வினோத்கெளதம்...பொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று
மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும்
போதே "$##$^$ " என்று வளர்ந்து நிற்கிறது .
எனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...
சரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம் கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...
அப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...
1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..
கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாய
படுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)
2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு...
வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..
3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா
அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு
வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...
4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இவன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..
5.
இதுவரைக்கும் நீங்க
படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... (
ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)
நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு...
"i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...