட்டமா பார்த்தாலும் வைத்தெரிச்சல் வைத்தெரிச்சல்லா தெரியும்...
நட்புடன்
- கிஷோர்
(சிலர் பேரை குறிபிட்டது உரிமையுடனும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டிர்கள் என்ற நம்பிக்கையுடனும்... மேலும் இங்கு உள்ள படத்திற்கும் இந்த விஷயத்திற்கும் சட்ட ரீதியாக எந்த தொடர்பும் இல்லை..)
குறிப்பு : உங்க கம்ப்யூட்டர் கருகி போன வாசன வந்தா நான் காரணம் இல்ல

4 comments:

பாலா said...

ஹா.. ஹா.. எப்படி விட்டேன்.. உங்க ப்லாகை இவ்ளோ நாளா. பார்க்காம?

அருமையா.. காமடி வருது உங்களுக்கு..! டைப் பண்ணும்போது கூட. .சிரிச்சிட்டேதான் இருக்கேன்.

//அட சமூக அக்கறை பத்தி எழுதலாம்னா அதுக்கு முதல்ல நீ திருந்துடான்னு மனச்சாட்சி செருப்ப எடுத்து காமிக்குது...//

சூப்பரப்பு.

kishore said...

நன்றி பாலா.. ஆனா கடைசி வரைக்கும் நான் என்னத்த எழுதனும்னு சொல்லாம விட்டுடிங்க ...

வினோத் கெளதம் said...

M.G.R திட்டு பத்தி ஒரு பதிவு போடுங்க.

இன்னும் நிறையா விஷயங்கள் இருக்கு..

அதை பத்தி எல்லாம் கூட நீங்க எழுதலாம்..

என்ன நிறையா எச்சில்கள் பார்சல்லில் வீடு தேடி வரும்.

kishore said...

அதைதான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கேன் வினோத்.. மத்தவங்க காரி துப்புறது நமக்கு ஒன்னும் புதுசு இல்ல தான...?