Tuesday, December 22, 2009

கட்டிங் வித் கிஷோர் - 1

இந்த பதிவ படிச்சிட்டு அருமைன்னு சொன்னாலும் சரி.. போடா எருமைன்னு சொன்னாலும் சரி.. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரசிச்ச.. என்னை சந்தோசமாய் இருக்க வைத்த .. சில சமயம் என்னை சங்கடத்தில் ஆழ்த்திய எனது வாழ்வில் நடந்த.. நடந்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை உங்க கிட்ட பகிர்ந்துக்க போற சரியான மொக்கை பதிவு.. (சாரி கண்ணா....)

சரி விஷயத்திற்கு போவோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொக்கை போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சி..இதுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சா.. ஆளாளுக்கு ஒரு தலைப்புல எழுதுறாங்க.. (அப்போ அவங்க எழுதுறது எல்லாம் மொக்கையான்னு கேக்காதிங்க .. எனக்கு பதில் தெரியாது..ஆனா கண்டிப்பா நான் எழுதுறது மொக்கை தான் )

தலைப்பு வைக்கிறதுலையும் ஒரு நியாய தர்மம் இருக்கனும் இல்லைங்களா?

உலகத்துலயே ஒருத்தன் அனுபவிக்கிற கொடுமையான நிகழ்வு எதுன்னு நினைகிறிங்க..?
காதல் தோல்வி?
நண்பர்கள் பிரிவு?
தனிமை?
தொடர் தோல்விகள் ?

அது எல்லாம் சும்மாங்க..

அதெல்லாம் கூட எதோ ஒரு வகைல தாங்கிக்கலாம். இல்ல இன்னொருத்தர் கிட்ட சொல்லியாச்சும் மனச ஆத்திக்கலாம் ..
ஆனா ஒருத்தன் குடிக்கும் போது அதை வேடிக்கை பார்த்துகிட்டு அவன் திரும்ப திரும்ப சொல்றத குடிக்கிற பழக்கம் இல்லாம வெறும் கடலைய மட்டும் கொறிசிகிட்டு கேக்குறவன் இருக்கான் பாருங்க.. அவன் அனுபவிக்கிற வேதனை.. கஷ்டம்..(அதெல்லாம் என்னை மாதிரி கஷ்டபட்டவங்களுக்கு தான் தெரியும்)

ஹலோ.. ஹலோ .. . எங்க கிளம்புறிங்க? வெயிட்..
இனிமே நீங்க அந்த கஷ்டத்த தான் அனுபிவிக்க போறீங்க..
அதான் "கட்டிங் வித் கிஷோர் "
பேர்லயாவது சரக்கு இருக்கட்டுமேனு தான் "கட்டிங்"ன்னு வச்சேன்..

------------------------------------------------------------------------------------------
இனி மொக்கைகள் ஆ"ரம்பம்" (வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்.. )


கடந்த சனிக்கிழமை "அவதார் " பார்த்தேன்.. அவதாரம் போக வேண்டியது என்னோட பிடிவாதத்தால முதல் தடவை தப்பிச்சிட்டேன்..
பாலா இந்த படத்த "ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு.. எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது .. சின்ன புள்ள தனமான கதைன்னாலும் நல்லா தான் ப்ரெசென்ட் பண்ணி இருக்காங்க.. என்னா ஒண்ணு.. "நாவி " வேஷத்துல ஹீரோயின் மட்டும் இல்ல எந்த பொன்னை பார்த்தாலும் ஒரு கிளுகிளுப்பு வரல..

உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.. இதுல தியேட்டர் ஒரு "காஞ்சி " போனது அவங்க ரெண்டு பேரும் "கிஸ்"பண்னும் போது விசில் அடிக்கிது..

எப்படியோ கொடுத்த காசுக்கு கலர் கலரா காட்டுனாங்க.

அப்புறம் நேத்து ரெண்டாவது தடவையும் விதி என் வாழ்க்கைல விளையாட பார்த்துச்சி.. திரும்பவும் அவதாரம் போக வேண்டியது..இருந்தாலும் இப்போவும் என்னை கடவுள் கைவிடல..

என் நண்பர்கள்ல ஒரு மகான் .. "கந்த கோட்டை " தான் வருவேன்னு அடம்பிடிக்க.. எனக்கு ஒன்னும் இல்லடா நான் வரேன்.. மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு கேளு அப்படின்னு சொல்லிட்டு அவங்க முகத்த பார்த்தா.. வினோத் கிட்ட நீ துபாய்ல வேலை பார்க்க வேணாம் இந்தியா வந்துடுன்னு சொன்னா அவன் முகம் எப்படி இருக்குமோ அப்படி அத்தனை பேரு முகத்துளையும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்..

