Friday, July 16, 2010

மாறுபட்ட கண்ணோட்டத்தில் மதராசப்பட்டினம்


நேற்று
நண்பர்களுடன் பார்த்தேன் .. படத்தை பற்றி பல விமர்சனங்கள்.. டைட்டானிக் போல இருக்கு லகான் போல இருக்கு என்று ஏகபட்ட செய்திகள். சில காட்சிகள் அதை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் படம் முழுவதும் ஒன்றி பயணிக்க முடிகிரறது. கதை பற்றி எல்லாம் ஏற்கனவே படித்து இருப்பீர்கள். அதனால் எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டும் ..

கலை, ஒளிபதிவு, ஆர்யா, எமி ஜாக்சன், நாசர்,அமரர் ஹனிபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், ஆர்யாவின் நண்பர்கள் என்று பலரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது . ஆனால் இவர்களையும் மறக்க செய்து படம் முழுவதும் ரணகளபடுத்தி ஆடி இருப்பவர்கள் இசை அமைப்பாளரும் எமி ஜாக்சனின் வயதான வேடம் ஏற்று இருக்கும் நடிகையும் தான்.

இசைஅமைப்பாளர் பாடல்களை விடவும் சிறப்பாக பின்னணி இசையில் கதையோடு பயணம் செய்ய வைக்கிறார்.

வயதான அந்த நடிகை வெறும் முக அசைவுகளில் அவரின் எண்ண ஓட்டங்களை நமக்கு புரிய வைத்து விடுகிறார். ஆர்யாவை தேடி அலையும் போது அவருக்கு கிடைக்கும் ஒரே நம்பிக்கையான ஆர்யாவின் நண்பர் கபீர்- பார்த்தவுடன் வரும் பரவசம்..அடுத்த நிமிடமே அவர் இறந்து போகும் போது நம்பிக்கை பொய்த்து போய் மனம் உடைந்து விடும் கண்ணீர்.. இருந்தாலும் அடுத்த கணமே ஆர்யாவை மீண்டும் சந்திப்போம் என்று முகத்தில் காட்டும் தன்னம்பிக்கை.. ஆர்யாவின் முகவரி கையில் கிடைத்தவுடன் அதை வைத்து கொண்டு அவரின் வயதுக்கு மீறிய துள்ளலுடன் ஒரு நடை.. ஆர்யா சமாதி முன் வரும்போது அவரின் வயதுக்குரிய தள்ளமையுடன் வந்து அமர்வது என்று கடைசி 30 நிமிடங்கள் மிகை படுத்தாமல் அதே சமயம் தன்னுடைய நடிப்பு திறமையை எவருக்கும் விட்டு கொடுக்காமல் அமைதியாக அடித்து ஆடி இருக்கிறார்.

ஆனால் எந்த விமர்சனத்திலும் இவரை பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரிய வில்லை. morgan freeman போன்றோர் ஆங்கில படங்களில் கதை முழுதும் சுமந்து நடிப்பது பற்றி சிலாகித்து எழுதும் நாம் நமது மொழியில் அது நடக்கும் போது அதை பற்றி ஏன் கண்டு கொள்ளவது இல்லை என்று தெரியவில்லை.
அவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் எல்லோரையும் ஆட்டுவித்தவர் இயக்குனர்.. வெள்ளைகார இளமை ப்ளஸ் அழகு கொஞ்சும் ஹீரோயின்.. இளமை கட்டுடலுடன் ஒரு ஹீரோ.. அவர்களுக்குள் காதல் என்று இளமை மசாலா சமாச்சாரங்கள் தூவ பல இடங்களில் வாய்ப்பு இருந்தும் கவர்ச்சியை நம்பாமல் கதையை நம்பி எடுத்து இருக்கிறார். முகம் சுளிக்க வைக்கும் அங்க அசைவுகளோ தேவையற்ற ஆபாச காட்சிகளோ இல்லாமல் எடுத்து இருப்பது நிறைவை தருகிறது.

எனக்கு தெரிந்து கடைசியாக படத்தில் கதாநாயகன் கதாநாயகி இல்லாமல் படத்தின் இறுதி காட்சிகளை ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட் கொண்டு நிறைவாக செய்தது சுப்ரமணியபுரம் படத்தில் தான்.. அதில் கஞ்சாகருப்பை சுற்றி படத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருக்கும். அதன் பிறகு இதில் தான் பார்கிறேன். இயக்குனர் விஜய்க்கு ஒரு லைப் டைம் மூவி.

சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சி. காட்சிகளின் அழுத்தத்தை உணர கண்டிப்பாக திரை அரங்கில் சென்று பாருங்கள் .

9 comments:

சீமான்கனி said...

//சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சி.//

நிச்சயமாய் பாராட்டுக்கு உரிய படம்...பார்க்கும் நம்மையும் அந்த காலத்துக்கே கொண்டு போகிறார் ஒளிபதிவாளர் நீரவ்ஷா...அழகான கவிதை.

சீமான்கனி said...

ஐ நான்தான் பஸ்ட்டு...

நாஞ்சில் பிரதாப் said...

//சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு //.


சூப்பர் பன்ஞ் பாஸு... கண்டிப்பாக புதிய முயற்சிகளை வரவேற்க வேண்டும்... அப்பயாச்சும் இந்த தளபதிகள்(தலைவலிகள்) திருந்தானுங்கனான்னு பார்ப்போம்....

கண்ணா.. said...

நல்ல விமர்சனம்டா

ஆமா ஏமி ஜாக்ஸன் ப்ளாக்கை பார்த்தாச்சா?

படம் பாத்ததிலேருந்து ஏமி மேல இருந்த அந்த இனம் புரியாத ஃபீலிங்க்ஸ் அவங்க ப்ளாக்ல இருக்கற ஸ்டில்ஸ் பாத்ததும் காணாம போயிடுச்சு :(

வினோத்கெளதம் said...

ithu veraya..

கோபிநாத் said...

\\ சில காட்சிகள் அதை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் படம் முழுவதும் ஒன்றி பயணிக்க முடிகிரறது. \\

இதே தான்..இதே தான்.. ;-)) எப்படா முடியும்...ஓங்கி அடிச்சி தொலைடா லூசுன்னு மனசுக்குள்ள அழவைச்சவுங்களுக்கு இவுங்க எம்புட்டோ சூப்பரு ;)

கோபிநாத் said...

அந்த பாட்டிம்மா பத்தி சொல்லியிருப்பது தூள். எனக்கு தெரிஞ்சி அந்த பாட்டிம்மாவுக்கும் கிடைத்திருக்கும் நடிக்கும் வாய்ப்பு கூட ஆர்யாவுக்கு இல்லைன்னு தோணுது ;))

வினோத்கெளதம் said...

மாறுபட்ட கண்ணோட்டம்
மாறுபட்ட கண்ணோட்டம் அப்படின்னு சொல்லி இருக்கிங்களே எதையாவது பிடிச்சு தலைகீழ தொங்கிகிட்டே படம் பார்த்திங்கள..

ஹாலிவுட் பாலா said...

//மாறுபட்ட கண்ணோட்டம் அப்படின்னு சொல்லி இருக்கிங்களே எதையாவது பிடிச்சு தலைகீழ தொங்கிகிட்டே படம் பார்த்திங்கள.//

ஹா.. ஹா.. ஹா...

இன்னும்.. கிஷோர் உயிரோடிருந்தால்.. மேடைக்கு வரவும்.