Tuesday, November 3, 2009

தொடராமல் தொடர்கிறேன்..

ஒரு 2 நாளைக்கு முந்தி நம்ம பிரண்டு வினோத்கௌதம் டேய் பன்னாட சொம்மா தான குந்திகினு கீற .. சொம்மா குந்திகினுகீறதுக்கு இந்த "பாரத்த" யாவது ரொப்புடான்னு சொன்னான். நானும் ஏதோ நண்பன் பாங்குல லோன் வாங்கி தர தான் பாரம் தரான் போல இருக்குனு வாங்கி பார்த்தா. அடங்கொய்யா .. நாம சின்ன புள்ளைல விளையாடுவோம்ல அதாங்க.. ஓடி போய் தொட்டுட்டு கொக்கு போடுறது.. எச்சி வுட்டேன் பால் வுட்டேன்.. மாதிரி.. வெள்ளாட்டு பாரம் அது.. இப்போ பய புள்ளைங்க கம்பியுடேர்ல விளையாடுதுங்க.. அதுங்கள சொல்லி குத்தம் இல்ல.. இப்போ எங்க விளையாட நேரம் கிடைகிது.. இப்படி வெள்ளான்டாதான் வுண்டு.. என்ன ஒன்னு கருமம் எல்லாமே இங்கிலிபிஸ்ல எழுதி இருந்துது.

பெயில் ஆனாலும் ரெண்டாங் கிளாஸ் வரைக்கும் வந்து இருக்குறத நெனைக்கும் போது எல்லம் மனசுல ஒரு கெத்து வரும்..தவிர abcd அல்லா எழுத்தும் நமக்கு அத்துபடி தான். ஆனா ஒரு ஒரு எழ்த்துக்கு பக்கத்துலயும் abcd மாத்தி போட்டு இருக்கசொல்லோ கொஞ்சம் கன்பிஸ் ஆய்ட்டேன்..

நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலிஸ் வாத்தியார் நம்ம கணேசு தான். கணேசு பக்கத்து டூரிங் டாக்கிஸ்ல ஆப்பரேடோர்ஆ இருக்காரு.."பிட்டு"படம் ஓட்ற கொட்டா தானாலும் வெறும் இங்கிலிஸ் பட "பிட்டா" ஓட்றதால கொஞ்சம் இங்கிலிசு வார்த்தைய தெரிஞ்சி வச்சி இருப்பாரு.. அவரு கிட்ட பொய் சொன்னேன் இந்த மாதிரி.. இந்த மாதிரி..மேட்டரு.. கொஞ்சம் ஹெல்பு பண்ணு அப்பாலிகா குவாட்டர் வாங்கி தரேனு சொன்னதும் மடிஞ்சிடிச்சி.. கணேசு பாரத்த படிச்சி பார்த்துட்டு.. டேய் கிசோரு இத ரொப்பனும்னா ரொம்ப இங்கிலிசு அறிவு வேணும்டா.. அதுக்கு முதல்ல நெறைய இங்கிலிசு வார்த்தைய கத்துக்கணும்னு சொல்லிச்சி..நான் எப்படின்னு மண்டைய சொரிய.. டாமல் என் முன்னாடி ஒரு பண்டல எடுத்து போட்டுச்சி.. பார்த்தா அம்புட்டும் பிட்டு பட போஸ்டரு..

இன்னைக்கு எப்படியும் எல்லா வார்த்தையும் கத்துக்கிட்டு பாரத்த ரொப்பிபுடுனும்னு ஒரு முடிவோட பண்டல எடுத்துக்கிட்டு வூட்டுக்கு போய் குப்புற அடிச்சி படுத்துகிட்டு எல்லாத்தையும் படிச்சிபுடனும்னு ஆரம்பிச்சேன்...

A FOR ALEXANDRA
B FOR BAY WATCH
C FOR CALL GIRLS
D FOR DARLING
E FOR ELISA
F FOR FIRST NIGHT
G FOR GIRLS AVAILABLE
H FOR HONEY MOON
I FOR INTENSE LOVE
J FOR JOY OF LOVE
K FOR KISS ME WILD
L FOR LOVE COVER GIRL
M FOR MID NIGHT LUST
N FOR NAUGHTY GIRL
O FOR ORIGINAL SIN
P FOR POINT OF SEDUCTION
Q FOR QUEEN'S LAND
R FOR RIOTOUS DESIRE
S FOR SIRACO
T FOR TWO MOON JUNCTION
U FOR UNFAITHFUL
V FOR VIOLENT LUST
W FOR WITH ME TONIGHT
X FOR X-MAS LOVER
Y FOR YOU AND ME

