Tuesday, August 31, 2010

மாஸ்கோவின் காவிரி - திரைவிமர்சனம்

பொதுவாகவே நான் திரைவிமர்சனம் எழுதுவது கிடையாது. பலரின் பல நாட்கள் கடின உழைப்பை வெறும் 50 ரூபாய் குடுத்து பார்த்து விட்டு நல்லா இல்லை என்று ஒரு வார்த்தையில் கழித்து கட்டுவது அவர்களின் உழைப்பை அசிங்கபடுத்துவதாக எண்ணுபவன் என்ற ஒரு காரணம் ஒருபுறம் இருந்தாலும்.. திரைப்படங்களை சுவாரசியமாக ரசிக்க தெரிந்த எனக்கு அதே சுவாரசியத்தோடு விமர்சணமாக எழுத தெரியாது என்பதை இந்த மாபெரும் வாசகர்கள் கூட்டத்திலே தெள்ளத்தெளிவாக சொல்லிக்கொள்ள கடமைபட்டு இருக்கிறேன் .

அப்படி இருந்தும் சில சமயங்களில் என் மனதுக்கு பிடித்த அல்லது மனதை பாதித்த திரைப்படங்களை பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் சில பதிவுகளில் சொல்லியதுண்டு.. அதை சிலர் தலைகீழாக தொங்கி கொண்டு பார்த்தாயா என்று கேட்டதும் அந்த கேள்வியை இன்னும் சிலர் ஆமோதித்து இன்னும் உயிரோடு இருக்கிறாயா என்று பின்னூட்டம் எழுதியதும் வரலாற்றில் செதுக்கபட்டவை.

சரி விஷயத்திற்கு வருவோம்..

இன்னைக்கு சாயந்திரம் நண்பர் ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு.. மாஸ்கோவின் காவிரி படம் போகலாம் என்று.. சரி ஓசில தானான்னு கிளம்பி போய்டேன்..

தியேட்டர்ரில் மொத்தம் என் கண்ணில் பட்டவர்கள் 14 பேரு.. அதுல இருவர் டிக்கெட் கொடுப்பவர்கள் , இருவர் டிக்கெட் கிழிப்பவர்கள்.. ஆக மீதி படம் பார்த்தது 10 பேரு.. சாட்டிலைட் டெலிகாஸ்ட் என்பதால் படம் சரியான நேரத்திற்கு போட்டார்கள்.

படத்தின் ஸ்டில்களை பார்த்து எதோ நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு படத்தின் முதல் காட்சியில் பார்த்திபன் குரலில் ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சிலயே படத்தை பற்றிய ஒரு கணிப்பு மனக்கண்ணு முன்னாடி தெரிய ஆரம்பிச்சது.
அதாவது.. அந்த ஹீரோ சனியன் பேரு "மாஸ்கோ"வாம் அப்புறம் அந்த ஹீரோயின் மூதேவி பேரு "காவிரி "யாம்.
இதுங்க ரெண்டு பேரும் சந்திச்சி.. லவ் பண்ணி..சண்டை போட்டு.. பிரிஞ்சி.. ஒன்னு சேர்ந்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ.

என்னோட பேராசிரியர் ஒருத்தர் செமினார் எடுக்கும் சொல்வாரு.. கிஷோர் நீ உனக்கு தெரிஞ்ச எதை வேண்டுமானாலும் பலபேர் முன்னால் தைரியமா தயக்கம் இல்லாம சொல்லு. அந்த விஷயத்த பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருக்கலாம். ஆனாலும் அந்த விஷயத்த நீ எப்படி சொல்ற என்பது தான் முக்கியம்.

அதாவது மேட்டர் எதுவா இருந்தாலும் உன்னோட ப்ரெசென்ட்டேஷன் எப்படி இருக்குனு தான் பார்ப்பாங்க. அது தான் முக்கியம்னு சொல்லுவாரு. அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் இன்னைக்கு வரைக்கும் நான் ஒவ்வொரு முறை ப்ரெசென்ட்டேஷன் பண்ணும் போதும் மனசுல வச்சிக்கிட்டு தொடங்குவேன்.