சரின்னு ஒரு வழியா படத்துக்கு போனோம்..

படத்தை பற்றி ஒரு பார்வை..

"பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..
"நகுல்" பண்ணுற முக சேஷ்டைகள் ரொம்ப கேவலமா இருக்கு..
"சம்பத்" அ முடிஞ்ச அளவுக்கு கேவலபடுத்தி இருக்காங்க.
"கெளதம் "(சண்டை கோழியில் விஷால் நண்பராக வந்தவர் ) குடுத்த ரோல முடிஞ்ச அளவுக்கு நெருடல் இல்லாம பண்ணிட்டு செத்து போறார்..

ஒரே ஆறுதல் சந்தானம் தான்.. அவரும் "செகண்ட் ஆப் "ல ரொம்ப இல்ல..

கதையா ? நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் படங்கள கொஞ்சம் ரீவைண்டு பண்ணிகிங்க..

ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்.
-------------------------------------------------------------------------------------------

இப்போ நான் கடவுள் கிட்ட வேண்டிகிற ஒரே விஷயம்.. சனிக்கிழமை சீக்கிரம் வர கூடாதுன்னு தான்..

எங்க ஊருல ஆறு தியேட்டர்ல மூணு இடிச்சிடாங்க மீதி மூணு தான் இருக்கு.. அதுல ரெண்டு தியேட்டர்ல பார்த்தாச்சி.. மீதி இருக்குறது.. அவதாரம் தான்..

சனிக்கிழமை
ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. அதுக்குள்ள எதாவது ஒரு படம் மாறிட வழி பண்ணுங்கனு தான். இருந்தாலும் இந்த தடவையும் டவுள் கை விடமாட்டார்னு நம்புறேன் ...

சரிங்க.. முதல் மொக்கையே கொஞ்சம் ஓவரா போச்சி.. மீண்டும் சிந்திப்போம்..

24 comments:

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

நானும் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் இனிமேல் நீ கட்டிங் வித் கிஷோர் எழுதக்கூடாதுன்னு :)))))))

வினோத்கெளதம் said...

மச்சான் சரியான காமெடி..தொடர்ந்து எழுது..

//சனிக்கிழமை ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. //
விதி வலியது..

pappu said...

போங்க பாஸ்... பாத்துட்டு வந்தா அத வச்சு 6 மாசத்துக்கு சந்தோஷமா காமெடி பண்ணலாம் :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

கட்டிங் வித் கிஷோர் - 1 பேரே அருமை
பதிவு சூபர்.சிரிப்பு தாங்கலை

வால்பையன் said...

//"ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்//

கிளாசிக் வர்ணனை!

வால்பையன் said...

//உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.//

வால் தான்யா இப்போ மொத்த பதிவுலகத்தையும் நெருடிகிட்டு இருக்குறது!

சங்கர் said...

//பூர்ணா" சின்ன அசின் மாதிரி தான் இருக்காங்க..//

கொஞ்சம் பெரிய அசின் மாதிரித்தான் எனக்கு தெரிஞ்சாங்க


//ரிசல்ட் = கிளைமாக்ஸ் வரைக்கும் உக்காருறது ரொம்ப கஷ்டம்//

நான் இன்டர்வெல்லுக்கு அடுத்த பத்தாவது நிமிஷமே வெளில வந்துட்டேன், எஸ்கேப்ப்ப்ப்

seemangani said...

//உடம்ப ஒட்டிய டிரஸ் போட்டு இருந்தாலும் அந்த வால்..சரியாய் படிங்க "வால்" தான் ஏதோ நெருடுது.//

வால் தான்யா இப்போ மொத்த பதிவுலகத்தையும் நெருடிகிட்டு இருக்குறது!

இது சூப்பர்....

என் நடை பாதையில்(ராம்) said...

"ஐமேக்ஸ் "ல பார்க்க சொன்னாரு? எங்க ஊருல ஐமேக்ஸ்க்கு நான் எங்க போறது..? அதான் "Streched version " அ என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட "ஐ "ய "மேக்ஸ்" சிமம் திறந்து வச்சி பார்த்தேன்..

ஹாஹா...

கண்ணா.. said...