கருமம் இந்த "Z" எழுத்துக்கு மட்டும் வார்த்த எங்கயும் கிடைகல.. என்னடா பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ.. நம்ம ஏரியா கடைசி ஊட்டு தாத்தா நியாபகத்துக்கு வந்தாரு.. பெரிய படிப்பு படிச்சவரு.. பொண்ணு புள்ளையெல்லாம் வெளி நாட்ல செட்டில் ஆகிடாங்க.. பெர்சும் அவரு பொண்டாட்டியும் மட்டும் தான்.. அந்த ஊட்டுக்கு போறப்ப எல்லாம் தாத்தா பெரிய பெரிய இங்கிலிசு புத்தகம் வச்சி மூஞ்சி மறையுற மாதிரி வச்சி படிச்சிக்கிட்டு இருபாரு. அந்த பொஸ்தகத்து அட்டைய பாக்குறப்ப நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலிசு வார்த்தைய எழுத்து கூட்டி படிச்சி பார்ப்பேன்.. H.. U.. M.. A.. N.. D..I..G..E..S..T.. அப்புறம் P..L..A..Y....B..O..Y.. அப்புறம் S..E..C..R..E..T..S.. இப்படி நெறையா.. அவருகிட்டயும் போய் கேக்கலாம்னு தோணிச்சி. அப்பாலிக்க வேணாம்னு வுட்டுட்டேன்.

பொறவு நம்ம ஏரியா இஸ்கூல்ல ஒன்னாப்பு படிக்கிற அப்பு குட்டிய தாஜா பண்ணி ஒரு பைவ் ஸ்டார் முட்டாய் வாங்கி குடுத்து கேட்டேன்.. அந்தபய புள்ள முட்டாயும் வாங்கிக்கிட்டு கேவலமா ஒரு பார்வை பார்த்து சொல்லுச்சி..

Z FOR ZEBRA.

இருந்தாலும் என்னடா ரொம்ப சின்ன புள்ளைங்க படிக்கிறது எல்லாம் படிக்கிறோம்னு மனசுல ஒரே டர்ரா இருந்துச்சி.. சரி தாத்தா கிட்டயே கேட்டுடுவோம்னு அவரு ஊட்டுக்கு போவசொல்லோ வழக்கம் போல பெரிய பொஸ்தகத்த மூஞ்சிக்கி நேர வச்சி படிச்சிக்கிட்டு இருந்தாரு..
அட்டைய பார்த்தேன் நேர போய் பார்த்த ரொப்பி புடனும்னு திரும்பிட்டேன்..

அட்டைல அப்படி என்னா போட்டு இருந்திச்சின்னு கேக்குறிங்களா..?
அது என்னமோ.. Z..E..N..A..N..A..

எப்படியோ எனக்கு பதில் கிடச்சிடிச்சி..

Z FOR ZENANA.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. இந்த வெள்ளாட்டுக்கு இன்னும் சொம்மா உக்கார்ந்து இருக்குற நாலு பேர கூப்புடுனுமாம் ..
அதனால என் சார்பா ரெண்டு பேரு.. பப்பு, ஹாலிவுட் பாலா.. இவங்க ரெண்டு பேரையும் கூப்டுறேன்..
இவங்க ரெண்டு பெரும் ஒரிஜினல் பாரத்த ரொப்புனாலும் சரி.. இல்ல என்னை மாதிரி இங்கிலிசு கத்துகிட்டு அப்பாலிகா ரொப்புனாலும் சரி.. எப்படியோ வெள்லாடுனா சரி தான்.. ஒரிஜினல் பாரம் வேணும்னா இங்க அமுத்துங்க..

17 comments:

ஹாலிவுட் பாலா said...

இனிமே.. உங்க.. பதிவு/பின்னூட்டத்தை.. ஆஃபீஸில் வச்சி படிக்க மாட்டேன்.

மானத்தை வாங்கிடுது..!! சிரிச்சி.. சிரிச்சி.. இப்ப.. எல்லாரும் ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

யோவ்.. நான் தான் க்ளியரா.. சொல்லியிருந்தேனே... என்ன... இந்த மாதிரி.. சங்கிலி.. பிங்கிலி.. வெலயாட்டுக்கு கூப்பிட வேணாம்னு!

நானே.. 18+ பிஸியில.. கீறேன்!! :) :) பப்பு மாத்றம்.. இந்த தபா வெளயாடட்டும். மீ ஸோ பிஸி..!

அடுத்த.. 18+ இன்னிக்கு தியேட்டராண்ட ரிலீஸு. மறக்காம.. துண்ட போட்டு மறைச்சிகினு வந்து அட்டண்டன்ஸ் போட்டு போங்க! :) :) :)

கலக்கல்.. abcd!!!!!!!! :) :)

pappu said...

பயபுள்ள கோர்த்துவிடுது பாரு! நான் பாஸா பெயிலான்னு ஒரு விளையாட்டு ஆல்ரெடி அடிகிட்டு இருக்கேன். நீங்க என்ன வச்சு பவுலிங் விளையாட ட்ரை பண்ணுறீங்களா? சிறுத்த சிக்காது.

KISHORE said...

