Sunday, May 17, 2009

வெளிநாட்டு மோகம்...

இது நான் எழுதி இரண்டு மதங்கள் ஆகின்றன... நான் இந்தியன் இல்லை இரண்டாம் பாகமாக வெளிஇட இருந்தேன்.. சில காரணகளுகாக தவிர்த்து விட்டேன்.. இப்பொழுது உங்கள் கருத்துகளுக்காக இங்கே வேறு தலைப்பில்..

2004 ..

ஹாய்
கைஸ் எப்படி இருக்கீங்க ? அதே மாதிரி தான் இருபிங்க.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. நிம்மதியான வெளிநாட்டு வாழ்க்கை நான் இங்க வந்து 5 ஆகுது.
நல்ல வேலை... கை நெறைய சம்பாதிக்கிறேன் வீடு ,கார் எல்லா வசதியும் இருக்கு..
காலைல 6 மணிக்கு போனா இரவு 11 மணிக்கெல்லாம் வந்துடுவேன்... வாரத்துல ஒரு நாள் லீவ் ... அன்னைக்கு நல்ல ஊர் சுத்துவேன்..நெனச்செதெல்லாம் வாங்குவேன்... இங்கே ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிகிட்டேன் ... அவளும் சம்பாதிகுறா ... நல்லா போகுது லைப்...
10 வருடங்களுக்கு பிறகு... 2009..
நான் வேலைக்கு சேர்ந்து 10 வருடங்கள் ஆகிறது ... இன்று எனது மேலதிகாரியை பார்த்து எனது காண்ராட் ரினிவல் பண்ணனும் ,, திரும்பவும் ஒரு 10 வருஷம் எக்ஸ்டென்சன் தருவாங்கன்னு நெனைக்குறேன் ... சும்மாவா 10 வருஷம் இந்த கம்பனிக்கு எப்ப்டி உழசிருகேன்...நான் இல்லன இங்க ஒரு வேலையும் நடக்காது...

அலுவலகத்தில்..

"good morning sir"
"yeah.. gud morng mr.xxx.. get in... take your seat please..
"thankyou sir"
"mmm.. anything important?"
"yes sir... about my contract"
"contract..? its going to be finish off na?"
"yes sir... thats y i came to meet you to renewal my contract"
"renewal...? what are you talking about?"
"i want to extend my contract for some more years..."
"are you joking mr.xxx? your contract period is only for 10 years.. your extension is not possible"
"what?"
"yeah... we need youngsters... not you... we need only young indians... they are so brilliant than you and they only can work hard.."
"but i worked for this company for 10 years"
" thats y we gave you salary"
" i hav no anyother experiences than your company.. where shall i go?"
"thats your mistake mr.xxx.. we are not responsible for that.. you should try another job before winding of your contract..you may go now"
"you bastard..."
"hey mind your tounge .. you black indian bitch... security... send him out"

ஐயோ இப்படி எல்லாம் ஒரு நிமிஷத்துல என் கை விட்டு போச்சே .. பரவாஇல்லை என் மனைவி வேலை பாக்குறா ஒரு 6 மாசம் ஓட்டிட்டா வேற வேல தேடிக்கலாம்...
இரவு வீட்டில் ..

"honey"
"yeah...."
"i want to search a new job.."
"why? what happend to your job?"
"my contract is going to finish by next week..."
"next week? you know very well that your contract going to be finish.. then you didn't search another job six months before? how can you find new job with in a week?"
"i trusted in renewal of my contract but now not possible "
"bull shit... how can you run our family?"
"you are earning na?"
"so?"
"we will manage for six months... i will get new job with in this gap"
" r u crazy?.. i cant.. i cant live with you... i'm going to divorce you .. bye"

ச்சே இவ்ளோ தான வெளி நாட்டு வாழ்க்கை.. உடம்புல தெம்பும் புதுசா யோசிக்கிற மூளைக்கு மட்டும் தான் இங்க மதிப்பா ? இப்படி என் சோகத்தை தீர்த்து கொள்ள என் கஷ்டத்தை சொல்லி அழ கூட ஒரு துணை இல்லாமல் நிற்கிறேனே.... வயசான காலத்துல நிமதியான வாழ்க்கை வாழ இங்க உள்ளவர்களுக்கு மட்டும் தான் உரிமையா?

10 வருடம் என் ரத்தத்தை சிந்தி வேலை செஞ்சது பணத்துக்கு மட்டுமா செய்தேன்..நிம்மதியான வாழ்கைக்காகவும் தானே ?
இந்த உழைப்பை நான் இந்தியாவில் காட்டி இருந்தால்.. எவ்ளவு கவுரவமாக இருந்திருக்கலாம்?