ஏண்டா....நான் தெரியாம ஒரே ஒரு தடவை போதைல மொக்கையை குறைச்சுக்கலாம்னு சொன்னதுக்கு ஏண்டா எப்பவும் என்னையை போட்டு இந்த கும்மு கும்முறீங்க....


நானும் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//கட்டிங் வித் கிஷோர் -1//

டைட்டில் அருமை.... ஆனா நீ 1 போட்ருக்கறதை பாத்தா , அடுத்த பார்ட்ம் வந்துருமோன்னு பயம்ம்மாஆஆ இருக்கு

♠ ராஜு ♠ said...

உங்கள் சேவை பதிவுலகத்திற்கு தேவை.

angel said...

ஆனா நீ 1 போட்ருக்கறதை பாத்தா , அடுத்த பார்ட்ம் வந்துருமோன்னு பயம்ம்மாஆஆ இருக்கு///

i also accept wht he had said

KISHORE said...

@[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்
நல்லா வேண்டிக்கோ..
@வினோத்கெளதம்

விதி ரொம்பவே வலியது தான் போல இருக்கு மச்சி.. சனிக்கிழமைக்கு முன்னாடியே கூப்புடுவானுங்க போல இருக்கு..

@pappu

ரைட் .. பண்ணிடுவோம்

@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
என்னைய வச்சி காமெடி பண்ணலயே..
@வால்பையன்
//கிளாசிக் வர்ணனை!//
நன்றி வால்ஸ்..
//வால் தான்யா இப்போ மொத்த பதிவுலகத்தையும் நெருடிகிட்டு இருக்குறது!//
ஆஹா எதோ உள்குத்து விவகாரம் மாதிரி தெரியுது..

@சங்கர்

நீங்க புத்திசாலி..

@seemangani.

நன்றி..

@என் நடை பாதையில்(ராம்)
நன்றி ராம்
@கண்ணா.
//ஏண்டா....நான் தெரியாம ஒரே ஒரு தடவை போதைல மொக்கையை குறைச்சுக்கலாம்னு சொன்னதுக்கு ஏண்டா எப்பவும் என்னையை போட்டு இந்த கும்மு கும்முறீங்க....///

என்ன பண்றது நண்பா.. வேற ஆள் கிடைக்கிற வரைக்கும் நீ தான்..

//டைட்டில் அருமை.... ஆனா நீ 1 போட்ருக்கறதை பாத்தா , அடுத்த பார்ட்ம் வந்துருமோன்னு பயம்ம்மாஆஆ இருக்கு//
1 2 3 எண்ணிகிட்டே இரு.. எப்படியும் முடிஞ்சிடும்


@♠ ராஜு ♠
க க க போ..

KISHORE said...

@angel
we cant change our destiny.

ஜெட்லி said...

கட்டிங் அருமை

கலையரசன் said...

இதை எல்லாம் எழுதறதை விட்டுட்டு...
"கட்டிங் வித் கலை"க்கான வழியை பாருடா!!

nvnkmr said...

என்ன தலைவா மத்தவங்க தண்ணி அடிக்கும் பொது கூட உக்காந்து அவிங்க சைடு டிஷ காலி பண்ற சுகத்த பத்தி சொல்லவே இல்ல;;;

கீழே அமுத்தவம்
http://nvnkmr.blogspot.com/

( இது முடிவல்ல ஆரம்பம் )

KISHORE said...

@கலையரசன்
பார்த்துடுவோம்
@nvnkmr
எவன் குடுக்குறான்.. நாமளே எடுத்திகிட்ட தான் உண்டு..

ஹாலிவுட் பாலா said...

இது அநியாயம். இதுக்கு என்னோட கமெண்டை போஸ்ட் பண்ணிட்டேன்னு நினைச்சேன். :( :(

இன்னைக்கு சனிக்கிழமையாச்சே..!! என்ன ஆச்சிங்க கிஷோர்..??

அவதாரம்.. என்ன செஞ்சார்?? நரசிம்ம அவதாரமா??? :)

ஹாலிவுட் பாலா said...

ஏனய்ய்யா... ஐமேக்ஸில் பார்க்க சொன்னது குத்தமா??? அதையும் இங்க போட்டு நாறடிக்கறீங்களே! ?:)

KISHORE said...

என்ன ஆச்சா? எல்லாம் ஆச்சி... ஓம் சாந்தி ஓம்..

divyahari said...

//சனிக்கிழமை ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. //

divyahari said...

//சனிக்கிழமை ப்ரோக்ராம் இப்போவே போட்டுட்டானுங்க.. எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் தான்.. //

hahahaha

KISHORE said...

@divya hari
nandri..