@ ஹாலிவுட் பாலா
//யோவ்.. நான் தான் க்ளியரா.. சொல்லியிருந்தேனே... என்ன... இந்த மாதிரி.. சங்கிலி.. பிங்கிலி.. வெலயாட்டுக்கு கூப்பிட வேணாம்னு!//

கம்பல்சன் இல்ல பாலா.. எனக்கும் இந்த மாதிரி ஜின்ஜினகடி விளையாட்டுல ஆர்வம் இல்ல.. நானே வினோத் திட்டுவான்னு எழுதுனேன்..

//அடுத்த.. 18+ இன்னிக்கு தியேட்டராண்ட ரிலீஸு. மறக்காம.. துண்ட போட்டு மறைச்சிகினு வந்து அட்டண்டன்ஸ் போட்டு போங்க! :) :) :)//

பிளாக்ல டிக்கெட் வாங்கியாச்சும் உள்ள வந்துடுவேன்..

//கலக்கல்.. abcd!!!!!!!! :) :)//

தேங்க்ஸ்ங்கோவ்..

@ பப்பு
ஹே.. ஹே.. அரசியலல்ல இது எல்லாம் சகஜமப்பா.

♠ ராஜு ♠ said...

ஏய்..இது ஏப்ப..சொல்லவே இல்ல.
சைலண்ட்டா இன்னோனு போயிட்டிருக்கா..?

ஹாலிவுட் பாலா said...

////நானே வினோத் திட்டுவான்னு எழுதுனேன்../////

ஹையா.. நீங்க திட்ட மாட்டீங்க! :) :)

உங்களுக்காக ஸ்பெசலா.. இன்னொரு 18+ ரெடி.

வால்பையன் said...

//"Z" எழுத்துக்கு மட்டும் வார்த்த எங்கயும் கிடைகல.. //

zipless pant!

KISHORE said...

@ ராஜு.
அது நெறையா போய்கிட்டு இருக்கு..

@ ஹாலிவுட் பாலா
//ஹையா.. நீங்க திட்ட மாட்டீங்க! :) :)
உங்களுக்காக ஸ்பெசலா.. இன்னொரு 18+ ரெடி.//
ம்ம்க்கும்.. அப்பறம் எங்க இருந்து திட்றது?

@ வால்பையன்.
அட இது கூட நல்லா இருக்கே..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

இந்த "பாரத்த" யாவது ரொப்புடான்னு சொன்னான். நானும் ஏதோ நண்பன் பாங்குல லோன் வாங்கி தர தான் பாரம் தரான் போல இருக்குனு வாங்கி பார்த்தா. அடங்கொய்யா ..//

:)))))))))))))))))))))

A FOR ALEXANDRA
B FOR BAY WATCH
C FOR CALL GIRLS
D FOR DARLING
E FOR ELISA
F FOR FIRST NIGHT
G FOR GIRLS AVAILABLE
H FOR HONEY MOON
I FOR INTENSE LOVE
J FOR JOY OF LOVE
K FOR KISS ME WILD
L FOR LOVE COVER GIRL
M FOR MID NIGHT LUST
N FOR NAUGHTY GIRL
O FOR ORIGINAL SIN
P FOR POINT OF SEDUCTION
Q FOR QUEEN'S LAND
R FOR RIOTOUS DESIRE
S FOR SIRACO
T FOR TWO MOON JUNCTION
U FOR UNFAITHFUL
V FOR VIOLENT LUST
W FOR WITH ME TONIGHT
X FOR X-MAS LOVER
Y FOR YOU AND ME//

கிஷோர் உங்க abcd எல்லாமெ 18+ இல்ல இருக்கு?
ஒவ்வொன்னும் அருமை!படத்தோட பேரா கூட வைக்கலாம் பாஸ்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஹல்லோ இது எல்லாமே படத்தோட பேரு தாங்க!
செம ரகளை. அதுல CKMXY எல்லாம் இன்னும் பாக்கவில்லை,ஒட்டு போட்டாச்சு

வினோத்கெளதம் said...

மச்சான் செம வெயிட் பதிவு டா;;:)))

KISHORE said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
நன்றிங்க.. இரண்டு வார்த்தைகளை தவிர எல்லாமே பிட்டு படத்தோட பேரு தான்.. யாரு கண்டது.. அந்த இரண்டும் கூட பிட்டு படமா வந்து இருக்கலாம்.. :) :)

@ வினோத் கெளதம்

தேங்க்ஸ் மச்சி.. :)

கலையரசன் said...

நீ எல்லா படத்தையும் பாத்துட்டங்குறத ஒத்துகுறேன்!!!
உன் "AB Sex CD" நல்லாயிருந்துது மாமே!!

KISHORE said...

THANKSEX MACHI..

சந்ரு said...

கலக்கலா இருக்கு

KISHORE said...

@ சந்ரு
நன்றி சந்ரு முதல் வருகைக்கு.

கோபிநாத் said...

கலக்கல் சகா ;))

KISHORE said...

@ கோபிநாத்
நன்றி நண்பா.