ஒருவேளை எனக்கு ஒரு பேராசிரியர் சொல்லி தந்த மாதிரி டைரக்டர் ரவிவர்மனுக்கு யாரும் சொல்லல போல இருக்கு. அப்படி சொல்லி இருந்தா படம் பார்த்த எனக்கும் இப்போ படிக்கிற உங்களுக்கும் கஷ்டம் இல்லாம போய் இருக்கும்.

சரி படத்தோட கதை என்ன?

அன்பே ஆருயிரே , குஷி, அலைபாயுதே, படங்களை போல பையனுக்கும் பொண்ணுக்கும் காதலுக்கு அப்புறம் வரும் மிஸ்அண்டர்ஸ்டான்டிங் மற்றும் ஈகோ தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் மாஸ்கோவின் காவேரி சென்னையின் கூவமாக மாறிவிட்டது.

இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானம்.. இதை விட மொக்கை காமெடியை இனி எந்த படத்திலும் அவர் செய்ய போவது கிடையாது..

படத்தில் உண்மையான காமெடி.. "நீயா? நானா ?" கோபிநாத் கெட்அப்பில் வரும் சீமான் தான். அதுவும் அவர் போட்டு இருக்கும் சிகப்பு கலர் கோட் சூட். அதை போட்டு கொண்டு வாழ்கையை பற்றி அவர் சீரியஸ் ஆக பேசும் காட்சி சான்சே இல்லை தாரளமாக இரண்டு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கலாம்..சரியான விஷுவல் ட்ரீட்.

படத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம் ரெண்டு மணிநேரம் ஓட கூடிய சின்ன படமாக இருப்பது தான்.


மொத்தத்தில்...

மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ..

13 comments:

ஹாலிவுட் பாலா said...

//நான் திரைவிமர்சனம் எழுதுவது கிடையாது. பலரின் பல நாட்கள் கடின உழைப்பை வெறும் 50 ரூபாய் குடுத்து பார்த்து விட்டு நல்லா இல்லை என்று ஒரு வார்த்தையில் கழித்து கட்டுவது அவர்களின் உழைப்பை அசிங்கபடுத்துவதாக எண்ணுபவன்//

அப்ப இவ்ளோ நாள் நான் மத்தவங்க உழைப்பை அசிங்கப் படுத்தினேன்னு சொல்லுறீங்க? ;)

ஒருவேளை 500 கொடுத்துப் பார்த்தவங்க சொல்லலாங்கறீங்களா?

ஹாலிவுட் பாலா said...

// அதை சிலர் தலைகீழாக தொங்கி கொண்டு பார்த்தாயா என்று கேட்டதும் அந்த கேள்வியை இன்னும் சிலர் ஆமோதித்து இன்னும் உயிரோடு இருக்கிறாயா என்று பின்னூட்டம் எழுதியதும் வரலாற்றில் செதுக்கபட்டவை.//

இந்த வரலாறு இன்னும் நினைவிருக்கு. :) :)

ஹாலிவுட் பாலா said...

//மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ.//

எக்ஸலண்ட்!!! இப்பத்தான் நீங்க ப்லாகர்ன்னு ப்ரூஃப் பண்ணியிருக்கீங்க!! :)

மாசம் ஒரு 4-5 தடவை இப்படி துப்பினா என்னவாம்? வினோத்துக்குத்தான் இப்பல்லாம் நாள் ரொம்ப கஷ்டமா நகருதாம். (அப்புறமும் இதே மாறிதான் நகரும்னு கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும் ;) )

உங்களுக்கு என்ன?

KISHORE said...

@ஹாலி பாலி.

அய்யோ.. தமிழ் திரைவிமர்சனம்னு வேணும்னா மாத்திடுறேன்..

KISHORE said...

//இந்த வரலாறு இன்னும் நினைவிருக்கு. :) //
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.. :)

//எக்ஸலண்ட்!!! இப்பத்தான் நீங்க ப்லாகர்ன்னு ப்ரூஃப் பண்ணியிருக்கீங்க!! :)//

ஆஹா .. தேங்க்ஸ்...