என்னை மன்னியுங்கள் எனது சகோதர சகோதிரிகளே.. இந்தியாவில் நான் இருக்கும் போது கஷ்டம் என்று இருந்தாலும் ஒரு நாளும் என்னை பசியோடு தவிக்க விட்டதில்லை நீங்கள்..
என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள எத்தனை உறவுகள், நண்பர்கள்.. உங்களை எல்லாம் துச்சமாக மதித்து நடந்ததற்கு எனக்கு இந்த தண்டனையா? எனக்கு உணவும் கல்வியும் இலவசமாக அளித்து எனது இந்திய தாய் திருநாடு அல்லவா?
இப்போது உணர்கிறேன்.. ஆனாலும் நான் என் தாய் நாட்டிற்கு இப்போது திரும்ப போவதில்லை.. இபொழுது என் உடம்பு , ஓடுகிற ரத்தம் எல்லாம் வெளி நாட்டுகாரன் தான் சுயலாபத்திற்காக என்னை வளர்த்தது.. ஒரு நாய் போன்று... நான் இந்தியன் என்ற அந்த தகுதியை இழந்து 10 வருடங்கள் ஆகின்றன.. நான் மீண்டும் இங்கே ஒரு வேலை தேடி... அவர்கள் என்னை அவர்கள் நாட்டிற்காக பயன்படுத்தும் நேரம் அதை உதறி விட்டு எனது உழைப்பு எனது தாய் நாட்டிற்கு மட்டும் என சொல்லி என் தாய் நாட்டிற்கு வருவேன்.. நிச்சயம் வருவேன்..
இந்தியனாக...

25 comments:

Venkatesh Kumaravel said...

இதில் நம்ம ஆளு பக்கமும் தப்பு இருக்கே.. இதையே இப்படி யோசிங்க. அமெரிக்காவில் இருந்து 5 வருட அனுபவம் பெற்ற ஒருவனால் நம் நாட்டில் பிரகாசிக்க முடியுமே, அப்படி இருந்துவிட்டுப் போகலாமே! இருந்தாலும் 'மோகம்' என்பது மிகச்சரியான வார்த்தைப் பிரயோகம் தான். நல்ல பதிவு!

Prabhu said...

நல்ல கதை பிண்ணனி. பேச்சுகள், போக்கு எல்லாம் நன்றாக இருந்தது. இவனுடைய சைக்காலஜிய இன்னும் நல்லா மெருகேத்தி சிறுகதையா ஆக்குற சான்ஸ மின்ஸ் பண்ணிட்டயே தல!

kishore said...

உண்மை தான் வெங்கி.. தெரிந்தும் அதே தவறு செய்கிறார்கள்.. என் படிப்புக்கு ஏற்ற வேலை இந்தியாவில் இல்லை என்று சப்பைகட்டு வேறு... வெளி நாட்டில் வேலை செய்யும் அளவிற்கு படிப்பை கொடுத்த நமது நாட்டில் அதற்கு ஏற்ற வேலை கிடைப்பது அத்தனை கஷ்டமா?

kishore said...

நன்றி பப்பு... .. இதன் ஆரம்பம் எனது நான் இந்தியன் இல்லை என்ற பதிவில் உள்ளது...
சில காரணங்களுக்காக நான் அதன் இரண்டாம் பாகத்தை ஏப்ரல் 1 காமெடியா மாத்தி போஸ்ட் பண்ணேன்.. ஆனால் அப்போதே எனது நண்பர் வினோத்கெளதம் கிட்ட சொன்னேன்.. நல்லா இருக்கு அதையே போஸ்ட் பண்ணுடா என்றான்.. நான் தான் பண்ணவில்லை..

Viji said...

Hey Kishore, good one! Nothing wrong in going abroad in seach of better opportunities....The problem comes, only when they simply get carried away by that!

வினோத் கெளதம் said...

நல்லா இருக்குடா..ஆனா எல்லோருக்கும் சூழ்நிலைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை..
வெளிநாட்டில் வேலை செய்வதற்கு வெவ்வேறு காரணங்கள்..

kishore said...

@viji
thank you viji..i agree with you.. searching better opportunities in abroad is nothing wrong.. but our country has much more better opportunities

kishore said...

@ வினோத் கெளதம்
உண்மை தாண்டா ... சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்களையும்,, எப்பொழுது இந்தியா வருவோம் என்று நினைத்து அங்கு மனசுமையுடன் வேலை செய்பவர்களையும் எனக்கு தெரியும்...
ஆனா இந்த பதிவு வெளிநாட்டு வேலை என்பது ஏதோ சொர்க்கத்தில் வேலை போலவும்.. இந்தியாவில் படித்து.... வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இந்தியா ஒரு தீண்ட தகாத நாடு போலவும் பாவிக்கும் மனநிலை கொண்டவர்களுக்கான பதிவு...

கண்ணா.. said...

// ஆனா இந்த பதிவு வெளிநாட்டு வேலை என்பது ஏதோ சொர்க்கத்தில் வேலை போலவும்.. இந்தியாவில் படித்து.... வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இந்தியா ஒரு தீண்ட தகாத நாடு போலவும் பாவிக்கும் மனநிலை கொண்டவர்களுக்கான பதிவு...//

மிக சரியான வார்த்தைகள்...

நல்ல நோக்கம்..

Joe said...

Kishore,
It's the same in India or in USA or any other country in the world, the corporates only want youngsters. They will squeeze the hell out of you and throw you out.

It is up to you to study further and keep your job safe!

kishore said...

@ கண்ணா..
நன்றி நண்பா...

kishore said...

@joe

right said joe... but my question is why you youngsters looking for corporates only?

கலையரசன் said...

ச்செல்ல்ல்ல்ல்லோம்...பதிவு அமர்களம்!
எனக்குள்ள தூங்கிட்டு இருந்த இந்தியன,
எழுப்பிட்டப்பு...

kishore said...

@ கலையரசன்

நன்றி நண்பா...

குப்பன்.யாஹூ said...

everyone knows and does the mistake, what to do?

even today there is big queue in US counsulate near Anna Bridge.

kishore said...

@ குப்பன்_யாஹூ
thats our fate... kuppan yahoo...
thanks for your visit and comment...

Thomasruban-bangalore said...

நான் மீண்டும் இங்கே ஒரு வேலை தேடி... அவர்கள் என்னை அவர்கள் நாட்டிற்காக பயன்படுத்தும் நேரம் அதை உதறி விட்டு எனது உழைப்பு எனது தாய் நாட்டிற்கு மட்டும் என சொல்லி என் தாய் நாட்டிற்கு வருவேன்.. நிச்சயம் வருவேன்..
அடிபட்டதான் புத்திவருது. வருக, வருக....

நாணல் said...

ஹ்ம்ம்ம் எப்படி தான் அங்க இருக்கங்களோ... :(

kishore said...

@ Thomasruban-பெங்களூர்
என்ன பண்றது தாமஸ் சில பேருக்கு பட்டாலும் வராது ...

kishore said...

@ நாணல்

இருகாங்க... சீக்ரம் வருவாங்க

Suresh said...

சும்மா அழகா இருக்கு மச்சான் பின்னி பெடல் எடுத்துட... சும்மா இங்கிபிஷ்ல ;) கலக்கிட்ட ஹீ ஹீ பத்து வருஷம் எப்படி மாத்திடுச்சு

/10 வருடம் என் ரத்தத்தை சிந்தி வேலை செஞ்சது பணத்துக்கு மட்டுமா செய்தேன்..நிம்மதியான வாழ்கைக்காகவும் தானே ?
இந்த உழைப்பை நான் இந்தியாவில் காட்டி இருந்தால்.. எவ்ளவு கவுரவமாக இருந்திருக்கலாம்?

என்னை மன்னியுங்கள் எனது சகோதர சகோதிரிகளே.. இந்தியாவில் நான் இருக்கும் போது கஷ்டம் என்று இருந்தாலும் ஒரு நாளும் என்னை பசியோடு தவிக்க விட்டதில்லை நீங்கள்..
என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள எத்தனை உறவுகள், நண்பர்கள்.. உங்களை எல்லாம் துச்சமாக மதித்து நடந்ததற்கு எனக்கு இந்த தண்டனையா? எனக்கு உணவும் கல்வியும் இலவசமாக அளித்து எனது இந்திய தாய் திருநாடு அல்லவா?//

இது உண்மையை , வலியை நெஞ்ச சுட்ட வரிகள் ...

kishore said...

தேங்க்ஸ் டா..இங்கிலிபிஸ் எல்லாம் தானா வருது மச்சான்...

Prabhu said...

எனது ப்ளாக் அனாமத்தாக காணாமல் போன காரணத்தால் எனது மொக்கைகளை நான் ஆங்கிலத்திலும் தொடர உள்ளேன். அதற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்.

http://pappumethinks.blogspot.com/

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...உண்மை சுடத்தான் செய்யும்!

kishore said...

நன்றி அருணா