//மாசம் ஒரு 4-5 தடவை இப்படி துப்பினா என்னவாம்? //

எனக்கும் ஆசை தான ஆனா எவன் மாசத்துல 4-5 நாள் ஓசில படத்துக்கு கூட்டிகிட்டு போறான்?

//வினோத்துக்குத்தான் இப்பல்லாம் நாள் ரொம்ப கஷ்டமா நகருதாம். //


அவனுக்கு "நாள் " மட்டுமா கஷ்டமா நகருது? :)

//(அப்புறமும் இதே மாறிதான் நகரும்னு கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும் ;) )//

உங்கள மாதிரி நாலு பெரியவங்க அவனுக்கு புத்தி சொன்னாதான் உண்டு..//உங்களுக்கு என்ன?//

அதானே என்னகென்ன? :) நல்லாவே எழுதிடுவோம்.. :)

ஹாலிவுட் பாலா said...

இந்த பப்பு, வினோத் எல்லாம் எங்க ஆளையே காணாம்?

ஹாலிவுட் பாலா said...

பப்பு... பப்பு... பப்பு...

எங்கிருந்தாலும் வரவும்!!

--

வினோத்... வினோத்... வினோத்...

ஊஊஹும்... இது திருந்தாது. ;) நவம்பர் ஆகும்!!! :)

கோபிநாத் said...

\\அதாவது.. அந்த ஹீரோ சனியன் பேரு "மாஸ்கோ"வாம் அப்புறம் அந்த ஹீரோயின் மூதேவி பேரு "காவிரி "யாம்.
இதுங்க ரெண்டு பேரும் சந்திச்சி.. லவ் பண்ணி..சண்டை போட்டு.. பிரிஞ்சி.. ஒன்னு சேர்ந்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ.
\\\

கலக்கல் மச்சி...காலையில நல்லா சிரிக்கவச்ச ;))

கண்ணா.. said...

//பொதுவாகவே நான் திரைவிமர்சனம் எழுதுவது கிடையாது. பலரின் பல நாட்கள் கடின உழைப்பை வெறும் 50 ரூபாய் குடுத்து பார்த்து விட்டு நல்லா இல்லை என்று ஒரு வார்த்தையில் கழித்து கட்டுவது அவர்களின் உழைப்பை அசிங்கபடுத்துவதாக எண்ணுபவன் //

//மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ..//

ஏன் மச்சி இதை ஓசில பாத்ததாலயா இந்த மாதிரி அசிங்கப்படுத்துறது

வினோத் கெளதம் said...

வழக்கம்போல் அட்டகாசமான விமர்சனம்..
எல்லா படத்திற்கும் நீங்கள் ஏன் விமர்சனம் எழுதகூடாது..

வினோத்... வினோத்... வினோத்...
ஊஊஹும்... இது திருந்தாது. ;) நவம்பர் ஆகும்!!! :)

நவம்பர் 2012 ஆகும் ..:))

வினோத் கெளதம் said...

கேபிள் ஷங்கர் மாதிரி ஒரு
நீங்க கூட உங்க பேருக்கு முன்னாடி 'பெருசா' எதாச்சும் சேர்த்துக்கலாம்.

KISHORE said...

@ கோபிநாத்

சந்தோசமா இருந்தா சரி தான் மச்சி..


@ கண்ணா

மச்சி ஓசில பார்ததால தன் இதோட விட்டேன்.. என் காசு போட்டு பார்த்து இருந்தான்னு வச்சிக்க.... அழுதுருப்பேன்.. :(

@வினோத் கெளதம்

உங்க படத்துக்கு தான் விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன்... உங்க படமே இப்போ எல்லாம் பெரிய படமா இருக்கு..


பெருசானா ? பங்களான்னு வச்சிக்கலாமா? :)

எஸ்.கே said...

பில்டப் படங்கள் ஓடாதுங்கிறதுக்கு இன்னொரு உதாரணம்!